Friday, June 20, 2008

பண வீக்கம் 13 ஆண்டுகளில் இல்லாத உச்சம் - அறுவை சிகிச்சைக்கு நேரம் வந்துவிட்டது

பண வீக்கம் 13 ஆண்டுகளில் இல்லாத உச்சம் - அறுவை சிகிச்சைக்கு நேரம் வந்துவிட்டது
பண வீக்கம் இன்று 11.05 % , மூன்று இலக்க எண்ணைத் தொட்டு 13 ஆண்டுகால சாதனையை அடைந்தது. இந்த பணவீக்கம் 11.05 % சதவீதத்தை தொட்டதன் மூலம் நமது பொருளாதார மேதையான பிரதமரும், பொருளாதார அறிவு ஜீவி நிதி அமைச்சரும், ஆக்ஸ்போர்டு மற்றும் ஹார்வோர்டு கல்லூரி படித்த மேதைகள் இயலாத ஒன்றை மீண்டும் முடியுமாறு செய்துவிட்டனர். முன்பு நரசிம்மராவ் பிரதமராகவும் மன்மோகன் சிங் நிதி அமைச்சராகவும் இருந்த 1996ம் ஆண்டு பணவீக்கம் 10மூ கடந்தது. தற்போது மீண்டும் மன்மோகன் சிங் பிரதமராய் இருக்கையில் அது 11.05% அடைந்து சாதனை படைத்துள்ளது.
பணவீக்கம், வலியை ஏழைகளுக்குத்தான் தரப்போகிறத. இந்தியாவின் வளர்ந்து வரும் புதிய பணக்காரர்களை அது எந்த வகையிலும் பாதிக்கப்போவதில்லை. அவர்கள் அதை தங்கள் வாழ்வு முறையில் உணரக் கூடப் போவதில்லை. மாறாக வளர்ந்து வரும் விலையேற்றத்தால் அவர்கள் மேலும் மிகப் பெரிய பணக்காரர்கள் ஆகப் போகிறார்கள்.
எண்ணற்ற தியாக தீபங்களால், தங்களது இன்னுயிரையும், இவ்வுலக வாழ்க்கையையும் சுதந்திர வேள்வியிலே ஆகுதியாக இட்டு வராது போன்ற மாமணியாய் நமக்கு கிடைத்த இனிய இந்த சுதந்திரத்தை நமக்கு பெற்றுத் தந்த காங்கிரஸ் என்கின்ற நூறாண்டு பழைiமான ஒரு இயக்கம், மதவாத கட்சிகளுக்கிடையேயும், தன்னலத்திற்காக அரசியல் நடத்தும் அடிப்படை இல்லாத சொந்த முதலில் ஆரமிக்கப்பட்ட புதிய அரசியல் கார்ப்பரேட் கட்சிகளுக்கும் இடையே தோற்று, இருக்குமிடம் தெரியாமல் போய்விடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது.
எத்தனை எத்தனை உத்தமர்கள், தியாக சீலர்கள் தலைமையிலே வளர்ந்த தொன்மையான கட்சி, மகாத்மாவால் வழி நடத்தப்பட்டக் கட்சி தற்போதைய விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவரத் தெரியாமல் தன்னையே இழக்கும் அபாயம் மிரட்டுகிறது. இந்த நிலையில் அணு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, கம்ய10 கட்சியால் ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டு காங்கிரஸ் தேர்தலை சந்திக்குமானால், பிஜேபிக்கு பழம் நழுவி பாலில் அல்ல வாயிலேயே விழும் சந்தர்ப்பங்கள் அதிகம்.
எனவே இனியாவது. நமது பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், நிதி அமைச்சர் சிதம்பரம், திட்டக்குழு தலைவர் அலுவாவியா போன்ற பொருளாதார மேதைகள் தங்கள் அறிவை ஒரு புறம் ஓரமாக வைத்துவிட்டு உணர்ச்சி ப10ர்வமாக இந்தியாவின் 80 %சதவீத ரூபாய் 3000ஃ- மாத வருமானத்திற்கு கீழ் வாழும் பெரும்பான்மை மக்களைப்பற்றி சிந்தித்து இந்த விலைவாசி ஏற்றத்தை குறைப்பதற்கு ஆக்கப10ர்வமான, நடைமுறை சாத்தியமான செயல்களை உடனே செய்ய வேண்டும்.
வைத்தியன் காய்கறி வாங்கப் போனால் எதுவுமே வாங்க முடியாது என்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு எல்லாம் தெரிந்ததால் எந்த காய்கறிகளும் வாங்க எந்த முடிவும் எடுக்க முடியாது. எனவே இப்போது அறிவுக்கு மட்டும் வேலை இல்லை. மக்களின் உணர்வை புரிந்து கொண்டு அவர்கள் துயர் துடைக்க உடனே ஆவன செய்ய வேண்டும்.
இனியும் விலைவாசி ஏற்றத்திற்கு பெட்ரோல் விலையையோ, வேறு காரணங்களையோ கூறிக் கொண்டு இருக்கக்கூடாது. காரணங்கள் யாருக்கும் சோறு போடாது.
தற்போது இந்தியாவின் சாதாரண மக்கள் சம்பாதிக்கும் பணத்தில் 70% சதவிகிதம் தனது சாப்பாட்டிற்கும் 30% சதவிகிதம் வீட்டு வாடகைக்கும் செலவாகிறது. வுளர்ந்த நாடுகளில் இந்த நிலை இல்லை. நானே பல ஆண்டுகள் வெளிநாடுகளில் வாழ்ந்திருக்கிறேன். அங்கெல்லாம் வருமானத்தில் 10% இருந்தால் சிக்கனமான எளிமையான சாப்பாட்டிற்கு போதும்.
மேலும் மேலும் பெட்ரோல் இறக்குமதியை ஊக்குவித்து, நமது பணத்தை எல்லாம் அதற்கே அள்ளிக் கொடுத்து விட்டு, மற்றொரு புறம் அன்னிய நாட்டுக் கம்பெனிகள் பெட்ரோல் உபயொகம் மேலும் பெருகச் செய்யும் புதிய புதிய கார்களை உற்பத்தி செய்து, 20மூ சதவிகித மேல்தட்டு மக்களுக்காக அவர்களின்; சொகுசுப் பயணங்களுக்காக வழவழ சாலைகளையும் நாம் போட வேண்டியதுதான். ஆனால் நாட்டின் வளர்ச்சி என்பது எழுகின்ற உயரமான கட்டிடங்களிலோ அல்லது அகலமான அழகிய சாலைகளிலோ உண்மையிலேயே இல்லை.
எல்லோரும் எல்லாமும் பெற்று சாமான்யனும் தனது மனம் வாடாமல் மெய் வருந்தாமல் உண்ண உணவும், இருக்க இடமும், தனது விருப்பமான கல்வியை பயிலக் கூடிய வாய்ப்பும் பெற வேண்டும். அதுவே உண்மையான வளர்ச்சி. ஆனால் நமது அரசியல் கட்சிகளுக்கு இலவசங்களை வாங்கிக் கொண்டு வாக்குச்சீட்டை; ஆதரவாய் போடும் ஏக்கப் பெருமூச்சு விடும் ஏழைகள் தானே
வேண்டும்
நமது பொருளாதார புள்ளி விவரப்படி நமது வளர்ச்சி விகிதம் 7% தான். ஆனால் பணவீக்கம் 11.05% இந்த நிலையை காங்கிரஸ் கட்சி ஒரு எச்சரிக்கையாக எண்ணி விரைவிலே விலைவாசி உயர்வுக்கு ஆற்ற வேண்டிய பங்கை ஆற்றி விட்டு, பின் அணு ஒப்பந்தம் கையெழுத்து இடுவது தான் இப்போதைக்கு உத்தமம். இந்த நிலைக்கு பிரதமரை மட்டுமோ, நிதி அமைச்சரை மட்டுமோ பலிகிடா ஆக்காமல் முழுமையான காங்கிரஸ் கட்சியும் மிகத் தீவிரமான கொள்கை முடிவுகள் எடுக்க வேண்டிய தருணம் இது.

Tuesday, June 17, 2008

நீலக்கடல்

"நீலக்கடல் "என நாகரத்தினம் கிருஷ்ணா என்பவர் எழுதி இருக்கும் ஒரு சமிபக்கால சரித்திர நாவலை படித்தேன் .சமிபத்தில் இத்தனை சுயமான சிந்தனை கொண்ட நாவல் தமிழில் நான் பார்க்கவில்லை .புதுசேரியை பற்றிய சமிபகாலதிய சரித்திர நாவல் .சென்னையில் உள்ள சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது .புதுவையின் மூன்று நூறு ஆண்டு வரலாறு கூறப்படுகிறது .தமிழகம் மற்றும் புதுவை தமிழர்கள் எப்படி ஏமாற்றி அடிமைகளாய் ஹாலந்து , மொரிஷியுஸ் ,பிரெஞ்சிந்திய திவுகளுக்கு அனுப்பப்பட்டனர் , அவர்கள் அனுபவித்த வன் கொடுமைகள் ,இவர்கள் வாழ்வுமுறை இதனையும் கவிதை நடையில் மிக அற்புதமாக , திருமூலரையும் , சங்கபாடல்களையும் இணைத்து மிக சுவாரசியமாக எழுதப்பட்ட நாவல் .அவசியம் படியுங்கள் .
போர் ஆற்றலால் புவியெல்லாம் சென்று ஆட்சி கொடி நாட்டிய தமிழன் புகலிடம் தேடி பிழைக்க கூலியாய் , கேவலமாய் அடிமைகளாய் கடத்தப்பட்டும் ,தானே ஒப்புக்கொண்டும் கும்பல் கும்பலாக கப்பல் ஏறிய கொடுமைகள் நிகழ்ந்த இடம் தான் புதுவை .இத்தகு நிலைக்கு அக்காலத்தில் நிலவிய கடும் பஞ்சமும் , அரசர்களுக்குள் நடை பெற்ற உரிமை போர்களும் , அவர்களது மக்கள் நலன்கருததாத ஆணவ ஆடம்பர போக்குகளும் ,உதரணமாக ஒரு நாயக மன்னருக்கு 700 மனைவிகள் ! போன்றவைகள் , மக்களை கப்பல் ஏற செய்தன .
இந்த சோக சமிபத்திய வரலாறை கனத்த இதயத்துடன் , படிபவர்களை அந்த காலத்திற்கே அழைத்து செல்லும் கவி நயத்துடன் எழுதிஉள்ளார்
இதன் விலை ரூ 250
பக்கங்கள் 525

Saturday, June 14, 2008

வடக்குவாசல் ஜூன் இதழில் வெளிவந்த எனது படைப்பு

புதுச்சேரி என்கின்ற தந்திர பூமி...
ஏ.சுகுமாரன்

நீதி ஒழுங்கில்லா புதுச்சேரியின் வீதி ஒழுங்கானது என்ற ஒரு சொலவடை உண்டு. புதுச்சேரி சுதந்திரம் அடைந்ததற்குப் பின் மட்டுமல்ல அதற்கு முன்னரே கூட ஒரு தந்திர பூமியாகத்தான் வழங்கி வந்துள்ளது. சுதந்திர இந்தியாவில் எங்கும் இல்லாத வண்ணம் ஒரு மிகச் சிறிய சட்டமன்றத் தொகுதிக்கு, சுமார் 3000 ஓட்டுக்கள் வாங்கினால் வெல்லக்கூடிய புதுச்சேரி நகரத்தில் உள்ள தொகுதிக்கு செலவு சுமார் ஒரு கோடி ரூபாய். இதே சமயம் அருகில் உள்ள தமிழ்நாட்டின் 5 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு பாராளுமன்றத் தொகுதிக்கான செலவே ஒரு ரூபாய் ஒரு கோடியைத் தாண்டாது.இத்தனை மதிப்பு வாய்ந்த சட்டமன்ற உறுப்பினர் பதவி எத்தனை மகிமையும் மாட்சியும் கொண்டிருக்க வேண்டும் தெரியுமா?புதுவை அரசியல் அதன் ஆதிகாலம் தொட்டே மிக்க விறுவிறுப்பும் திருப்பங்களும் நிறைந்தது. என்னதான் தனிப்பட்ட சாதனை என்ற பலம் துணை இருந்தாலும், விளைந்து நிற்கும் பயிராகிய ஓட்டுக்களை அறுவடை செய்து கட்டுக்கட்டி ஓட்டு இயந்திரத்துக்குக் கொண்டு சேர்ப்பதற்குக் கட்டுகட்டாக பணம் இருந்தாலொழிய இயலாது என்கிற காலம் இது.புதுச்சேரியை பிரஞ்சுக்காரர்கள் ஆளும்போதே தேர்தல் திருவிழாவானது, கிருஸ்துமஸ் திருவிழாவை விட அதிகமாக மக்களால் விரும்பி வரவேற்கப் பட்டது. தேர்தல் நடைபெறுவதற்கு ஒருவாரம் முன்னமே வாக்காளர்கள் நான்கு தெருவிற்கு ஒன்று என வேட்பாளர்களால் வாடகைக்கு பிடிக்கப்பட்ட வாக்காளர் மாளிகைக்கு அழைத்து செல்லப்படுவர். பிறகு இந்திரலோகம் என்பதும் ராஜ சுகம் என்பதும் அங்கு நடைபெறும் உபசாரத்தில் தான் காணலாம். காலையில் கண் விழித்ததும் ஆவி பறக்கும் காபி முதலாக காலை முதலே ரொட்டி, முட்டை என காலை ஆகாரம், பிறகு விரும்பும் நேரத்தில் எல்லாம் மேல் நாட்டு மது வகைகள் மதியம் முழுமையான சாப்பாடு, சூப்பில் தொடங்கி அனைத்து வகை இறைச்சிகள், கிடைக்கும் எல்லாவிதமான கடல் உயிர் வாழினங்கள் என அவரவர் விருப்பம் போல் சாப்பாடு, தேனிலவுக்கு வந்தவர்கள் போல் இன்பமாய் இருக்க தனியிடம், புதிய ஆடைகள், இறக்குமதி செய்யப்பட்ட சோப், நறுமண பொருட்கள் இதற்குமேல் கையில் சுடசுடப் பணம். வாக்காளர்கள் வேட்பாளரின் உபசாரத்திலும், கண்காணிப்பிலும் இருப்பார்கள். இதில் இடைஇடையே இந்த மாளிகையில் இருந்து போட்டி வேட்பாளரின் மாளிகைக்கு நடைபெறும் கடத்தல் நாடகங்களும், பேரங்களும் வேறு உண்டு. இத்தனை கஷ்டங்களும், முயற்சிகளும், அபரிமிதமான செலவுகளும் மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்ற லட்சிய வேட்கை கொண்டுதான் நடைபெற்று இருக்கும் என நீங்கள் நினைத்தால், நீங்கள் தான் கள்ளம் கபடமற்ற அகில உலக அப்பாவி எனலாம்.இத்தகு நிலையிலேயே இதே பாணியில் புதுச்சேரியில் இதே முறையே வெற்றிகரமாக கையாண்டு முதல் முதலமைச்சராகவும், மேயராகவும் விளங்கியவர் எதுவாய் குபேர் என்கிற வல்லாதி வல்லவர். புதுவையின் காங்கிரஸ் ஆட்சிக்கு வித்திட்டவர் அவரே எனலாம். பின் அடுத்தடுத்து பல அரசியல் அதிசயங்கள் தொடர்ந்து புதுவையில் நடைபெற்றன.முதல்வர் பட்ஜெட்டை படிப்பதற்கு முன்பே எதிர்கட்சி தலைவர் பரூக் பட்ஜெட்டை சட்டசபையில் படித்து, அரசையே கவிழ்த்த படலம் அஇஅதிமுக முதல்வர் ராமசாமி இருந்த குறுகிய காலத்தில் நடைபெற்றதும் இந்த தந்திர பூமியில்தான். பிறகு முப்பது வயதுக்குள்ளேயெ இந்தியாவின் மிக இளைய சபாநாயகராகவும், மிக இளைய முதல்வராகவும் பணிபுரிந்த பாரூக் மரைக்காயர் அரசியல் செய்த தந்திரபூமியும் இதுதான். சட்டசபை நடைபெறும் போதே கலகலவென கரன்சி நோட்டுகள் ஒன்பதரை லட்சம் ரூபாயை கட்டுக்கட்டாக சபையில் கொட்டி பரபரப்பு ஏற்படுத்திய அப்போதைய மூப்பனார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கந்தசாமி, (தற்போது காங்கிரஸ் அமைச்சர்) தனக்கு லஞ்சம் கொடுத்து கட்சி மாறச் சொன்னதாக புகார் கூறி சி.பி.ஐ. வழக்கு வரை சென்ற ஸ்தலம் இதுதான்.எங்கள் ஒற்றுமையை யாராலும் குலைக்க முடியாது என அறைகூவல் அறிக்கை விட்டு முதல்வருக்கு எதிராக செயல்படும் அமைச்சரவையைக் கொண்ட அதிசய பூமி இது. ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தில் அமைச்சரவைக்கு கூட்டுப் பொறுப்பு என்று ஒன்று உள்ளதே அது புதுவைக்கு மட்டும் ஏன் பிரயோகமாகவில்லை? என்ற விக்ரமாதித்தியனிடம் கேட்கத் தகுந்த கேள்வியை உடைய நிலம் இது.மாநில அந்தஸ்த்து கோரி ஏகமனதாய் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய போது ஒரு அமைச்சர் மட்டும் மிகத் தீவிரமாய் அதை சட்டசபையிலேயே எதிர்த்த நிகழ்வு கண்ட பீடுடைய பூமி இது. ஆனால் அந்த அமைச்சரின் நேர்மைத்திறனை பாராட்டத்தான் வேண்டும்.சாதனைகள் என்று அறிவிக்கப்பட்ட ரூ.1200 கோடி திட்டமான தனியார் சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் விமான நிலையம், கோர்ட் வளாகம், பிலிம் சிட்டி அரசு மருத்துவ கல்லூரி போன்ற அறிவித்து பாதியில் தொங்கிக் கிடக்கும் பல திட்டங்களை குறித்து கவலையே படாத ஸ்ரீமான் பொது ஜனங்களையும் கொண்டது இந்த சிறப்பு பூமி.இங்கிருந்துதான் மோகன் குமார மங்கலம், பாலா பழனூர், பரூக் மரைக்காயர் தற்போதைய நாராயணசாமி போன்ற பலர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகி மத்திய மந்திரிகளாக டெல்லியில் கோலோட்சிய மாட்சியை பொருந்திய பூமி இது.இன்னும் எத்தனை எத்தனை பரபரப்புகள், ஒரு முதல்வர் ஆறுமாதம் பதவி வகித்தும் அவரால் எம்.எல்.ஏ. ஆக இயலாமல் அவருக்கு இடம் விட்டுத்தர ஒரு உறுப்பினர் ஆதரவாளரும் தயார் இல்லாததால் பதவி விலகிய புண்ணிய பூமி இது.இத்தகு புதுவையின் வாக்காளர்கள் தொகை வெறும் ஒன்பது லட்சம்தான், ரேஷன் கார்டுகளோ மூன்று லட்சம் தான் ஆனால் ஆண்டு ஒன்றிற்கு செலவே 1750 கோடி அதாவது நபர் ஒருவருக்கு சுமார் ரூ.20,000. எண்ணிப்பாருங்கள். இந்தப் பணம் உரியவருக்கு உரியபடி சேருகிறதா? ஆனால் இங்கேதான் வேதனைகளும் அதிகம், இந்தியாவின் தற்கொலை தலைநகரமும் இந்த பெருமை மிகு புதுவை தான். டிப்ளமோ படித்த நபருக்குச் கிடைக்கும் மாத சம்பளம் 1500, அதுவே டிகிரியாய் இருந்தால் 3000 மாத சம்பளம். இதுதான் உள்ளூர் பாமரன் சாமான்யன் பெறும் மாத சம்பளம். எங்கேயோ படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. கையில்லாமல், காலில்லாமல், கண்ணில்லாமல் மனிதருண்டு எங்கேயாவது வயிறில்லாத மனிதருண்டா? வயிறு என்று ஒன்று இருக்கும்வரை விவகாரங்கள் பல உண்டு, பசி உண்டு, ஆசை உண்டு, ஆசாபாசங்கள் உண்டு மேலும் அதை வைத்து அரசியலும் உண்டு.புதுவையில் தொடரும் தற்கால அரசியல் நிகழ்வுகளையும் கடந்த கால வரலாற்று சுவடுகளையும், விலாவாரியாக இவர் போய் அவராய் அவர்போய் இவராய் என அதுவே தொடராய் வெறி போல; என சம்பவிக்கும் அவலங்கள் தொடர்ந்து வருகின்றன.

Thursday, June 05, 2008

வாசித்தும் அதில் என்னை பாதித்தும் ஆகும் ஜூன் 6காலை 7.15 மணி

வாசித்தும் அதில் என்னை பாதித்தும் ஆகும் ஜூன் 6காலை 7.15 மணி
இந்த செய்திகள் இன்று வாசித்தும் அதில் என்னை பாதித்தும் ஆகும் .இவை தினமணி, தினகரன் தமிழ் பதிப்பில் இன்று வந்தவையில் சில .இந்த தினசரி நாளிதழ்களுக்கு நன்றி .இந்த குறிப்புகள் யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல

அகவையோ 85 ஆனால் இளமை பேச்சிலும் மூச்சிலும் 50 ஆண்டு கால சட்டமன்ற அனுபவம் பொதுவாழ்வில் 70 ஆண்டு, வாழ்வாங்கு வாழும் முதல்வரை புதுவை முதல்வர் சந்தித்து ஆசி பெற்றார்
தமிழக முதல்வர் கருணாநிதியின் 85வது பிறந்த நாளையட்டி புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் ஜானகிராமன் தலைமையில் திமுகவினர் நேற்று சென்னை சென்று அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். இதில் அவைத்தலைவர் சுப்புராயன், துணை அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவக்குமார் எம்.எல்.ஏ., ராஜாராமன் எம்.எல்.ஏ, பொருளாளர் கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., கேசவன், சி.பி.திருநாவுக்கரசு, சோமசுந்தரம், இளைஞரணி அமைப்பா ளர் சிவா எம்.எல்.ஏ, தொண்டரணி அமைப்பா ளர் நந்தா சரவணன் எம்.எல்.ஏ., கொம்யூன் பஞ்சாயத்து தலைவர்கள் நடராஜன், சுகுமார், யூ.சி.ஆறுமுகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், பழனி, தைரியநாதன், கோபால் மற்றும் அணி செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் சமையல் கேஸ் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை --பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ரா
எங்களுக்கும் வேறு வழியில்லை எங்கள் கவலை ஒரு ஆண்டில் எப்படி மாற்று கட்சி மாறுவது -- ஸ்ரீமன் பொதுஜனம்

பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 5-ம், டீசல் லிட்டருக்கு ரூ. 3-ம் சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ. 50-ம் உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் இனி ரூ. 338
விலை உயர்வோடு பெட்ரோலிய கச்சா எண்ணெய் மீதான சுங்கவரி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்கவரி 7.5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ. 22,660 கோடி வரி குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மீதான உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் டீசல் மீதான உற்பத்தி வரியில் எந்த மாற்றமும் இல்லை.
விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று விலை உயர்வை வெளியிட்டு பேட்டியளித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ரா கூறினார்.
இந்த விலை உயர்வை அரசுத் தரப்பில் நியாயப்படுத்தினாலும் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும் இடதுசாரி கட்சிகளும் கடுமையாக கண்டித்துள்ளன.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடந்த 4 மாதத்தில் இரு மடங்கு உயர்ந்துவிட்டது. அதேநேரத்தில் அரசுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களோ தொடர்ந்து மானிய விலையில் பெட்ரோல், டீசலை விற்று வருகின்றன. இதனால் ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விலையை உயர்த்தாவிட்டால் இந்த நிறுவனங்கள் திவாலாகி விடும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
இதனால் பெட்ரோலிய பொருள்களின் விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நிதியமைச்சர் ப. சிதம்பரம், பெட்ரோலிய அமைச்சர் முரளி தேவ்ரா, திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோருடன் பிரதமர் பல்வேறு கட்டங்களில் ஆலோசனை நடத்தினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தியுடனும் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
பெட்ரோலிய நிறுவனங்களின் நஷ்டத்தைக் குறைக்க விலையை உயர்த்துவதோடு, கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மீதான சுங்கவரி மற்றும் உற்பத்தி வரியைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் ஓரளவு நஷ்டத்தைக் குறைக்க முடியும் என்றும் கூறப்பட்டது.
அதன்படி தற்போது விலை உயர்த்தப்பட்டு வரிகளும் குறைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்தியுள்ளதை காங்கிரஸ் கட்சி நியாயப்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் தான் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று அக் கட்சி கூறியுள்ளது.
இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனீஸ் திவாரி செய்தியாளர்களிடம் கூறியது:
கனத்த இதயத்துடன் தான், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெட்ரோலியப் பொருள்களின் விலைகளை உயர்த்தும் முடிவை எடுத்துள்ளது என்றார்.
பொருளாதார விஷயங்களில் மத்திய அரசு தீவிரவாதி போல் செயல்படுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது குறித்து கருத்துக் கூறிய அவர், "அது அரசியல் பின்னணி உடைய பொறுப்பற்ற அறிக்கை. நாங்கள் அதை கடுமையாக கண்டிக்கிறோம். பாஜக ஆட்சியின் போது 21 முறை பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டன' என்றார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுடன் விலை உயர்த்தப்பட்டதா என்ற கேள்வி, கருத்துக் கூற மறுத்துவிட்டார் மனீஸ்.பெட்ரோல், டீசல் விலை உயர்வு அநியாயமானது சாதாரண மக்களை கடுமையாகப் பாதிக்கும் என்று இடதுசாரி கட்சித் தலைவர்கள் கூட்டு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிக்கையில் மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பரதன், பிஸ்வாஸ், டி.ஜே. சந்திரசூடன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பணவீக்கத்தை மேலும் அதிகப்படுத்தும். சாமானிய மக்கள் ஏற்கெனவே கடும் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வு அவர்களை மேலும் துயரப்படுத்தும் என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் வியாழக்கிழமை முதல் ஒரு வார காலம் போராட்டம் நடத்தப்படும். கடையடைப்பு, வேலை நிறுத்தம், சாலை மறியல், ரயில் மறியல், ஆர்ப்பாட்டம் என பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் தேவ கவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோரை கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று சந்தித்து பேசினார்.
ஹோக்நேகள் திட்டத்தை தடை செய்வது குறித்து பேசியிருக்க மாட்டார்கள் என நம்புவோம் . தமிழர் பெருந்தன்மை ஆனவர்கள் !!முன்னாள் பிரதமரும், ம.ஜ.த தேசிய தலைவருமான எச்.டி.தேவ கவுடாவை, பெங்களூர் பத்மநாபநகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று எடியூரப்பா சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது, ஹாசன் மாவட்டம் அரகலகோடுவில் லாரி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு உடனே நிவாரணம் வழங்க உத்தரவிட்டதற்காக, எடியூரப்பாவுக்கு கவுடா நன்றி தெரிவித்தார். “அதே போல், இந்நாள் வரை யாரும் விவசாயிகளின் பெயரில் பதவி பிரமாணம் செய்ததில்லை.
முதன்முறையாக விவசாயிகளின் பெயரில் நீங்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இது விவசாயிகளின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பை காட்டுகிறது.
விவசாயிகளின் நலனுக்காக நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்துக்கும், நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம்Ó என்று தேவ கவுடா வாழ்த்தியுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடியூரப்பா கூறுகையில், முன்னாள் பிரதமரின் வாழ்த்தால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். கர்நாடக மேம்பாடு ஒன்றே எனது குறிக்கோள்.
மேம்பாட்டுக்காக நான், கட்சி பாகுபாடு பார்க்காமல் உழைப்பேன் என்பதை உறுதியுடன் கூறுகிறேன் என்றார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் குமாரசாமியை அவரது மைத்துனர் இல்லத்தில் முதல்வர் எடியூரப்பா சந்தித்து பேசினார்.

அகவையோ 85 ஆனால் இளமை பேச்சிலும் மூச்சிலும் 50 ஆண்டு கால சட்டமன்ற அனுபவம் பொதுவாழ்வில் 70 ஆண்டு, வாழ்வாங்கு வாழும் முதல்வரை புதுவை முதல்வர் சந்தித்து ஆசி பெற்றார்


தமிழக முதல்வர் கருணாநிதியின் 85வது பிறந்த நாளையட்டி புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் ஜானகிராமன் தலைமையில் திமுகவினர் நேற்று சென்னை சென்று அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். இதில் அவைத்தலைவர் சுப்புராயன், துணை அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவக்குமார் எம்.எல்.ஏ., ராஜாராமன் எம்.எல்.ஏ, பொருளாளர் கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., கேசவன், சி.பி.திருநாவுக்கரசு, சோமசுந்தரம், இளைஞரணி அமைப்பா ளர் சிவா எம்.எல்.ஏ, தொண்டரணி அமைப்பா ளர் நந்தா சரவணன் எம்.எல்.ஏ., கொம்யூன் பஞ்சாயத்து தலைவர்கள் நடராஜன், சுகுமார், யூ.சி.ஆறுமுகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், பழனி, தைரியநாதன், கோபால் மற்றும் அணி செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.புதுச்சேரியில் கருணாநிதியின் பிறந்த நாளை யட்டி பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. நெல்லித்தோப்பு லெனின் வீதியில் ஜானகிராமன் தலை மையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளை யாட்டு உபகரணங்களை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் பழ தண்ட பாணி, முருகானந்தம், முத்து, விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொகுதியில் பல்வேறு இடங்களில் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திமுக பிரதிநிதி ரமேஷ் தலைமையில் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர்.இலவச வேட்டி சேலை:மண்ணாடிப்பட்டு தொகுதியில் கொம்யூன் பஞ்சாயத்து துணை தலை வர் குமார் தலைமையில் 85 முதியவர்களுக்கு இலவச வேட்டி சேலை, மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொகுதி அவைத்தலைவர் மண்ணாங்கட்டி, செயலாளர் செந்தில்குமார், தட்சிணாமூர்த்தி, கண் ணன், பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். புஸ்சி தொகுதியில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், அன்னதானமும் முன்னாள் எம்.எல்.ஏ. கென்னடி தலைமையில் வழங்கப்பட் டது. காசுக்கடை தொகுதி யில் தொகுதி செயலாளர் குமாரசுப்பிரமணி தலைமையில் இனிப்பும் வழங்கப்பட்டது. திருபு வனை தொகுதியில் கவுன்சிலர்கள் தண்டபாணி, தனராஜ் ஆகியோர் தலை மையில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம், அன்னதானம் வழங்கப்பட்டது. வில்லியனூர் தொகுதி யில் பஞ்சாயத்து தலைவர் நடராஜன் தலை மையில் திமுக கொடியேற்றி 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாரதி மில்லில் திமுக தொழிற்சங்கம் சார்பில் கொடி யேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் மாநிலத் தின் பல இடங்களில் திமுக கொடியேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது.

Wednesday, June 04, 2008

கர்நாடகத் தேர்தல் - மோசமான பக்கத்து வீட்டில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

ராகவன் தம்பி அனுமதியுடன் http://www.sanimoolai.blogspot.com/ இருந்து
கர்நாடகத் தேர்தல் - மோசமான பக்கத்து வீட்டில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்...
கர்நாடகத் தேர்தல் முடிவுகள் பற்றிக் கோட்டு சூட்டு போட்ட ஆட்கள் ஊடகங்களில் மாறி மாறிக் கடித்துக் குதறித் துப்பிய பின் எங்கேனும் கொஞ்சம் மிச்சம் இருந்தால் என் பங்குக்கு நானும் பிளேடு போடலாம் என்று இந்தப் பதிவு.
இரு வாரங்களுக்கு முன்பு மைய அரசில் பொறுப்பேற்ற நான்காவது ஆண்டுவிழாவைக் கொண்டாடிய ஐக்கிய முன்னேற்றக் கூட்டணி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த தோல்வியைக் கண்டு கலங்கிப் போயிருக்கிறது. அதுவும் மக்களவைத் தேர்தல் இன்னும் ஒரே ஆண்டில் நடக்க இருக்கும் இந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைத்த இந்தத் தோல்வி என்பது சற்று ஆட்டம் கொடுக்க வைக்கிற விஷயம்தான். கடந்த நான்கு ஆண்டுகளில் 25 சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்த காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முன்னேற்றக் கூட்டணி தொடர்ச்சியாக 16 தோல்விகளை சந்தித்து இருக்கிறது. 2004ல் காங்கிரஸ் கட்சி, ஆந்திர பிரதேசம், அருணச்சல பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வெற்றி கண்டது ஆனால் கர்நாடகா, ஒரிஸ்ஸô, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தோல்வியைத் தழுவியது. 2005ல் ஹரியானா மாநிலத்தில் மட்டுமே வெற்றியைப் பறித்த காங்கிரஸ் பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் படுதோல்வியைத் தழுவியது. 2006ல் அஸ்ஸôமில் வெற்றி பெற்றது. புதுச்சேரியில் மிகச் சிறிய அளவில் வெற்றி கண்டு திமுகவுடன் கூட்டணி அமைத்தது. அதே ஆண்டு மேற்கு வங்காளத்திலும் கேரளாவிலும் தோல்வி கண்டது. 2007ல் குட்டி மாநிலங்களான மணிப்பூர் கோவா போன்ற இடங்களில் வெற்றிகண்ட காங்கிரஸ், பஞ்சாப், உத்தரகாண்டம், ஹிமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தோல்வியைத் தழுவியது. 2008ல் நிலைமை படுமோசமாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி எந்த மாநிலத்திலும் பெரும்பான்மை பெற்று வரமுடியவில்லை. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் படுதோல்வியைத் தழுவியுள்ளது.
நான் மேலே சொன்ன எல்லா மாநிலங்களிலும் மக்கள் வாக்களித்து இருக்கும் முறையைப் பார்க்கும்போது அவர்கள் ஐக்கிய முற்போக்கு முன்னணியின் கொள்கைகளுக்கு எதிராக, அவர்கள் அறிவித்த திட்டங்களின் தோல்விகளுக்கு தோல்விகளுக்கு எதிராகத்தான் வாக்களித்து இருக்கிறார்கள் என்பது நன்கு புலனாகிறது.
(அடடே... நானும் ஒரு அழுக்குக் கோட்டு போட்டுக் கொண்டு தூர்தர்ஷன் பேட்டிகளில் உட்காரலாம் போலிருக்கிறதே?)
கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சிக்குக் கிட்டிய வெற்றி தென்னகத்தில் அவர்களுடைய வருகையைப் பதிவு செய்திருக்கிறது. ஆனால் இது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஒரு தீர்ப்பாகத்தான் எடுத்துக்கொள்ள முடிகிறதே தவிர, பாரதிய ஜனதா கட்சிக்கு ஏதோ முழு அங்கீகாரம் கிடைத்தது என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.
கர்நாடகத் தேர்தல் வெற்றி அவர்களுக்குப் பாராளுமன்றத்தின் கதவுகளைத் திறந்து விடுமா என்று இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியாது.
தேவே கௌடா மற்றும் குமாரசாமி கோஷ்டிகள் செய்த அரசியல் துரோகத்துக்கு அடி கொடுத்திருக்கிறார்கள் மக்கள். அந்தக் கட்சிக்குக் கிடைத்த மிகக் குறைவான வாக்குகள் இவற்றை உறுதிப்படுத்துகின்றன.
இன்னொரு முக்கியமான விஷயம்.
எப்போதும் நாம் கல்யாண வீட்டில் கல்யாணம் பண்ணி வைக்கும் சாஸ்திரிகளை மறந்து விடுகிறோம்.
பொதுவாக வட மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் வன்முறை அதிகம் இருக்கும். Muscle Power அதிகம் பாவிக்கப்படும். தென்னகத்தில் நடக்கும் தேர்தல்களில் Muscle Power குறைந்து Money Power அதிகம் இருக்கும்.
Muscle Power காட்டுபவர்களைக் கூட நான்கு தட்டுத் தட்டி விழுக்காட்டலாம். Money Power காட்டுபவர்கள் கொஞ்சம் ஆபத்தான ஆசாமிகள். அவர்கள் எந்த எல்லை வரை வேண்டுமானாலும் போய் விளையாட்டுக் காட்டுவார்கள். அப்படிப்பட்ட விளையாட்டு வித்தகர்கள் தமிழகத்தைப் போலவே, கர்நாடகாவிலும் மிக அதிகம். Money Power காட்டி விளையாட்டுக் காட்டும் வித்தகர்களுக்கும் விளையாட்டுக்காட்டி இந்தத் தேர்தலை மிகவும் நேர்மையாகவும், திறமையாகவும் அருமையாகவும் நடத்திக் காட்டிய கோபால்சாமியும் அவருடைய அதிகாரிகளும் நம்முடைய பாராட்டுக்கும் தலைவணக்கங்களுக்கும் உரித்தானவர்கள்.
கர்நாடக மக்கள் தண்ணீர் தராத மஹாபாவிகளாக இருக்கலாம். ஒரு மோசமான பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம். மொழி வெறி மற்றும் இன வெறி பிடித்தவர்களாக இருக்கலாம். ஆனால் தேர்தலில் அவர்கள் புத்திசாலிகளாக வாக்களித்து இருக்கிறார்கள்.
ஒன்று இந்தத் தேர்தலில் பிரிவினை பேசும் வாட்டாள் நாகராஜ் போன்ற விருதாவான ஆட்களை அவர்கள் படுகேவலமாகத் தோற்கடித்து இருக்கிறார்கள்.
இரண்டாவது கர்நாடகாவில் தேர்தலில் நின்ற எல்லா திரைப்பட நடிகர்களையும் கட்சி வித்தியாசம் இல்லாமல் படுதோல்வி அடைய வைத்திருக்கிறார்கள். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.
இந்த விஷயத்தில் மட்டும் தமிழகம் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.