Friday, June 20, 2008

பண வீக்கம் 13 ஆண்டுகளில் இல்லாத உச்சம் - அறுவை சிகிச்சைக்கு நேரம் வந்துவிட்டது

பண வீக்கம் 13 ஆண்டுகளில் இல்லாத உச்சம் - அறுவை சிகிச்சைக்கு நேரம் வந்துவிட்டது
பண வீக்கம் இன்று 11.05 % , மூன்று இலக்க எண்ணைத் தொட்டு 13 ஆண்டுகால சாதனையை அடைந்தது. இந்த பணவீக்கம் 11.05 % சதவீதத்தை தொட்டதன் மூலம் நமது பொருளாதார மேதையான பிரதமரும், பொருளாதார அறிவு ஜீவி நிதி அமைச்சரும், ஆக்ஸ்போர்டு மற்றும் ஹார்வோர்டு கல்லூரி படித்த மேதைகள் இயலாத ஒன்றை மீண்டும் முடியுமாறு செய்துவிட்டனர். முன்பு நரசிம்மராவ் பிரதமராகவும் மன்மோகன் சிங் நிதி அமைச்சராகவும் இருந்த 1996ம் ஆண்டு பணவீக்கம் 10மூ கடந்தது. தற்போது மீண்டும் மன்மோகன் சிங் பிரதமராய் இருக்கையில் அது 11.05% அடைந்து சாதனை படைத்துள்ளது.
பணவீக்கம், வலியை ஏழைகளுக்குத்தான் தரப்போகிறத. இந்தியாவின் வளர்ந்து வரும் புதிய பணக்காரர்களை அது எந்த வகையிலும் பாதிக்கப்போவதில்லை. அவர்கள் அதை தங்கள் வாழ்வு முறையில் உணரக் கூடப் போவதில்லை. மாறாக வளர்ந்து வரும் விலையேற்றத்தால் அவர்கள் மேலும் மிகப் பெரிய பணக்காரர்கள் ஆகப் போகிறார்கள்.
எண்ணற்ற தியாக தீபங்களால், தங்களது இன்னுயிரையும், இவ்வுலக வாழ்க்கையையும் சுதந்திர வேள்வியிலே ஆகுதியாக இட்டு வராது போன்ற மாமணியாய் நமக்கு கிடைத்த இனிய இந்த சுதந்திரத்தை நமக்கு பெற்றுத் தந்த காங்கிரஸ் என்கின்ற நூறாண்டு பழைiமான ஒரு இயக்கம், மதவாத கட்சிகளுக்கிடையேயும், தன்னலத்திற்காக அரசியல் நடத்தும் அடிப்படை இல்லாத சொந்த முதலில் ஆரமிக்கப்பட்ட புதிய அரசியல் கார்ப்பரேட் கட்சிகளுக்கும் இடையே தோற்று, இருக்குமிடம் தெரியாமல் போய்விடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது.
எத்தனை எத்தனை உத்தமர்கள், தியாக சீலர்கள் தலைமையிலே வளர்ந்த தொன்மையான கட்சி, மகாத்மாவால் வழி நடத்தப்பட்டக் கட்சி தற்போதைய விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவரத் தெரியாமல் தன்னையே இழக்கும் அபாயம் மிரட்டுகிறது. இந்த நிலையில் அணு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, கம்ய10 கட்சியால் ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டு காங்கிரஸ் தேர்தலை சந்திக்குமானால், பிஜேபிக்கு பழம் நழுவி பாலில் அல்ல வாயிலேயே விழும் சந்தர்ப்பங்கள் அதிகம்.
எனவே இனியாவது. நமது பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், நிதி அமைச்சர் சிதம்பரம், திட்டக்குழு தலைவர் அலுவாவியா போன்ற பொருளாதார மேதைகள் தங்கள் அறிவை ஒரு புறம் ஓரமாக வைத்துவிட்டு உணர்ச்சி ப10ர்வமாக இந்தியாவின் 80 %சதவீத ரூபாய் 3000ஃ- மாத வருமானத்திற்கு கீழ் வாழும் பெரும்பான்மை மக்களைப்பற்றி சிந்தித்து இந்த விலைவாசி ஏற்றத்தை குறைப்பதற்கு ஆக்கப10ர்வமான, நடைமுறை சாத்தியமான செயல்களை உடனே செய்ய வேண்டும்.
வைத்தியன் காய்கறி வாங்கப் போனால் எதுவுமே வாங்க முடியாது என்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு எல்லாம் தெரிந்ததால் எந்த காய்கறிகளும் வாங்க எந்த முடிவும் எடுக்க முடியாது. எனவே இப்போது அறிவுக்கு மட்டும் வேலை இல்லை. மக்களின் உணர்வை புரிந்து கொண்டு அவர்கள் துயர் துடைக்க உடனே ஆவன செய்ய வேண்டும்.
இனியும் விலைவாசி ஏற்றத்திற்கு பெட்ரோல் விலையையோ, வேறு காரணங்களையோ கூறிக் கொண்டு இருக்கக்கூடாது. காரணங்கள் யாருக்கும் சோறு போடாது.
தற்போது இந்தியாவின் சாதாரண மக்கள் சம்பாதிக்கும் பணத்தில் 70% சதவிகிதம் தனது சாப்பாட்டிற்கும் 30% சதவிகிதம் வீட்டு வாடகைக்கும் செலவாகிறது. வுளர்ந்த நாடுகளில் இந்த நிலை இல்லை. நானே பல ஆண்டுகள் வெளிநாடுகளில் வாழ்ந்திருக்கிறேன். அங்கெல்லாம் வருமானத்தில் 10% இருந்தால் சிக்கனமான எளிமையான சாப்பாட்டிற்கு போதும்.
மேலும் மேலும் பெட்ரோல் இறக்குமதியை ஊக்குவித்து, நமது பணத்தை எல்லாம் அதற்கே அள்ளிக் கொடுத்து விட்டு, மற்றொரு புறம் அன்னிய நாட்டுக் கம்பெனிகள் பெட்ரோல் உபயொகம் மேலும் பெருகச் செய்யும் புதிய புதிய கார்களை உற்பத்தி செய்து, 20மூ சதவிகித மேல்தட்டு மக்களுக்காக அவர்களின்; சொகுசுப் பயணங்களுக்காக வழவழ சாலைகளையும் நாம் போட வேண்டியதுதான். ஆனால் நாட்டின் வளர்ச்சி என்பது எழுகின்ற உயரமான கட்டிடங்களிலோ அல்லது அகலமான அழகிய சாலைகளிலோ உண்மையிலேயே இல்லை.
எல்லோரும் எல்லாமும் பெற்று சாமான்யனும் தனது மனம் வாடாமல் மெய் வருந்தாமல் உண்ண உணவும், இருக்க இடமும், தனது விருப்பமான கல்வியை பயிலக் கூடிய வாய்ப்பும் பெற வேண்டும். அதுவே உண்மையான வளர்ச்சி. ஆனால் நமது அரசியல் கட்சிகளுக்கு இலவசங்களை வாங்கிக் கொண்டு வாக்குச்சீட்டை; ஆதரவாய் போடும் ஏக்கப் பெருமூச்சு விடும் ஏழைகள் தானே
வேண்டும்
நமது பொருளாதார புள்ளி விவரப்படி நமது வளர்ச்சி விகிதம் 7% தான். ஆனால் பணவீக்கம் 11.05% இந்த நிலையை காங்கிரஸ் கட்சி ஒரு எச்சரிக்கையாக எண்ணி விரைவிலே விலைவாசி உயர்வுக்கு ஆற்ற வேண்டிய பங்கை ஆற்றி விட்டு, பின் அணு ஒப்பந்தம் கையெழுத்து இடுவது தான் இப்போதைக்கு உத்தமம். இந்த நிலைக்கு பிரதமரை மட்டுமோ, நிதி அமைச்சரை மட்டுமோ பலிகிடா ஆக்காமல் முழுமையான காங்கிரஸ் கட்சியும் மிகத் தீவிரமான கொள்கை முடிவுகள் எடுக்க வேண்டிய தருணம் இது.

No comments: