Wednesday, October 08, 2008

பிரபஞ்ச புதிர் தொடர்ச்சி

கண்ணன், சுகுமாரன் மற்றும் அன்பர்களே,
என் கேள்வி இத்தனை அருமையான தமிழ்ப் பாக்களை இந்தஉரையாடலுக்குள் கொண்டு வந்து விட்டிருப்பது எனக்கு ரொம்பமகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் சொல்லுங்கள். படிக்கப் படிக்கத்தேனாக இருக்கிறது.
அது ஒரு புறம் நடக்கட்டும். ஆனால் ஏராளமான அறிவியலாளர்கள் ஏராளமாகச்சிந்தித்து, ஏராளமாகப் பணச் செலவு செய்து ஏராளமாக ஆய்வுகள் நடத்திஒன்றைக் கண்டு பிடித்து அறிவியல் பூர்வமாக வெளியிட்ட பின்னர்,"பூ, இது என்ன? எங்கள் ஆழ்வார்கள் சொல்லியிருக்கிறார்களே" என்றுஊதி விடுவது எனக்கு ஒப்புதலில்லை.
நமது ஆழ்வார்கள், நாயன்மார்கள், சித்தர்கள் இதனை உண்மையிலேயேஅறிந்திருந்தால்அவற்றை விவரணையாகச் சொல்லி (in detail) நமக்கு உணர்த்தியிருக்கலாமே!அவர்கள் சொல்லுவது, குறிப்பது நாம் பேசுகின்ற இந்த பெரு வெடிப்புத்தானா?எனக்கு அப்படித் தோன்றவில்லை.
நீங்கள் சொல்லும் காரண காரியங்களை நீட்டினால் இந்தப் பாடல்களை வைத்துஇன்னொரு மேல்தளத்திற்கும் ஒருவர் போக முடியும். அதாவது "இந்த ஆழ்வார்கள்இத்யாதிபெருவெடிப்புக்கும் முன்னுள்ள நிலையையும் குறிக்கிறார்கள்; அதைஅறிவியலும்இன்னும் கண்டுபிடிக்கவில்லை" என்பதான ஒரு வாதம்.
முடியும்தானே? இந்தப் பாடல்கள் ஒரு ecstasy மனப்பான்மையில் சொல்லும்விஷயங்களுக்குநாமாக நீட்சிகளை இழுத்துக் கொண்டே போகலாம். நாளை Higgs Bosonகண்டு பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டாலும் எங்கள் ஆழ்வார்கள் சொல்லியவிஷயம்தான் என நீட்டித்துச் சொல்லலாம். இவற்றுக்கெல்லாம் இடங்கொடுக்கும்அளவுக்கு அந்தப்பாடல்கள் பூடகமாகவும் மர்மமாகவும் இருக்கின்றன. ஏதாகிலும்"துகள்", "துகளின் துகள்" என்னும் சொற்கள் வசதியாக அகப்படலாம்.
எனக்கென்னமோ அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒன்றாகப் பேசிக் குழப்பக்கூடாதுஎனத் தோன்றுகிறது. தனித்தனியே வைத்துப் பேசினால் வம்பில்லை.
ரெ.கா.
- Show quoted text -
On 10/7/08,
karthigesur@gmail.com <karthigesur@gmail.com> wrote:
அன்புள்ள சுகுமாரன்,
எனது எண்ணங்கள்.
அறிவியலாளர்கள் - இங்கு கற்றையியல் ஆய்வாளர்கள் எனக் கொள்க -முன்முடிபுகள் ஏதுமின்றி பிரபஞ்சத் தோற்றத்தை ஆராய்கிறார்கள்.ஆனால் இதைப்பற்றி வெளியிலிருந்து பேசிக்கொண்டுள்ள நாம் நமதுஞானிகளும் சித்தர்களும் சொல்லியிருப்பதைப் பிடித்துக் கொண்டு அதற்கேறபஇது இருக்கிறதா என ஒப்பிடுவதிலேயே குறியாக இருக்கிறோம்.
இதுவே நாம் பிரபஞ்ச உற்பத்தியின் உண்மைகளை அறிவியல் பூர்வமாகஅறிந்து கொள்ள ஒரு தடையாக இருக்கும் என நான் எண்ணுகிறேன்.We are cetrtainly biased in favour our beloved Tamil saints and benton looking for scraps ofevidence in the big bang research to justfy that premise.அதே வேளை இந்த கற்றையியல் அறிவியலாளர்களின் அறிவார்ந்தகண்டுபிடிப்புக்களைநாம் இதனால் மலிவு படுத்தி விடுகிறோம் என்றும் தோன்றுகிறது. இதனாலேயேஅறிவியலையும் ஆன்மீகத்தையும் தனித்தனியே பேசுவதே சிறந்தது எனநான் சொல்கிறேன்.
பரிணாம வளர்ச்சிகள் பற்றி கந்தரனுபூதி முதலான இலக்கியங்கள் சொல்லியவற்றைநீங்கள் எடுத்துக் காட்டுகிறீர்கள். இதைப் பற்றி நாம் என்ன விவாதிக்கமுடியும்?என்ன கருத்துச் சொல்ல முடியும்?
கற்றையியல் சொல்வதை எப்படி நம்மால் முழுக்கவும் புரிந்து கொள்ளமுடியவில்லையோஅப்படித்தான் இதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கற்றையியல்சொல்பவற்றிற்குஒரு methodology இருக்கிறது. Corroborative research இருக்கிறது.Academic validation இருக்கிறது.ஆனால் இங்கு நீங்கள் மேற்கோள் காட்டும் பரிணாம வளர்ச்சியை ஆதாரப் படுத்தஎன்னஇருக்கிறது?
அமித் கோசுவாமி பற்றியுய்ம் எழுத ஆசைதான். சில கருத்துக்களும்கேள்விகளும் உணடு.பின்னால் எழுதுகிறேன்.
ரெ.கா.
On Oct 6, 9:17 pm, "annamalai sugumaran" <
amirthami...@gmail.com>wrote:> பிக் பாங் பற்றிய சர்ச்சை விஞ்ஞானிகளின்> பதிலை அதிகம் சார்த்து> மேலும் மேலும் சென்றதால் நான்> தற்காலிகமாக ஓர் ஒய்வு கேட்டேன் .> ஆனால் இன்னும் தேடல் ஒரு முடிவுக்கு வரவில்லை இன்னும்> சொல்லப் போனால் நாம் ஆரமிக்கவே இல்லை .> > இதில் ஒரு வேறு கருத்தும் இருக்கிறது> நாம் இது வரை பரிணாம வளர்ச்சியில் ஏழு நிலைகளை> தாண்டி வந்ததாக கருதப்படுகிறது>> "மாவேழ் சனனம் கெட மாயைவிடா> மூ வேடனை என்று முடிதிடுமோ " என்று>> அருணகிரி நாதர் கந்தரனுபூதியில் ஏழு பரிணாம நிலை பற்றி> கூறுகிறார்> பரிணாம வகைகளும் அதில் உள்ள கரு வேறுபாடுகளும்>
அன்புள்ள திரு ரெ.கா.அவர்களுக்கு >//அறிவியலாளர்கள் - இங்கு கற்றையியல் ஆய்வாளர்கள் எனக் கொள்க -முன்முடிபுகள் ஏதுமின்றி பிரபஞ்சத் தோற்றத்தை ஆராய்கிறார்கள்.ஆனால் இதைப்பற்றி வெளியிலிருந்து பேசிக்கொண்டுள்ள நாம் நமதுஞானிகளும் சித்தர்களும் சொல்லியிருப்பதைப் பிடித்துக் கொண்டு அதற்கேறபஇது இருக்கிறதா என ஒப்பிடுவதிலேயே குறியாக இருக்கிறோம்.//
அப்படியில்லை திரு ரெ.கா, நமது மனித இனம் தோன்றி பல லக்ஷம் ஆண்டுகள் ஆகிவிட்டன .ஆனால் சுமார் நானுறு ஆண்டுகளாகத்தான் நமது அறிவியலாளர்கள்விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளை அடிப்படை தொடர்புகளுடன் ஆய்து பதிவு செய்யத்தொடங்கி இருக்கின்றனர் .அப்போது முன்னர் மனிதர்கள் அறிவின்றி , ஆராயும் மன பக்குவம் இன்றி இருந்தார்களா என்றால் இல்லை .மனிதன் தோன்றியதில் இருந்து அவனை சுற்றி இருந்த பல புதிர்களை அவன் ஆர்வத்துடன் பார்த்து ஆராய்துதான் இருந்து இருக்கிறன் .ஆனால் இப்போது நானுறு ஆண்டு களாக மனிதன் பரிணாம வளர்ச்சியிலே அறிவின் உச்சத்தில் இருக்கிறன் .ஒலிம்பிக்கில் இருந்து இன்னும் பலவேறு , சொல்லப்போனால் அனைத்து துறைகளும் மனிதன் தன் முந்தய சாதனை களைமுறியடித்து வருகிறான் மனிதன் மாறிக்கொண்டே வருகிறான் உருவிலும் , அறிவிலும் , குணதில்லும் விரிவடைத்து தான் வருகிறான் இது எப்படிசாத்தியமாகும் அறிவின் தொடர்ச்சியும் முயற்சியின் தொடர்ச்சியும் இருந்தால் தான் .இதையும் பரிணாம வளர்ச்சி என்றும் ,பூர்வஜன்ம வாசனை என்றும் நம் முன்னோர் கூறினார்இதற்க்கு கருவில்லேயே திருவுடயவரக பலர் இருந்ததுண்டு இன்னும் கூட பல குழந்தைகள் சிறுவயதிலேயே கணினிதிறமை கவி படும் திறன் , தத்துவ அறிவு பெற்று விளங்குவதை நாம் காணலாம் , ஞான சம்பந்தர் பழமையானவர் என்பதால் அவர் முன்று வயதில் கவி பாடியதை நாம் கணக்கில் கொள்ளவேண்டாம் , ஆனால் இன்றும் இத்தகைய பல இளம் நிபுணர்கள் பல நாடுகளிலும் நாம் பார்க்கிறோம் .. குறிப்பாக நமது பாரதத்தில் , பிற கண்டங்களிலே மனிதர்கள் தங்கள் வயற்று பாட்டையே பார்த்துக்கொண்டு வனங்களில் வாழ்ந்த போது, நாம் அறிவியல் ஆராய்ச்சிக்கு என தனியே ஒரு குழுவை வைத்திருந்தோம் , அவர்களுக்கு பெயர் தான் வேறே இருந்தது , அதில் ஜாதி ,இன பாகுபாடு முதலில் இல்லை . யார் வேண்டும் ஆனாலும் இந்த சிந்தனை செய்வதையே தவமாக கொண்ட குழுவில் சேரலாம் .அவர்கள் ரிஷிகள் எனப்பட்டார்கள் , தமிழகத்தில் சித்தை அடக்கிதால் சித்தர்கள் எனப்பட்டனர் ..அவர்களின் சுக துக்கங்களை நமது சமுதாயம் பார்த்துக்கொண்டது .அவர்கள் இறைவனை குறித்து சிந்தனையை ஆரமிக்கவில்லை அவர்களை சுற்றி வாழும் மனிதர்கள் படும் துயரத்தின் காரணத்தையும் ,ஏன் பிறந்தோம் , ஏன் சாகிறோம் ,எதற்க்காக வாழ்கிறோம் ,வாழும் போது ஏன் சிலருக்கு துக்கம் ,சிலருக்கு வசந்தம் சிலர் ஏன் சிவிகையில் போகிறார்கள் ,சிலர் ஏன் சிவிகையை தூக்குகிறார்கள் ஏன் வியாதிகள் , சில ஏன் மருந்தால் குணமாகிறது ,சில ஏன் மருந்து கொடுத்ததும் குனமவதில்லை , என நம்மை பற்றயுள்ள பல புதிர்களுக்கு விடைக்கான முயன்றனர் .பலரும் பல வழிகள் கண்டனர் , ஆனால் அனைத்துக்கும் விடையளிக்க அவர்களுக்கு கடவுளும் ,கர்ம விதியும் தான் தேவை பட்டது. அவர்கள் சிந்தித்து கண்ட பொருளை அவர்கள் அப்படியே யாரையும் ஒப்புக்கொள்ள சொலவில்லை .அப்போது தர்க்க சாஸ்திரம் என்ற பெயரிலே தற்போதைய விஞான முறைகளை போல் வெகுவாக அறிஞர் பெருமக்கள் குழுவினால் ஆராயப்பட்டது .ஒவொரு கருத்துக்கும் சாஸ்திர பிரமாணம் தேவைப்பட்டது .ஆதி சங்கரரில் இருந்து , புத்தர் , ராமானுஜர் , அப்பர் என மாதக் கணக்கில் வாதங்கள் பாரதத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அறிவை தேடினர் அதே சமயம் பரப்பினர் .அப்படி வாழையடி வாழையை வந்த அறிவியலாரின் வழிவந்தவர்கள் தான் தற்க்கால விஞனிகளும் அவர்கள் கண்டுப்பிடிப்பையோ , உழைப்பையோ யாரும் குறைத்து மதிப்பிடவோ , குறைகூறவோ இல்லவே இல்லை இன்னும் சொல்லப்போனால் மாறிக்கொண்டே வரும் அறிவியலாளர்கள் கண்டுப்பிடிப்பை கண்முடித்தனமாக நமது மக்கள் ஏற்று கொள்ளவதும் ,அதற்கு எந்த ஆதாரமும் கேட்க்கததும் தான் பெரு வியப்பு .உதாரணம் நமது நவீன விவசாய அறிவுரையால் பாரம்பரிய விவசாயத்தை இன்று இழந்து பல்வேறு வியாதி ,மன இறுக்கத்துடன் நமது வாழ்க்கை அமைத்தது . நாம் பழம் பாடல்களில் சில விஞ்ஞான வார்த்தைகள் இருப்பதை சுட்டிகாண்பிப்பதுஇதையும் உங்கள் ஆராச்சியில் சேருங்கள் , உண்மை இருந்தால் உலகுக்கு கூறுங்கள் என்பதற்காகவே .சில நேரம் நமது தற்போதைய விஞ்ஞான அறிவினால் சில புரிந்து கொள்ளாமல் போகப்படலாம் .வரும் காலங்களில் அது நிரூபிக்க படலாம் பல லக்ஷம் ஆண்டுகள் பொறுத்திருந்தோம் , இன்னும் சில ஆண்டுகள் பொறுப்போமே.நமது முன்னோர் கூறியது பல விவாதங்களினால் நிரூபிக்க பட்ட பல சாஸ்திர பிரமாணங்கள் கொண்ட , காலத்தால் எஞ்சி நிற்பவை அது ஆபத்து இல்லாத தேய்த்த வழி பாதை . மேலும் சில உள்ளது பின் , அதுபற்றி பேசுவோம்.என்னை பொறுத்தவரை இன்னும் எதாவது இதன் மூலம் கிடைகாதா என்றுதான் இவைகளை எழுதுகிறேன் .அன்புடன்,-ஏ.சுகுமாரன்- Show quoted text -



- Show quoted text --- A.SugumaranAmirtham IntlPONDICHERRY INDIA MOBILE 09345419948
www.puduvaisugumaran.blogspot.comwww.puduvaitamilsonline.com
------------------------------------------ On 10/8/08, Narayanan Kannan <
nkannan@gmail.com> wrote: 2008/10/8 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>:> போன ஜென்மத்தில் தாய்ப்பால் அருந்தியது, துணை புணர்ந்தது எல்லாம் :)>> யாரும் கற்றுத்தராமலேயே நமக்கு இவை தெரிகின்றனவே!
உண்மைதான். பிறந்தவுடன் கன்றுக்கு தாய்மடி போக வேண்டுமென்றுஎப்படித்தெரிகிறது? அறிவியல் சொல்லும் இவையெல்லாம் மரபுடன் இயைந்து வரும்செயலென. டி.என்.ஏ எனப்படும் மரபு வேதிமம் இம்மாதிரி நினைவுகளைமர்மக்குறியீடுகளாக தன்னுள் புதைத்து வைத்து, ஒரு தலைமுறையிலிருந்துஅடுத்த தலைமுறை என்று பரப்பிவருகிறது. இதனால்தான், விலங்குகள் (யானையும்சேர்த்து) நீரில் நீந்தும் தன்மை பெறுகின்றன, எப்பயிற்சியும் இல்லாமல்.ஏனெனில் நமது தோற்றம் நீரில் ஆரம்பிக்கிறது.
க.>
அன்பின் திரு கண்ணன், இந்த டி.என்.ஏ ஆதியில் இருந்து ஓவொரு உயிர்வகைக்கும் மாறவே இல்லையா ? அல்லது மாறுதலுக்கு உள்பட்டதா ?மாறும் என்றால் எதனால் ? தற்போதைய மாடுகள் சிக்னலை பார்த்து சாலையை கடக்கிறதே அந்த அறிவு டி.என்.ஏ மூலம் வந்ததா ?எல்லாவற்றிக்கும் அடிப்படை குணம் உள்ளது சிங்கம் சிங்கமகாதான் இருக்கும் எப்படியும் மாறது .மனிதனின் அடிப்படை குணம் என்ன ?பசியும் ,இனவிருத்தியும் தானா ?விலங்கிலிருந்து நாம் எந்தவழியில் மாறுபடுகிறோம் ?மனம் என்பது இருப்பதால் தானே மனிதன் அந்த மனதை பற்றி நமது அடிப்படை பாடத்தில் ஏன் இல்லை .?விஞானம் கண்ணால் காணும் பூத உடலை பற்றிதானே கூறுகிறது.ஆனால் நாம் பல் ஆயிரம் ஆண்டுகளாக மனதை பற்றியே ஆய்து வருகிறோம் .ஒவொரு மனித மனமும் அத்தனை பூர்வஜன்மத்தை தாங்கிய நுண் பொருள் , அது இல்லாமல் மனிதன் இயயங்க இயலாது . புலன்கள் மனதின் தொடர்பு இன்றி வேலை செய்யாது .பூர்வஜன்ம தொடர்பு மனதின் மூலம் வருகிறது நமது விதி ஊழ் டி.என்.ஏ மூலம் வருகிறது என கொள்ளலாமா ?அன்புடன்,-ஏ.சுகுமாரன்
- Show quoted text -

1 comment:

R.DEVARAJAN said...

மின் தமிழ்க் குழுமத்தில் நான் கூறிய் கருத்து - ஆன்மிகம், இலக்கியம் இவற்றைத் தவிர்த்து, அறிவியல் அடிப்படையில் மட்டுமே ஆங்கிலத்தில் 'Big Bang Theory’ யை ஆராய வேண்டும்; பிறர் கடலை போடக்கூடாது .

தேவ்