Tuesday, October 28, 2008

அகத்தியர் கூறிய காயகல்பங்கள்

இனி அடுத்ததாக சித்தர்களில் முதன்மையானவரும் ,காவேரியை தமிழ் நாட்டிற்கு கொண்டு வந்தவராக கூறப்படும் அகத்தியர் கூறிய காயகலப்பங்களை பார்ப்போம் .அனேகமாக தமிழகத்தின் பல ஊர்களிலும் அகத்தியரின் சிலைகளை கோயில்களில் காணலாம் பல ஸ்தல புராணங்களிலும் அவர் சம்பந்த பட்டிருப்பார் .பல ஊர்களின் பெயரும் அவர்பெயரில் உள்ளது .நான் கூட டெல்லியில் இருந்து வெளி வரும் வடக்குவாசல் என்ற இதழில் அகத்தியர் வாழ்ந்த சித்தர்கள் பூமிதான் புதுச்சேரியா?என ஒரு கட்டுரை ஜூலை மாதம் எழுதி இருந்தேன் அதை மின் தமிழ் லும் கூட இட்டுஇருந்தேன் அகத்தியர் ஒருவரல்ல பலர் என்று கூட கருத்து உண்டு .அகத்தியர் என்ற பெயர் அகத்தின் செயல் அறிந்துக் கூறியதால் வந்ததாக கூறுவர்.இவரது மாணாக்கரில் புலத்தியர் ,தேரையர் முக்கியமானவர்கள் .அவர் அகத்தியர் பெருநூல் ,அகத்தியர் பரிபூரணம் போன்ற பல நூல்களை வைத்திய ,வாத ,ஞான ,சோதிட சாஸ்திரங்களில் செய்துள்ளார் .---------------------இனி அவர் கூறிய காய கல்பம் இவைகளை நான் மூலத்தில் உள்ளதை மாற்றாமல் அபடியே தருவதற்கு காரணம் இதன் பொருளை ஆய்து காணவேண்டும் என்றுதான் , நான் ஒன்று கூற அர்த்தம் வேறு இருக்கக்கூடாது அல்லவா ?மேலும் இது யாருக்கு கிடைக்க வேண்டுமோ அவருக்கு அகத்தியர் வழி காட்டுவர் .
-------------------------------------------------------------------
இந்த சதுரகிரி வனத்திலே ,கையாந்தகரை என்ற மூலிகை இருக்கிறது , அதை பிடிங்கி வந்து மை போல் அரைத்து ஆவின் நெயில் குழப்பி கொதிக்கவைத்து ,சிவந்த பதத்தில் இறக்கி காலைநேரத்தில் வலது கை பெருவிரலால் தொட்டு ,உள்நாக்கில் மேல் வாசலில் தடவி வர குகை வாசல் திறக்கும் .,தேகமும் சித்தியாகும் ,மற்றொரு முறை சோதி புல் என்றொரு முலிகை உண்டு ,பார்வைக்கு மலை புல் போலிருக்கும் ,சிறுது மஞ்சள் நிறமாய் இருக்கும் .நான்கு விரல் அளவுக்கு மேல் வளராது .அதை சாபம் நீக்கி சமுலதுடன் பிடுங்கி வந்து இரவு நேரம் பார்த்தால் தீபம் போல் பிரகாசிக்கும்.இந்த புல்லை ஆவின் பாலில் போட்டால் ரத்த நிறமே வரும் ..அப்போது ஒரு கழஞ்சு சூதம் அதனோடு சேர்த்து நூறு எருமுட்டையில் புடமிட ,அச்ச சூதம் கெட்டி ஆகிவிடும் பின் அதை செந்துரமாக்கி வெள்ளியில் கொடுக்க ஏமமகும் ,அதை பற்ப்பமாகிநெய்யில் குழப்பி புசித்து வர தேகம் சித்தியாகும் என்றார் .
அன்புடன் ஏ.சுகுமாரன்

No comments: