
இன்று விநாயகர் சதுர்த்தி !
மார்க்கெட்டில் முட்டிமோதும் அலை அலையாய் கூட்டம்
வருடத்துக்கு ஒரு முறையே கிடைக்கும்
விளாம்பழம் , பிரபம் பழம் , கள்ளா பழம் இன்னும்
நாவல் பழம் ,எருக்கம் பூ , கம்பு கதிர்கள் ,அருகம் புல்
என கவனமாய் ஒன்றையும் விட்டுவிடாமல் வாங்க துடிக்கும் மக்கள்
மண் பிள்ளையார் விதவிதமாய் காசுக்கு ஏற்றபடி காட்சி அளிக்கிறார்அவருக்கு வண்ண மிகு கொற்ற குடைகள்
வாங்கும் போதே மகிழ்ச்சி ! விழாவின் நோக்கம் விளங்குகிறது !
விநாயகர் நமது முழு முதற்கடவுள் ! அவர் இல்லாமல் ஒருபாடலும் ஆரம்பம் இல்லை ! அது இலக்கியமனலும , நாடகம் ஆனாலும் ,யாகம் ஆனாலும் , எந்த பூஜை ஆனாலும் ,முதல் வணக்கம் அவருக்கே !அவர் ஒன்றும் வாதாபியில் இருந்து இடையில் வந்த கடவுள் இல்லை நம் தமிழர் பழம் பெரும் வழிபாட்டில் அவருக்
கு தான் முதலிடம் .உலக மொழிகள் அனைத்திற்கும் அடிப்படை ஒலியான அ, உ , ம என்ற முன்று ஒலிகளின் ஒன்றி நிற்கும் ஓம் என்ற ஆதார ஒலியே விநாயகர் என நமது சித்தர் கண்டு ,காணாபத்தியம் என்ற வழிபாட்டு முறை வழி வழியாய் வந்தது .சுமார் 3000 ஆண்டு களுக்கு முன் தோன்றிய , சமந்தரால் திருவாடு துறையில் 1300 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்க பட்ட திரு மந்திரத்தை எழுதிய சித்தருக்கெல்லாம் சித்தரான திருமூலர் தனது திருமந்திரத்தை
:"ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்ற்ற்ற்னை "
கு தான் முதலிடம் .உலக மொழிகள் அனைத்திற்கும் அடிப்படை ஒலியான அ, உ , ம என்ற முன்று ஒலிகளின் ஒன்றி நிற்கும் ஓம் என்ற ஆதார ஒலியே விநாயகர் என நமது சித்தர் கண்டு ,காணாபத்தியம் என்ற வழிபாட்டு முறை வழி வழியாய் வந்தது .சுமார் 3000 ஆண்டு களுக்கு முன் தோன்றிய , சமந்தரால் திருவாடு துறையில் 1300 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்க பட்ட திரு மந்திரத்தை எழுதிய சித்தருக்கெல்லாம் சித்தரான திருமூலர் தனது திருமந்திரத்தை:"ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்ற்ற்ற்னை "
என்ற வணகதுடன் தொடங்குகிறார் . விநாயகர் என்ற வடிவம் நமது சித்தர்கள் ஓளி முறையில் அமைத்த வழிபாட்டு ஒருவமாகும் , இந்த காட்சி பொருளுக்கு ஒலியிலான வடிவம் தந்து அமைதிருபதே அவ்வையின் விநாயகர் அகவல் .இது ஒரு ஞான சாதனம் .
இந்த அகவல் நூலும் "சீதக் கள்பச் செந்தா மறைப்பூம்பாதச் சிலம்பு பல இசை பாட" என திரு வடி வணகதுடன் ஆரமிகிறார். மேலும் தொல்காப்பியம் இளம்பூரனதிலே"தன் தோள் நான்கின் ஒன்று கை மி கூ உம் களிறு வளர் பெரும் காடாயினும் ஓளி பெரிது என்ற மிக பழைய பாடலும் விநாயகர் வழிபாட்டின் பழமையையும் , தமிழர் வழக்கத்தையும் எடுத்து காட்டுகிறது .விநாயகர் சித்தர்களின் சீரிய படைப்பு ஓங்காரத்தின் வடிவம் பிரணவத்தின் வெளிப்ப்பாடு .எளிமைக்கும் எளிமையை சிறுவர்க்கும் மிகநெருங்கிய கடவுள் ,அவர் இன்றி பலருக்கு பரீட்சை வெற்றி பலன் அள்ளித்தது இல்லை தமிழகத்தில் விநாயகர் வழிபாடு எளிமைக்கும் எளிமையை அனைத்து மக்களுக்கும் உரிய எங்கும் நிறைத்த முலைக்கு முலை , சந்துக்கு சந்து அருள் பாலிக்க காத்திருக்கும் கடவுள் .இன்று வணங்கி மகிழ்வோம் , இன , மத வேறுபாடு களைய அவரையே தாள் பணிவோம் .அன்புடன் ஏ. சுகுமாரன் http://www.puduvaitamilsonline.com/amirthamintl@gmail.com


No comments:
Post a Comment