Wednesday, April 15, 2009

எனக்கு புரிந்தது இதுவே ! (2)




எனக்கு புரிந்தது இதுவே ! (2)----

ஒரு வழியாக விரோதியாண்டு புலர்த்துவிட்டது

குழப்பத்துடன் வாழ்த்தியும் முடித்தாகிவிட்டது

நானும் ஒரு விரோதி ஆண்டு ஆள் தான் ।

விரோதியில் பிறந்த நண்பன் நான்

விரோதிஎன்றல் பகைத்துக்கொள்। !

எதனுடன் பகைத்து கொள்வது ?


புத்தாண்டு முடிவு ஏதாவது வேண்டுமே !

எதையாவது பகைத்துக் கொள்வோமே ?
இனி சேர்ந்தாரை கொள்ளும் இந்த சினத்துடன் பகைமை

அது செல்லும் சினம் ஆனாலும் சரி

செல்லாவிடத்து சினம் ஆனாலும் சரி

அதனுடன் பகைமை கொள் !

ஆசையுடன் கிளர்த்ந்து வரும்

அழுக்காறுக்கு விரோதி நான் !

அறியாமை எனும் மூலமதில் முளைத்து வரும்

அச்சத்திற்கு விரோதி நான் ! அம்மட்டோ

அறியாமையினால் சாதி என்றும் ,மதமென்றும்

மூண்டெழும் பகைமைக்கும் விரோதி நான் !

வாழ்கைஎனும் யோகத்தை அறிய விடாமல்

ஒட்டியிருக்கும் அஞ்ஞான பேய்க்கு நான் விரோதி !
முனேற்ற பாதைலே சாதனை படைக்க

நாம் என்னவாய் இருக்கிறோமோ

அதற்கும் என்னவாக விரும்புகிறோமோ ?

இடையில் உள்ள தூரம் அதை குறைக்க

எண்ணும் போது வந்து வாய்க்கும்

மடிஎன்னும் சோம்பலுக்கு விரோதி நான் !


காதலில் மட்டுமா இரண்டு வகை ?

வெற்றியிலும் இரண்டு வகை உண்டு

சைவமுண்டு அசைவமுண்டு !

சைவ வெற்றி நிதானமானது ,பொறுமையானது !

செல்லும் வழியும் சிர்மை கொண்டது ।

விரைவில் கிடைக்கும் என்றாலும்

வேண்டவே வேண்டாம் அசைவ வெற்றி !



போகும் இடத்தை விட

போகும் பாதை தான் முக்கியம்

என்பது தானே காந்தியின் வாக்கு ।!

காசிக்கு போக எண்ணி சேற்றை பூசிக்கொண்டு

ஆயிரம் பசுவை கொன்ற பாவத்துடன்

புனித காசிக்கு போய் செய்வது தான் என்ன ।?

அந்த அசைவ வெற்றிக்கு விரோதி நான் !


தவறான காரியத்தை செய்ய

எந்த சரியான வழியும் இல்லை !

முடிவு சரியோ இல்லையோ !

போகும் பாதை சரியாக இருக்கவேண்டும் !
அகங்காரத்தையும் ,அகம்பாவத்தையும்

வளர்க்கும் முட்டாள் தனத்திற்கு விரோதி நான் !

அகம்பாவம எதிரியைத்தரும்

அகங்காரமோ அறிவை மறைக்கும் !!


பலரும் பகர்வர் கடைசி காலத்தில்

இன்ப்மாக இருக்க இப்போ கஷ்ட்டப் படுவதாக ?

கஷ்ட்டப் பட்டு பணம் சேர்த்தபின்

பலருக்கு கடைசி காலம் இருப்பதில்லை !


பலதும் படைத்த கடவுள்

பணத்தை மட்டும் தான் படைக்கவில்லை !

இறைவனின் இயற்க்கை நியதிகள்

எதுவும் பணத்தை மட்டும் கட்டுப்படுத்துவதில்லை !


செல்வமென்று சொன்ன பெரியவர்கள்

அதை எட்டுவகை என்று சொன்னார்கள்

அஷ்ட லக்ஷ்மியில் ஏழு இருந்தாலும்

அந்த தனலஷ்மி இல்லையெனில்

அவன் பெயர் வறிய்வந்தான்!


இத்தனை மூடத்தனதிர்க்கும விரோதி நான் !


பலர் சொல்வது போல் எல்லா மனிதனும் கடவுள் இல்லை !

ஆனாள் எல்லா மனிதருல்லேயும் கடவுள் இருக்கிறார் !

அவனைக் காண ,ஞானத்தைப் பெற

பரந்த கல்வியிலோ வாதப் பிரதி வாதத்திலோ இயலாது !

மிகப் பெரியக் காட்டை ,மரத்தின் உச்சியில்

இருந்து தீக்குச்சி வெளிச்சத்தில் காணமுடியாது !

யோகம் என்னும் தீபத்தில்

ஞான சூரியன் மட்டுமே ஆன்மீகக் காட்சியை காட்ட முடியும் ।!


குப்பையிலே கிடந்தாலும் மாணிக்கத்தின்

பெயர் மாணிக்கம் தான் ! அஞ்ஞான முடர் பலர்

அடையாளம் காணமாட்டார் !

அன்பு ஆனந்தம் ,அமைதி ,பொறுமை ,

இரக்கம் வாய்க்கப பெற்றோர்

எங்கிருந்தாலும் சான்றோர் !

கடவுளின் மைந்தர் தான் !


அன்புடன் ,ஏ சுகுமாரன்

No comments: