Monday, December 22, 2008

30,0000 ஜோடி புதிய ஷுக்கள் !
எங்கேயோ இடிஇடித்து , எங்கேயோ மழைப் பாய்வது போல் ,அமெரிக்கா அதிபர் புஷ்ஷின் மேல் ஒரு நிருபர் ஷுவை எறிந்தாலும்,எறிந்தார் , அந்த ஷுவை செய்த துருக்கியில் உள்ள கம்பெனிக்கு அடித்து யோகம் .!அதற்க்கு ஆடர் மேல் ஆடர் ஆக குவிகிறது .இது வரை அதிபர் புஷ்ஷின் மேல் எறிந்த ஷு மாதிரியே , உள்ள ஷுவை கேட்டு 30,0000 ஜோடி ஷுக்களுக்கு ஆடர் வந்துள்ளதாம் .புதிதாக அந்த கம்பெனி 100 ஆட்களை வேலைக்கு அமர்தயுள்ளது .அந்த மாடல் 271 க்கு வந்தக் கிராக்கியை பார்த்து , அந்த கம்பெனி அதிபர் ராமழான் பாய்தான் , அதிர்ச்சியும் , ஆனந்தமும் அடைந்து இருக்கிறாரம் .வந்திருக்கும் புதிய ஆடர் அவருடைய ஒரு ஆண்டு ,உர்ப்பதியைப் போல் நன்கு மடங்காம் .இதில் 1,20,000 ஜோடிகளுக்கு ஆடர் ஈராக் கில் இருந்தும் , 18,000 ஜோடிகள் அமெரிக்காவில் இருந்தும் கேட்டு ஆடர் வந்துள்ளது .இந்த கம்பெனியின் ஷுவின் விற்ப்பனை உரிமையை ,ஒரு பிரிட்டன் நிறுவனம் ,புதியதாக பெற்றயுள்ளது .இதற்க்கு சிரியா ,எகிப்பது ,முதலிய நாடுகளில் இருந்தும் ஆடர்கள் குவிந்து வருகிறதாம் .நிலைமையை உணர்த்த நிறுவன அதிபர் அந்த மாடல் ஷுக்கு ,புதிய பெயரும் சூட்டிவிடாரம் , இப்போது அது புஷ் ஷு அல்லது பை பை புஷ் என பெயர் மாற்றம் அடைந்து விட்டது .
பாருங்கள் அதிஷ்டம் எப்படி அடிக்கிறது என்று ,
அடித்தவர் என்னோமோ இன்னும் சிறையில் தான் இருக்கிறார் .

Friday, December 12, 2008

விதியே விதியே தமிழச் சாதியை என்செய நினைத்தாய் !


விதியே விதியே தமிழச் சாதியை என்செய நினைத்தாய் !
பாரதி பிறந்து 126 ஆண்டுகள் ஓடிவிட்டன , ஆனந்த சுதந்திரம் அடையவேண்டி தான் வாழும் போதே ஆனந்தப்பள்ளு பாடிய பாரதி , ஆனந்த சுதந்திரத்தின் சுகத்தை அனுபவிப்பதற்கு தான் இருக்கமாட்டோம் என்று தான் ஆடுவோமே பள்ளு பாடுவோமேஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடிப்பாடினாரோ என்பது தெரியவில்லை ,ஆனால் கவிகளின் மொழிகள் பொய்ப்பதில்லை . அதுமட்டும் என்றும் நிலைத்திருக்கும் உண்மை
ஆனால் ஆண்டுகள் பல சென்றும் , இன்னும் மீளாத தமிழகத்தின் தாழ்த்த வாழ்வியலும் நாளுக்கு நாள் குறைந்து வரும் தரம் தாழ்த்த நிலையையும் , கலாச்சார சிர்குலைவுகளையும் ,சுதந்திரம் பெற்ற நமது மக்கள் இன்னும் பழைய அடிமையின் மோகம் விலகாமல் , கண்டதே காட்சி , கொண்டதே கோலம் எனவாழும் அவலத்தை அன்றே எண்ணி எண்ணி குமைந்திருக்கிறார் தமிழர் தம் பெருமையையும் , மாட்சிமைதனையும் மறந்துவிட்டு ,காணும் பொருள்களில் சிந்தை மிகச் செலுத்தி , தன் பெருமிதம் இழந்து வாழ்கிறார்களே, தம் பண்டையர் ஆக்கிய மாளாத செல்வங்களின் ,மதிப்பை தானே உணராமல் தற்குறியாக வாழும் மக்கள் நிலை குறித்து மனம் வாடி , விதியே , விதியே தமிழ்ச் சாதியை என்னசெய்யப் போகிறாய்? எனக் கேட்பதை படிக்கும் போதே இன்றுத்தான் பாடியது போல் புத்திளமை பொங்க விளங்குகிறது .அதுவே இன்றும் தொடர்வது தான் வேதனையாக இருக்கிறது

பாரதியாரின் தமிழ்ச சாதி எனும் அரியதொரு பாடல் . 1937 ஆம் வருடப் பதிப்பில் "இருத்தலை கொள்ளியிடையே" என உள்ளது .தற்ப்பொதைய தமிழர் நிலை போலவே அந்தப் பாடலுக்கும் முதலும் , முடிவிலும் உள்ள வரிகள் கிடைக்கவில்லை .தமிழர் சரித்திரம் போலவே பாடலின் முதலும் மர்ம முடிச்சிதான் . தமிழர் தம் வாழ்வியலின் இறுதி நிலைக்கூறித்த அச்சம்த்தை ஒத்து பாடலின் முடிவும் கிடைக்கவில்லை
பாடலின் தொடக்கமே இப்படி ஆரமிக்கிறது ,
..........எனப்பல பேசி இறைஞ்சிடப் படுவதாய்,
நாட்பட நாட்பட நாற்றமு சேறும் பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய் நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ?
விதியே விதியே தமிழச் சாதியை என்செய
நினைத்தாய் எனக்குரை யாயோ?
காணும் வழியலாம் சென்று , காட்சிக்கு தக்கபடி கண்டதே கோலமென அதக்கேற்ற வாறு மாறும் தமிழர் சமுதாயம் உன் அருளால் , தருமம் மாறா , பொருள்கொண்ட வாழ்கை வாழும் வழி அமைப்பையோ ?என என மேலும் குமைகிறார்
சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித் தன்மையும்
தனது தருமமும் மாயாது என்றுமோர்
நிலையா யிருந்துநின் அருளால் வாழ்ந்திடும் பொருளோடு வகுத்திடு வாயோ? தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று
உள்ளுறு தருமமும் உண்மையும் மாறிச்
சிதவற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?
அழியாக் கடலோ?
அணிமலர்த் தடமோ?
வானுறு மீனோ?
மாளிகை விளக்கோ?
கற்பகத் தருவோ?
காட்டிடை மரமோ?
விதியே தமிழச் சாதியை எவ்வகை விதித்தாய் ?என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.

ஏனெனில் சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும் திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகும் கருதியும்
எல்லை யொன் றின்மைஎ எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளாற் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச் சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று உறுதிகொண்டிருந்தேன்.
ஒருபதி னாயிரம் சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான் உள்ளுடை வின்றி உயர்த்திடு நெறிகளைக் கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்.
வள்ளுவரும் கம்பரும் பிறந்த இந்த பெருமைமிகு தமிழகம் அழிக்க முடியாத அமரத்துவம் வாய்ந்தது எண்ணி இருந்தாராம் , ஆனால் இன்று தமிழர் படும் படு கண்டு அவர் எண்ணம் மாறிவிட்டதாம் . எத்தனை உண்மை பாருங்கள் !
ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும் தென்முனை யடுத்த தீவுகள் பலவினும் பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள பற்பல தீவினும் பரவி யிவ்வெளிய தமிழச் சாதி தடியுதை யுண்டும் காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும் வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும் பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும் பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம் நாட்டினைப் பிரிந்த நலிவினார் சாதலும் இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்,
இவை அததனையும் மிஞ்சும் இன்றைய இலங்கை தமிழர் அவலம் , அவர்தம் மாளாத துயரம் இவைகளுக்கு எத்தனை பொருத்தமாக இருக்கிறது இந்த வரிகள் இன்னும் கூட உயிருள்ளவை !

தெய்வம் மறவார, செயுங்கடன் பிழையார், ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும், இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார், என்பதென் னுலத்து வேரகழ்ந் திருத்தலால் எனினும்
இப்பெருங் கொள்கை இதயமேற் கொண்டு கலங்கிடா திருந்த எனைக்கலக் குறுத்தும் செய்தியொன் றதனைத் தெளிவுறக் கேட்பாய்.
ஊனமற் றெவை தாம் உறினுமே பொறுத்து வானமும் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல்,
தானமும் தவமுந் தாழ்ந்திடல் பொறுத்து ஞானமும் பொய்க்க நசிக்குமோர் சாதி சாத்திரங் கண்டாய் சாதியின் உயர்த்தலம், சாத்திர மின்றேற் சாதியில்லை, பொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடும் மக்கள் பொய்ம்மை யாகிப் புழுவென மடிவார், நால்வகைக் குலத்தார் நண்ணுமோர் சாதியில் அறிவுத் தலைமை யாற்றிடும் தலைவர் - மற்றிவர் வகுப்பதே சாத்திரமாகும் - இவர்தம் உடலும் உள்ளமும் தன்வச மிலராய் நெறிபிழைத் திகழ்வுறு நிலைமையில் வீழினும் பெரிதிலை பின்னும் மருந்திதற் குண்டு செய்கையுஞ் சீலமும் குன்றிய பின்னரும்

இன்றும் நாளுக்கு நாள் வலுத்துவரும் , சாத்தியக் கொடுமைகள் ,அதனை சுட்டிக் காட்டி நாளுக்கு ஒன்றாக முளைக்கும் புதிய புதியக் கட்சிகளின் காட்சி . அர்த்தம் புரியாமல் வளரும் வர்ணாசிரமம் , இவைகளை மாய்த்து மாய்ந்து சாடுகிறார் .இன்னும் எத்தனை நாள் நீடிக்கும் இந்த வர்ணாசிரம என்ற அறியாமை ,ஒன்று புரிந்து அதை புனரமைக்கவேண்டும் அல்லது அதை பிய்த்து எறியவேண்டும்.இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் தமிழன் வாழ்வு சீர்க்கெட்டு சிதயவேண்டும் .இதுவரை வந்த சிர்திருத்த வாதிகளின் போதனைகள் , அவரவர் கண் முன்னே பொய்த்து போகிறதே .!வள்ளலார் கூட கடைவிரித்தேன் கொள்ல்வாரில்லை என கடையை சுருட்டிக் கொண்டு மறைத்துவிட்டரே !கோடிகோடியாய் இருக்கும் சீர்திருத்த கொள்ள்கைகளை , நாயன்மார் , ஆழ்வார் பாடல்களில் உள்ளதை உணராமல் இதில் உள்ள பக்தியையும் , தமிழின் சுவையையும் மட்டுமே சௌகரியமாக பாராட்டி கொண்டாடுகின்றனர் .இந்த அவலங்களை அன்றே அரை நூற்றாண்டுகளுக்கு முன் எண்ணி எண்ணி மாய்த்த பாரதியார் , விதியை நம்பியதால் விதியே விதியே தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?

மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின் செய்கையும் நடையும் தீனியும் உடையும் கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை யவற்றினுஞ் சிறந்தன, ஆதலின், அவற்றை முழுதுமே தழுவி மூழ்கிடி நல்லால், தமிழச் சாதி தரணிமீ திராது பொய்த் தழி வெய்தல் முடி பெனப் புகழும்
நன்றடா! நன்று! நாமினி மேற்றிசை வழியெலாந் தழுவி வாழ்குவம் எனிலோ ஏ! ஏ! அஃதுமக் கிசையா தென்பர், உயிர்தரு மேற்றிசை நெறிகளை உவந்து நீர் தழுவிடா வண்ணந் தடுத்திடும் பெருந் தடை பல அவை நீங்கும் பான்மையை வல்ல என்றருள் புரிவர், இதன் பொருள் சீமை மருந்துகள் கற்ற மருத்துவர் தமிழச் சாதியின் நோய்க்குத் தலையசைத் தேகினர், என்பதே யாகும்;
இஃதொரு சார்பாம் பின்னொரு சார்பினர் வைதிகப் பெயரோடு நமதுமூ தாதையர் (நாற்பதிற் றாண்டின்) முன்னிருந்தவரோ? முந்நூற்றாண்டிற்கு அப்பால் வாழ்ந்தவர் கொல்லோ? ஆயிரம் ஆண்டின் முன்னவரோ, ஐயா யிரமோ? பவுத்தரே நாடெலாம் பல்கிய காலத் தவரோ? புராண மாக்கிய காலமோ? சைவரோ? வைணவ சமயத் தாரோ? இந்திரன் தானே தனிமுதற் கடவுள் என்றுநம் முன்னோர் ஏந்திய வைதிகக் காலத் தவரோ? கருத்திலா தவர்தாம் எமதுமூ தாதைய ரென்பதிங் கெவர்கொல்?
நமதுமூ தாதையர் நயமுறக் காட்டிய ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும் ஆங்கவர் காட்டிய அவ்வப் படியே தழுவிடின் வாழ்வு தமிழர்க் குண்டு
இந்த நிலைமை மாற என்ன தான் வழி ?இப்படியே இத்தனை நாள்தான் இருப்பது .அதற்கும் விடை கூறுகிறார் பாரதியார் ! நமதுமூதாதையர் நயமுறக் காட்டிய ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும் ஆங்கவர் காட்டிய அவ்வப் படியே தழுவிடின் வாழ்வு தமிழர்க் குண்டு !நாம் இனி யாவது நம் முன்னோர் நமக்காக கனிவுடன் உகந்தளித்த வழிகளில் செல்வதே ,அவர்தேம் உரைகளை நமது வாழும் வழியாக கொள்ளவதே ,தற்போதைய பிரச்சனைகளுக்கு தீர்வு என்கிறார் .

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்வாழிய பாரத மணித்திரு நாடு