Saturday, August 23, 2008

செய்திகள் ஆக்ஸ் 23 மணி 7.45AM

ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலம் ! இந்தியா இதுவரை 3 பதக்கங்களை பெற்று சாதனை ! !-----ஏ.சுகுமாரன்
பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்குமார் வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம் 3-வது பதக்கத்தை கைப்பற்றிய இந்தியா புதிய வரலாறு படைத்திருக்கிறது.மேலும் ஒலிம்பிக் குத்துச்சண்டை பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை விஜேந்தர் பெற்றார்சீனத் தலைநகர் பீஜிங்கில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டி நாளையுடன் நிறைவடைகிறது.முந்தைய வரலாற்றுடன் ஒப்பிடும் போது இந்த ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்கு தித்திப்பு நிறைந்தது என்று சொல்ல வேண்டும். துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கமும், மல்யுத்த வீரர் சுஷில்குமார் வெண்கல பதக்கமும் வென்று நமது நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்.112 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில், இந்தியா ஒரு ஒலிம்பிக்கில் 3 பதக்கங்கள் வெல்வது இதுவே முதல் தடவையாகும்.
"
"திமுக அணியில் நீடிப்பதில்லை என்று மார்க்சிஸ்ட்கள் ஏற்கெனவே திட்டமிட்டு விட்டார்கள்; சுருண்டிருந்த சூழ்ச்சித்திரை விரிகிறது, " கருணாநிதி கருத்து !-----ஏ.சுகுமாரன்
-
மார்க்சிஸ்டுகள் குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அவர் பாணி கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கேள்வி:- "கர்நாடகம், இமாசலப்பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் கூட்டணியின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் காங்கிரஸ் கட்சி மண்ணைக் கவ்வியுள்ளது என்பது வரலாறு; அதுபோல வரும் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன், தி.மு.க. கூட்டணி தொடருமானால் அதே மண்ணைக் கவ்வும் நிலை தான் அவர்களுக்கும் ஏற்படும். காங்கிரஸ் என்கிற மூழ்கும் கப்பலில் தி.மு.க. பயணம் செய்ய விரும்பினால், அது அவர்களின் முடிவு'' என்று மார்க்சிஸ்ட் தலைவர் என்.வரதராசன் அரசியல் ஆரூடம் கணித்துள்ளாரே?
பதில்:- காங்கிரஸ் என்பது மூழ்கும் கப்பல் என்பது தெரிந்த பிறகும் - அணு ஒப்பந்தம் நிறைவடையும் வரையில் அந்த மூழ்கும் (?) கப்பலைவிட்டு இறங்காமல் இருப்பதற்காக எத்தனை முறை டெல்லியிலே காங்கிரஸ் தலைவர்களுடன் கம்ïனிஸ்டு உயர்மட்டத் தலைவர்கள் "சம்பாஷணை'' நடத்தினார்கள் என்பதும்; எத்தனை முறை சென்னைக்கு "விஜயம்'' செய்தார்கள் என்பதும்; நாடும், ஏடும் நன்கு அறிந்த ரகசியங்களாயிற்றே!
அப்போதெல்லாம் மாநிலங்கள் சிலவற்றில் காங்கிரஸ் தோற்றது இவர்கள் கவனத்துக்கு வரவில்லையா? சில மாநிலங்களில் காங்கிரஸ் தோற்றது தான், மார்க்சிஸ்ட்டுகள் விலகுவதற்கு உண்மையான காரணமா? அணு ஒப்பந்தம் என்று கூறியதெல்லாம் அதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு காரணமா?
அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான ஆற்காடு வீராசாமியின் கம்ïனிஸ்டு பற்றிய பேச்சுக்கு நான் மறுப்பு தெரிவித்து விளக்க அறிக்கை வெளியிட்ட பிறகும்; "காங்கிரஸ் கப்பலுடன் சேர்ந்து தி.மு.க. மூழ்கிவிடப் போகிறது'' என்று தோழர் வரதராசனைப் போன்றவர்கள்; "ஆரூடம்'' கணிப்பதைப் பார்க்கும்போது; அவர்கள் தி.மு.க. தோழமை அணியில் இருப்பதில்லையென்று ஏற்கனவே திட்டமிட்டுவிட்டார்கள் என்பதும்; அதனால்தான் ஒரு மாத காலத்துக்கு முந்தியே அவர்கள் ஏடுகளிலும், மேடைகளிலும் தி.மு.க. எதிர்ப்புப் பிரசாரத்தை மெல்ல மெல்லத் தொடங்கி விட்டார்கள் என்பதும் தெளிவாகிறது!
எது, எப்படியிருப்பினும் காங்கிரஸ் கப்பலில் ஏறி தி.மு.க. மூழ்கிவிடும் என்ற வரதராசனின் ஆரூடத்தை; என்னைப் பொறுத்தமட்டில் "அருளாசி''யாகவே கருதிக் கொள்கிறேன்.
எப்படியோ சுருண்டு கிடந்த "சூழ்ச்சித்திரை'' விரிந்து விட்டதைக் கண்ட பிறகாவது "விழிப்போடிருப்போம்'' என்று பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன்.கேள்வி:- 1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன் பிறகு 1999-ல் அதே பா.ஜ.க.வுடன் இணைந்து மத்திய அரசில் இணைந்து ஆட்சி நடத்தியது தி.மு.க. என்று மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சித் தலைவர் ஒருவர் சொல்லியிருக்கிறாரே; பா.ஜ.க.வுடன் மார்க்சிஸ்ட் கட்சி எந்த காலத்திலும், எந்த மாநிலத்திலும் உறவு கொண்டது உண்டா இல்லையா?
பதில்:- இந்த கேள்விக்கு இப்போது நான் நேரடியாகப் பதில் அளிப்பதைவிட, 9.3.2000 அன்று சட்டப் பேரவையில் கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றியபோது, நான் பேசிய ஒரு குறிப்பிட்ட பகுதியை இங்கே விளக்கினால், அதுவே இந்த கேள்விக்கு பொருத்தமான பதிலாக அமையுமென்று கருதுகிறேன்.
"1967-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் தேர்தல் முடிவுக்கு பிறகு பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மூன்று மாநிலங்களிலும் அகாலி தளம், பாரதீய கிராந்தி தளம், ஜனசங்கம் அடங்கிய கூட்டணி அரசில் இந்திய கம்ïனிஸ்டு கட்சி அங்கம் வகித்தது. ஆர்.எஸ்.எஸ். கட்சியினுடைய நிழல் என்று சொல்லப்படுகின்ற ஜனசங்கம், பாரதீய கிரந்தி தளம், அகாலி தளம் ஆகிய இந்த கட்சிகள் எல்லாம் பங்கு பெற்ற அரசில் சி.பி.ஐ. கட்சி அங்கம் வகித்தது. மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி அந்த அணியிலே பங்கு பெற மறுத்துவிட்டது. ஆனால், அந்த அரசுகளுக்கு நிபந்தனையோடு கூடிய ஆதரவை அளிக்க மார்க்சிஸ்ட் கட்சி ஒப்புக் கொண்டது.
கே.சுப்பராயன்:- முதல்-அமைச்சர் சொல்வது உண்மை தான். ஆனால் இந்திய கம்ïனிஸ்டு கட்சியினுடைய ஒரு மாநிலக் குழு தீர்மானித்து, அப்படி பங்கு பெற்றது தவறு என்று மத்திய தலைமை சுட்டிக்காட்டியிருக்கிறது. எனவே, அதை இந்திய கம்ïனிஸ்டு கட்சியினுடைய அதிகாரபூர்வமான கருத்தாக எடுத்துக் கொள்ள இயலாது.
கருணாநிதி:- நான் அந்த அரசில் அங்கம் வகித்தார்கள் என்று தான் சொன்னேன். அது மாநிலக் குழுவா, மத்தியக் குழுவா என்பதெல்லாம் அல்ல. அப்படிப்பட்ட அரசில் ஜனசங்கம் இருந்த அரசில், சி.பி.ஐ. அங்கம் வகித்தது என்பது தான். பிறகு, 1977-ல் நடந்த தேர்தலில் மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையிலே ஜனதா அரசு அமைந்தது. ஜனதாவிலே இடம் பெற்ற கட்சிகளில் ஒன்று ஜனசங்கம். அந்த அரசில் வாஜ்பாய், அத்வானி, நானாஜி தேஷ்முக் ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள். மார்க்சிஸ்ட் கட்சி வெளியே இருந்து அரசுக்கு ஆதரவு கொடுத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
1989-90-ல் வி.பி.சிங் தலைமையிலே மத்தியில் ஆட்சி. அப்போது சி.பி.எம்., பா.ஜ.க., இரண்டுமே வெளியே இருந்து வி.பி.சிங் ஆட்சியை ஆதரித்தார்கள்'' என்று சட்டப் பேரவையில் அப்போதே நான் பேசியிருக்கிறேன்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
தீயவை அகன்று, நன்மை செழித்து அனைவரும் ஆனந்தவாழ்வு வாழ வேண்டும் --ஜெயலலிதா கிருஷ்ண ஜெயந்திவாழ்த்து செய்தி !-----ஏ.சுகுமாரன்

அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள கிருஷ்ண ஜெயந்திவாழ்த்து வாழ்த்து செய்தியில் ஆனந்த வாழ்வு
கோகுலத்து கோமகனாம் கண்ணன் அவதரித்த நன்னாளான கிருஷ்ண ஜெயந்தி திருநாளை ஆர்வத்தோடும், மகிழ்வோடும் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனம், மொழி, மதம் மற்றும் சாதியற்ற பாதையின் மூலம் பாமர மக்களுக்கு வாழ்க்கை முறையை வகுத்துக் கொடுத்து, துன்பத்தில் இன்பம் காண வைக்கும் ஞானரசமாம் பகவத் கீதையை இந்த உலகத்திற்கு உபதேசித்தவர் பகவான் கிருஷ்ணர்.
கிருஷ்ணர் அவதரித்த இந்த நன்னாளில், மண்ணைத் தின்ற வாயில் விண்ணை காண்பித்த கண்ணனின் திருவருளால், தீயவை அகன்று நன்மை செழித்து அனைவரும் ஆனந்த வாழ்வு வாழ வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் தி.மு.க. இளைஞரணி பேரணி : 50 ஆயிரம் பேர் பேரணி! புதுவையில் வரவேற்பு ! !-----ஏ.சுகுமாரன்
விழுப்புரம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் அண்ணா நூற்றாண்டையொட்டியும், தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நேற்று மாலை நடை பெற்றது. 50 ஆயிரம் பேர் கலந்து கொண்ட தி.மு.க. இளைஞரணி பேரணி நடைபெற்றது. அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி மேடையில் அமர்ந்து பேரணியை பார்வையிட்டார்.மாலை 5 மணியளவில் விழுப்புரம் கே.கே.ரோடு அண்ணா நகர் அருகே, தி.மு.க. மாவட்ட மு.க.ஸ்டாலின் நற்பணி மன்றத்தலைவர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். மாலை 5 மணிக்கு புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு 7.30 மணிக்கு முடிவடைந்தது. பேரணி புறப்பட்டது முதல் முடிவடையும் வரை இளைஞரணியினரை பார்த்து மகிழ்ச்சியுடன் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையசைத்த படி இருந்தார்மு.க.ஸ்டாலினுடன் மத்திய மந்திரி வேங்கடபதி, அமைச்சர்கள் பொன்முடி, வேலு ஆகியோரும் மேடையில் அமர்ந்தபடி இளைஞரணி பேரணியை பார்வையிட்டனர்.
புதுவையில் வரவேற்பு !
