Sunday, May 25, 2008

வாசித்தும் அதில் என்னை பாதித்தும் ஆகும் மே 25 காலை 7.40 மணி

இந்த செய்திகள் இன்று வாசித்தும் அதில் என்னை பாதித்தும் ஆகும் .இவை தினமணி, தினகரன் தமிழ் பதிப்பில் இன்று வந்தவையில் சில .இந்த தினசரி நாளிதழ்களுக்கு நன்றி .இந்த குறிப்புகள் யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல


ராஜஸ்தானில் கலவரம் துப்பாக்கி சூட்டில் 10 பேர்
2வது நாள் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி ராஜஸ்தானில் கலவரம் நீடிப்பு சடலங்களுடன் ரயில் மறியல் மாநிலம் முழுவதும் பதற்றம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி குஜ்ஜார் இனத்தினர், ராஜஸ்தானில் நேற்று இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தினர்.
விவசாயிகள் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் பட்டியல் ஜூன் 30ல் வங்கியின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். சிதம்பரம் தகவல்
விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் ஜூன் 30ல் வங்கிகளில் ஒட்டப்படும் என மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் பேசினார்.சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூரில் நடந்த வங்கி கிளை ஒன்றின் தொடக்கவிழாவில் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் பேசியதாவது:இந்திய அளவில் விவசாய கடன் தள்ளுபடி ரூ.60,000 கோடியிலிருந்து ரூ.71,680 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 3 லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகளுக்கு முழு தொகை கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்தியாவில் 596 மாவட்டங்கள் விவசாய மாவட்டங்களாகவும், அதில் 237 மாவட்டங்கள் வானம்பார்த்த பூமியாகவும் உள்ளன. தமிழகத்தில் சிவகங்கை உட்பட 17 மாவட்டங்கள் வானம்பார்த்த பூமியாக உள்ளன. இம்மாவட்டங்களில் விவசாய கடன் பெற்றவர்களில் 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் கடன் தொகையில் 25 சதவீத தொகை அல்லது ரூ.20,000 இதில் எது அதிகமோ அது தள்ளுபடி செய்யப்படும்.விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஜூன் 30ல் வங்கியின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கர்நாடக தேர்தல் முடிவுகள் இன்று 12 மணிக்கு முடிவு தெரியும்
கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10,16,22 தேதிகளில் மூன்று கட்டமாக நடைபெற்றது. மொத்தம் 224 தொகுதிகள். 4 கோடியே 77 ஆயிரத்து 666 வாக்காளர்கள். அதில் 2 கோடியே 61 லட்சம் பேர்தான் வாக்களித்தனர்.காங்கிரஸ் 222 வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. மற்ற கட்சிகள்: பாரதிய ஜனதா 224, மத சார்பற்ற ஜனதா தளம் 219, பகுஜன் சமாஜ் 217, சமாஜ்வாடி 121, ஐக்கிய ஜனதா தளம் 72, லோக் ஜனசக்தி 36, மார்க்சிஸ்ட் 10, இந்திய கம்யூனிஸ்ட் 9, அ.தி.மு.க. 7, பிற கட்சிகள் 162, சுயேட்சைகள் 943. மொத்தம் 2,242 வேட்பாளர்கள். 48 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 10 மணிக்குள் முன்னணி தெரியும். 12 மணிக்கு மேல் முடிவுகள் வர துவங்கும். பிற்பகல் 3 மணிக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர்களின் வெற்றி - தோல்வியை மையமாக வைத்து பெட்டிங் நடப்பதாக கிடைத்துள்ள தகவலை தொடர்ந்து போலீசார் கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.நேற்று நள்ளிரவு முதல் இன்று நள்ளிரவு 12 மணிவரை மது கடைகள் மூடப்பட்டுள்ளன. உலகிலேயே விலை அதிகம் ஆன வீடு வாங்குகிறார் இந்தியர் மிட்டல் லண்டனில் ரூ.982.8 கோடிக்கு வாங்குகிறார்
உலகின் நம்பர் 1 உருக்கு ஆலை அதிபரும் வெளிநாட்டு வாழ் இந்தியருமான லட்சுமி மிட்டல், லண்டனில் ரூ.982.8 கோடிக்கு வீடு வாங்குகிறார். அவரது மகன் ஆதித்ய மிட்டலுக்காக அந்த வீடு வாங்குவதாக தெரிகிறது.மேற்கு லண்டனில் கென்சிங்டன் பேலஸ் கார்டன் என்பது மிகவும் பிரபலமானது. மெகா கோடீஸ்வரர்கள் இருக்கும் பகுதி இது. மறைந்த இளவரசி டயானா இப்பகுதியில்தான் வசித்து வந்தார். இப்பகுதியில் ஏற்கெனவே 2004ம் ஆண்டில் ஒரு வீடு வாங்கியுள்ளார் லட்சுமி மிட்டல். இப்போது இன்னொரு வீடு வாங்க திட்டமிட்டு உள்ளார். இதற்காக விலை பேசி முடித்து விட்டார். ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலை உள்ளது. இந்த வீடு நோம் கோட்ஸ்மேன் (47) என்பவருக்கு சொந்தமானது. இஸ்ரேலிய அமெரிக்கரான இவரும் பிரபல வர்த்தகர்.இ¢ந்த வீடு நான்கு மாடிகள் கொண்டது. 5 ஆடம்பரமான சொகுது பெட்ரூம்கள் உள்ளன. வேலைக்காரர்கள் தங்க தனி வீடுகள் உள்ளன. பழைய பாணியில் கட்டப்பட்டு உள்ளது. மிக அற்புதமான ஓவியங்களும் இதை அலங்கரிக்கின்றன.இம்மாதிரியான வீடு விற்பனைக்கு வருவது மிக அரிதாக உள்ளது. அதனால்தான் இதற்கு விலையும் அதிகமாக உள்ளது என்கிறார் நிபுணர் ஒருவர். இந்த வீட்டை வாங்கி, தனது மகனும் ஆர்சிலர் மிட்டல் தலைமை நிதி அதிகாரியுமான ஆதித்ய மிட்டலை குடியமர்த்த மிட்டல் திட்டமிட்டு உள்ளார்.

No comments: