Friday, September 26, 2008

பிரபஞ்ச புதிர் !! -ஏ.சுகுமாரன்

பிரபஞ்ச புதிர் !! -ஏ.சுகுமாரன்
பிரம்மனே ! பிரபஞ்ச நாயகனே !

பிந்துவே ! பெரு ஓசையின் (BIG BANG) விளைவே !

எமையெல்லாம் படைத்தது ஆள்வது

நீஎன்றால் நீங்காத ஐயம் பல என்றும் உண்டு !

பசியும் பட்டினியும் கூட உன் படைப்பு தானா?

எத்தனை தொழில் செய்தாலும் துரத்தி வரும் தொல்லைகளும் நீயே படைய்த்தயா ? பிறந்தோர் அனைவரும் புசிதிருக்கும் வித்தையை ஏன் படைக்க மறந்தாய்! " இரந்தும் உயிர் வாழ்தல்

வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான் " என உன்னை வான் புகழ் வள்ளுவர் சபித்த போதும் ஏன் வாளாயிருந்தாய்

படைத்தல் உன் பணி என்றால் உலகில் இத்தனை நெருக்கம் ஏன் படைத்தாய் ! உன் கணக்கில் பிழையா ?காலத்தின் இறுதியால் இந்த குழப்பமா ? எம்மில் பலர் வாடுவதையும்

வெற்று குடங்கள் வீரமுரசு கொட்டுவதும் நீயேன் உன் படைப்பில் அனுமதித்தாய் ?மசால் வடை விற்பவன் மகாகவியை விட வசதியாய் வாழ , மனிதன் படைத்த பணம் உன் அனைத்து படைப்பையும் ஆளும் தகுதி அடைந்தது எப்படி ? இறப்பில் தன்னே ஒற்றுமை அடைகிறான்

வாழும் போதோ ஆயிரம் வேற்றுமை அவன் தவறால் மட்டும் இல்லாமல் தவிகிறானே !

கர்மத்தின் பம்பர சுழற்சி விசை இன்னும் உன்னிடம் தானே உள்ளது !!

No comments: