Friday, September 26, 2008

பிரபஞ்ச புதிர் !! -ஏ.சுகுமாரன்

பிரபஞ்ச புதிர் !! -ஏ.சுகுமாரன்
பிரம்மனே ! பிரபஞ்ச நாயகனே !

பிந்துவே ! பெரு ஓசையின் (BIG BANG) விளைவே !

எமையெல்லாம் படைத்தது ஆள்வது

நீஎன்றால் நீங்காத ஐயம் பல என்றும் உண்டு !

பசியும் பட்டினியும் கூட உன் படைப்பு தானா?

எத்தனை தொழில் செய்தாலும் துரத்தி வரும் தொல்லைகளும் நீயே படைய்த்தயா ? பிறந்தோர் அனைவரும் புசிதிருக்கும் வித்தையை ஏன் படைக்க மறந்தாய்! " இரந்தும் உயிர் வாழ்தல்

வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான் " என உன்னை வான் புகழ் வள்ளுவர் சபித்த போதும் ஏன் வாளாயிருந்தாய்

படைத்தல் உன் பணி என்றால் உலகில் இத்தனை நெருக்கம் ஏன் படைத்தாய் ! உன் கணக்கில் பிழையா ?காலத்தின் இறுதியால் இந்த குழப்பமா ? எம்மில் பலர் வாடுவதையும்

வெற்று குடங்கள் வீரமுரசு கொட்டுவதும் நீயேன் உன் படைப்பில் அனுமதித்தாய் ?மசால் வடை விற்பவன் மகாகவியை விட வசதியாய் வாழ , மனிதன் படைத்த பணம் உன் அனைத்து படைப்பையும் ஆளும் தகுதி அடைந்தது எப்படி ? இறப்பில் தன்னே ஒற்றுமை அடைகிறான்

வாழும் போதோ ஆயிரம் வேற்றுமை அவன் தவறால் மட்டும் இல்லாமல் தவிகிறானே !

கர்மத்தின் பம்பர சுழற்சி விசை இன்னும் உன்னிடம் தானே உள்ளது !!

Monday, September 22, 2008

தில்லி வாசிகளின் திகைப்பும் ,தலைகீழாய் திரும்பிய குப்பை தொட்டிகளும் .......---- ஏ. சுகுமாரன் ..



தில்லி வாசிகளின் திகைப்பும் ,தலைகீழாய் திரும்பிய குப்பை தொட்டிகளும் .......---- ஏ. சுகுமாரன் ..
ஞாயிறு அன்று மாலைதான் தில்லியில் ரயிலில் இருந்து இறங்கமுடிந்தது ,கருப்பு சனியின் கொடூர வன்முறை , மனித இனத்திற்கே ஒவ்வாத பயங்கர வன்முறை தாண்டவத்தின் பாதிப்பு பார்க்கும் இடமெல்லாம் தெரிந்தது ! தில்லி மக்களின் முகமெல்லாம் ஒருமாதிரியான இறுக்கம் !ஒன்று போல அனைவர்முகத்திலும் ஒரேமாதிரி முகபாவம் .பேசவே அனைவர் தயக்கமும் ஒருமாதிரியே! ௨00௫- ஆண்டு நடந்த பயங்கரம் மீண்டும் தில்லியில் நடக்கும் என்றே நம்ப மறுக்கும் மனோபாவம் !குண்டுவெடித்த கருப்பு சனியின் சேதி கேட்ட டெல்லி வாழும் மக்கள் அனைவரும் குப்பைதொட்டியில் குண்டுவெடித்த செய்தி அறிந்து என்னசெய்தனர் தெரியுமா ?
அனைத்து தெருக்களிலும் குப்பை தொட்டிகள் மக்களால் தலைகீழாய் திருப்ப பட்டன .மறு நாள் காலை !ஒரே மாதிரி எதிர் வினை அனைத்து மக்களையும் செயல்பட வைத்து தான் விந்தை .!இது மாதிரி செய்ய சொல்லி கூறப்பட்டதா என நகராச்சி அதிகாரிகளை கேட்டதற்கு இல்லை என மறுத்தனர் .மறுநாள் வெடி வெடித்த கபூர் மார்க்கெட் பகுதிக்கு சென்றபோது , கும்பல் கும்பலையே மக்கள் சுற்றி அமர்ந்து கதறி அழுதவாறு இருந்தனர் .ஆனால் மக்கள் அந்த பகுதியை நடந்து போக எளிதாக அனுமதிக்க பட்டனர் .காவல் துறை இறுக்கமான முகத்துடன் ஆனால் யாருக்கும் இடையுறு இன்றி அமைதியாக மக்களை கட்டுபடுத்தினர் .இது நாம் பயிலவேண்டிய பண்பு .ஆனாலும் டெல்லி மக்கள் ஒரே மாதிரி குப்பை தொட்டிகளை திருப்பி வைத்து தங்கள் எதிர்ப்பை கட்டியதும் , அனைத்து மக்களும் ஒரே நாளில் அச்ச உணர்வில் இருந்து வெளிவந்ததும், போலீசார் காட்டிய கண்ணியமான கண்டிப்பும் இந்தியா எந்த அச்சுறுத்தலையும் உறுதியாக எதிர்கொள்ளும் வல்லமை உடையது என காட்டியது.ஜெய் ஹிந்து !

கறுப்பு சனியும் அடுத்த ஒரு கருத்துள்ள ஞாயிறும ------- ஏ. சுகுமாரன்




கறுப்பு சனியும் அடுத்த ஒரு கருத்துள்ள ஞாயிறும ------- ஏ. சுகுமாரன்




கருப்பு சனியின் கொடூரைதை சற்றே மறந்து ஞாயிறு அன்று குவிந்தனர் அதிசயம் ! ஆர் .கே புரம் தமிழ் சங்க வளாகத்தில் நிரம்பிவழிந்ததுஎதையும் எதிர்பார்க்காத தானே வந்து குவிந்த மக்கள் கூட்டம் !பெருமை எல்லாம் பேசவந்த அபுதுல் கலாம் அவர்களுக்கும் , வடக்குவாசல் இதழின் தமிழர் மத்தியில் உள்ள நெருக்கத்தையும் உறவையும் வெளிபடுத்தியது.!கவின் மிகு வடக்குவாசல் இலக்கிய சிறபிதழை தன் பொற்கரங்களால் வெளியிட்டு வாழ்த்துரை கலாம் அவர்களாலும் , கவிஞர் ராசன் அவர்களும் வழங்கப்பட பெற்றுக்கொளும் வாய்ப்பு பதிபசிரியர் அவர்களால் எனக்கும் கிட்டியது !வன்முறைக்கு எதிராக நல்ல சக்கதிகள் எல்லாம் ஒன்று சேரும் அவசியத்தை கலாம் அவர்கள் வலியிறுத்தி அனைவரையும் நாட்டின் முன்னேற்றதிர்க்காகவும் தனிமனித முன்னேற்றதிர்க்காகவும் ஒருகுரலில் உறுதி எடுக்க செய்தார் வடக்கு வாசல் இதழையும் , பென்னேஸ்வரனின் நல்லதிர்க்கான முயற்சியில் அனைவர் பங்களிப்பின் அவசியத்தையும் உணரும்படி வாழ்த்தி பேசினார் கவிஞர் ராஜன் அவர்கள் தன் அறிவார்த்த பேச்சால் அனைவரையும் கவர்ந்தார் .உச்ச நிதிமன்ற மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணமணி துருவி துருவி வடக்குவாசலில் தேடியும் குறையுன்றும் இல்லை கிருஷ்ணா என்றார் ..இருபது மாதமாய் இதமாய் இனிய கருத்துக்கள் பலவற்றை இளைய சமுதாயத்தினரின் முன்னேற்றம் காண எழுதிவந்த சன்னத் குமார் தன் பேச்சாலும் அனைவரையும் கவர்ந்தார் .மேதகு கலாம் அவகளின் பேச்சும் ,கவிஞர் ராஜன் அவர்களின் சிந்தனை சிதறல்களும் நீண்ட நாட்கள் வந்தவர் மனதை விட்டு அகலாது .பெருமை மிகு விருந்தினர் அதிகம் கொண்ட அவையில் இரண்டு மணி சென்றதே தெரியாமல் மக்கள் மயங்கினர் .நன்றிஉரை கூற வந்த திரு பென்னேஸ்வரனும் தன் மயக்கும் பேச்சால் ஒருவரையும் விடாமல் நன்றி தெரிவித்து தன் பண்பை உணர்த்தினர் .எல்லாம் சொல்லி இலக்கிய இதழை பற்றி சொல்லாமல் விட்டால் எப்படி ?அம்பது ரூபாயில் ஒரு அறுசுவைவிருந்து ! 15 அன்று தான் 86 வயது முடித்த கி.ரா வில் இருந்து அனைத்து மூத்த ,மக்களறிந்த படைபாளிகளின் படைப்பால் கமகமத்தது , கனமும் அதிகம் தான் .!முன்றண்டுகளை முடித்த வடக்கு வாசல் பென்னேஸ்வரன் பார்வையே தனிதினுசு , இலக்கிய பார்வை , நாடக மேடையாகவேஉலகை பார்க்கும் நவீன நாடக பிதாமகன் , இறைவன் மட்டும் லாகனை சற்றே தளர்திருந்தால் பல அற்புதங்களை இன்னும் நடத்தி காட்டி இருப்பார் .நல்லவைகளை மனம் விட்டு பாராட்டுவது தானே நலவைகள் வளரவழி ! எதுவும் இல்லாதவர்களை ஒரு நல்ல சொல்லவாவது சொல்ல சொல்லிதானே திருமூலர் கூறுகிறார் ! நல்லதே செய்வோம் !வாழ்க வளமுடன் !

Sunday, September 07, 2008

விலங்கு கடவுளர்

இந்தியாவில் கடவுளாக, புனிதமாக் கருத படும் வேறு சில் விலங்கு வடிவங்கள் .
ஐராவதம் --இந்திரனின் வாகனம் வெள்ளை யானை
எருமை எமனின் வாகனம்
காகம் சனி யின் வாகனம்
காளை சிவனின் வாகனம்
நாய பைரவர் வாகனம்
காமதேனு வளத்தின் வடிவம்
மயில் முருகரின் வாகனம்
கருடர் விஷ்ணுவின் வாகனம்
எலி விநாயகரின் வாகனம்
ஆடு அக்னியின் வாகனம்
அன்னம் சரஸ்வதியின் வாகனம்
சிங்கம் துர்காவின் வாகனம்
கிளி காமதேவனின் வாகனம்
இவை கடவுளுடன் சேர்த்தே வழிபட படும் , கடவுளர்களின் வாகனங்கள் .
சில கடவுளுக்கு விலங்குகளின் கொடியும் உண்டு .
சமுதாயத்தில் விலங்குகளுக்கும் சமதர்மம், சமநிலை உண்டு என்பதை உணர்தேவே விலங்குகளும் , விலங்குகளுக்காக சில விழாக்களும் நாம் கடை பிடித்தோம் .காலத்தின் விபரித்தால் , நாம் சில விலங்குகளை , பிராணிகளை ஒழித்து புறக்கணித்து வாழ்தோம் இன்று இயற்கையால் மனித இனம் புறகணிக்க பட்டு வருகிறது. இயற்கையின் சமநிலையை இழந்து விட்டோம் .

விநாயகர் வடிவத்தை பிற கிரகத்தில் இருந்து வந்த , முகத்தில் நீண்ட வாயு கவசம் மாட்டிய ,கவச உடை அணிந்த உருவம் என விவரித்து பல ஆண்டுகளுக்கு முன் ஒரு கட்டுரை படித்த நினைவு , "ஓம் ஷக்தி" இதழில் என நினைக்கிறேன் .
அன்புடன் ,ஏ. சுகுமாரன்

Wednesday, September 03, 2008

இன்று விநாயகர் சதுர்த்தி



இன்று விநாயகர் சதுர்த்தி !


மார்க்கெட்டில் முட்டிமோதும் அலை அலையாய் கூட்டம்


வருடத்துக்கு ஒரு முறையே கிடைக்கும்


விளாம்பழம் , பிரபம் பழம் , கள்ளா பழம் இன்னும்


நாவல் பழம் ,எருக்கம் பூ , கம்பு கதிர்கள் ,அருகம் புல்


என கவனமாய் ஒன்றையும் விட்டுவிடாமல் வாங்க துடிக்கும் மக்கள்


மண் பிள்ளையார் விதவிதமாய் காசுக்கு ஏற்றபடி காட்சி அளிக்கிறார்அவருக்கு வண்ண மிகு கொற்ற குடைகள்


வாங்கும் போதே மகிழ்ச்சி ! விழாவின் நோக்கம் விளங்குகிறது !




விநாயகர் நமது முழு முதற்கடவுள் ! அவர் இல்லாமல் ஒருபாடலும் ஆரம்பம் இல்லை ! அது இலக்கியமனலும , நாடகம் ஆனாலும் ,யாகம் ஆனாலும் , எந்த பூஜை ஆனாலும் ,முதல் வணக்கம் அவருக்கே !அவர் ஒன்றும் வாதாபியில் இருந்து இடையில் வந்த கடவுள் இல்லை நம் தமிழர் பழம் பெரும் வழிபாட்டில் அவருக்கு தான் முதலிடம் .உலக மொழிகள் அனைத்திற்கும் அடிப்படை ஒலியான அ, உ , ம என்ற முன்று ஒலிகளின் ஒன்றி நிற்கும் ஓம் என்ற ஆதார ஒலியே விநாயகர் என நமது சித்தர் கண்டு ,காணாபத்தியம் என்ற வழிபாட்டு முறை வழி வழியாய் வந்தது .சுமார் 3000 ஆண்டு களுக்கு முன் தோன்றிய , சமந்தரால் திருவாடு துறையில் 1300 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்க பட்ட திரு மந்திரத்தை எழுதிய சித்தருக்கெல்லாம் சித்தரான திருமூலர் தனது திருமந்திரத்தை
:"ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்ற்ற்ற்னை "


என்ற வணகதுடன் தொடங்குகிறார் . விநாயகர் என்ற வடிவம் நமது சித்தர்கள் ஓளி முறையில் அமைத்த வழிபாட்டு ஒருவமாகும் , இந்த காட்சி பொருளுக்கு ஒலியிலான வடிவம் தந்து அமைதிருபதே அவ்வையின் விநாயகர் அகவல் .இது ஒரு ஞான சாதனம் .


இந்த அகவல் நூலும் "சீதக் கள்பச் செந்தா மறைப்பூம்பாதச் சிலம்பு பல இசை பாட" என திரு வடி வணகதுடன் ஆரமிகிறார். மேலும் தொல்காப்பியம் இளம்பூரனதிலே"தன் தோள் நான்கின் ஒன்று கை மி கூ உம் களிறு வளர் பெரும் காடாயினும் ஓளி பெரிது என்ற மிக பழைய பாடலும் விநாயகர் வழிபாட்டின் பழமையையும் , தமிழர் வழக்கத்தையும் எடுத்து காட்டுகிறது .விநாயகர் சித்தர்களின் சீரிய படைப்பு ஓங்காரத்தின் வடிவம் பிரணவத்தின் வெளிப்ப்பாடு .எளிமைக்கும் எளிமையை சிறுவர்க்கும் மிகநெருங்கிய கடவுள் ,அவர் இன்றி பலருக்கு பரீட்சை வெற்றி பலன் அள்ளித்தது இல்லை தமிழகத்தில் விநாயகர் வழிபாடு எளிமைக்கும் எளிமையை அனைத்து மக்களுக்கும் உரிய எங்கும் நிறைத்த முலைக்கு முலை , சந்துக்கு சந்து அருள் பாலிக்க காத்திருக்கும் கடவுள் .இன்று வணங்கி மகிழ்வோம் , இன , மத வேறுபாடு களைய அவரையே தாள் பணிவோம் .அன்புடன் ஏ. சுகுமாரன் http://www.puduvaitamilsonline.com/amirthamintl@gmail.com

Tuesday, September 02, 2008

செய்திகள் செப் 2--

புதிய புதுவை அமைச்சர்கள் பட்டியலுக்கு சோனியா ஒப்புதல்நமச்சிவாயம் அமைச்சராகிறார் --ஆடம்பர கொண்டாட்டம் வேண்டாம்----வைத்திலிங்கம் வேண்டுகோள் --ஏ.சுகுமாரன்
புதுச்சேரி அமைச்சர்கள் பட்டியலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்படி நமச்சிவாயமும் அமைச்சராகிறார்.புதிய அமைச்சரவை 4-ந்தேதி பதவி ஏற்கும் என்று தெரிகிறதுபுதுவையில் புதிய அமைச்சரவை பதியேற்பு விழாவை முன்னிட்டு கட்-அவுட் மற்றும் பேனர்கள் வைத்து ஆரம்பரமாக கொண்டாட வேண்டாம், காமராசர் வழிநடக்கும் நமது காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் எங்களது பதவியேற்பு விழாவை முன்னிட்டு ஆரம்பரம் இல்லாமல் மிக எளிமையான முறையில் தங்களின் அன்பையும், ஆதரவையும் தருமாறு வேண்டுகிறேன்.என்று தொண்டர்களுக்கு வைத்திலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்



தமிழக புதிய வாக்காளர் 35 லட்சம் பேர்--மொத்த வாக்காளர் 4.29 கோடி நரேஷ் குப்தா பேட்டி --ஏ.சுகுமாரன்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது தமிழக வாக்காளர் இறுதிப்பட்டியல் செப்டம்பர் மாதத்துக்குள் வெளியிடப்படும். இதில், 4 கோடியே 29 லட்சம் பேர் இடம்பெறக்கூடும் என்று தெரிவித்தார்.தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், புதிதாக பெயர் சேர்ப்போர், தொகுதி மாறியோர் போன்றவர்கள் அது தொடர்பான திருத்தங்கள் செய்வதற்கான அவகாசம் அளிக்கப்பட்டது. இதில், எதிர்பாராத வகையில் மிக அதிக எண்ணிக்கையில், 35 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற பட்டியல் திருத்தத்தின்போது, 13 லட்சம் முதல் 15 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்தது குறிப்பிடத்தக்கது.இப்போது, தேர்தல் வருவதால் வாக்காளர்களிடம் ஓட்டு போட ஆர்வம் அதிகரித்திருக்கலாம். அதனால் நிறைய விண்ணப்பங்கள் வந்திருக்கலாம். இதுதவிர, அரசியல் கட்சிகள், மக்களை ஊக்கப்படுத்தியதும் காட்டியதும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தங்கள் தொடர்பான விண்ணப்பங்கள், சிறப்பு முகாம்கள், வாக்குச்சாவடி அதிகாரிகள், கல்லூரிகள் மற்றும் இன்டர்நெட் மூலமாக பெறப்பட்டன. இன்டர்நெட் வாயிலாக (ஆன்லைன்) 6,700 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் சென்னையில் அதிகபட்சமாக 2,433 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்றவை மேற்கொள்ளப்படும் அதேநேரத்தில் இறுதிப்பட்டியலில், முகவரி மாறியவர்கள், உயிரிழந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படும்.

தமிழகத்தில் 2008-ம் ஆண்டில் மக்கள்தொகை 6 கோடியே 60 லட்சமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிக்கு பிறகு, மேலே சொன்ன தொகையில் 65 சதவீதத்தினர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவார்கள் என்று கருதுகிறோம் (சுமார் 4 கோடியே 29 லட்சம் வாக்காளர்கள்). இந்த தொகையானது, தமிழக மக்கள்தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கையை சற்று ஏறக்குறைய ஒத்திருக்கக்கூடும்.இவ்வாறு நரேஷ் குப்தா தெரிவித்தார்.
அண்ணாவின் வாரிசுகளுக்கு நிதியுதவி!கருணாநிதி ரூ.10 லட்சம் வழங்கினார் --ஏ.சுகுமாரன்

அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் வாரிசுகள் மறைந்த சி.என்.ஏ. பரிமளம் மற்றும் சி.என்.ஏ. இளங்கோவன், சி.என்.ஏ.கவுதமன், சி.என்.ஏ.பாபு ஆகியோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று கடந்த 30-ந் தேதி நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.
முதல்-அமைச்சர் கருணாநிதி மறைந்த சி.என்.ஏ. பரிமளத்தின் மகன்கள் மலர்வண்ணன், சவுமியன், மகள் இளவரசி ஆகியோரிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். அதே போல் சி.என்.ஏ. இளங்கோவனுக்கும் முதல்-அமைச்சர் கருணாநிதி ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மறைந்த சி.என்.ஏ.பரிமளத்தின் மகன்களும், மகளும் மற்றும் சி.என்.ஏ. இளங்கோவன் ஆகியோர் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
பிகாரை வாட்டும் கடும் வெள்ளம் ! 20 லட்சம் பேர் தவிப்பு ! --ஏ.சுகுமாரன்
பீகார் மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்த பலத்த மழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.நேபாள நாட்டில் இருந்து பாயும் கோசி ஆற்றில் இருந்து 2 லட்சம் கன அடிக்கும் அதிகமான தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் பீகாரில் ஓடும் அந்த ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.பல ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. நூற்றுக் கணக்கான வீடுகள் இந்த வெள்ளத்தில் இடிந்து விட்டன. 20 லட்சம் பேர் வீடுகளை இழந்ததுடன், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறார்கள்.
மீட்பு பணிகளுக்காக 28 ஆயிரம் மாநில போலீசார் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்களுடன் ராணுவமும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. நேற்று வரை மொத்தம் 4 ஆயிரத்து 500 (37 கம்பெனி) ராணுவ வீரர்களை மத்திய அரசு மீட்புப் பணிக்காக பீகாருக்கு அனுப்பி வைத்துள்ளது.நேற்று வரை 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்
இனி ஏடிஎம் போனால் வருமான வரி கட்டலாம்,! --ஏ.சுகுமாரன்
வருமான வரி கட்ட இனிமேல் எந்த கஷ்டமும் தேவை இல்லை. நேராக வீடு அருகே இருக்கும் வங்கி ஏடிஎம்முக்கு சென்றால் போதும். உடனே கட்டிவிட்டு திரும்பலாம். மேலும் ஒரு நவீன தொழில்நுட்பத்தை வருமான வரித் துறை பயன்படுத்த உள்ளது. இதன் மூலம் ஒருவர் செலுத்திய வரித் தொகையும், கணக்கையும¢ சரி பார்த்து, வரித் தொகை ஏதேனும் திரும்பத் தர வேண்டுமா என விரைவாக கண்டறிய முடியும். கடந்த ஆண்டில் நேரடி வரி வசூல் ரூ.3.14 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டு ரூ.3.95 லட்சம் கோடி வசூலிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. --