Thursday, June 05, 2008

வாசித்தும் அதில் என்னை பாதித்தும் ஆகும் ஜூன் 6காலை 7.15 மணி

வாசித்தும் அதில் என்னை பாதித்தும் ஆகும் ஜூன் 6காலை 7.15 மணி
இந்த செய்திகள் இன்று வாசித்தும் அதில் என்னை பாதித்தும் ஆகும் .இவை தினமணி, தினகரன் தமிழ் பதிப்பில் இன்று வந்தவையில் சில .இந்த தினசரி நாளிதழ்களுக்கு நன்றி .இந்த குறிப்புகள் யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல

அகவையோ 85 ஆனால் இளமை பேச்சிலும் மூச்சிலும் 50 ஆண்டு கால சட்டமன்ற அனுபவம் பொதுவாழ்வில் 70 ஆண்டு, வாழ்வாங்கு வாழும் முதல்வரை புதுவை முதல்வர் சந்தித்து ஆசி பெற்றார்
தமிழக முதல்வர் கருணாநிதியின் 85வது பிறந்த நாளையட்டி புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் ஜானகிராமன் தலைமையில் திமுகவினர் நேற்று சென்னை சென்று அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். இதில் அவைத்தலைவர் சுப்புராயன், துணை அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவக்குமார் எம்.எல்.ஏ., ராஜாராமன் எம்.எல்.ஏ, பொருளாளர் கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., கேசவன், சி.பி.திருநாவுக்கரசு, சோமசுந்தரம், இளைஞரணி அமைப்பா ளர் சிவா எம்.எல்.ஏ, தொண்டரணி அமைப்பா ளர் நந்தா சரவணன் எம்.எல்.ஏ., கொம்யூன் பஞ்சாயத்து தலைவர்கள் நடராஜன், சுகுமார், யூ.சி.ஆறுமுகம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், பழனி, தைரியநாதன், கோபால் மற்றும் அணி செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் சமையல் கேஸ் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை --பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ரா
எங்களுக்கும் வேறு வழியில்லை எங்கள் கவலை ஒரு ஆண்டில் எப்படி மாற்று கட்சி மாறுவது -- ஸ்ரீமன் பொதுஜனம்

பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 5-ம், டீசல் லிட்டருக்கு ரூ. 3-ம் சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ. 50-ம் உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் இனி ரூ. 338
விலை உயர்வோடு பெட்ரோலிய கச்சா எண்ணெய் மீதான சுங்கவரி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்கவரி 7.5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ. 22,660 கோடி வரி குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மீதான உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் டீசல் மீதான உற்பத்தி வரியில் எந்த மாற்றமும் இல்லை.
விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று விலை உயர்வை வெளியிட்டு பேட்டியளித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ரா கூறினார்.
இந்த விலை உயர்வை அரசுத் தரப்பில் நியாயப்படுத்தினாலும் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும் இடதுசாரி கட்சிகளும் கடுமையாக கண்டித்துள்ளன.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடந்த 4 மாதத்தில் இரு மடங்கு உயர்ந்துவிட்டது. அதேநேரத்தில் அரசுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களோ தொடர்ந்து மானிய விலையில் பெட்ரோல், டீசலை விற்று வருகின்றன. இதனால் ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விலையை உயர்த்தாவிட்டால் இந்த நிறுவனங்கள் திவாலாகி விடும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
இதனால் பெட்ரோலிய பொருள்களின் விலையை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நிதியமைச்சர் ப. சிதம்பரம், பெட்ரோலிய அமைச்சர் முரளி தேவ்ரா, திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோருடன் பிரதமர் பல்வேறு கட்டங்களில் ஆலோசனை நடத்தினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தியுடனும் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
பெட்ரோலிய நிறுவனங்களின் நஷ்டத்தைக் குறைக்க விலையை உயர்த்துவதோடு, கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மீதான சுங்கவரி மற்றும் உற்பத்தி வரியைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் ஓரளவு நஷ்டத்தைக் குறைக்க முடியும் என்றும் கூறப்பட்டது.
அதன்படி தற்போது விலை உயர்த்தப்பட்டு வரிகளும் குறைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்தியுள்ளதை காங்கிரஸ் கட்சி நியாயப்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் தான் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று அக் கட்சி கூறியுள்ளது.
இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனீஸ் திவாரி செய்தியாளர்களிடம் கூறியது:
கனத்த இதயத்துடன் தான், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெட்ரோலியப் பொருள்களின் விலைகளை உயர்த்தும் முடிவை எடுத்துள்ளது என்றார்.
பொருளாதார விஷயங்களில் மத்திய அரசு தீவிரவாதி போல் செயல்படுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது குறித்து கருத்துக் கூறிய அவர், "அது அரசியல் பின்னணி உடைய பொறுப்பற்ற அறிக்கை. நாங்கள் அதை கடுமையாக கண்டிக்கிறோம். பாஜக ஆட்சியின் போது 21 முறை பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டன' என்றார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுடன் விலை உயர்த்தப்பட்டதா என்ற கேள்வி, கருத்துக் கூற மறுத்துவிட்டார் மனீஸ்.பெட்ரோல், டீசல் விலை உயர்வு அநியாயமானது சாதாரண மக்களை கடுமையாகப் பாதிக்கும் என்று இடதுசாரி கட்சித் தலைவர்கள் கூட்டு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிக்கையில் மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பரதன், பிஸ்வாஸ், டி.ஜே. சந்திரசூடன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பணவீக்கத்தை மேலும் அதிகப்படுத்தும். சாமானிய மக்கள் ஏற்கெனவே கடும் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வு அவர்களை மேலும் துயரப்படுத்தும் என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் வியாழக்கிழமை முதல் ஒரு வார காலம் போராட்டம் நடத்தப்படும். கடையடைப்பு, வேலை நிறுத்தம், சாலை மறியல், ரயில் மறியல், ஆர்ப்பாட்டம் என பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் தேவ கவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோரை கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று சந்தித்து பேசினார்.
ஹோக்நேகள் திட்டத்தை தடை செய்வது குறித்து பேசியிருக்க மாட்டார்கள் என நம்புவோம் . தமிழர் பெருந்தன்மை ஆனவர்கள் !!முன்னாள் பிரதமரும், ம.ஜ.த தேசிய தலைவருமான எச்.டி.தேவ கவுடாவை, பெங்களூர் பத்மநாபநகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று எடியூரப்பா சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது, ஹாசன் மாவட்டம் அரகலகோடுவில் லாரி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு உடனே நிவாரணம் வழங்க உத்தரவிட்டதற்காக, எடியூரப்பாவுக்கு கவுடா நன்றி தெரிவித்தார். “அதே போல், இந்நாள் வரை யாரும் விவசாயிகளின் பெயரில் பதவி பிரமாணம் செய்ததில்லை.
முதன்முறையாக விவசாயிகளின் பெயரில் நீங்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இது விவசாயிகளின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பை காட்டுகிறது.
விவசாயிகளின் நலனுக்காக நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்துக்கும், நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம்Ó என்று தேவ கவுடா வாழ்த்தியுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடியூரப்பா கூறுகையில், முன்னாள் பிரதமரின் வாழ்த்தால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். கர்நாடக மேம்பாடு ஒன்றே எனது குறிக்கோள்.
மேம்பாட்டுக்காக நான், கட்சி பாகுபாடு பார்க்காமல் உழைப்பேன் என்பதை உறுதியுடன் கூறுகிறேன் என்றார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் குமாரசாமியை அவரது மைத்துனர் இல்லத்தில் முதல்வர் எடியூரப்பா சந்தித்து பேசினார்.

No comments: