Wednesday, October 01, 2008

அடுத்த அக்டோபர் இரண்டு வரை --ஏ.சுகுமாரன்


நல்லவேளை அக்டோபர் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறைதான் வருகிறது !--மாலை போட்டுவிட்டு வண்ண வண்ண மிட்டாய்களை பிஞ்சுகளுக்கு வாரிஇறைத்து விட்டு வசதியாக சென்று வழக்கமான வேலையை பார்க்கலாம் -இந்த மகாத்மா தான் ஏன் சத்திய சோதனைஎன பரிசோதனை தொடங்கினார் இன்று வரை சத்தியத்தை ரொம்ம தான் சோதனை செய்து வருகிறார்கள் -எல்லாம் செய்த மகாத்மா இருக்கும் இடம்தான் செரியிலாமபோச்சு - யாருங்க யோசனை சொன்னா ரூபாயில் அவரை போடச்சொல்லி !தினமும் மது கடையில் அவர் நோட்தான் கோடி கோடியாசுத்துது -பேசாமல் மானையும் மயிலையும் போட்டாலாவது

மானாட மயிலாட பார்த்திருக்கலாம் -எப்படியோ நீ மகாத்மாநாங்கள்

சாதா ஆத்மாதான் என்று சவ்கரியமா சொந்தவேலையை

பார்த்துக்கலாம் அடுத்த அக்டோபர் இரண்டு வரை .

அன்புடன்

ஏ.சுகுமாரன்

No comments: