Saturday, August 02, 2008

செய்திகள் மீண்டும் ஆக் மாதம் 2 ,

கெüதமி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ ! நள்ளிரவில் ஏற்ப்பட்ட துயரம் ! 32 பேர் கருகினர் ஏ.சுகுமாரன்

ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் செகந்திராபாத்- காகிநாடா கெüதமி எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென தீப்பிடித்தது. 32 பயணிகள் கருகி உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். ஹைதராபாதிலிருந்து 250 கிமீ தொலைவில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.15 மணிக்கு இந்த துயர சம்பவம் நடந்தது. தாளபுசாலப்பள்ளி, மெகபூபாபாத் ரயில்நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து ஏற்பட்டது சம்பவ இடத்துக்கு மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி சென்று பார்வையிட்டார். ரயிலில் ஏற்பட்ட மின்சார கோளாறு விபத்துக்கு காரணமாக அமைந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு கர்ப்பிணி, ஊனமுற்ற 3 பேர், 2 குழந்தைகள் ஆகியோர் உயிரிழந்தவர்களில் அடங்குவர். உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் அனைவரும், வாரங்கல் பகுதி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை இரவு ஒன்பதே கால் மணிக்கு இந்த ரயில் செகந்திராபாத் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. கேசமுத்திரம் ரயில்நிலையத்தை விட்டு தாண்டியதுமே மின் கோளாறு காரணமாக எஸ்-9 பெட்டியில் பற்றிய தீ மளமளவென மற்ற பெட்டிகளுக்கும் பரவ ஆரம்பித்தது.
மொத்தம் 5 பெட்டிகள் எரிந்து நாசம் அடைந்தன. மோசமாக எரிந்தது எஸ்-10 பெட்டியாகும். இந்த பெட்டியில் 72 பேர் பயணம் செய்தனர். அந்த பெட்டியிலிருந்து 13 உடல்கள் மீட்கப்பட்டன.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் கருணைத் தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

அரசின் செயல் முடக்கம் குறித்து புதுவை தி.மு.க.வினர் ஆலோசனை ! தி.மு.க. தலைமையிடம் முறையிட முடிவு ! ஏ.சுகுமாரன்

புதுவை மாநில தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் செஞ்சிசாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில அமைப்பாளர் ஜானகிராமன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் நாஜிம், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.சிவக்குமார், சிவா, ராஜாராமன், டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன், நந்தா.சரவணன், அவைத்தலைவர் சுப்புராயன், துணை அவைத்தலைவர் சீத்தாவேதநாயகம், பொருளாளர் கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சி.பி.திருநாவுக்கரசு, சோமசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது உள்ள நிர்வாக பிரச்சினைகள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. அரசின் செயல் முடக்கம் குறித்து தி.மு.க. தலைமையிடம் முறையிட முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

ராமேஸ்வரத்தில் ஒரு லட்சம் பேர் ! ஆடி அமாவாசை விழா --ஏ.சுகுமாரன்

ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசையையட்டி ஏராளமான பக்தர்கள் அதிகாலை 4 மணிக்கே குவிந்தனர். அவர்கள் முன்னோர்களுக்கு பிதுர்கர்மா பூஜை நடத்தினர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நேற்று ஒரு லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். தர்ப்பணம், சங்கல்பம் செய்து முன்னோர்களை வழிபட்டனர். சூரிய கிரகணத்தையட்டி பகல் 2 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு மாலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டது. பிறகு மாலை 6.30 மணி முதல் 730 மணி வரை தீர்த்தமாடுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்கம் ஹர்கிஷண் சிங் சுர்ஜித் மறைத்தார் ! ஏ.சுகுமாரன்

மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஹர்கிஷண் சிங் சுர்ஜித் (92) நோய்வாய்ப்பட்டிருந்த அவருக்கு கடந்த மே 6-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதால் நொய்டாவுக்கு அருகேயுள்ள பெருநகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நிலை சீரடைந்ததால் ஜூன் 3-ம் தேதி வீடுதிரும்பினார்.
இந்நிலையில், மீண்டும் உடல்நிலை மோசமாகவே கடந்த மாதம் 25-ம் தேதி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். மாரடைப்பால் வெள்ளிக்கிழமை காலமானார். பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத் ஆகியோர் மருத்துவமனைக்கே சென்று சுர்ஜித் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
சுர்ஜித்தின் உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்படுகிறது.
கிங் மேக்கர்: 1996-ல் பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்ததிலும், 2004-ல் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்ததிலும் சுர்ஜித்துக்கு பெரும் பங்கு உண்டு. இதனால் கிங் மேக்கர் என்றும் அவர் அழைக்கப்பட்டார்.

இந்திய மீனவர்கள் மீது இலங்கை துப்பாக்கிச் சூடு பற்றி மன்மோகன் சிங் இலங்கை அதிபர்ரிடம் பேசினார் --விசாரணை நடத்த இலங்கை அரசு ஒப்புதல் ஏ.சுகுமாரன்

சார்க் மாநாடு இலங்கை தலைநகர் கொழும்பில் சனிக்கிழமை தொடங்குகிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை கொழும்பு சென்றார் பிரதமர் மன்மோகன் சிங் அங்கு இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவங்கள் குறித்து இலங்கை அதிபர் ராஜபக்ஷவிடம் கவலை தெரிவித்தார் பிரதமரின் புகாருக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். இதனால் மீனவர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதுடன் கடலுக்குள் செல்லாமல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர் என்பதை பிரதமர் அவரிடம் எடுத்துரைத்தார்.
இலங்கை கடற்படையினர் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்; இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் தப்பித்தவறி நுழைந்தாலும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினார் பிரதமர். 1974-ம் ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தப்படி கச்சத்தீவில் இந்திய மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ராஜபக்ஷவிடம், பிரதமர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

புதுவை அமைச்சரவைக் கூட்டம் 2-ம் தேதி இல்லை ! 6-ம் தேதிக்கு மாற்றம் !வருவார்களா பரபரப்பு நீடிக்கிறது ! ஏ.சுகுமாரன்

முதல்வர் ரங்கசாமிக்கும் மற்ற 5 அமைச்சர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதையடுத்து ரங்கசாமிக்கு எதிராக சோனியாகாந்தியிடம் 5 அமைச்சர்களும் முறையிட்டுவருகின்றனர் இந்நிலையில் அமைச்சரவைக் கூட்டம் 2-ம் தேதி நடைபெற உள்ளதாக அமைச்சர்களுக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து தகவல் சென்றது. அன்றைய தினம் நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து இக் கூட்டம் 6-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அணுசக்தி கழகம் ,இந்தியாவின் அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் ! இனி அணு எரிபொருள் வாங்க தடை இல்லை ஏ.சுகுமாரன்

அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த சர்வதேச அணுசக்தி கழகமும் மற்றும் அணுசக்திக்கான எரிபொருளை சப்ளை செய்யும் 45 நாடுகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதில் சர்வதேச அணுசக்தி கழகத்திடம் அனுமதியை இந்தியா கோரி இருந்தது.
நேற்று 35 உறுப்பு நாடுகளைக் கொண்ட சர்வதேச அணுசக்தி கழகத்தின் கூட்டம் ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் கூடியது. இந்த அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பாகும். இந்தியாவின் அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோட்கர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்கனவே நிபுணர்கள் குழுவுடன் சென்று இருந்தார். அவர் சர்வதேச அணுசக்தி கழகத்தின் உறுப்பு நாட்டு தலைவர்களை (கவர்னர்கள்) சந்தித்து இந்தியாவின் அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு ஆதரவு திரட்டினார். சர்வதேச அணுசக்தி கழகத்தின் கூட்டம் கூடியது. ரகசியமாக நடந்த இந்த கூட்டத்தில் இந்திய அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் இந்த ஒப்பந்தத்துக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டதுஎரிபொருளை சப்ளை செய்யும் 45 நாடுகளிடம் இந்தியா அணுசக்திக்கான எரிபொருள் வாங்குவதற்கு தடை நீங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: