Sunday, November 30, 2008

18 சித்தர்கள் கூறிய காயகல்ப முறைகள்

சுந்தரானந்தர் கூறியகாயகல்ப முறை !


இந்த வனத்தின் மேற்கே , செங்கடுகாய் மரமும் , கர்ப்பதரு மரமும் உள்ளது .செங்கடுகாய் மரம் கடுக்காய் மரம் மாதிரியே இருக்கும் ,காய்கள் சிவப்பாக இருக்கும் .கர்ப்பதரு மரம் ஐந்து கிளைகள் கொண்டதாக இருக்கும் ,ஐந்து கிளைகளுமே ஐந்து வித இலைகள் கொண்டது .இந்த செங்கடுகாய் மற்றும் கர்ப்பதரு மரத்தின் பச்சை பட்டையை காடி நீரில் முன்று நாட்கள் ஊறவைத்து ,பிசைந்து தண்ணீர் வடித்து ,அதற்க்கு அளவாக உப்பு ,மிளகு சேர்த்து ,அவைகளுடன் இஞ்சி ,எலும்பிட்சை சாறுவிட்டு அரைத்து ,பழகின ஒரு மண் பாத்திரத்தில் வைத்து 48 நாட்கள் காலை ,மாலை புசித்துவர தேகம் சித்திக்கும் என்று சுந்தரானந்தர் கூறினார் .
சுந்தரானந்தர் அகத்தியரின் சீடர் எனகூறபபடுவார்,போகர் ,மற்றும் சட்டை முனியிடம் சில பாடம் கேட்ருக்கிறார்
இவர் எழுதிய நூல்கள் பல ,அவைகளில் சில இதோ !
வைதியத்திரட்டு ௧௫00
வகாரம் ௨00
அதீத சூத்திரம் ௧0௪
முப்பூ ௨௫
சுத்தஞானம் ௫௧
மற்றும் பல
அன்புடன் ,
ஏ .சுகுமாரன்

சென்றார்கள் ! வென்றார்கள் !











மும்பை மாநகரில் புகுந்து பெரும் நாசம் விளைவித்த பயங்கரவாதிகள் ஒடுக்கப்பட்டுவிட்டனர். அவர்கள் பிடித்து வைத்திருந்த ஒபராய் ஹோட்டல், தாஜ் ஹோட்டலின் புதிய கட்டடம், யூதர்களின் குடியிருப்பான நரிமன் ஹெüஸ் ஆகியவை தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிரடி வீரர்களால் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முழுமையாக மீட்கப்பட்டுவிட்டன. நவம்பர் 26 இரவு முதல் நவம்பர் 29 வரை நடந்த இந்தியாவின் மிகக் கொடுமையான , கோழைத்தனமான தீவிரவாத வன்முறை ,நமது வீர மிகுந்த கமாண்டோக்களால் ஒடுக்கப் பட்டது .
தாஜ் ஹோட்டல் ஒரு மிகப் பெரிய கட்டிடம். இதில் பல நூறு சொகுசுஅறைகள் உண்டு. இவை ஒவ்வொன்றும் அளவில் மிகப் பெரியவை. மேலும்பல "கூட்டம் நடத்துவற்கான" அரங்குகளும், உணவகங்களும் உண்டு. .பழைய தாஜ் அரண்மனை கட்டிடம் மற்றும் புதிய தாஜ்டவர். மேலும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் உள்ளே மாட்டிக் கொண்டுஇருக்க, தீவிரவாதிகளை அழிக்கும் பணி மிக கடினமாகவே இருந்தது. தூரதிர்ஷ்டவசமாக, தாஜ் ஹோட்டலின் வரைபடம் கமாண்டோக்களுக்குவழங்கப் படவில்லை. கண்காணிப்பு கேமரா அறையினையும் தீவிரவாதிகள்சேதப் படுத்தி விட்டனர். ஹோட்டலுக்குள்ளே பல இடங்களில் இவர்கள் தீவைத்ததால், உள்ளே புகை மண்டலமாகவும் கடும் இருட்டாகவும் வேறுஇருந்தது. இந்த கடினமான சூழலிலும் கூட வெற்றிகரமாக எதிரிகளை வென்றநமது படைவீரர்களின் சாகசம் பாராட்டுக்குரியது. அது பற்றி சில சிறப்பு படங்கள் இதோ !
1 ) வெற்றி பெற்று விடுவித்த பின் திரும்பும் நமது வீரர்கள்




2 ) மும்பையில் மரணம் அடித்தவர்களின் நினைவைப் போற்றி லக்நோவில்தீபம் ஏற்றும் இந்தியர்கள்




3) தாஜ் விடுவித்த பின், உடனடியாக கூடியிருந்த மக்களின் கொண்டாட்டம்



Wednesday, November 26, 2008

காயகல்ப முறைகள் ---உரோம ரிஷி

நான் இந்த இழையில் எழுதி வருவது சித்தர்கள் அருளிய காயகல்ப முறைகளைப் பற்றி மட்டுமே .அதுவும் இந்த முறைகளை மட்டும் எழுதக் காரணம் நமது சித்தர்கள் அருளிச் செய்து , நடை முறைப் படுத்திவந்த பல ரகசிய முறைகள் இன்னும் நம்மால் ஆராயப் படாமல் ,இருக்கிறது .இதை பதிவு செய்வதன் மூலம் அது அடுத்த தலைமுறைக்கும் கிடைக்கசெய்வதே முக்கிய நோக்கம் .மேலும் அதன் மூலம் சிதையாமலும் நான் தருவது ,பின்னால் இதை ஆராய்ச்சி செய்பருக்கு எந்த கருத்து வேறுபடும் வரக் கூடாது என்பதற்க்காகதான் .சித்தர்களது தத்துவ விளக்கங்களும் , பாடல்களும் ,வைத்திய முறைகளும் தமிழர்தம் சொத்துதான் . அவைகளும் ஒருவகை இல்லகியம் தான் . .அந்த முறைகளில் சில சுலபமானவை, பல மிகக் கடினமானவை .
சித்தர்களை பற்றிய வரலாறுகளையும் ,கதைகளையும்திரு இந்திரா சௌதர்ராஜன் அவர்கள் மிக அழகாக எழுதி நீண்ட நாட்களாக தமிழத்திற்கு அறிமுகம் செய்துள்ளார் .சித்தர்களை பற்றிய கதைகளையும் ,வரலாறுகளையும் தெரிந்துகொள்ள , http://chithargal.blogspot.com/ என்ற வலைப்பூவில் சித்தர்ககள் ராஜ்யம் என்ற பெயரில் இதுவரை 16 சித்தர்களை பற்றி எழுதிஉள்ளார் .இதைப் பற்றிகூட திருமதி சுபா ஒருமுறை கேட்டிருந்தார் . படித்து மகிழுங்கள் .
இனி உரோம ரிஷி என்னும் சித்தர் அருளிச்செய்த காயகல்ப்ப முறைகளைக் காண்போம் .----
இந்த ஆசரமத்திற்கு கிழப் புறம் , செங்க்கொடிவேலி என்ற ஒரு செடி இருக்கிறது .அச்செடியின் பூ பிச்சிப்பூ போலவும் ,நிறம் சிவப்பாகவும் ,வேர் ரத்த நிறமாகவும் இருக்கும் .அச்செடிக்கு சாபம் நீக்கி சமூலத்தையும் பிடிங்கி வந்து , இரும்பினால் செய்த ஒரு குழாயில் போட்டு ,அத்துடன் அமுரி சேர்த்து எட்டு நாள் உறிய பிறகு எடுக்க இரும்பு சுத்தியாகும் .அந்த இரும்பை உலையில் இட்டு தகடாக அடித்து , அத்தகடை ஆட்டு எருவில் புடமிட்டு ,ஏரஞ்சி தயலத்தில் சுருக்கிட பேதிக்கும் .அதை மறுபடி உலையில் காய்ச்சி செங்க்கொடிவேலி சாற்றில் சுர்க்கிட பத்து வயதாகும் .அதை சுண்ணம் செய்து பசுவின் நெய்யில் ஒரு வாரம் புசித்துவர தேக சித்தியாகும் .
மற்றொரு முறை அந்த செங்க்கொடிவேலி செடிக்குப் பக்கத்தில் ,கருங்கொடி வேலி என்ற ஒரு செடி இருக்கிறது .அதன் இலை நொச்சியிலை போல் இருக்கும் .அந்த இலையை பிடிங்கி வந்து கசக்கி சாறு பிழிந்து ,,வெந்த சோறில் ஒருக் கைப்பிடி எடுத்து ,அதில் அந்த சாரை முன்று துளியிட்டு அந்த சாதத்தை முன்று நாள் வரை சாப்பிட்டு வர தேகசிதியாகும் என்றார் .

சங்க இலக்கியம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள் யார்?


கடம்பர்கள் கடற்கொள்ளை காரர்கள் என வந்த மடலுக்கு பதில் .இது மின்தமிழில் வந்தது
சங்க இலக்கியம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள் யார்?
//"சால்பெரும் தானைச் சேரலாதன்
மால்கடல் ஒட்டிக் கடம்பறுத்து இயற்றியபண்அமை முரசின் கண்அதிர்ந்தன்ன"(அகம். 347)(பொருள் :பெரும் படையுடையவன் சேரலாதன்.அவன் பெரிய கடலில் பகைவர்களை அழித்து அவர்களின் கடம்ப மரத்தை அறுத்து முரசு செய்தான்.அம் முரசு முழங்கியது போல)இப்பாடலடிகளின் வழியாக இன்று சோமாலிய கடற்கொள்ளையர்கள் செய்யும் வேலைகளைப் பண்டைய கடம்பர்கள் செய்தனர் போலும்.இவை பற்றி விரிவாக ஆராய இடம் உள்ளது. கடம்பர்கள் இல்லை.கதம்பர்கள் எனப் பொருள்கொள்ளும் அறிஞர்களும் உள்ளனர்.இக் கதம்பர்கள் மைசூர் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் எனவும் அறியமுடிகிறது.தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்கடம்பாஊஞ்சல் ஒன்னு செய்யவேணும் //அவ்வாறு முனைவர் மு இளங்கோவன் ஒரு கட்டுரை சுவாரஸ்யமாக எழுதி இருந்தார் .ஆனால் எனக்கு அதில் சில ஐயப் பாடுகள் உண்டு . அதை உங்களுடன் பகிர்த்து கொள்ளவிரும்புகிறேன் .

தமிழ் நாட்டில் தமிழர் கடவுளான முருகருக்கு கடம்பர் என ஒரு பெயர் உண்டு .கந்தா ,கடம்பா ,கதிர்வேலா என்ற பாடல் மிகப் பிரபலம் .கடம்ப மரம் மட்டுமல்ல ,கடம்ப மீன் உண்டு , இதைதான் கண்வோய் என்பார்கள் .அதுவும் கடல் தொடர்பு சொல்தான் .கடம்ப வன் நாதர் , கடம்ப என்ற வேரில் பல ஆலயங்கள் மிக பழங்கால இறை வழிப்பாடு இடங்கள் உள்ளன .கண்வ முனிவருக்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தந்த தலம். கடம்பர் கோயில் என பல கதைகள் உண்டு .எனவே கடம்பர் என்பது ஒரு கடல் கொள்ளைக்கார இனமாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை என நினைத்தேன் .

இதற்க்கு துணை புரிவது போல் மாங்குடி கிழார் பாடிய புறம் 335,
"அடலருந்துப் பின் குரவேதளவே
தளவே குருந்தே முல்லை
இந்நான் கல்லது பூவும் இல்லை
கருங்கால் வரகே இருங்கதிர் தினையே
சிறுகொடிக் கொள்ளே அவரையொடுஇந்நான்
இந்நான் கல்லது உணவும் இல்லைதுடியன்
பாணன் பறையன் கடம்பனென்றுஇந்நான்
கல்லது குடியுமில்லைஒன்னாத் தெவ்வர் முன்னின்று
விலங்கிஒன்று
ஏந்து மருப்பின் களிறு எறிந்து விழ்ந்தெனக்கல்லே
பரவின் அல்லதுநெல் உகுத்துப் பரவும் கடவுளும் இல்லை"

என்று கூறுகிறது.

அதாவது குமரிக் கண்டம் அழிந்தபோது வடக்கு நோக்கி நகர்ந்தவர்கள் சேர, சோழ, பாண்டியர் என்ற அடையாளத்துடன் இன்றைய தமிழகத்தினுள் நுழைந்தனர். அடர்காடாக இருந்ததை இரும்புக் கோடாரி கொண்டு திருத்திக் குடியேறியதைப் பரசுராமன் கதை தொன்மவடிவில் கூறுகிறது. இவர்களுக்கு முன்பு அங்கு வாழ்ந்த நான்கு மக்கள் குழுவினரான துடியர், பாணர், பறையர், கடம்பர் என்போரின் எதிர்ப்புக் குரலாக ஒலிக்கும் பாடல் தான் மாங்குடி கிழார் பாடிய புறம் ஆகும் .
இவ்வாறு சேர, சோழ, பாண்டியர் இன்றைய தமிழகத்துக்குள் வரும்போது அவர்களைவிட வளர்ச்சி குன்றியவர்களாயிருந்த பறையர், பாணர், துடியர், கடம்பர் என்ற நான்கு குடியினர்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு, ஒருவேளை அவர்களைக் கொன்று குவித்து விட்டுக் கூட நம் சேர, சோழ, பாண்டியர் இங்கு காலூன்றியிருக்கலாம். இன்று பறையர்கள் பெருமளவில் தமிழகத்தில் வாழ்கின்றனர். மிகுந்த சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களாக வாழுகின்றனர் .
பாணர்கள் ஆங்காங்கே சிலர் உள்ளனர்.
பிற சாதிகளில் இணைந்தும் உள்ளனர்.
மேலும் பாணர்கள் இன்னும் வடக்கே சென்று இன்றைய ஒரிசாவும் அன்றைய கலிங்கத்தில் குடியேறினர் .
அந்தப் பகுதி இன்று க்ந்தமலை என்று அழைக்கப் படுகிறது .இன்றும் அந்த இனத்தின் பெயர் இன்னும் பாணர்கள் தான் .
ஒரிசாவில் கிறிஸ்துவத்திற்கு எதிரான வன்முறை நடந்ததாக கூறப் படும் பகுதி இதுதான் .அவர்கள் பண்டைய சோழர்களுடன் நெருங்கிய உறவு வைதிருத்தனர் .ராஜராஜசோழர் கங்கை படையெடுப்புக்கு வழி காட்டுபவர்களாக இவர்கள் பணியாற்றி இருப்பதாக ,கலிங்க -தமிழ் சரித்திர ஆய்வு செய்து வரும் திரு .பாலசுப்ரமணியம் கூறுகிறார் .
துடியர் எனும் உடுக்கடிப்போர் கோடாங்கி என்ற பெயரில்
வாழ்கின்றனர் என்று தெரிகிறது. கடம்பர் சேர அரசர்களால் துரத்தப்பட்டு இன்று கோவாவில் வாழ்கின்றனர்.
கடம்பர்களை, உரோமக் கடல் வாணிகர்களுக்குப் போட்டியாக உள்ளனர் என்று சேரர்கள் துரத்தி அவர்கள் கோவா மக்களின் மூதாதைகளாயினர். பாணரும் துடியரும் தடந்தெரியாத அளவுக்குச் சிறுத்துவிட்டனர். .
வேளிர், மழவர், நாகர், கடம்பர், திரையர் என ஐந்து முக்கிய குடிகளாக பிரிக்கப் பட்டிருந்த தமிழகத்தின் பூர்வ குடிகள் காலப் போக்கில் அவர்கள் மேற்கொண்ட தொழில்கள் மற்றும் அவர்கள் குடியமர்ந்த இடங்களின் பூகோள அமைப்பின் அடிப்படையில் மேலும் சிறு சிறு உட்பிரிவுகளாக தங்களை வரையறுத்துக் கொண்டார்கள்.
மேலும் பூர்விக தமிழ் மன்னர்கள் வாழ்க்கை , வாரிசுகள் பற்றி விக்கிபீடியா கிழ்கண்ட தகவல்களை தருகிறது . ""சங்க காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியாகவிருந்த துளு நாட்டில் கடம்பரின் ஆட்சி கி. மு. 300 முதல் கி. பி. 1336 வரை 1636 ஆண்டுகள் நடைபெற்று வந்தன. இவர்கள் தலைமைத் தாயகமாக வனவாசி பன்னிராயிரமாகும் மேலும் கடற்கரையோரப் பகுதியாகிய கொண்கானம் தொளாயிரமும் மூலத்தாயகமாக கொண்கானக் கடற்கரையும் விளங்கியது. கடம்பர் ஆரம்ப காலங்களில் கடலாட்சி செய்த இனத்தவர்கள் என பதிற்றுப்பத்தில் குறிப்புகள் உள்ளன. கடம்பர்கள் கொள்ளையடிப்பதற்கு மூலதனமாக விளங்கிய தீவு வெள்ளைத் தீவாகும் (இலட்சத் தீவு). கடம்பர் நாடாக மங்கலாபுரம் (மங்களூர்) விளங்கியது. துளு நாட்டில் அமைந்திருந்த மங்களூர்த் துறைமுகம் இன்று தென் கன்னடப் பகுதியைச் சார்ந்த பிரதேசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பூழி மற்றும் மங்கலாபுரம் போன்ற பகுதிகள் சில காலம் இவர்களின் ஆட்சியின் கீழ் இருந்துவந்தது. கார்வார் முனை முதல் நேத்திராவதி ஆற்று முகத்துவாரம் (மங்களூர் - மங்கலாபுரம்) வரை அமையப்பெற்றிருந்த கடற்கரைக்கு கடற் கடம்பு எனப் பெயரிடப்பட்டிருந்து இக்கடற்கரைக்குப் பக்கத்தில் உள்ள தீவுகளில் கடம்பர்கள் ஆட்சி செலுத்தினர். மேற்கு நாடுகளிலிருந்து வரும் கப்பல்களைக் கொள்ளையடித்தும் வந்த காரணத்தால் தமிழ் இலக்கியங்களில் இவர்கள் கடற் கடம்பர் என குறிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் நன்னன் கி. மு. 300 - 260
கூந்தலம் வனவாசிக் கடம்பன் கி. மு. 260 - 232
திரிலோசனக் கடம்பன் கி. மு. 190 - 165
கடம்பின் பெருவாயில் கி. பி. 46 - 80
நார்முடிச் சேரல் காலத்துக் கடம்பன் கி. பி. 80 - 110 செங்குட்டுவன் காலத்துக் கடம்பன் கி. பி. ௧௧0
- 135
இளம்சேரல் இரும்பொறைக் காலத்துக் கடம்பன் கி. பி. 135 - 155
மயூரவர்மன் கி. பி. 350 - 375
சந்திரகாந்தன் கி. பி. 375 - 400
பக்ரதவர்மன் கி. பி. 400 - 425
ரகுகாகுத்தவர்மன் கி. பி. 425 - 450
முதலாம் சாந்திவர்மன் கிருஷ்ணன் கி. பி. 450 - 475
மாந்தத்ரிவர்மன் - மிருகேச வர்மன் கி. பி. 475 - 500
தேவவர்மன் - விஷ்ணு - சிவரதன் - பானு - இரவி வர்மன் கி. பி. 500 - 535 குமாரன் - சிம்மன் - அரிவர்மன் கி. பி. 535 - 570
மாந்தாதன் - கிருஷ்ணன் 2, அரசவர்மன் கி. பி. 570 - 585
கோவா கடம்பன் ஜயகேசின் 2 கி. பி. 1090 - 1120
மகாமண்டலேசுர கடம்பன் கி. பி. 1181 - 1258
கடைசிக் கடம்பன் (பெயர் தகவல் இல்லை) கி. பி. 1300 - 1336 ("http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது )

மேலும் கலிங்கத்துப பரணியில் கூடியிருந்த அரசர்கள் என கிழ்க் கண்ட மனனர்கர் வரிசையில் கடம்ப மன்னர் பெயரும் உள்ளது .329

தென்னவர் வில்லவர் கூபகர் சாவகர் சேதிபர் யாதவரேகன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே. 18330 கங்கர் கராளர் கவிந்தர் துமிந்தர் கடம்பர் துளும்பர்களேவங்க ரிலாடர் மராடர் விராடர் மயிந்தர் சயிந்தர்களே. 19331 சிங்களர் வங்களர் சேகுணர் சேவணர் செய்யவ ரையணரேகொங்கணர் கொங்கர் குலிங்கர் சவுந்தியர் குச்சரர் கச்சியரே. 20332 வத்தவர் மத்திரர் மாளுவர் மாகதர் மச்சர்மி லேச்சர்களேகுத்தர் குணத்தர் வடக்கர் துருக்கர் குருக்கர் வியத்தர்களே. 21333 எந்நக ரங்களு நாடு மெமக்கருள் செய்தனை யெம்மையிடச்சொன்னத னங்கள்கொ ணர்ந்தன மென்றடி சூடுக ரங்களொடே. ௨௨எனவே

கடம்பர்கள் வெறும் கடல் கொள்ளைக் காரர்களாக மட்டும் இருந்திருக்க வாய்ப்பு இல்லை அவர்கள் தமிழகத்தின் பூர்வீக மன்னர் பரம்பரையில் ஒரு இனமாகும் .தமிழ்ச் சமூக வரலாற்றையும், தொல்பொருள் தடயங்களுக்கு, தொல்லியல் அறிஞர்கள் கூறும் விளக்கங்களை இணைத்து
தொல்லியல் தடயங்கள் கூறும் செய்திகளை முமுமையாகக் கணக்கிலெடுத்துக்கொண்டு விறுப்பு, வெறுப்பற்ற நிலையில் தமிழ்ச் சமூக வரலாற்றை எழுத வேண்டியது ,முனைவர் மு இளங்கோவன் போன்ற அறிஞர்கள் செய்யவேண்டியது . இப்போது பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்ச் சமூக வரலாறு பலபுதிர்களை உள்ளடக்கியதாக உள்ளது. திரு கண்ணன் கூறியது போல் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களில் ஒரு பிரிவினர் 'கடம்பர்'. அவர்கள் இந்தியப்பழங்குடிகள் போல் இருப்பது தற்செயலானது இல்லை.என்ற தகவலும் ஆராயத்தக்கதுதான் . .நான் தமிழ் முறையாக படித்த முனைவர் அல்ல .ஆனால் தமிழ் மேல் கொண்ட பேரன்பால் ,நான் கற்ற சில சில செய்திகளை பகிர்த்து கொள்ளகிறேன் .இதை மேலும் உண்மை ஆராய்ந்து முனைவர் மு. இளங்கோ போன்றவர்கள் உண்மையை கூறி அதை புத்தகமாக வெளியிட்டால் வாங்கிப் படிக்கும் முதல் ஆள் நானாக இருப்பேன் .எனவே இதில் ஆக்க பூர்வமான தகவல்கள் இன்னும் இருந்தால் தெரிவித்தால் ,மேலும் நமது தமிழர் பற்றிய உண்மை வரலாறு வெளிச்சத்துக்கு வர உதவி ஆக இருக்கும் ..
அன்புடன்,
ஏ.சுகுமாரன்

எண்குணத்தான்,

மின் தமிழ் உரையாடலுக்கு, எண்குணத்தான் யாது என்ற மடலுக்கு எனது பதில்

திருவள்ளுவர் இறைவனை வாழ்த்தும் பத்துக் குறட்பாக்களிலே
ஆதிபகவன்,
வாலறிவன்,
மலர்மிசை ஏகினான்,
அறவாழி அந்தணன்,
எண்குணத்தான்,
வேண்டுதல் வேண்டாமையிலான்,
தனக்குவமையில்லாதான்,
பொறிவாயில் ஐந்தவித்தான்,
என இறைவன் என்னும் பொருளின் பண்புகளை போற்றிப் புகழ்கின்றார். இச்சிறப்புப் பெயர்களிலே ஆழ்ந்த கருத்துக்கள் இருக்கின்றன. பொருள் செறிவும் நுட்பமும் நிறைந்து காணப்படுகின்றன
மேலும் திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வரும் பற்றிய ஏழு குறள்களில் இறைவனின் 'அடி' என்னும் சொல் வருகிறது.இதில் அடி என்பது இறைவழியின் பாதை எனப் பொருள் கொள்ளலாம் .எனவே இறைவனின் பண்பை பற்றி வள்ளுவர் மிகுதியாக நமக்கு தெரிவிக்க முயற்சிக்கிறார் .
இதில் எண்குணத்தான் என்பது இறைவனின் எட்டு கல்யாண குணங்களை குறிப்பது .மனிதனின் குணங்கள் மூன்றுதான் ,அவை

சத்வ குணம்
ரஜோ குணம்
தாமோ குணம்

ஆனால் கடவுளின் குணங்கள் 8 என சிறப்பித்து கூறப் படுகிறது .அவையாவன
1. தன் வயத்தன் ஆதல்
2. தூய உடம்பினன் ஆதல்
3. இயற்கை உணர்வினன் ஆதல்
4. முற்றும் உணர்தல்
5. இயல்பாகவே பாசங்களில் நின்றும் நீங்குதல்
6. பேரருள் உடைமை
7. முடிவிலா ஆற்றலுடைமை
8. வரம்பிலின்பமுடைமை

இவைகளையே ராமபிரானின் பண்புகளாக குறிப்பிடப் படுகிறது .

மேலும் நமது இந்து மதத்தின் மிகப் பெரிய பலம் தேடுதலே .இறைவன் பற்றிய உண்மை வேறு வழிகளில் பிரகாசமாக வேருமார்கங்களில் ,வேறு குருக்கள் கூறியதில் , உள்ளதா என தேடும் வேட்க்கை என்றும் நம் அறியோருக்கு உண்டு .
அத்தனை சுதந்திரம் ,அறிவுவேட்க்கை கொண்டது நமது மார்க்கம் . இது அறிவு மயமானது .பக்தி யோகம் ,கர்மயோகம் ,ஞானயோகம் என யோகதில்லேபல விதங்கள் , நமக்கு உண்டு இதனால் நம்மிடம் இல்லாததால் பிறரிடம் போகிறோம் எனப் பொருள் இல்லை .
ஆனால் மற்றவரிடம் உள்ளதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம் யோகா மார்கத்தில் மிகுதியாக உண்டு .

நமது சித்தர் ராமதேவர் தான் , மெக்கா சென்று யாகோப் என பெயர் மாறி பல சித்தர் காவியம் படைத்தார் என்பார்கள் .
ராமதேவரின் ரசாயணம் என்ற நூல்
மிக ரகசிய ரசாயன விளக்கங்கள் கொண்டது .
மேலும் ஒரு சேரன் அரேபியா சென்று
இஸ்லாம் மதம் மாறி அங்கேயே சமாதி பெற்றதாகவும்
ஒரு வரலாறு கேள்விப்பட்டிருக்கிறேன்

உண்மையை உணரும் வரை தேடுதல் இருந்த்துகொண்டுதான் இருக்கும் .உணருதல் வேறு , அறிதல் வேறு .தன்வய்தினதால் வரை தேடுதல் தொடரும் .
அன்புடன் ,
ஏ. சுகுமாரன்

Friday, November 07, 2008

அடுத்த சாவுக்கு போகும்வரை !

இன்று ஒரு இழவு வீட்டிற்கு சென்றிந்தேன்
இழவு என்பது நிகழ்வு என்பது போல்
நிஜத்தில் நடக்கும் நிகழக்கால நடப்புகள் !
ஆலயத்தில் உதிப்பதுதான் இறப்பு வீட்டிலும் ,
என்றும் எதிர்காலத்திலும் , இறந்த காலத்திலும்
வாழும் மனிதன் இறப்பில்தான் நிஜத்தில் வாழ்கிறான்
தன் இயலாமையை தான் உணரும் தருணம் அது !
ஒவ்வொரு இறப்பிலுமே , ஒவ்வொரு வைராக்கியம்
பிரசவத்தில் உதிப்பது போல் , உதிரும் எண்ணக் கோர்வை !
ஆனாலும் வள்ளுவர் கூறும் உலகின் பெருமை போல்
நாளை நமக்கு புதிய நாள் ! நாமே பெரியவர் !
உலகம் பிறந்தது எனக்காக ! அனுபவி ராஜா அனுபவி !
அடுத்த சாவுக்கு போகும்வரை !
அன்புடன் ,
ஏ. சுகுமாரன்

Monday, November 03, 2008

சில பதில்கள்

//பூவுலகை முழுமையாக நம் ஆதிக்கத்தில் கொண்டு வந்தது என்பதும் ஒருperceptionதான். ஒரு பூகம்பம் போதாதா இல்லை என்று சொல்ல//

எந்த ஒரு பொருளைப்பற்றியும் பரிபூரணமாக நாம் தெரிந்துக்கொண்டல் ,அது நமது ஆளுமைக்குள் வந்துவிட்டது என கூறலாம் .அப்பொருளைப பற்றி அறிந்ததும் அது குறித்து அச்சமும் அகன்று விடுகிறது .அதனுடன் நமக்கு ஒரு நெருக்கம் ஏற்ப்பட்டுவிடுகிறது கார் ஓட்ட பழகிவிட்டால் எந்த காரையும் ஓட்ட பயம் நீங்கிவிடுகிறது .அப்படிதான் தற்க்கால அறிவியல் அறிஞர்கள் பூமியின் ரகசியங்கள் அனைத்தையும் அறிந்து விட்டார்கள் . அது நம் வசப் பட்டு விட்டது

.

//இதற்கான விடைகள் பொருளாதார இயலிலும் சமூகவியலிலும்தான் இருக்கின்றன.பக்தி இலக்கியத்திலும் ஆன்மீகத்திலும் இவற்றுக்கான பதில்களைத் தேடுவதுபயனளிக்காது. இலக்கியத்தில் புலம்பலும் ஆன்மீகத்தில் “சர்வம் விஷ்ணுமயம், சர்வம் பிரம்ம மயம்” என்னும் பரவசங்களுமே கிடைக்கும்.
ஆடம் ஸ்மித், கீன்ஸ், மார்க்ஸ் எனப் பலர் பேசி மூலதனத்துவம்,சமூகத்துவம், சமத்துவம் எனப் பிரித்துப் போட்டு நாடுகளும் இந்தக்கொள்கைகளைப் பரிசோதனை படுத்திப் பார்த்து, வென்று, தோற்று, இன்னும்போராடிக் கொண்டே உள்ளன. இப்போது மூலதனத்துவத்தின் இறங்கு முகம்.நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறது. ஆனால் சமூகத்துவம் செத்துப் புதைத்தஇடத்தில் காளான்கள் வளர்ந்து விட்டன. எதிர்காலத்தில் மூலதனத்துவம்தான்பிழைத்து எழுந்து, கொஞ்சம் சமூகத்துவ அரிதாரம் பூசிக் கொண்டுஆடவிருக்கிறது.//

மனிதன் தனது பரிணாம வளர்ச்சியில் முதுகு நிமிர்ந்து , கூட்டம் கூட்டமாக தனை சுற்றி இயற்க்கை படைத்திருத்ததை உண்டு வாழத்தான் ,.பின் தீயின் உபயோகத்தை கண்டன் , ருசியாக உணவு சமைத்து சாப்பிட ஆரமித்தான் . பின் அவனது குடும்பம் என பேதம் ஆரம்பித்தது .அவனுக்கு வீடு தேவைப்பட்டது .பின் கூட்டத்தில் இருந்து பிரியத்தொடங்கினான் . இவ்வாறு ஒரு வழியில் அங்கங்களின் முழுமையான வளர்ச்சி , முக அழகு முதலியவைகளில் இன்றுஇருக்கும் வடிவை அடைத்த மனிதன் . ஆனால் மறுபுறத்தில் அவன் மனம் சிறுகசிறுக மாசு அடைத்து வந்தது அவன் உண்ணும் உணவின் மூலம் கிடைத்த பதிவுகளும், அவன் வாழ்க்கை வாழ்த்த விதம் , சேர்த்த அறிவு , பட்ட கடன், செய்யத கர்மம் முதலியன மூலம் பெற்ற அனுபவங்கள் பதிவுகளாக படிப்படியாக அவன் மனதில் பதிய ஆரம்பித்து , பின் அவன் அந்த வாசனைகளின் படியே கண்டத்தையே கண்டு , தின்றதையே தின்பதில் இன்பம் காண ஆரம்பித்தான் . இந்த திகடச் சக்கர சூழலிலேயே வாழ்ந்து வருகிறான் .அவன் மனதும் மாசு படிந்து அதன் உச்சத்தில் உள்ளது .இந்த நிலையை மனிதன் எட்டவே பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன .இதற்குள் இந்த வாழ்க்கையில் மனித குலத்திற்கு ஏற்ப்பட்ட பல "ஏன் களுக்கு விடைக்கான பல சமயங்கள் தோன்றின . அந்ததந்த சமயத்தில் வந்ததால் அவைகள் சமயம் எனப்பட்டன போலும் .ஆனால் உலகம் முழுவது பல காலங்களில் தோன்றிய மதங்கள் சிறுக சிறுக நீர்த்து போக தொடங்கியது .மனிதன் எந்த மதம் தோன்றினாலும் மிகத் தந்திரமாக அதை ஏமாற்றி தன் விருப்பபடியே வாழும் வித்தையை கண்டுகொண்டான் .ஆனால் அவன் விருப்பம் என்பது அவனுடையது அல்ல , அது அவனின் வாசனைகளால் எண்ணங்களாகவும் , பின் செயல்களாகவும் மாறி அவனை ஆட்டி படைக்கிறது என நமது சித்தாந்தம் கூறுகிறது . பல மதங்களுக்கு பிறகு பல ism களும் உலகின் பல பகுதிகளில் , இந்த தீராத புதிருக்கு விடிவு காண தோன்றியது . அவைகளும் உலகம் முழுவதும் பரவி பின் அதன் தன்மையை இழந்தது .எதுவும் மனிதனை அவனின் கர்ம சக்ர ச்ழர்ச்சியில் இருந்து விடிவிக்க இயலவில்லை .மனிதன் மாறவேயில்லை ,எந்த உபதேசமும் அவனை மற்ற இயலவில்லை ஏன் எனில் மாற்றம் மனிதனின் வெளியில் உண்டாகி பயன் இல்லை , அது அவன் உள்ளில், மாற்றம் வரவேண்டும் . ஒவ்வொருவனுக்கும் வரவேண்டும் .அவன் அவன் வினையை அவன் தான் நுகர வேண்டும் . இதைதான் காட்டலாம் , ஊத்திவிடமுடியது என கூறுவார்கள் .

//பிறப்பில் சம அறிவு இல்லை; சம ஆரோக்கியம் இல்லை; சம திறன் இல்லை.அப்புறம் உணவும் செல்வமும் எப்படி சமமாக இருக்கும்?//

ஆம் , ஆனால் இந்த நிலைக்கு அவனே காரணம் ஆகிறான்
காரணம் திரும்பவும் இதற்க்கு கர்ம நியதியைதான் இழுக்கவேண்டும் . ஆனால் இதைவிட தெளிவான விளக்கம் வேறு எங்கும் கிடைகாது .இந்தக் கேள்வியை நாம் ஒப்புக்கொண்டால் இறைவனை பாரபட்சம் கொண்டவர் என ஏற்க்கவேண்டும் ,பின் அதற்க்கு என்ன காரணம் என ஆராய வேண்டும் .உண்மை என்னவோ இந்த வித்தியாசம் எல்லாம் மனிதனே தானே தனது செய்கையின் மூலம் தேடிக்கொள்கிறான்.