Saturday, April 18, 2009

எனக்கு புரிந்தது இதுவே ! (4)----


எனக்கு புரிந்தது இதுவே ! (4)----
மூச்சு !

பிறப்பின் முதல் மூச்சில் தான் பிறவி தொடங்குகிறது !

பிறப்பின் இறுதி மூச்சில் தான் இறப்பின் தொடக்கம் !
ஆனால் இந்தப்பிறப்பும் இறப்பும் நாளும் தொடர்கிறது !

நாளுக்கு நாம் விடும் சுவாசம் 21600 மூச்சு ,

அத்தனை மூச்சும் ஆவதுதான் நாள் ஒன்று !

ஒவ்வொரு நாளும் அவன் இடும் மூச்சில்

உள்ளே இழுப்பது பிறப்பு !

வெள்யே இடுவது இறப்பு !

இது தொடரும் வினை ,மூச்சடக்குவதும் ,

வெளியிடுவதும் முழுவதும் அவன்செயலாகும் !

மூச்சு விடுவது காற்றை

இழுத்து விடுவது மட்டும் தானா !

மூச்சினிலே தான் இருக்கு

வாழ்வின் ஸுச்சுமம் !மூச்சி விடுதல் தான்

வாழ்தலின் அடையாளம்
மூக்கின் இரு துளை வழியே

அரைமணிக்கொருமுறை

லயம் தப்பாமல் மாறிடும் மூச்சு !


வலது புற மூச்சுக்கு சூரியகலை

இடதுபுற மூச்சுக்கு சந்திர கலை !
சூரியகலையும் சந்திரகலையும் !

அர்த்தர்மறிந்து பிரயோகிக்கத்தேரிந்தால்

வாழ்வின் அர்த்தத்தையே மாற்றிவிடலாம் !


வாழவின் போக்கு நமது மூச்சிலே தான் !
தாறுமாறான மூச்சினால் தான் பூர்வஜன்ம

வினைகளும் ,தொடர்ந்து வரும் இன்ப துன்பங்கள் ,

மனத் தடுமாற்றம் குழப்பங்கள் ,வறுமை முதலிய

அவலங்கள் தொடர்ந்து வந்து நம்மை தாக்குகின்றன !

எதைஎதையோ பிறந்ததும் சொல்லித்தரும்

நமக்கு மூச்சு விடுதல் பற்றி மட்டும்

ஏனோ யாரும் சிரத்தை எடுப்பதில்லை !
மூச்சை அறிந்தவன் தான் யோகி !


இயற்கையை மூச்சிலே நட்புகொள்ளலாம் !

குளிர் அடிக்குதா ? வலதுபக்கம் மட்டும் மூச்சு ,

அதுவே சூரிய கலை ! சூடாகிடும் ஐந்தே நிமிடத்தில் !
தாக்கிடும் அந்த வெப்பமா ? பிடித்திடு இடது பக்க மூச்சி

குளிர்தே விடும் உடம்புதான் ஐந்து நிமிடத்தில் !


ஆண் மகவு வேணுமா ?சூரியகலை

நடைபெறும் போது உறவு கொள்ள !
ஆசையுடன் பெண் மகவு வேண்டிடின்

சந்திரக் கலை நடைபெறும் காலம் உறவுக்கு உகந்த காலம் !

ஆயிடினும் கூடுதலுடன் ஐம்பூத ஆற்றல் இனைய வேண்டும் !
இத்தகு மூச்சிதனை வயப்படுத்தும் பயிற்ச்சிதான் பிராணாயாமம் ! அது மூச்சுடன் பிராணனையும் வயப் படுத்தும் வழியாகும் ।!பிராணனை உணர்ந்தால் எதுவும் சாத்தியம் !


அளவில்லாது விடும் மூச்சிக்காற்றை அளவுடன் கணக்கிட்டு ,காலஅளவுடன் சுவாசிப்பதே பிராணாயாமம் ! குறைவாகவும் மெதுவாகவும் மூச்சு , ஆயுள் பெருக்கம் !
வாழும் இந்த பிரபஞ்சம் தோன்றுவதும் இந்த ஆகாயத்திலே ,ஒடுங்குவதும்இந்தஆகாயத்திலே!இந்த ஆகாயமோ பிராணசக்தி ! எங்கும் வியாபித்துள்ள இந்த சக்தியே பிரபஞ்சத்தின் இயக்கமாகும் !
இன்னும் பல இருக்குது மூச்சினிலே !அது இதன் அடுத்த பகுதியிலே !
அன்புடன் ,ஏ சுகுமாரன்

No comments: