கறுப்பு சனியும் அடுத்த ஒரு கருத்துள்ள ஞாயிறும ------- ஏ. சுகுமாரன்
கருப்பு சனியின் கொடூரைதை சற்றே மறந்து ஞாயிறு அன்று குவிந்தனர் அதிசயம் ! ஆர் .கே புரம் தமிழ் சங்க வளாகத்தில் நிரம்பிவழிந்ததுஎதையும் எதிர்பார்க்காத தானே வந்து குவிந்த மக்கள் கூட்டம் !பெருமை எல்லாம் பேசவந்த அபுதுல் கலாம் அவர்களுக்கும் , வடக்குவாசல் இதழின் தமிழர் மத்தியில் உள்ள நெருக்கத்தையும் உறவையும் வெளிபடுத்தியது.!கவின் மிகு வடக்குவாசல் இலக்கிய சிறபிதழை தன் பொற்கரங்களால் வெளியிட்டு வாழ்த்துரை கலாம் அவர்களாலும் , கவிஞர் ராசன் அவர்களும் வழங்கப்பட பெற்றுக்கொளும் வாய்ப்பு பதிபசிரியர் அவர்களால் எனக்கும் கிட்டியது !வன்முறைக்கு எதிராக நல்ல சக்கதிகள் எல்லாம் ஒன்று சேரும் அவசியத்தை கலாம் அவர்கள் வலியிறுத்தி அனைவரையும் நாட்டின் முன்னேற்றதிர்க்காகவும் தனிமனித முன்னேற்றதிர்க்காகவும் ஒருகுரலில் உறுதி எடுக்க செய்தார் வடக்கு வாசல் இதழையும் , பென்னேஸ்வரனின் நல்லதிர்க்கான முயற்சியில் அனைவர் பங்களிப்பின் அவசியத்தையும் உணரும்படி வாழ்த்தி பேசினார் கவிஞர் ராஜன் அவர்கள் தன் அறிவார்த்த பேச்சால் அனைவரையும் கவர்ந்தார் .உச்ச நிதிமன்ற மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணமணி துருவி துருவி வடக்குவாசலில் தேடியும் குறையுன்றும் இல்லை கிருஷ்ணா என்றார் ..இருபது மாதமாய் இதமாய் இனிய கருத்துக்கள் பலவற்றை இளைய சமுதாயத்தினரின் முன்னேற்றம் காண எழுதிவந்த சன்னத் குமார் தன் பேச்சாலும் அனைவரையும் கவர்ந்தார் .மேதகு கலாம் அவகளின் பேச்சும் ,கவிஞர் ராஜன் அவர்களின் சிந்தனை சிதறல்களும் நீண்ட நாட்கள் வந்தவர் மனதை விட்டு அகலாது .பெருமை மிகு விருந்தினர் அதிகம் கொண்ட அவையில் இரண்டு மணி சென்றதே தெரியாமல் மக்கள் மயங்கினர் .நன்றிஉரை கூற வந்த திரு பென்னேஸ்வரனும் தன் மயக்கும் பேச்சால் ஒருவரையும் விடாமல் நன்றி தெரிவித்து தன் பண்பை உணர்த்தினர் .எல்லாம் சொல்லி இலக்கிய இதழை பற்றி சொல்லாமல் விட்டால் எப்படி ?அம்பது ரூபாயில் ஒரு அறுசுவைவிருந்து ! 15 அன்று தான் 86 வயது முடித்த கி.ரா வில் இருந்து அனைத்து மூத்த ,மக்களறிந்த படைபாளிகளின் படைப்பால் கமகமத்தது , கனமும் அதிகம் தான் .!முன்றண்டுகளை முடித்த வடக்கு வாசல் பென்னேஸ்வரன் பார்வையே தனிதினுசு , இலக்கிய பார்வை , நாடக மேடையாகவேஉலகை பார்க்கும் நவீன நாடக பிதாமகன் , இறைவன் மட்டும் லாகனை சற்றே தளர்திருந்தால் பல அற்புதங்களை இன்னும் நடத்தி காட்டி இருப்பார் .நல்லவைகளை மனம் விட்டு பாராட்டுவது தானே நலவைகள் வளரவழி ! எதுவும் இல்லாதவர்களை ஒரு நல்ல சொல்லவாவது சொல்ல சொல்லிதானே திருமூலர் கூறுகிறார் ! நல்லதே செய்வோம் !வாழ்க வளமுடன் !
No comments:
Post a Comment