Thursday, April 16, 2009

எனக்கு புரிந்தது இதுவே ! (3)----


எனக்கு புரிந்தது இதுவே ! (3)----
பிறப்பு
நம் இச்சையால் நாம் பிறக்கவில்லை

இறப்பும் நம் வசம் இல்லை

பற்ப்பலபிறவியின் கர்ம வினைகளின் தொகுதியும்

சத்வம் ரஜோ தாமோ எனும் முக்குண நிலையால்

உருவான வாசனையாலும்

வந்து முளைத்தது இப்பிறவி !

நமது தாய் தந்தையை நாம் தேர்ந்தெடுக்வில்லை !

அவர்களும் நம்மை வேண்டி இருக்கவில்லை !

பின் எதுதான் பிணைத்தது !பிணைப்போ தொடர்வது

இன்று நேற்றல்ல கொடுக்கல்வாங்கல்

தீரும் வரை தொடரும் பந்தம் !ஆனால்

பாத்திரங்கள் தான் மாறுகின்றன !

நம் தாய் தந்தை நமக்கு தரவேண்டிய

தீர்க்க வேண்டிய கடனை சரிசெய்ய

நாம் அவர்களுக்கு பிள்ளையைபிறக்கிறோம்

அந்த கொடுக்கல் வாங்கல் தீரும் வரை

இருவர் தொடர்பும் தொடர்திடும்

பிறவி பிறவியாக அறுபடாமல் !

நமது சகோதர சகோதரிகளும் நண்பர்களும்

தொடர்பு கொள்ளும் அத்தனை

அத்தனை பேரும்ஒன்றும் தற்செயல் இல்லை !

நம் ஆயிரம் ஆயிரம் பிறவியிலே அறுபடாமல்

தொடரும் தொடர்புகள்தான் ! தீரும் வரை

கடன் பெற்ற ஊரும் நபர்களும்

தட்டாமல் வந்தே தீரும் ।!


இறைவனின் மாயா சக்தி இயற்க்கை

மாயை என்றால் இல்லாமல் இருப்பது அல்ல

இருப்பதுவே இல்லாமல் இருப்பது !

இயற்கையின் பிரதிநிதி சந்திரன்

பரமனின் பிரதிநிதி சூரியன் !

பிறப்பின் ஆதாரம் பரவிந்து ,நாதம்

உடல் எடுக்க வேண்டிய உயிர்

சூரிய சந்திர கதிர்கள் மூலம் பரவி

உண்ணும் உணவின் மூலம்

அவன் தாயின் உடலில் பரவி ,

தந்தையின் பிராணனின் உந்துதலுக்கு காத்திருக்கும் !

பிறப்பின் ஆயுள் புகும் பிராணனின்

அளவைப்பொறுத்தே அமைகிறது !

"உறவின்" போதே வாழும் காலம்

ஆரோக்கியம் ,வாழும் வழி நிச்சயம்

ஆகிவிடுகிறது ।! ஓம்கார நாதம்

பிறவிக்கு அடிப்படை நாதம் !


செய்த அந்த நல்வினை தீவினை

அவன் பெறும் பிறவியில்

அவனது தாய் தந்தை அமைவதும்

உடலின் வண்ணமும் ,குணமும்

சுக துக்கமும் அமைவதாகும் !

கழிந்த பிறவியில் வறியவனாக இருந்தும்

வாழ்வில் சத்தியத்துடன் ,சகிப்புடன்

தான் உண்ண வழி இல்லாமல் இருந்தும்

தன் ஸ்தரமத்தை சரிவர்செய்தவன் ,

பிறர் பசி தீர்த்தவன் பெறுவது ஒரு புதிய பிறவி
அதில் உத்தம தாய் தந்தை

ஆரோக்கிய அமைதியுடன்

அவன் சஞ்சித கர்மம் தீர்க்க நிமதியான

ஒரு சுழல் !மாறாக உத்தம சுழல் அமைந்தும்

அதர்மமாக அடக்கமில்லா லோபியாக வழ்தவன்

அடைவதோ தரித்திர குடும்பம் தீராத நோய் பிறர் பழிப்பு !

ஆயினும் அவன் பிறவியின் நோக்கம்

மீதம் இருக்கும் சஞ்சிதம் தான் !

அதாவது ஒருவன் பயணம் மூன்றாம் வகுப்பு

நெருக்கடி துன்ப ரயில் பயணம் !மற்றது

குளிர்சாதன இன்ப முதல் வகுப்பு ரயில் பயணம் !

ஆனால் போவது என்னவோ ஒரே ஊருக்குத்தான் !

பிறப்பின் ஆரம்பம் அவன் விடும் முதல் மூச்ச்தான்
அது அடுத்து வரும் பகுதியிலே !
அன்புடன் ,

ஏ சுகுமாரன்

No comments: