Wednesday, April 30, 2008

செய்திகள் ஏப்ரல் காலை 8.15

பிரதமர் வர்த்தகர்கள்ளுக்கு வேண்டுகோள் : விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஒத்துழைக்க வேண்டும்

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தில்லியில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசும்போது . விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசியல் கட்சிகள் மட்டுமின்றி தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்தார்.
விலை உயர்வு பிரச்னையில் அரசியல் கட்சிகள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் இதில் ஒருமித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார். இதில் தொழில்துறையினருக்கும் பங்கு உண்டு. குறிப்பாக விலையை நிர்ணயிக்கும் பெரிய தொழில் நிறுவனங்கள் இந்த விஷயத்தில் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.
குறைந்த லாபத்தை மனதில் கொண்டு விலை உயர்வுக்கு துணை போகாமல் நாட்டின் நீண்டகால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அரசுடன் வர்த்தகர்கள் ஒத்துழைக்கவேண்டும். குறுகிய கால லாபத்துக்கு ஆசைப்பட வேண்டாம் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேநேரத்தில் தொழில்துறை மற்றும் வர்த்தகர்களுக்கும் விலை உயர்வைக்கட்டுப்படுத்துவதில் பொறுப்பு உள்ளது. அது அவர்களது சமூக கடமை என்றார் பிரதமர்.
இன்னும் ஒரு மாதத்தில் அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் வசதி : அமைச்சர் இ.வல்சராஜ்
புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் இதய நோயாளிகளுக்கு ஒரு மாதத்தில் அன்சியோகிரம் வசதி அளிகபடும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் இ.வல்சராஜ் கூறினார்.
சட்டப்பேரவையில் க.லட்சுமிநாராயணன் (புமுகா), ஆ. அன்பழகன் (அதிமுக) ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் வல்சராஜ் இதைத் தெரிவித்தார்.
மாணவர்கள் விரும்பினால் சமூக சேவை செய்யலாம்'
காரைக்காலில் "நமது காரைக்கால் நமது கையில்' எனும் புதிய திட்டத்தை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து, கோடை விடுமுறையில் உள்ள 10 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களை சமூக சேவையில் ஈடுபடச் செய்தது. மாவட்ட ஆட்சியர் ந.வசந்தகுமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வாரத்தில் 5 நாள்கள் மாலை 4 முதல் 6 மணி வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதில், சேவை மனப்பான்மை உள்ளவர்கள் பங்கேற்கலாம். மாணவர்களிடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்படவுள்ளது. பல்வேறு தொழில்சாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்கப்படும். காரைக்காலை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர், இதில், யாருடைய நிர்பந்தமும் இன்றி தானாக முன்வந்து திட்டத்தில் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.என மாவட்ட ஆட்சியர் ந.வசந்தகுமார் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது

கேபிள் டிவியை இனி :புதுவையில் அரசே நடத்தும்: முதல்வர்

புதுச்சேரியில் கேபிள் டிவியை அரசே ஏற்று நடத்தும் என்று முதல்வர் என். ரங்கசாமி கூறினார்.
சட்டப்பேரவையில் இது குறித்து ஆ. அன்பழகன் (அதிமுக) கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் ரங்கசாமி அளித்த பதில்:
புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட 3 கேபிள் டிவி நிறுவனங்கள் உள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 332 ஆபரேட்டர்கள் உள்ளனர். புதுச்சேரி நகராட்சியில் 9,467 இணைப்புகளும், உழவர்கரை நகராட்சியில் 8600 இணைப்புகளும் மொத்தம் 18,067 இணைப்புகள் உள்ளன.என சட்டப்பேரவையில் இது குறித்து ஆ. அன்பழகன் (அதிமுக) எழுப்பிய கேள்விக்கு . முதல்வர் ரங்கசாமி அளித்தார் ஒரு கேபிள் டிவி ஆபரேட்டர் ஒவ்வொரு சந்தாதாரரிடமும் வசூலிக்கும் மாதா சந்தா தொகையில் 10 சதவீதம் கேளிக்கை வரியாக ஆபரேட்டர்களிடம் இருந்து வசூலிக்கிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்குக் கிடைக்கப் பெற்ற வருவாய் ரூ.11,97,840 என்றார் முதல்வர்.
அப்போது குறுக்கிட்ட அன்பழகன், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 3.2 லட்சம் ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. இதில் குறைந்தபட்சம் 2 லட்சம் குடும்பங்களில் கேபிள் இணைப்பு கண்டிப்பாக இருக்கும். அப்படி பார்த்தால் அரசுக்கு ரூ.6 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு வருவாய் கிடைக்க வேண்டும். பயனாளிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் கேபிள் டி.வி. இணைப்புக் கிடைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் (திமுக) பேசுகையில், தமிழகத்தைப் போன்று கேபிள் டிவியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றார்.
இதற்கு முதல்வர் ரங்கசாமி பதில் அளிக்கையில், எம்எல்ஏக்களின் கருத்துகளை ஏற்று கேபிள் டிவியை அரசே ஏற்று நடத்தும் என்றார்.

Tuesday, April 29, 2008

செய்திகள் ஏப்ரல் 29 காலை 8.30

இநதிய உலக சாதனை : ஒரே ராக்கெட்டில் 10 செயற்ர்கைக்கோள் செலுத்தப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி.-சி9 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஆயத்தப் பணியில் ஒரு மாதத்திற்கும் மேலாக விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர்பத்து செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி9 ராக்கெட் நேற்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. 20 நிமிடங்களில் 10 செயற்கைக்கோள்களும் அதன் பாதையில் விடப்பட்டன. முதல் முறையாக பத்து செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் வெற்றிகரமாக செலுத்தி இந்தியா அபார சாதனை புரிந்துள்ளது. ராக்கெட் புறப்பட்ட 14.50வது நிமிடத்தில் 3880 கி.மீ. தூரம் பயணித்து கார்ட்டோசாட் 2ஏ செயற்கைக்கோளை பூமியில் இருந்து 635 கி.மீ. உயரத்தில் பிரித்து விட்டது. 45 விநாடிகள் கழித்து ஐஎம்எஸ்-1 பிரித்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் நேனோ செயற்கைக்கோள்கள் பிரித்து விடும் பணி தொடங்கியது.முதலில், டோக்கியோ தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கியூட் 1.7 செயற்கைக்கோளும், கனடா பல்கலைக்கழகத்தின் கேன் எக்ஸ்2-வும், நெதர்லாந்து பல்கலைக் கழகத்தின் டெல்பி சி3யும், டென்மார்க் பல்கலைக்கழகத்தின் ஏஏயூசாட்-2ம், ஜப்பானின் நிஹான் பல்கலைக் கழகத்தின் சீட்ஸ்-ம், ஜெர்மனி பல்கலைக் கழகத்தின் காம்பஸ்-1ம், கனடா பல்கலைக் கழகத்தின் கேன் எக்ஸ் 6ம், ஜெர்மனியின் ரூபின்8 செயற்கைக்கோளும் வரிசையாக அதன் வட்டப் பாதைகளில் பிரித்து விடப்பட்டன. காலை 9.24க்கு செலுத்தப்பட்ட ராக்கெட், சரியாக 9.44க்கு செயற்கைக்கோள்களை பிரித்து விட்டு பணியை முடித்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பப்பட்ட 26வது ராக்கெட் இது. பி.எஸ்.எல்.வி. பிரிவில் இது 13வது ராக்கெட். . செயற்கைக்கோள் செலுத்தும் பணி 20 நிமிடத்தில் நிறைவடைந்ததாக அந்த கட்டுப்பாட்டுதளம் மூலம் தகவல் பெறப்பட்டது. இதையடுத்து, விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் வெற்றியை கொண்டாடினர். விஞ்ஞானிகள் ஒருவரையருவர் கட்டிப்பிடித்தும், கைகுலுக்கியும் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். இந்தியா, முதன்முறையாக ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, அபார சாதனை புரிந்துள்ளது.
வல்சராஜ் மீதான ஊழல் வழக்கு ரத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு
புதுச்சேரி அமைச்சர் வல்சராஜ் மீது, மாகேயை சேர்ந்த சுதாகரன் என்பவர் ஒரு புகார் கொடுத்தார். அதில், மாகே தகவல் தொழில்நுட்ப கூட்டுறவு மைய கவுரவ தலைவராக வல்சராஜ் பணியாற்றினார். அப்போது, கூட்டுறவு சங்கத்துக்கு அதிக விலை கொடுத்து நிலம் வாங்கி ஊழல் செய்துள்ளார். இதனால் கூட்டுறவு சங்கத்துக்கு ரூ.85 லட்சத்து 46 ஆயிரம் இழப்பு ஏற்படுத்தி உள்ளார். எனவே இவர் மீது ஊழல் வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும்Õ என்று கூறியிருந்தார்.இந்த வழக்கில், புலன் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. . இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வல்சராஜ் மனு தாக்கல் செய்தார். .இந்த வழக்கை, நீதிபதி ஜெயபால் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். “கோப்புகளை ஆராய்ந்து பார்க்கும் போது வல்சராஜ் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று தெரிகிறது. . எனவே, வல்சராஜ் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிடுகிறேன்என்று நீதிபதி ஜெயபால் தீர்ப்பு கூறினார்.
வேலை வாய்ப்பு பாடப்பிரிவுகள் கிராம கல்லுரிகளிளரம்பிக்கப்படும் : புதுவை முதல்வர் ரங்க சாமி
புதுவை மதகடிப்பட்டு காமராஜர் கலைக்கல்லூரி ஆண்டு விழா நேற்று நடந்தது. கல்லூரி முதல் வர் வசந்தகுமாரி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் வாசுகி ராஜாராமன் வரவேற்றார். சிறப்பு விருந்தினரா கலந்து கொண்டு முதல்வர் ரங்கசாமி ஆண்டு விழா மலரை வெளியிட்டு பேசியதாவது: புதுச்சேரி கிராமங்களில் கல்லூரிகளை அமைக்க வேண்டும் என்ற எம்.எல்.ஏக்களின் கோரிக்கையை ஏற்று இந்த கல்லூரி தொடங்கப்பட்டது. கல்லூரியின் வளர்ச்சியை பார்க்கும் போது அதிகப்படியான கல்லூரிகளை கிராமங்களில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. உயர்ந்த தரமான கல்வியை அரசு மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. அதே போல் படிப்பதற்கு அதிக வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறோம். இதற்காக மத்திய அரசும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உயர்கல்வி ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைக்க வேண் டும் என்று விரும்புகின்ற அரசாக உள்ளது. கிராம கல்லூரிகளில் வேலை வாய்ப்பை உருவாக்க கூடிய பாடப்பிரிவுகள் ஆரம்பிக்கப்படும் என்று புதுவை முதல்வர் ரங்க சாமி தெரிவித்துள்ளார்.

Monday, April 28, 2008

செய்திகள் ஏப்ரல் காலை 8.00

காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் கோரிக்கை இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வேண்டும்
புதுச்சேரி காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் காங்கிரஸ் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அப்போது சுப்பிரமணியன் பேசியது: புதுச்சேரியில் இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப தனியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் கூறினார். காங்கிரஸ் தலைவராக சோனியாகாந்தி பதவி ஏற்ற பிறகு சிறுபான்மையினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
புதுச்சேரியில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை சதம் எவ்வளவு இருக்கிறதோ அதற்கு ஏற்ப தனியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி புதுச்சேரி அரசிடம் அளிக்கப்படும் என்றார் சுப்பிரமணியன்.
காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவின் தலைவர் டாக்டர் லூயி கண்ணையா தலைமை வகித்தார்.
கல்வியமைச்சர் எம்.ஓ.எச்.எப். ஷாஜகான், காங்கிரஸ் பொதுச்செயலர் காந்திராஜ், எம்.எல்.ஏ. தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாலாஜி, கலந்து கொண்டனர்.

புதுச்சேரியில் இன்று ஏ.எப்.டி பந்த் அழைப்பு
புதுச்சேரியில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டத்துக்கு ஏ.எப்.டி. பஞ்சாலையைச் சேர்ந்த ஒருங்கிணைந்த தொழிலாளர் கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஏ.எப்.டி. பஞ்சாலையில் பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு வழங்குவதைப் போன்று, தங்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும்.
ஊதிய உயர்வு இன்றி 11 ஆண்டுகளாக பணியாற்றும் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொழிலாளர்கள் இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் "ஏ.எப்.டி. தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ. 1000 வழங்கப்படும்.
அகவிலைப்படி பிரச்னையை ஆராய 2 நபர் குழு அமைக்கப்படும்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் என். ரங்கசாமி அறிவித்தார்.
இருப்பினும் தொழிலாளர்கள் போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளனர்.
முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
அசம்பாவித சம்பவங்கள் நேராமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.
நுழைவுத் தேர்வு ரத்து என்ன ஆனது : பெற்றோர்களிடம் குழப்பம்' கவலை
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அரசு வெளியிட்ட அறிவிப்பு தொடர்பாக பெற்றோர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக செயலர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
.
பிளஸ் 2 தேர்வு நடக்கும்போதே இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு உண்டா இல்லையா என்பதை மாணவர்களுக்குத் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். நுழைவுத் தேர்வை ரத்து செய்ய அரசு உண்மையாகவும், உறுதியாகவும் இருந்திருந்தால் நியாயமாக கடந்த மழைக்காலக் கூட்டத் தொடரின்போது சட்டப்பேரவையில் இதற்கான சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்க வேண்டும். அதை அரசு செய்யவில்லை.
சட்டப்பேரவை கூடுவதற்கு 2 நாள்களுக்கு முன்பு நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான அரசு ஆணை துணைநிலை ஆளுநர் சார்பில் வெளியிடப்பட்டது. அரசு ஆணையை வெளியிடும்போது சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர், முதல்வரின் பார்வைக்கு வந்தப் பிறகுதான் துணைநிலை ஆளுநர் வெளியிட்டு இருப்பார். அப்போதாவது முதல்வரும், கல்வியமைச்சரும் தடுத்து இருக்கலாம்.
முக்கியப் பிரச்னைகளில் புதிய முடிவுகள் வெளியிடும்போது சட்டப்பேரவையில் சட்டமாக அறிவிப்பதுதான் சிறந்தது. அதையும் அரசு செய்யவில்லை.எனவே நுழைவுத் தேர்வு ரத்து என்ன ஆனது : பெற்றோர்களிடம் குழப்பம்' கவலை என ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Sunday, April 27, 2008

பொதுவுடமையும் பாரதியும்



பொதுவுடமையும் பாரதியும்
--சுகுஜி

பொது உடமை சித்தாந்தம் நமது தமிழ்நாட்டிலே சங்க காலம் முதல் வழக்கில் இருந்து வந்த ஒன்றாகும். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கணியன் பூங்குன்றனார், இந்திர லோகத்து அமுதமே கிடைத்தாலும் தமக்கென உண்ணமாட்டார்கள், பிறர்க்கு கொடுத்தே உண்பார்கள் என கூறியிருக்கிறார்.
வள்ளுவர் கூட சாகாத அமுதமே ஆனாலும் விருந்தினர் காத்திருக்கையில் தனியே உண்பது ஆகாது என்று கூறுகிறார். மேலும் தீவிரமாக "இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்" என்று பிறரிடம் பொருள் பெற்று வாழ வேண்டிய நிலையில் ஒருவன் இருக்க நேரிட்டால் இந்த உலகை படைத்தவன் அழியவேண்டும் என சினந்து கூறுகிறார்.

அதாவது இரந்து வாழும் சூழலில் ஒருவன் இருப்பது அவனது தவறல்ல, இந்த சமுதாயத்தின் கடமை அவனையும் பராமரிப்பது ஆகும். அவனுக்கு சேரவேண்டிய வாய்ப்போ, செல்வமோ ஏதோ ஒன்று மற்றவரால் சுரண்டப் படுவதால் தான் அவன் இரந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான்.
அது அவனின் குற்றம் அல்ல. உழைத்தும் ஊதியம் கிடைக்காமையோ அல்லது உழைக்க வாய்ப்போ கிடைக்காதது ஒரு வகைச் சுரண்டல்தான்.
உலகியற்றியான் என வள்ளுவர் குறிப்பிடுவது கடவுள் என்பதை ஒப்புக் கொள்ளாதவர் 'அரசு' என்றோ 'ஆள்பவர்' என்றோ பொருள் கொள்ளலாம். ஆனால் வள்ளுவர் இரப்பவரை குறை கூறவில்லை என்பது தான் இதில் நோக்கத்தக்கது. சுரண்டலுக்கு எதிராகத்தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கொதித்து எழுகிறார்.
காரல் மார்க்ஸின் தத்துவங்களைப் போற்றி சித்தாந்தமாக்கி லெனின் போன்றவர்கள் நாட்டையே மாற்றிக் காட்டினார்கள். ஆனால் நாமோ வள்ளுவரை புகழ்ந்து மட்டுமே 2000 ஆண்டுகளாக பேசி வருகிறோம். பொதுவுடமை நமது நாட்டில் வேரூன்ற இயலவில்லை.
ஆனால் வள்ளுவர் வழிகாட்டவில்லை, மார்க்ஸ் அறிவியல் அடித்தளத்தில் விளக்கிக் காட்டினார். சமீபத்தில், வள்ளுவர் காலத்தில் இப்படி அவரது குறளுக்கும் அதை அடைவதற்கான வழிமுறைகள் விளக்கி நூல்கள் இருந்தனவா எனத் தெரியவில்லை. சுரண்டலை ஒழிப்பதற்கு வர்க்க போராட்டம்தான் ஒரே வழி என விஞ்ஞான பூர்வமான சமதர்மத்திற்கு வழிகாட்டப்பட்டது காரல்மார்க்ஸின் 'மூலதனம்' நூல் வந்ததற்கு பிறகுதான்.

பாரதி வாழ்ந்த காலத்திலே நாம் பிரிட்டிஷ்காரர்களால் படுபயங்கரமாக சுரண்டப்பட்டு இருந்தோம். சுரண்டலின் கரங்களால் இந்தியா தெறிபட்டுக் கிடந்தது. அப்போது தான் அவர் ஆன்மீக நெறியில் திளைத்திருந்த காலம். எனவே புரட்சிதனையும் மகாகாளி நிறைவேற்றி வைத்தாள் என புரட்சியை காளியாக உருவகப்படுத்துகிறார். நம் இந்திய நாட்டையும் பாரதமாதா என்று பெண்மையின் சக்தியாக நினைத்து அதற்கும் ஒரு உருவம் செய்தவர் மகாகவி பாரதியார் தான்.
சுரண்டலைக் கண்டு மனம் நொந்த பாரதி, அதற்கு இரண்டு காரணமே என்று நினைத்து அவைகளை வலிமையாக எதிர்க்கிறார், ஒன்று வறுமை. மற்றொன்று அறியாமை.
எனவே இவரும் வள்ளுவரைப் பின்பற்றி "தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழிப்போம்" என்றார். இவர் பக்தி மார்க்கத்தில் இருந்ததால் வள்ளுவரைப்போல் உலகைப் படைத்தவரை சாடாமல் இந்த உலகத்தையே அழிப்பதாக கூறுகிறார்.
அறியாமையைப் பற்றிப் பாடும்போது கஞ்சி குடிப்பதற்கு இலார் அதன் காரணங்கள் இவை எனும் தெளிவும் இலார் என்று வருத்தப்படுகிறார்.
விடுதலையைப் பற்றிக்கூறும்போது கூட சமத்துவத்தைப் பற்றி கூறுகிறார். தனிமனித சுரண்டலை மனதில் கொண்டு "பறையருக்கும் இங்கு புலையருக்கும் விடுதலை" என அடித்தட்டு மக்கள் சுரண்டலில் இருந்து விடுபட வேண்டும் என்று பாடுகிறார். பாரதியும் விடுதலையை மட்டும் பாடாமல் சுரண்டலுக்கு எதிராகவும் கொதித்தெழுந்தார். இந்திய நாட்டில் தனிமனித சுரண்டல் சாதீய முறையினால் ஒருபுறம், அன்னியரின் சுரண்டல் ஒருபுறம் தலைவிரித்தாடியது. இந்தியாவிலுள்ள மூலப்பொருள்களும், செல்வங்களும் கவர்ந்தெடுக்கப்பட்டு, வெளிநாட்டில் பொருள்களாக உற்பத்தி செய்து அதை விற்பதற்கான சந்தைக்களமாக இந்தியாவை அன்னியர் பயன்படுத்திக் கொண்டனர்.
இந்த நிலையில் தான் மக்கள் கவிஞரான பாரதி தனி மனித சுரண்டலை எதிர்த்து "மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ" எனவும் "மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ" என குரல் கொடுத்தார். அன்னியரின் சமுதாய சுரண்டலை எதிர்த்து "பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ! நாங்கள் சாகவோ! அழுது கொண்டிருப்போமோ! ஆண்பிள்ளைகள் அல்லமோ! உயிர் வெல்லமோ! நாங்கள் முப்பது கோடி சணங்களும் நாய்களோ பன்றிச் சேய்களோ மற்று நீங்கள் மட்டும் மனிதர்களோ!" எனக் குமுறினார்.
சோவியத் நாட்டிலே ஏற்பட்ட புரட்சியை அறிகிறார் பாரதி, மகிழ்கிறார் "மகாகாளி ரஷ்யாவில் கடைக்கண் வைத்தாள் ஆகா என எழுந்தது யுகப்புரட்சி" என்று கும்மாளமிடுகிறார்.
சமத்துவ வாழ்வையே விடுதலையாக எண்ணிய பாரதியார் "வாழி கல்வி செல்வம் எய்தி மனம் மகிழ்ந்து கூடியே மனிதர் யாவரும் ஒரு நிகர் சமானமாக வாழுவோமே" என்று கூறுகிறார்.
மனிதர்களை மட்டும் கூறாமல், சமத்துவமாக "காக்கை குருவிகளும் எங்கள் ஜாதி நீள்கடல் மலையும் எங்கள் கூட்டம்" என உயிர் அற்ற கடலும், மலையும் கூட எங்கள் கூட்டம் என்கிறார்.
பாரதியின் பன்முகத்தன்மையும் அவர் கூறிய சித்தாந்தங்களும், வேதாந்தங்களும் இன்னமும் தீவிரமாக ஆராயப்படல் வேண்டும். பாரதி ஒரு சுதந்திரத்திற்காகப் பாடிய கவிஞர் அல்லர். மன்னர்களைப் புகழ்ந்து பாடிய புலவரும் அல்லர். அவர் ஒரு மக்கள் கவிஞர், தன்னைச் சுற்றி நடப்பவை ஒவ்வொன்றையும் பார்த்து, அநீதிகளைக் கண்டு கொதித்தெழுந்து விடுகிறார். படித்தவர் தப்பு செய்தால் அய்யோ என்று போவார் என்கிறார். அநீதியைக் கண்டு கொதித்தெழாவிட்டால் கல்வி கற்றதற்கு என்ன பொருள்?

செய்திகள் ஏப்ரல் 27, 7.40 காலை

இன்னும் உயர்கல்வி ஏழைகளுக்கு எட்டாத் தூரந்தில் தான் உள்ளது 11.6% மாணவர்கள் மட்டுமே உயர்கல்வியில் சேர்கின்றனர்: ப.சிதம்பரம்

உலக அளவில் பள்ளிக் கல்வியை முடித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 23.2 சதவீதமாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் இது 54 சதவீதமாக உள்ளது. நமது நாட்டில் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 11.6 சதவீதமாக உள்ளது. இதனை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 11-வது ஐந்தாண்டு திட்ட கால இறுதிக்குள் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 15 சதவீதமாகவும், 12-வது ஐந்தாண்டு திட்ட கால இறுதிக்குள் 25 சதவீதமாகவும் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சமூகத்தில் அனைத்து தரப்பினருக்கும் கல்வி வாய்ப்புகள் கிடைக்க இடஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயர் கல்வி பெறுவதற்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசு கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டில் 11.6 சதவீத மாணவர்கள் மட்டுமே உயர் கல்வியில் பயில்வதாக மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
முஸ்லிம் கட்டிக் கொடுத்த இந்து கோயில்: சிதம்பரத்தில் இன்று கும்பாபிஷேகம்

சிதம்பரம்ராதாவிளாகம் கிராமத்தில் அருகே ரூ.13 லட்சம் செலவில் முஸ்லீம் பிரமுகர் ஒருவர் தனது சொந்த செலவில் மாரியம்மன் கோயில் கட்டிக் கொடுத்துள்ளார் . இந்த செல்வமாரியம்மன் ஆலயத்திற்கு ரூ.13 லட்சம் செலவில் புதிய கோவில் கட்டப்பட்டுள்ளது ரூ.13 லட்சம் செலவில் முஸ்லிம் பிரமுகர் ஒருவர் தனது சொந்த செலவில் மாரியம்மன் கோயில் கட்டிக் கொடுத்துள்ளார். அக்கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறுகிறது.
முஸ்லிம் பிரமுகரான சிதம்பரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.முகமது இலியாஸ் (கேம்ப் - பாங்காங்) தனது சொந்த செலவில் இந்த ஆலயத்தை கட்டிக் கொடுத்துள்ளார்.


இந்த ஆலயத்தில் மகா மாரியம்மன், விநாயகர், முருகன் மற்றும் பரிவாரங்களுக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெறுகிறது. நடராஜர் ஆலய பொதுதீட்சிதர் சி.சிவராஜ தீட்சிதர் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தி வைக்கிறார். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை முதல் யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்க வரும் முகமது இலியாஸிற்கு பொது மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது
.
முதல் முறையாக பத்து செயற்கைக்கோள்களுடன் இந்திய ராக்கெட், திங்கள்கிழமை விண்ணில் பாய்கிறது
முதல் முறையாக பத்து செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி9 ராக்கெட், திங்கள்கிழமை விண்ணில் பாய்கிறது.
இந்த ராக்கெட்டில், இந்தியாவின் கார்ட்டோசாட்-2ஏ, ஐ.எம்.எஸ்.-1 ஆகிய இரண்டு தொலை உணர்வு செயற்கைக்கோள்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த எட்டு செயற்கைக்கோள்கள் என மொத்தம் 10 செயற்கைக்கோள்கள் அடங்கியுள்ளன.
செயற்கைக்கோள்களை தாங்கிய படி, திங்கள்கிழமை காலை 9.20 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி - சி9 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.
வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் அனைத்தும் நானோ செயற்கைக்கோள்கள் ஆகும். கனடா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அந்த எட்டு செயற்கைக்கோள்களையும் கட்டமைத்துள்ளன
.

Wednesday, April 23, 2008

சீனாவில் இருந்து நமது வாசகர் நமக்கென்று அனுப்பிய தனி புகைப்படங்கள்






















சீனாவில் நடைபெற்ற தண்ணீர் விழா காட்சிகள் இவைசீனா மகளிர் மாரி காலத்தை வரவேற்கும் கொண்டாட்டங்கள்எந்தனை குதுகலம் கும்மாளம் வண்ண வண்ணமாய் சுகுஜி

Monday, April 21, 2008

செய்திகள் APRIL 21, 2008 7.30 AM

AFT தொழிலாளர்களுக்குப் புதிய ஊதிய உயர்வு வேண்டும்

விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு பஞ்சாலைத் தொழிலாளர்களுக்குப் புதிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி பஞ்சாலை தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இச் சங்கத்தின் கூட்டம் தலைவர் டி.ரவி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஏ.எப்.டி, சுதேசி, பாரதி பஞ்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் ஒரே அகவிலைப்படி வழங்க வேண்டும்.
காலத்துக்கு ஏற்ப பஞ்சாலைகளை நவீனப்படுத்தி, புதிய இயந்திரங்களைப் பூட்ட வேண்டும். உற்பத்தி நிர்ணயம், ஊதிய நிர்ணயம் செய்யும் வகையில் முத்தரப்புக் குழு அமைக்க வேண்டும். ஆள் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களை முழுமையாக இயக்கும் வகையில் தொழிலாளர் வாரிசுகளையும், வேலையில்லாமல் உள்ள இளைஞர்களையும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்தி இம் மாதம் 22-ம் தேதி சட்டப்பேரவை முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
.

சித்ரா பெüர்னமியன்று பிரத்தியங்கிரா காளிக்கு மஹா ஹோமம்
சித்ரா பெüர்னமியன்று பிரத்தியங்கிரா காளிக்கு மஹா ஹோமம் நடந்தது. மேலும் காளிக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் 108 லிட்டர் பாலாபிஷேகமும் நடந்தது.பிரத்தியங்கிரா பீடாதிபதி ஸ்ரீமத் நடாதூர் ஜனார்த்தன சுவாமிகள் தலைமையில் விழா நடந்தது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிமீண்டும் இல்லை - வாசன் அறிவுப்பு
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய புள்ளியியல் துறை இணையமைச்சர் ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டும். அதன் மூலம் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் அமைப்பதுதான் நமது லட்சியம்' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதன் மூலம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டும் என்ற கட்சியினரின் யோசனைகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் ஜி.கே.மூப்பனார், வாசன் ஆகியோரது விசுவாசிகள் மெல்ல மெல்ல ஓரங்கட்டப்பட்டு வருவதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், மூப்பனார் 12 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மூப்பனார் அனுதாபிகள் மத்தியில் எழுந்தது. குறிப்பாக கோவை பகுதியிலிருந்து இந்தக் கோரிக்கை வலுத்து வருகிறது.
. சென்னை நிகழ்ச்சியில் அவர் சுருக்கமாகக் கூறிய
கருத்து திட்டவட்டமாகவும் அமைந்தது

மே 15-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு

பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரையில் நடைபெற்றது. .
விடைத்தாள் திருத்தும் பணி சில தினங்களில் பூர்த்தியாகிவிடும். அதன் பின் அரசுத் தகவல் தொகுப்பு மையத்துக்கு அனுப்பப்படும். அங்கு கம்ப்யூட்டர் உதவியுடன் எந்தத் தாள் யாருடையது என்று பதிவு செய்து, அத்தாளுக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண் ஆகியவை பதிவு செய்யப்படும். "பிளஸ் 2' தேர்வில் சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், பாதிக்கு மேல் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
தேர்வுத் தாள் திருத்தும் பணி பூர்த்தியாகி, முடிவுகள் முறையாக அறிவிக்கப்படும். தற்போதைய நிலவரப்படி மே 15-ம் தேதி தேர்வு முடிவு வெளியாகலாம் என்கிறார்கள்.

Friday, April 18, 2008

இன்றய செய்திகள் ஏப்ரல் 18th 8.00AM

எறையூரில் மீண்டும் எறையூரில் பதற்றம் !! 15 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது
எறையூரில் நேற்று மீண்டும் 15 வீடுகள் தீப்பிடித்து எரிந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தில் தேவாலயத்தில் வழிபடுவது தொடர்பாக இருபிரிவினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரண மாக கடந்த மாதம் 9ம் தேதி மோதல் வெடித்தது. இதில் வீடுகள் அடித்து நொறுக்கப்பட் டன. போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் பலியாகினர். போலீசார் தொடர்ந் து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இறையூர் கிராமத்தில் வன்னியர் கிறிஸ்தவர்கள் வசிக்கும் கோவில் தெருவில் நேற்று மாலை 4 மணியளவில் ஆரோக்கியசாமி என்பவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் அருகில் உள்ள தொப்பிலி, புஷ்பதெரசா, லூர்துசாமி, ஆரோக்கியதாஸ், லில்லி, அந்தோணிசாமி, லாரன்ஸ் உட்பட 15க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராமலிங்கம் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் அதேபகுதியில் உள்ள கூறை வீடுகளில் தீ விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டதால் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், திருவெண்ணைநல்லூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரவன், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் லீலா, தாசில்தார் கலியபெருமாள், டி.எஸ்.பி.க்கள் முரளி, ஆறுமுகம், ஸ்டாலின், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், அண்ணாமலை, வீரப்பன் உட்பட நூற்றுக்கும் மேற் பட்ட போலீசார் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிலைமையை கட்டுப்பட்டுத்தினர். கடந்த மாதம் 9ம் தேதி இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோத லை தொடர்ந்து வன்னியர் கிறிஸ்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் அடிக்கடி இது போன்ற தீ வைப்பு சம்பவம் நடப்பதாகவும், யாரோ மர்ம ஆசாமிகள் பாஸ்பரஸ் பவுடரை தூவி விடுவதால் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக வன்னியர் கிறிஸ்தவர்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். எனவே மர்ம ஆசாமி களை பிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்து வருவாய் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
பெங்களூர் லால்பாக் போல பிரம்மாண்டமான பூங்கா சென்னையில் டிரைவ் இன் ஓட்டல் இருந்த இடத்தில் கட்ட திட்டம் , மத்திய சிறை இருந்த இடத்தில் பொது மருத்துவமனை விரிவாக்கத்துக்கு வழங்கப்படும் -- முதல்வர் கருணாநிதி அறிவித்தார். .

உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டல் இருந்த பகுதியில் உலகத்
தரம் வாய்ந்த தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். கேள்வி நேரம் முடிந்ததும், பேரவை விதி 110ன் கீழ் ஒரு அறிக்கை தாக்கல் செய்து அவர் கூறியதாவது: சென்னை மத்திய சிறையை புழலுக்கு மாற்றியதால் அங்கு 13.238 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. அதில் ஒரு ஏக்கரை மெட்ரோ ரயில் அலுவலகத்திற்கும், ஒன்றரை ஏக்கர் மெட்ரோ ரயிலுக்கான துணை மின் நிலையம் அமைக்க மின்வாரியத்திற்கு வழங்கப்படும். இதுபோக 10.73 நிலம் உள்ளது. அது சென்னை அரசு பொது மருத்துவமனை விரிவாக்கத்துக்கு வழங்கப்படும். 165 ஆண்டுகள் பழமையான அந்த மருத்துவமனை 2,722 படுக்கைகள் கொண்டது. 2,000 மாணவர்கள் படிக்கும் மருத்துவ கல்லூரியும் இணைந்துள்ளது. தினமும் 12,000 வெளிநோயாளிகள் வருகின்றனர். 30 ஏக்கரில்தான் அது அமைந்துள்ளது. எனவே, 10 ஏக்கர் அளிக்கப் படும்.ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளர்ச்சிக்காக ரூ.100 கோடி அரசு வழங்கியது. அங்கும் இட பற்றாக்குறை இருப்பதால், அருகில் உள்ள பொதுப்பணித்துறை இடம் 10 ஏக்கர் வழங்கப்படும். அண்ணா மேம்பாலம் அருகில் 320 கிரவுண்ட் இடம் உள்ளது. அந்த இடத்தின் இன்றைய மதிப்பு ரூ.1,000 கோடிக்கு மேலாகும். அந்த இடம், வேளாண் தோட்டக்கலை சங்கத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது. அதை பொது நோக்கத்திற்காக திரும்பப்பெற அரசு 1989 ஆகஸ்ட் 5ம் தேதி ஆணையிட்டது. அதை எதிர்த்து, தோட்டக்கலை சங்கம் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் அரசாணையை தள்ளுபடி செய்தது. அரசு மேல்முறையீடு செய்தது. தற்போதைய நிலை தொடர லாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு மனு 2004ல் திரும்ப பெறப்பட்டது. பிறகு, நிலம் முழுவதையும் தோட்டக்கலை சங்கத்திற்கே ஒப்படைக்க 2006 மார்ச் 3ம் தேதி அன்றைய அரசு ஆணையிட்டது. ஆனால், தேர்தலையட்டி அந்த ஆணை நிறைவேற்றப்படவில்லை. கடந்த 2006ல் திமுக அரசு மீண்டும் வழக்கு தொடர வாய்ப்பு கேட்டு மனு செய்தது. உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதை எதிர்த்து தோட்டக்கலை சங்கம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த ஆண்டு மே 16ம் தேதி தள்ளுபடியானது. இதற்கிடையே, அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த 11ம் தேதி, தற்போதைய நிலை தொடர வேண்டும் என்ற தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்தது. அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: அரசுக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதி பெறாமலே உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டலுக்கு, தோட்டக்கலை சங்கம் உள்குத்தகைக்கு விட்டது. 5 ஆண்டு நீட்டிப்பும் செய்தது. கிருஷ்ணமூர்த்தி, தோட்டக்கலை சங்கத்தை தனது சொந்த சொத்து போல் கையாண்டது நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் செலவில் மலர்கண்காட்சி நடத்தியதை தவிர, 20 ஆண்டுகளில் வேறு எந்த முன்னேற்றமும் சங்கத்தால் ஏற்படவில்லை. நிறைய நிதி வசூலித்து குறைந்த செலவு செய்து முறைகேடு நடந்துள்ளது. அரசு இடத்தை கிருஷ்ணமூர்த்தி தனது சொந்த உபயோகத்திற்காக, வாடகை கார் நிறுவனம் நடத்தவும், விளம்பர நிறுவனத்திற்கும் பயன்படுத்துகிறார். எனவே அனைத்து நிலங்களையும் அரசு திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்குத்தகை விட்டதால் கிடைத்த வாடகை முழுவதையும் வசூலிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான, 320 கிரவுண்ட் இடம் 30 ஆண்டுகளுக்கு பின் அரசு வசம் வந்துள்ளது. சென்னையின் இதயம் போன்ற பகுதியில் உள்ள இந்த பெரிய இடத்தில், சென்னை மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பெங்களூரில் உள்ள Ôலால்பாக்Õ போலவும், நீலகிரியில் உள்ள தாவரவியல் பூங்கா போலவும் உலக தரத்திலான சிறப்பு வேளாண் தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.
மதுரை காமராசர் பல்கலை.க்கு புதிய துணை வேந்தர் நியமனம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தராக ஆர்.கற்பக குமரவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பிறப்பித்துள்ளார். இவர் அந்தப் பதவியில் 3 ஆண்டுகள் இருப்பார்.
கலவர பூமியாக மாறிய . குடிமைபொருள் அலுவலகம் கம்யூ. போராட்டம் சூறையில் முடிந்தது
விலைவாசி உயர்வை கண்டித்து நடந்த மறியல் போராட்டத்தின் போது இந்திய கம்யூ., கட்சியினர் ரகளையில் ஈடுபட்டனர். குடிமை பொருள் வழங்கு துறை அலுவலகத்தை சூறையாடிய வன்முறை கும்பல், போலீசாரையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி புதுச்சேரியில் 7 மையங்களில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூ., அறிவித்திருந்தது. அதன்படி புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு மறியல் நடத்துவதற்காக வட்டார செயலாளர் சேதுசெல்வம் தலைமையில் கட்சியினர் கொக்குபார்க் சிக்னல் அருகே நேற்று காலை 10 மணி அளவில் திரண்டனர். பின்னர் 100 பெண் கள் உள்பட 400க்கும்மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை அடைந்தனர். விலைவாசி உயர்வை கண்டித்து நடந்த மறியல் போராட்டத்தின் போது இந்திய கம்யூ., கட்சியினர் ரகளையில் ஈடுபட்டனர். குடிமை பொருள் வழங்கு துறை அலுவலகத்தை சூறையாடிய வன்முறை கும்பல், போலீசாரையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டதுதொடர்ந்து விஸ்வநாதன் எம்எம்எல்ஏ அங்கு வந்து போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினார்.

Thursday, April 10, 2008

உலகின் மிகப் பெரிய வைரம் புதுவைக்கு அருகில் உள்ள இரும்பை ஆலயத்தில் திருடப்பட்டதா? ---சுகுஜி


உலகின் மிகப் பெரிய வைரம் புதுவைக்கு அருகில் உள்ள இரும்பை ஆலயத்தில் திருடப்பட்டதா? ---சுகுஜி


உலகின் மிகப்பெரிய ஆர்லோப் என்ற கருப்பு வைரம் புதுச்சேரிக்கு அருகில் உள்ள இரும்பை கோயிலில் இருந்து திருடப்பட்டதாக நம்பப்படுகிறது. பிரம்மாவின் கண் என்று அழைக்கப்படும் இந்த வைரம் சென்ற நூற்றாண்டில் வழிபாட்டில் இருந்து வந்த ஆலயத்துள் இருந்த விக்ரகத்தின் 'கண்' ஆக இருந்ததை, தந்திரமாக திருடப்பட்டதாக நம்பப்படுகிறது.
புதுவைக்கு அருகில் சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது இரும்பை ஆலயம். இது புதுவை திண்டிவனம் சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு அருகில் இரும்பைக்கு போகும் கிளை சாலையில் உள்ளது.
இது சுமார் 1300 வருடங்கள் பழமை வாய்ந்த கோயில். முன்பு இரும்பை மாகாணம் என்று அழைக்கப்பட்ட எழில் சூழ்ந்த ஊர் தற்போது இரும்பை என்று அழைக்கப்படுகிறது.

இந்த இரும்பை தலத்திற்கு திருஞானசம்பந்தர் வந்திருக்கிறார். திருஞானசம்பந்தர் காலம் ஏழாம் நூற்றாண்டு. அவருக்கு முன்பே இந்த ஆலயம் புகழ்பெற்றிருந்ததால் தான் அவர் அங்கே வந்து இறைவனை வழிபட்டு பாடி உள்ளார். எனவே இதன் தொன்மை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே எனக் கொள்ளலாம்.
திருஞானசம்பந்தர் இந்த இரும்பை மாகாணத்தைப் பற்றி தனது திருபதிகங்களில்"எந்தை எம்மான் இடம் எழில்கொள்சோலை இரும்பைதனுள் மந்தமாய் எழில்சோர்ந்துஅழகாறு மாகாணத்து" என்று பாடுகிறார். அதாவது அழகிய வனத்தில் அமைந்துள்ள இரும்பை மாகாணத்தில் உள்ள அனலை தாங்கிய அண்ணலை வழிபடுவோருக்கு துன்பம் இல்லை என்கிறார்.
இதன் மூர்த்தி -- மகா காளேஸ்வரர்அம்மை -- மதுரநாயகி எனப்படும் குழல்மொழி அம்மைதலமரம் -- புன்னைமகாகாளர் மூன்று இடங்களில் ஆராதிக்கப்படுகிறார். முதலாவது உச்சைனி ஜோதிர்லிங்கம், இரண்டாவது அம்பை சோழநாட்டில், மூன்றாவது இத்திருத்தலம். இதன் தீர்த்தம் - மாகாளர் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
இதில் சந்திரனுக்கு தனி சந்தநி உண்டு. ஒரு கையில் புத்தகமும், இருகையில் தாமரையும் ஒரு கை இடுப்பிலும் உள்ள எழிலார்ந்த உருவம். இத்தகைய சந்திரன் சிலை மிக அபூர்வமே. சந்திரன் நீச்சமாக உள்ள விருச்சிக ராசிக்காரர்கள் தொடர்ந்து 8 வாரம் திங்கள் அன்று வழிபட, சந்திரதோஷம் நீங்கும் என கூறப்படுகிறது.
இந்த தலத்தில் மூர்த்தியாக உள்ள மகாகாளேஸ்வரரின் லிங்கரூபம், மூன்று பிளவாக பிளந்துள்ளது. இதை ஒரு செப்பு பட்டையால் பிணைத்து கட்டி உள்ளனர். இந்த லிங்கம் பிளவு பட்டிருப்பதே இந்த லிங்கத்தின் கண்ணாக அமைக்கப்பட்டிருந்த வைரம் களவாடப்பட்டதற்கு சான்று என கூறுகிறார்கள்.
ஆனால் ஆகம விதிகளை சாந்தி செய்ய அதற்கும் ஒரு சுவாரஸ்யமான கதை கூறப்படுகிறது.
நான்காம் குலோத்துங்கன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில், இந்தப் பகுதியில் பயங்கர பஞ்சம் ஏற்பட்டதாகவும், இதை தீர்க்க வழியறியாத மன்னன் கற்றவரை நாடிய போது, தொடர் தவத்தில் ஈடுபட்டிருந்த கழவெளி சித்தர் என்பவர் இரும்பை மாகாணத்தில் நாள் ஒன்றுக்கு ஒரே ஒரு அரச இலையை உண்டு அரசமரத்தின் அடியில் தவம் செய்வதாகவும், அவரால் மட்டுமே இந்த பஞ்சம் உள்ள நிலையை மாற்ற இயலும் என்றனர்.
ஆனால் தவத்தில் ஆழ்ந்துள்ள முனிவரை எவ்வாறு எழுப்பி அவரிடம் குறையை கூறுவது, ஒருவேளை அவர் கோபித்தால் என்ன செய்வது என்று மன்னர் தயங்கும்போது, இரும்பையை சேர்ந்த தாசி வள்ளி என்பவள் தான் முனிவரை எழுப்பி வருவதாகவும், அவர் சபித்தால் அது தன்னோடு போகட்டும் என தியாக உள்ளத்துடன் கூறி சித்தரை சந்திக்க சென்றாள்.
முனிவரின் உணவுப் பழக்கங்களை அறிந்த வள்ளி ஒரு அரச இலையைப் போன்று 'அப்பளப்பூ' ஒன்று செய்து வைத்து காத்திருந்தாள்.
முனிவர் பசிவந்தபோது அரசமரத்தின் பழுத்த இலைக்காக வலது காயை உயர்த்தினார். தனது கண்களை திறக்காமல், வழக்கம்போல. அப்போது அவரது வலது கையில் அரச இலைக்கு பதிலாக அப்பளப்பூவை தாசி வள்ளி வைத்தாள்.
சுவை வேறுபாட்டை உணர்ந்த கழவெளி சித்தர் கண் திறந்தார். உடன் அவரை வணங்கி தனது நாட்டின் பஞ்சத்தை போக்குமாறு பணிவுடன் வள்ளி வேண்டினாள். சித்தரும் வரும் ஐந்தாவது விழா நாளில் தான் இறைவனை வேண்டி பஞ்சம் நீங்க வழி செய்வதாக ஒப்புக் கொண்டார்.
ஐந்தாம் நாள் திருவிழாவில் தாசி வள்ளியின் நடனம் நடைபெற்றது. அப்போது அவளின் வலது கால் சிலம்பு கழன்று விழுந்தது. ஆட்டத்தை ஒற்றை சிலம்புடன் ஆடுவது குற்றம் என எண்ணிய சித்தர் தன் கரத்தால் தாசியின் காலில் சிலம்பை இட்டு விட்டார்.
ஆனால் மக்களோ இதைக் கண்டு பலமாக நகைத்தனர். உடன் கோபம் கொண்ட சித்தர்வெல்லும்போது விடுவேன் வெகுளியைசெல்லும்போது செலுத்துவேன் சிந்தையைஅல்லும் பகலும் உன்னையே தொழுவேன்கல்லும் பிளந்து கழிவெளி ஆகுமே எனப்பாட லிங்கம் மூன்றாய் பிளவுபட்டது.
இதைக்கண்டு திடுக்கிட்ட மக்களும் மன்னரும் முனிவரை பணிந்து வேண்ட"எட்டும் இரண்டும் அறிந்த எந்தனைஎட்டும் இரண்டும் அறிந்த உந்தனைஎட்டும் இரண்டும் ஒன்றதாகுமே" எனகோபம் தணிந்து பாட லிங்கத்தின் இரண்டு பகுதி மட்டும் கூடியதாகவும், மூன்றாவது பகுதி விழுந்த இடம் இன்றும் கழிவெளி என அழைக்கப்படுவதாகவும் இந்தக் கதையை மிக சுவாரசியமாக அங்கே அர்ச்சகராக பணிபுரியும் பஞ்சாபகேசன் குருக்கள் நம்மிடம் தெரிவித்தார்.
ஆனால் வைரம் பறிபோனதால் பின்னப்பட்டுபோன லிங்கத்தின் குறை போக்கவே இந்தக் கதை கூறப்பட்டிருப்பதாக நமக்கு தோன்றுகிறது.
இங்கு உற்சவங்கள் எதுவும் கிடையாது. சிவராத்திரி, பிரதோஷம் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது.
சீரழிந்து மக்களால் மறக்கப்பட்டிருந்த இந்தக் கோயிலை புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமார், மிகுந்த பொருள் செலவுடன் அதை புனரமைத்து வருகிறார். அதில் அமைக்கப்பட்டுள்ள கதை சிற்பங்களும், சித்திரங்களும் புதிய வகையானவை. கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொள்ளும் வனப்பு கொண்டவை.
இத்தகைய வகை சித்திரங்கள் தமிழகத்தில் எந்த ஆலயத்திலும் இடம்பெறவில்லை என்று கூறலாம்.
திருஞானசம்பந்தர் பாடியபடி ஏழாம் நூற்றாண்டில் இரும்பை இருந்த நிலை ஒப்ப தக்கதொரு வனமாகவும் ஆக்கப்பட்டு வருகிறது.
திருக்குளமும் சீராக்கப்பட்டு வருகிறது. கழுவெளி சித்தர் தவமிருந்ததாக கூறப்படும் அரசமரமும் ஒன்று குளக்கரையில் உள்ளது.
விரைவில் குடமுழுக்கு நடக்க இருக்கிறது. விரைவிலேயே இந்தத்தலம் ஒரு சிறந்த வழிபாட்டு தலமாகவும், சுற்றுலா தலமாகவும் மாற இருக்கிறது.
ஒருமுறை சென்று வனப்பையும், மகாகாளேசுவரரின் அருளையும் பெற்று வரலாமே.



மஹா அவதார் பாபாஜியும், பரங்கிப்பேட்டை திருக்கோயிலும்-சுகுஜி-


பாபாஜி என்கின்ற பெயர் ரஜினிகாந்த் தயாரித்த பாபாஜி என்ற படத்திற்கு பிறகுதான் தமிழ்நாட்டில் பிரபலமடைந்தது. ஆனால் பல நூறு ஆண்டுகளாக இமயமலையை நாடிச் செல்லும் ஆன்மீக பசி கொண்ட பலருக்கு பாபாஜி என்ற பெயர் ஒரு மந்திரச் சொல்.
அவரது பெயர் பல நூற்றாண்டுகளாக மெய்ஞ்ஞானம் தேடிடும் ஞானியருள் அணையாத தாகமாக இருந்தது. அவரை இயேசு கிறிஸ்து சந்தித்ததாக கூறப்படுகிறது. ஆதி சங்கரருக்கு அவர் உபதேசித்துள்ளார்.
அவரது பெயர் சென்ற நூற்றாண்டிலிருந்து அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் ஆன்மீக சாதகர்களுக்கு மிகப் பரிச்சயமான பெயராகும்.
பாபாஜியைப் பற்றி மேலை நாட்டவருக்கு மிக விரிவாக, இந்தியாவைச் சேர்ந்த பல யோகியரையும் மேலும் பாபாஜியைப் பற்றியும் முதலில் கூறிய அங்கில நூல் "AUTO BIOGRAPHY OF A YOGI" ஆகும். இதை ஆங்கிலத்தில் எழுதியவர் பரமஹம்ச யோகானந்தா என்கின்ற மாபெரும் யோகியாவார். இந்த நூல் முதற்பதிப்பு 1946ல் வெளிவந்தது. 1893ம் ஆண்டு இந்தியாவில் கோரக்பூரில் இமயமலை அடிவாரத்தில் பிறந்து 1952ல் அவர் முக்தியடைந்தார். அவர் மிகப்பெரிய யோகக்கலை நிறுவனங்களை அமெரிக்காவில் நிறுவி, தனது வாழ்வின் பெரும் பகுதியை மேலை நாட்டினருக்கு நமது பண்டைய பெருமையான யோகக் கலையையும் வாழ்வின் நோக்கத்தையும், வாழ்க்கை முறையையும் போதித்து வந்தார். அவரது தன்னையறியும் அறிவு இன்னமும் யோகானந்தா சத்சங் சொசைட்டி ஆப் இந்தியா என்ற அமைப்பின் மூலம் பாபாஜி வழிவந்த கிரிய யோகத்தையும், யோகத்தின் பெருமையையும் உண்மையை தேடுவோருக்காக மிகச் சிறப்புடன் போதித்து வருகின்றன.

பரமஹம்ச யோகானந்தா எழுதிய 'ஒரு யோகியின் சுயசரிதை' என்ற ஆங்கில நூல் ரஜினியின் பாபாஜி பட வெளியீட்டுக்குப் பிறகு, தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. இதன் மூல ஆங்கில நூல் இப்போதும் உலகில் உள்ள 1000க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒரு பாடநூலுடன் ஆன துணை நூலாக விளங்கி வருகிறது.
பரமஹம்ச யோகானந்தாவின் வாழ்வு அவரது போதனைக்கு ஒப்ப, யோக நெறியில் விளங்கியது என்பதற்கு அவரது மரணமும் ஒரு சான்றாக அமைந்தது.
பரமஹம்ச யோகானந்தா 1952ம் வருடம் மார்ச் 7ம் தேதி மகா சமாதி அடைந்தார். அவரது கடைசி பிரசங்கம் அப்போதைய இந்திய தூதரக அமெரிக்காவில் இருந்து திரு. சென் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. அன்று இரவு அந்த வீட்டிலேயே பரமஹம்ச யோகானந்தர் மகா சமாதியடைந்தார். அவரது உடல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சவக்கிடங்கில், இந்தியாவில் இருந்து அவரது சீடர்கள் வரும் வரை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அனைவரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் உயிர் பிரிந்த பின்பும் அவரது உடலில் எந்தவித மாற்றமும் 20 நாட்கள் க.ழித்தும் ஏற்படவில்லை. உடலில் எந்த துர்நாற்றமோ அல்லது தோலில் சுருக்கமோ சிதைவோ அவரது உடலில் 20 நாட்கள் கழித்தும் கூட ஏற்படவில்லை. இது மிக அதிசய செய்தியாக அப்போது அமெரிக்க, ஐரோப்பாவில் இருந்த மிகப் பிரபலமான அனைத்து பத்திரிக்கைகளிலும் செய்தியாக வந்தது. இந்து யோகத்தின் உயர்வைப் பற்றியும் மிக விரிவாக செய்திகள் வெளியிட்டன.
அப்போதே சவக்கிடங்கின் இயக்குநர் ஆக இருந்த ஹாரி.டி.ரோ என்பவர் மிக விரிவாக ஒரு அத்தாட்சியிடப்பட்ட ஒரு சான்றிதழைக் கொடுத்துள்ளார். அதில் அவர் தான் இதுவரை இத்தகு அதிசயத்தைப் பார்த்ததில்லை எனவும், தனது சவக்கிடங்கில் மார்ச் 7ம் தேதி வைக்கப்பட்ட சடலம், மார்ச் மாதம் 27ம் தேதி பார்த்தபோது அப்போதுதான் வைத்தது போல் மிகப் புதியதாகவும் எந்தவித துர்நாற்றமோ அல்லது சிதைவோ இல்லாமல் வைக்கப்பட்டதை விட புதியதாக தோற்றமளிப்பதாகவும் இதைப் போல் இதுவரை அதிசயத்தை தான் பார்த்ததில்லை என ஒரு சான்றிதழ் செய்து அனுப்பியுள்ளார்.
இத்தகு மகா அவதார் பாபாஜியை தனது குரு நேரில் சந்தித்ததாக தனது புத்தகத்தில் யோகானந்தா கூறியுள்ளார். 1861-1935ம் ஆண்டுகளுக்கு இடையே ஹரி மகாசாயா என்ற சாது பாபாஜியை பலமுறை சந்தித்து பேசும் ஆனந்த அனுபவம் பெற்றதாக கூறியுள்ளார். லஹரி மஹாசாயாவின் பல சீடர்களும் பின்பு பாபாஜியை காணும் பாக்கியம் பெற்றதாக கூறியுள்ளனர். ஆனால் லஹரி மஹாசாயின் நேரடி சீடர் ஸ்ரீயுக்தேஸ்வர் கரி 1894ம் ஆண்டு பாபாஜியை சந்தித்ததைப் பற்றி தனியே ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார். மேலும் பல சீடர்கள் 1935ம் ஆண்டு பாபாஜியை நேரில் பார்த்து பேசியதாக குறிப்பிட்டுள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் சுவாமி கேசுபானந்தா, ராம் கோபால் மணிம்தார்.
ஆனால் ஸ்ரீயுக்தேஸ்வரரின் நேரடி சீடரான பரமஹம்ச யோகானந்தா தான் தனது உலகப் புகழ்பெற்ற நூலான யோகியின் சரித்திரத்தை ஆங்கிலத்தில் எழுதி பாபாஜியை உலகமங்கும் உள்ள ஆன்மீக பற்று கொண்டோருக்கு அறிமுகப்படுத்தியவர் ஆவார்.

பிறகு தமிழ்நாட்டில் உள்ள செட்டிநாட்டு பகுதியில் உள்ள கானாடு காத்தானில் உயரிய செல்வ நிலையில் இருந்த S.A.A.ராமய்யா என்பவர் 1952 அக்டோபர் மாதம் 17ம் தேதி தீபாவளி அன்று பாபாஜியின் கட்டளைப்படி சென்னையில் கிரிய பாபாஜி சங்கம் என்ற அமைப்பை நிறுவி கிரியா யோகம் கற்பிக்க ஆரம்பித்தார். அதே ஆண்டு வடக்கே கொல்கத்தாவைச் சேர்ந்த U.T.நீலகண்டன் என்பவருக்கும் இதே போல் ஒரு புனித அனுபவம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் அதுவரை பாபாஜியை மகா அவதார் என்றும், சுமார் இரண்டாயிரம் ஆண்டுக்கு மேல் அவர் கிரிய யோகம் பயிற்று வருகிறார் என்றும், அவர் எங்கு பிறந்தார் என்பது தெரியாது, அவர் வரலாறு தெரியாது எனக் கூறப்பட்டதற்கு திடீரென ஒரு மாற்றம் யோகி ராமைய்யாவின் சீடர் கனடாவை சேர்ந்த மார்ஷல் கோவிந்தன் மூலம் வந்தது.
மார்ஷல் கோவிந்தன் வெளியிட்ட ஆங்கிலப்புத்தகமான "18 சித்தர்கள் மற்றும் கிரிய யோக வழி முறை" என்ற ஆங்கிலப் புத்தகத்தில் மகா அவதார் பாபாஜி 20 நவம்பர் 203ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரம் அருகில் உள்ள பரங்கிப்பேட்டையில் பிறந்ததாகவும், அவரது இயற்பெயர் நாகராஜ் என்பதாகவும், நாகராஜ் தனது இளம் வயதிலேயே கடத்தப்பட்டு இமயமலை கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்பு பல ஆண்டு ஆன்மீக தேடுதலுக்கு பின் அவர் மகா அவதார் நிலை அடைந்தார் எனவும், இதை அவரது குரு யோகி ராமய்யாவிடம் பாபாஜி கூறியதாக எழுதி பரபரப்பை உண்டாக்கினார். அந்த புத்தகமும் உலகெங்கிலும் பரபரப்பாக லட்சக் கணக்கில் விற்றது.

பின்பு யோகி ராமய்யா அவரது சொந்த செலவில், பரங்கிப்பேட்டையில் பாபாஜி பிறந்த இடத்தை மகா அவதார் பாபாஜியின் அருளால் உணர்ந்து , அந்த இடத்தை மத்திய அரசு கஸ்டம்ஸ் துறையின் கட்டுப்பாட்டில் இருந்ததை மத்திய அரசு அனுமதி பெற்று வாங்கி அங்கே ஒரு சிறிய கோயில் அமைத்துள்ளார்.

இதைக்காண உலகெங்கும் உள்ள பாபாஜியின் சித்தாந்தத்தின் அன்பர்கள் வந்து பார்த்த வண்ணம் இருக்கின்றனர். அந்த கோயிலின் புகைப்படங்களும் அதை நிறுவிய யோகி ராமைய்யாவின் படமும் இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளது.
TEMPLE



BABAJI

(BIRTH PLACE)
ஆனால் தற்போது மார்ஷல் கோவிந்தனும் தனது குருவின் மார்க்கத்தில் இருந்து தனியே ஒரு ஆஸ்ரமத்தை நிறுவி அதற்கு கிளைகளை உலகெங்கும் நிறுவி பாபாஜியின் கிரிய யோகம் என்ற ஞானத்தைப் பரப்பி வருகிறார். இந்தியாவில் பெங்களூரில் அதன் கிளை அமைந்துள்ளது.
ஆனால் சமீப காலமாக அவர் பரமஹம்ச யோகானந்தாவைப்பற்றி சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதால் அவருக்கும் உலகெங்கும் உள்ள பாபாஜியின் உண்மையாக வழிநடப்பவர்களுக்கும் இடையே சில முரண்பாடுகள் தோன்றியுள்ளன.
பரமஹம்ச யோகி குறிப்பிட்ட மகா அவதார் பாபாஜியும், யோகி ராமைய்யாவால் கோயில் அமைக்கப்பட்டுள்ள பாபாஜியும் வேறு வேறானவர்கள் என்ற ஒரு சர்ச்சை உலகெங்கிலும் தோன்றியுள்ளது.
தற்போது இரு ஆண்டுகளுக்கு முன் பாபாஜியை நேரில் கண்டதாக கூறிக் கொண்ட, பாபாஜியின் கோயிலைக் கட்டிய யோகி ராமைய்யாவும், தனது பயணத்தின்போது மலேசியாவில் முக்தியடைந்தார். தற்போது பாபாஜியின் கிரிய யோகத்தைப் பற்றி வகுப்புகள் எடுக்க உலகெங்கும் பல்வேறு அமைப்புகள் தனித்தனியே செயல்பட்டு வருகின்றன. அதனால் நாம் இப்போது காணும் கோயில், யோகி ராமய்யாவால் கட்டப்பட்டு அவரது சீடர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற பரங்கிப்பேட்டை கோயில், உண்மையான மஹா அவதார் பாபாஜியின் பிறந்த இடம் என்பதை உறுதியாக கூற இயலவில்லை.
என்ன இருந்தாலும் அந்த இடம் ஒரு தெய்வீக சான்றியத்துடனும், ஆன்மீக அதிர்வுகளை எழுப்பும் இடமாகவே விளங்குகிறது. அதனால் வாய்ப்பு கிடைப்போர் சென்று ஆன்மீக அனுபவங்களைப் பெற்று வரலாம்.

அந்தக் கோயில் கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில், பரங்கிப்பேட்டை என்ற ஊரில் உள்ள கஸ்டம்ஸ் அலுவலகத்தின் அருகில் அமைந்துள்ளது.
பரங்கிப்பேட்டையில் இருந்து புவனகிரியில் சுவாமி ராகவேந்திரா பிறந்த இடமும், அதன் நேரே வள்ளல் ராமலிங்க அடிகள் பிறந்த ஊரான மருதூரும் அமைந்துள்ளதை காணும்போது அந்தப்பகுதியே ஒரு ஆன்மீக குருக்களின் பீடபூமி போல் தோன்றுகிறது.
நம்பிக்கை தானே மனிதனின் வாழ்க்கைக்கு உயிர்நாடி, அந்த நம்பிக்கையுடன் பரங்கிப்பேட்டை, புவனகிரி, மருதூர் மூன்றையும் கண்டு ஆன்மீக பயன் பெற்று வரலாமே!


















Tuesday, April 08, 2008

நடந்தாய் வாழி காவேரி நீயும் பின்னால் நட ஒகேனக்கல் --சுகுஜி--


நடந்தாய் வாழி காவேரி நீயும் பின்னால் நட ஒகேனக்கல் --சுகுஜி--
கலைஞரின் ஒகேனக்கல் திட்டம் தள்ளி வைக்கப்படுகிறது. கர்நாடகாவில் புதிய அரசு ஏற்பட்டதும் அதனிடம் பேசி ஒரு முடிவு காணலாம் என்ற அறிக்கை பல்வேறு தரப்பிலும் பல்வேறு எதிர் விளைவுகளை உண்டாக்கி விட்டது.

மருத்துவர் ராமதாஸ் இது 1998ல் ஆரம்பிக்கப்பட்ட திட்டம், ஏன் இதுவரை செய்ய முடியாமல் போனது என்ற கேள்விக்கு கவிஞர் கனிமொழி தகுந்த பதிலையே கூறியிருக்கிறார். தாமதத்திற்காக அவர் தரப்பில் கூறப்படும் நிர்வாகக் காரணங்கள் அனைத்தும் சரியானவையே. ஏற்றுக் கொள்ளக் கூடியவை தான். சமீபத்தில் தான் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் 2008ம் ஆண்டு பிப்ரவரியில் ரூ.1334 கோடி நிதி உதவி பெற்று வந்தார். ஆனால் அப்போதெல்லாம் கர்நாடக தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. எனவே ஒரு சலசலப்பும் இல்லை. இப்போது மே மாதம் தேர்தல் என்று ஆனவுடன், ராமர் ரதமோ, ராமர் பாலமோ ஒன்றும் இப்போது கூறுவதற்கு இல்லாததால், கொஞ்ச நாள் முதல்வர் எடியூரப்பா, ஓடத்தில் ஒரு ரவுண்ட் ஒகேனக்கல் வந்து ஆட்டத்தை துவக்கி வைத்தார்.
பார்த்தது இதர கட்சிகள், இந்த சமயத்தில் வாளா இருந்தால் மக்கள் நம்மை சும்மா விட்டுவிடுவார்கள் என்று அவரவர்களால் முடிந்த அளவு, அவரவர் தரத்திற்கு தகுந்தபடி இந்தப் பிரச்சனையை ஊதி விட ஆரம்பித்தனர். கண்ணியமான கலைஞர் பேச்சையும், ஒட்டுமொத்த கட்சிகள் இயற்றிய தமிழக சட்டமன்ற தீர்மானத்தையும் திரித்து, துரும்பை மலையாக்கி மக்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர்.
ஆனால் இப்போது மருத்துவர் ராமதாஸின் இன்னொரு வினாவான கர்நாடக தேர்தலுக்கு பிறகு ஒகேனக்கல் திட்டம் நிறைவேற உத்தரவாதம் உண்டா? என்ற மில்லியன் டாலர் சந்தேகத்திற்கு தான் தகுந்த பதில் அளிக்க யாரும் இல்லை. ஏனெனில் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான கிருஷ்ணா முன்பே சொல்லிவிட்டார் தாங்கள் உச்ச நீதிமன்றம் போகப்போவதாக. வேறு எந்த கட்சி வந்தாலும் தாராளமாக தண்ணீர் தருவதற்கு ஒப்புக் கொள்வார்களா என்பது சந்தேகமே. ஏனெனில் காவிரி பிரச்சனையை என்றும் அணையாமல் வைத்துக் கொண்டால்தான் கர்நாடகாவில் எந்தக் கட்சியும் அரசியல் நடத்த முடியும் என்பதே நிதர்சனம்.
நமது முதல்வர் கலைஞர் அவர்கள் அவரது பெயருக்கேற்றபடி கருணையின் வடிவாய் மாறி வருகிறார், கனிந்து விட்டார், வன்முறைகள், வல்லடி வழக்குகள் அவருக்குப் பிடிப்பதில்லை. ஆனால் சட்டசபையில் அனைத்துக் கட்சியினராலுமே ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பின் இதைக் கண்டித்து அனைத்து திரை உலகமே திரண்டு போராட்டம் நடத்திய பிறகும், ரஜினிகாந்த் இத்தனை தீவிரமாய் தனது உணர்வை வெளிக்காட்டிய பின்பும், தேர்தலுக்கு பின் பேசி முடிவெடுப்போம் என அறிவித்தது சிறிது நெருடலாகத்தான் இருக்கிறது. வன்முறையை இருபுறமும் தடுக்கவும், மீண்டும் மீண்டும் மக்கள் உணர்ச்சியை தூண்டக்கூடாது என்றும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினாலும், சிறிது கவலையாய் தான் உள்ளது. மகாத்மா காந்தி கூட தனது வாழ்க்கையில் வன்முறையை தவிர்க்க இத்தகு விட்டுக்கொடுத்தலை செய்திருக்கிறார். ஆனால் அவரது மாண்பை இருபுறமும் மதித்தனர். வன்முறை நின்ற பின் நியாயமாக என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தது. ஆனால் கர்நாடகத்திடம் இந்த நியாயமான போக்கை நாம் எதிர்பார்க்க இயலுமா?
காவேரி பிரச்சனையையே எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நீண்ட வரலாறு பல தலைமுறைகளையும் கடந்து இன்னும் தொடர்கிறது. அது பற்றியும் கொஞ்சம் பார்ப்போம்.

இந்த காவேரி பிரச்சனையின் வரலாறு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி இருக்கிறது. கல்லணையைக் கட்டிய கரிகால் சோழன் கூட குடகில் அணை கட்டமுயன்றபோது படையெடுத்துச் சென்று அதை இடித்து விட்டு வந்ததாக உறுதி செய்ய இயலாத சரித்திர குறிப்புகள் உள்ளன.
மேலும் பலமுறை இவ்வாறு காவேரியைப் பாதுகாக்க தமிழக மன்னர்கள் குடகுக்கு சென்று அணை கட்டுவதை தடுத்து வந்துள்ளனர்.

1790ல் திப்பு சுல்தான் அரசாண்டபோது ஒரு அணை கட்ட எண்ணியபோது, அன்றைய நிலையில் தமிழ்நாடு பிரிட்டிஷ் ஆட்சியிலும், குடகு நாடு திப்பு சுல்தானிடமும் இருந்தது. இந்த அணை கட்டுவதற்கு பிரிட்டிஷ் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

மறுபடியும் 1850ல் நடந்த ஒரு முயற்சியும் பிரிட்டானிய ஆட்சியில் இருந்த தமிழ்நாட்டின் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் 1918ல் மைசூர் மாநிலம் நேரடியாக லண்டனில் சமரசம் பேசி அங்கு அணை கட்ட அனுமதி வாங்கினர். ஆனால் தமிழ்நாடும் லண்டனில் மேல் முறையீடு செய்தது, மீண்டும் பலமுறை பேச்சு வார்த்தைக்கு பிறகு ஒரு சமரசம் எட்டப்பட்டு, அணை கட்டுவதற்கான முதல் ஒப்பந்தம் 1924ல் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தப்படி புதிய டேம் கொள்ளளவு 45 tmc ft ஆக இருக்க வேண்டும், ஆனால் மேட்டூர் அணைக்கு 95 tmc ft தந்துவிட வேண்டும். மேலும் கர்நாடகா இந்த அணையைக் கொண்டு ஒரு லட்சம் ஹெக்டேருக்கு மேல் விவசாயத்திற்காக நிலங்களை சீர்திருத்தி உபயோகிக்க கூடாது. ஆனால் தமிழ்நாட்டிற்கு இந்த நிபந்தனை இல்லை. அது எத்தனை ஹெக்டேர் வேண்டுமானாலும் இந்த காவேரி நீரை உபயோகித்து விவசாயம் செய்யலாம். இவ்வாறு சுமுகமாக நாம் சுதந்திரம் பெறும்வரை 1947 வரை இந்த ஏற்பாடு தொடர்ந்தது.
ஆனால் அதற்கும் ஆபத்து வந்தது நாம் சுதந்திரம் பெற்ற பின்பு. சுதந்திரம் பெற்ற பிறகு புதிய ஆட்சி டெல்லியில் மலர்ந்ததும் கர்நாடகா தனக்கு காவேரியில் 50 சதவிகித நீர் வேண்டும் என மீண்டும் மத்திய அரசை வற்புறுத்தத் தொடங்கியது. ஆனால் 1947 முதல் 1974 வரை தமிழக அரசின் இடைவிடாத எதிர்ப்பால் கர்நாடக தரப்புக்கு ஆதரவாக எதுவும் நடைபெறவில்லை. ஆனால் 1974ல் கர்நாடகா அணைகளை கட்டத் தொடங்கியது. தமிழக அரசு நதிநீர் ஆணையத்திடம் முறையிட்டு விசாரிக்கக் கோரியும் அந்த ஆணையமும் விசாரித்து 1991ல் தனது இடைக்கால நிவாரணமாக தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 205 tmc ft தண்ணீர் தர வேண்டும் என்று கூறியது. ஆனால் கர்நாடகாவின் பங்கு குறித்து கூறப்படவே இல்லை.
ஆனால் இந்தத் தீர்ப்பை கர்நாடகா மதிப்பதேயில்லை. ஒவ்வொரு ஆண்டும், வறட்சி காலங்களில் கர்நாடகாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி அதனிடம் தண்ணீர் விடச் செய்வதற்கு தமிழக அரசு பல உபாயங்களை உபயோகிக்கும் நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை. நமக்கு விதிப்படி கிடைக்க வேண்டியதை நாம் ஒவ்வொரு முறையும் போராடியே பெற்றோம்.
இந்த நிலையில் இந்த ஆணைய தற்காலிக தீர்ப்பும் காலாவதியானதால் நாம் உச்சநீதி மன்றம் செல்ல வேண்டி இருந்தது. இருதரப்பும் தங்கள் பக்க நியாயங்களையும், உரிமைகளையும் எடுத்துரைத்தன. இறுதியாக 2007ம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தது. அதில் தமிழகத்திற்கு 192 பிலியன் கன அடி தண்ணீர் ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா தரவேண்டும் எனவும், கர்நாடகா மேலும் தனியாக கேரளாவிற்கு 30 பிலியன் கன அடியும், புதுவை மாநிலத்திற்கு 7 பிலியன் கன அடி தண்ணீரும் ஒவ்வொரு ஆண்டும் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இந்த நீதிமன்ற தீர்ப்புக்கும் கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். ஆனால் பல தந்திரங்களை செய்து இன்னும் உச்சநீதி மன்ற தீர்ப்பு கர்நாடகாவால் மதிக்கப்படவேயில்லை.
நமது கவலை எல்லாம் இது தான். நமக்கு வரலாறு தெரிவித்ததெல்லாம், இதுவரை எந்த நதிநீர் ஆணையம், உச்சநீதி மன்ற தீர்ப்புகளையும் கர்நாடகா மதித்ததே இல்லை. இந்த நதிநீர் பிரச்சனையில் தொடர்ந்து பெங்களூரில் வாழும் அப்பாவி தமிழர்களும், டெல்டா பகுதியில் காவேரியை நம்பி விவசாயம் செய்து வரும் தமிழக விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள்.
நமக்கு இதுவரை இரண்டு தமிழர்கள் இந்தியாவின் முதல் குடிமகனாக பதவியேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பெருமகன்களும் இந்தப் பிரச்சனையை முனைந்து தீர்த்திருக்கலாம். அவர்கள் பதவிக்காலங்களும் முடிந்துவிட்டன. இனி எப்போது ஒரு தமிழருக்கு இப்பதவி கிடைக்கும் எனத் தெரியாது.
சர்வதேச நீதியின்படி நதி உற்பத்தியாகும் இடத்திற்கோ, அது இருக்கும் நாட்டிற்கோ மட்டும் சொந்தமானதல்ல. இது உலகெங்கும் நடைமுறையில் இருக்கும் நியதி. அது பிறக்கும் இடத்திற்கு சிறிது உரிமை உண்டே தவிர, அது பிறந்த இடத்திற்கு மட்டும் சொந்தமில்லை. அது எங்கே பரவி ஓடுகிறதோ எங்கே சென்று கடலில் சேருகிறதோ அந்த இயற்கை வழியில் உள்ள அனைவருக்கும் அந்த நதிநீரில் மிகுந்த பங்கும் உரிமையும் உண்டு. இதை இந்திய உச்ச நீதிமன்றமும், பல சர்வதேச நீதிமன்றங்களும் பல்வேறு நாட்டில் வந்த பல நதி தாவாக்களுக்கும் தீர்வாக கூறியுள்ளன.
ஆனால் கர்நாடகம் மட்டும் முதலில் இருந்தே காவேரி குடகில் உற்பத்தி ஆவதால், காவேரி கர்நாடகாவிற்கு மட்டுமே உரியது என நினைக்கின்றனர். இதோ மே மாதம் கர்நாடகா தேர்தல், இங்கே வறட்சி ஆரம்பித்து விடும், நமது வயல்கள் நீருக்கு ஏங்க ஆரம்பித்து விடும். என்ன செய்யப் போகிறோம்?
மேலும் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் 1998லேயே கர்நாடக-தமிழகத்திற்கு இடையே கையெழுத்தான திட்டம். மைய அரசின் அனுமதி பெற்று, இடையே ஆட்சி மாற்றத்தால் புறக்கணிக்கப்பட்டு இப்போது மீண்டும் இந்த ஆட்சியில் புத்துயிர் பெற்று ஜப்பானிடம் 1300 கோடி கடனும் பெற்றாகிவிட்டது. இந்த நிலையில் கர்நாடகாவில் அமையப் போகும் அரசு இத்திட்டத்திற்கு அனுமதியளிப்பார்களா?
(1) முன்பே அனுமதி பெற்ற திட்டத்திற்கு மீண்டும் ஏன் அனுமதி?
(2) இதுவரை இத்திட்டத்தை தடுக்க எந்த நீதிமன்ற ஆணை இல்லை. ஆனால் எஸ்.எம்.கிருஷ்ணா (காங்கிரஸ்) உச்சநீதி மன்றம் போவதாக கூறுகிறார். நீதிமன்றம் சென்றால் இந்த திட்டம் மிக தாமதம் ஆகும். தடை இல்லாத போதே செய்து கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
எனவே கலைஞர் கருணாநிதி கருணை உள்ளத்தோடு அமைதி வேண்டி பெருந்தன்மையோடு கூறினாலும், நாம் கர்நாடகாவை நம்பி மீண்டும் ஒகேனக்கல் திட்டத்திலேயும் ஏமாந்து நீதிமன்ற சிக்கலில் மாட்டினால் இதுவும் தலைமுறை தலைமுறையாக தொடரும்.
நாம் இப்போது ஒகேனக்கல் திட்டத்திற்கு எடுக்கப்போவது வெறும் 2 tmc ft தான், இதற்கு முன்பே அனுமதி வாங்கியாகி விட்டது, நீதிமன்ற தடை இப்போது இல்லை. எனவே விரைந்து நமது பிரச்சனையை நாம் பார்த்துக் கொள்வதுதான் உசிதம். தேர்தல் கர்நாடகாவில் தான். பின்பு தமிழகத்தில் தேர்தல் வரும். நமக்காக அவர்கள் ஏதாவது விட்டுக்கொடுக்கப் போகிறார்களா? இது ஸ்டாலின் போன்ற செயல்திறம் மிக்க இளைஞர்கள் முன்வந்தால்தான் முடியும்.
நடந்தாய் வாழி காவேரிநீயும் பின்னால் நட ஒகேனக்கல்என்று ஆகிவிடாமல் இருந்தால் சரி.

Sunday, April 06, 2008

புகைகிறது - வயிறு மட்டுமா மனசும் தான்-சுகுஜி-


புகைகிறது - வயிறு மட்டுமா மனசும் தான் -சுகுஜி-
அங்கே பெயரும் அதுதானேகல்லில் இருந்து புகை என்று பெயருள்ள இடத்தில் *தீயில்லாது புகை இராது என்றுதீ எரிகிறது இருபக்கமும்நித்தம் வரும் செய்தி - நீதி செத்து போச்சோஎன பெருமூச்சின் உச்சத்தில்
நம்மை நாமே ஆளும் வசதி படைத்துஅது ஆகிவிட்டது அறுபது ஆண்டுஆனால் இது தொடங்கி வசதி படைத்தோர்பஞ்சை பரதேசிகள் மட்டுமல்ல - உண்மையிதுஎல்லாம் தெரிந்த எல்லோரையும் தெரிந்தமேதாவிகளுக்கு மட்டுமே மேலான வசதிகள்
இன்னுமா எல்லை சண்டை, அதுவும் எங்கேகிராமத்திலே வரப்பு வாய்க்கால் சண்டையா?நகரத்திலே சந்துப் பிரச்சனையா?இந்தியாவின் இருமாநிலங்களுக்கிடையேஇன்னும் தீரவில்லை th
தவித்த வாய்க்கு குடித்தண்ணீர் கேட்டுதொண்ணூற்று எட்டில் போட்ட ஒப்பந்தம்இரண்டாயிரத்து எட்டில் எட்டிக்காயாய்தெரிகிறது - கிட்டவந்த சட்டசபை தேர்தலால்
நாட்டின் நடப்பு நாமே காண்போம்நல்லவராய் நாடகமாடி ஏமாந்த நேரத்தில்ஏற்றம் கொண்டோர் வரலாறுயாயினர்வாழ்த்தும் பெறுகின்றனர்கீழ்தரமாய் விருதுகள் பெற்றும் ஆட்டம்போடுவோர் இன்று ஏராளம் ஆனால்இன்னும் ஏழைகள் ஏராளம்! இழிவுகள் ஏராளம்உழைப்பும் இல்லை உண்மையும் இல்லை
ஆகையால் தீர்வு காண்போம் ஒற்றுமையாய்அநீதி கண்டு இன்று பொங்கிடாமல்என்று நீ தட்டிக் கேட்கப் போகிறாய்தொண்ணூற்று எட்டில் ஒப்பந்தம், தொண்ணூற்று ஒன்பதில்மைய அரசு திட்ட ஒப்புதல், வந்தது ஜப்பானியநிதி உதவி அப்போதெல்லாம் தெரியாத எல்லைஇன்று தெரிகிறது - ஆளத்துடிப்பவருக்குசட்டசபை தேர்தல் கிட்டவந்ததால் ஓட்டெடுக்கஓங்கிக் கத்தினால், வாடி நிற்கும் தமிழருக்குதண்ணீருக் கெங்கே போவது
தாங்களே ஆளும் தகுதிஅரியதாய் கிடைத்தும் - ஆயிரக்கணக்கில்சாதி பேதம் அண்டை மாநிலங்களுக்கிடேயே தண்ணீர் தாவாக்கள்இன்னும் நிறவெறி போல் மொழிவெறி தாண்டவம்திருவள்ளுவர் சிலைக்கு இடமில்லை, தமிழ் ஏடுகள் கூடாதுஉழைக்க மட்டுமே வேண்டி இருந்த தமிழர் இனம்இன்று தேவையற்ற இனம்இந்தியாவின் விஞ்ஞான நகரத்தில் அஞ்ஞானவெறியாட்டம் - இன்னும் இந்திய நாட்டில்இந்தியன் மட்டும் யாரும் இல்லை.
* - (Hogenekkal, Hoge - புகை (கன்னடத்தில்))