விழுப்புரம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. துணைபொதுச்செயலாளரும், அமைச்சருமான மு.க. ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்தார்.புதுச்சேரி மாநில எல்லை பகுதியான கனகசெட்டிகுளத்திற்கு வந்த மு.க.ஸ்டாலினுக்கு புதுச்சேரி மாநில தி.மு.க. சார்பில் மாநில அமைப்பாளர் ஜானகிராமன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதில் சட்டசபை எதிர்கட்சி தலைவர் நாஜிம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி. சிவக்குமார், சிவா, ராஜாராமன், டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன், நந்தா. சரவணன், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் அனிபால்கென்னடி, வில்லியனூர் கொம்ïன் பஞ்சாயத்து தலைவர் நடராஜன், துணை தலைவர் ஏ.கே. குமார் , மற்றும் நிர்வாகிகள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுவையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம் !-----ஏ.சுகுமாரன்
புதுவையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர்களை இடம் மாற்றி போலீஸ் டி.ஜி.பி. கான் உத்தரவிட்டு உள்ளார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு புறக்காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பால்ராஜ் சிக்மா செக்ïரிட்டி பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஏனாம் தாரிகல்தப்பா புறக்காவல் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் சிக்மா நுண்ணறிவு பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதே போல் காரைக்கால் அம்பகரத்தூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் புதுச்சேரி ஆயுதப்படை பிரிவிற்கு மாற்றப்பட்டார். மங்கலம் புறக்காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தமிழரசன் சிக்மா செக்ïரிட்டிக்கு மாற்றப்பட்டார். மாகி ஸ்பெஷல் பிராஞ்ச் பிரிவில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் வல்சராஜ், பள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
சிக்மா செக்ïரிட்டி பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த விஜயன், பந்தகல் புறக்காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். கவர்னர் மாளிகையில் பணியாற்றி வந்த லட்சுமணன் ஏனாம் தாரிகல்தப்பா புறக்காவல்நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். புதுச்சேரி போலீஸ் பயிற்சி பள்ளியில் பணியாற்றி வரும் துரைராஜ், அம்பகரத்தூர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த முத்துசாமி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பு புறக்காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். கவர்னர் மாளிகையில் பணியாற்றி வரும் ராஜ்மனோகர், கோர்க்காடு புறக்காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சட்டசபையில் பணியாற்றி வரும் தயாளன் மங்கலம் புறக்காவல் நிலையத்திற்கும், முதலியார்பேட்டையில் பணியாற்றி வரும் முருகையன் சோலைநகர் புறக்காவல்நிலையத்திற்கும் மாற்றப்பட்டனர்.இந்த உத்தரவை டி.ஜி.பி. கான் வியாழன் இரவு பிறப்பித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் வர்த்தகம் ரூ.37,800 கோடி உயரும்--அசோசெம் மதிப்பீடு !-----ஏ.சுகுமாரன்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்படும் பரஸ்பர வர்த்தகத்தின் மதிப்பு அடுத்த சில ஆண்டுகளில் சுமார் ரூ.37,800 கோடிஉயரும் என அசோசெம் அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது. தற்போது இவ்விரு நாடுகளுக்கு மிடையே மேற்கொள்ளப்படும் வர்த்தகத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.8,400 கோடிஉள்ளது.வங்கி, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட சில துறைகளில் இரு நாடுகளுக்கிடையே நல்ல ஒத்துழைப்பு நிலவி வருவதும், இரு நாடுகளுக்கிடையே சாலை மற்றும் ரயில் போக்கு வரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தி வரு வதாக அசோசெம் தெரிவித்துள்ளது.
புதுவையில் கோளரங்கம் வேண்டும்--தமிழர் திராவிடர் கழகம் தீர்மானம் ----ஏ.சுகுமாரன்
தமிழர் திராவிடர் கழகச் செயல்வீரர்கள் கூட்டம் பொதுச்செயலர் மு.அ.குப்புசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
புதுச்சேரியில் கோளரங்கம் அமைக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். அதை விரைவில் ஏற்படுத்த வேண்டும். அந்தக் கோளரங்கத்துக்கு பெரியார் அறிவியல் கோளரங்கம் என்று பெயர் சூட்ட வேண்டும்.
அண்ணா நூற்றாண்டு விழாவை தமிழர் திராவிடர் கழகம் சார்பில் ஆண்டு முழுவதும் கொண்டாடுவது, அரசு சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா கலையரங்கம் கட்ட வேண்டும். தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவையொட்டி புதுச்சேரி முழுவதும் கொள்கை விளக்கப் பிரசாரம் நடத்துவது, சேது சமுத்திரத் திட்டம் குறித்து விளக்கக் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments: