Monday, September 22, 2008

தில்லி வாசிகளின் திகைப்பும் ,தலைகீழாய் திரும்பிய குப்பை தொட்டிகளும் .......---- ஏ. சுகுமாரன் ..



தில்லி வாசிகளின் திகைப்பும் ,தலைகீழாய் திரும்பிய குப்பை தொட்டிகளும் .......---- ஏ. சுகுமாரன் ..
ஞாயிறு அன்று மாலைதான் தில்லியில் ரயிலில் இருந்து இறங்கமுடிந்தது ,கருப்பு சனியின் கொடூர வன்முறை , மனித இனத்திற்கே ஒவ்வாத பயங்கர வன்முறை தாண்டவத்தின் பாதிப்பு பார்க்கும் இடமெல்லாம் தெரிந்தது ! தில்லி மக்களின் முகமெல்லாம் ஒருமாதிரியான இறுக்கம் !ஒன்று போல அனைவர்முகத்திலும் ஒரேமாதிரி முகபாவம் .பேசவே அனைவர் தயக்கமும் ஒருமாதிரியே! ௨00௫- ஆண்டு நடந்த பயங்கரம் மீண்டும் தில்லியில் நடக்கும் என்றே நம்ப மறுக்கும் மனோபாவம் !குண்டுவெடித்த கருப்பு சனியின் சேதி கேட்ட டெல்லி வாழும் மக்கள் அனைவரும் குப்பைதொட்டியில் குண்டுவெடித்த செய்தி அறிந்து என்னசெய்தனர் தெரியுமா ?
அனைத்து தெருக்களிலும் குப்பை தொட்டிகள் மக்களால் தலைகீழாய் திருப்ப பட்டன .மறு நாள் காலை !ஒரே மாதிரி எதிர் வினை அனைத்து மக்களையும் செயல்பட வைத்து தான் விந்தை .!இது மாதிரி செய்ய சொல்லி கூறப்பட்டதா என நகராச்சி அதிகாரிகளை கேட்டதற்கு இல்லை என மறுத்தனர் .மறுநாள் வெடி வெடித்த கபூர் மார்க்கெட் பகுதிக்கு சென்றபோது , கும்பல் கும்பலையே மக்கள் சுற்றி அமர்ந்து கதறி அழுதவாறு இருந்தனர் .ஆனால் மக்கள் அந்த பகுதியை நடந்து போக எளிதாக அனுமதிக்க பட்டனர் .காவல் துறை இறுக்கமான முகத்துடன் ஆனால் யாருக்கும் இடையுறு இன்றி அமைதியாக மக்களை கட்டுபடுத்தினர் .இது நாம் பயிலவேண்டிய பண்பு .ஆனாலும் டெல்லி மக்கள் ஒரே மாதிரி குப்பை தொட்டிகளை திருப்பி வைத்து தங்கள் எதிர்ப்பை கட்டியதும் , அனைத்து மக்களும் ஒரே நாளில் அச்ச உணர்வில் இருந்து வெளிவந்ததும், போலீசார் காட்டிய கண்ணியமான கண்டிப்பும் இந்தியா எந்த அச்சுறுத்தலையும் உறுதியாக எதிர்கொள்ளும் வல்லமை உடையது என காட்டியது.ஜெய் ஹிந்து !

No comments: