அது என்னவோ எந்த தீபாவளிக்கும் இல்லாத ஒரு உணர்ச்சி
நாள் முழுவதும் தொடர்ந்து இந்த தீபாவளிக்கு-!-
இங்கு தெருவில் கேட்க்கும் வெடி சப்தம் எல்லாம்
இலங்கையில் தமிழர் மேல் விழும் வெடியையே
நெஞ்சில் நினைவில் வரச்செய்தது !
மறக்கமுடியவில்லை கலைஞர் பார்த்த அந்த குறுந்தகட்டை
,அதன் அழிவு காட்சிகளை, தமிழர் ஆக பிறந்தது பாபமா ?
அதுவும் இலங்கையில் பிறந்தது யார் தவறு ? கொத்து கொத்தாக மடிகிறார்கள் கேட்க்க ஒரு நாத்யில்லையே !
பாரதி இன்று இருந்திருந்தால் பொங்கி எழுந்து
வீர மிகு கவிதைகளால் நமக்கு
சிறுது மரத்து போன மனித உணர்வு ஊட்டியிருப்பார்
.நாய்களோ! பன்றிச் சேய்களோ? என கேட்டிருப்பார் !
கதியற்ற மனிதர்களுக்கு கடவுளே காப்பு ! பிரார்த்திப்போம் !அன்புடன் ,ஏ.சுகுமாரன்
Tuesday, October 28, 2008
அது என்னவோ எந்த தீபாவளிக்கும் இல்லாத
Labels:
ceylon tamils,
ஈழ தமிழர்,
தீபாவளி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment