அன்புடையார் எல்லாம் உடையார் ----ஏ .சுகுமாரன்
மாலை நேரம் , கணவனை எதிர்பார்த்து வீட்டுக்கு வெளியே வந்த மங்கை முற்றத்தில் இருந்த மூவரை பார்த்தாள்களைப்பு
தோற்றத்தை கனிவுடன் பார்த்து . முக முறுவலுடன் உள்ளே அழைத்தாள் .தாகம் தீர்க்க கொஞ்சம் பானகம் தர .
மகிழ்ச்சியுடன் அந்த மூவர் வினவினர் உன் கணவன்
உள்ளே இருக்கிறானா என்று ,வரும் நேரம் தான் எனக்கூற ,
முவரும் காத்திருக்க ஒப்பினார் கணவன் வரும் வரை
கணவனும் வந்தான் மனைவியிடம் கேட்டான் மூவரைப்பற்றி ,
விபரம் அறிந்த அவன் அவசரமாய்ச சொன்னான்
அவர்களை உள்ளே அழைக்க ! கனிவுடன் வெளியே வந்த மனைவி அவர்களை உள்ளே அழைக்க அவர்கள் கூறிய பதில் அவளை வியக்க வைத்து ..
அவர்கள் கூறினார் அவர்கள் பெயரை
வரிசையாய்ஒருவர் சொன்னார் என் பெயர் செல்வம் ,
அடுத்தவர் சொன்னார் என் பெயர் வெற்றி மூன்றாம் நபரோ
அடக்கமாக சொன்னார் என் பெயர் அன்பு என !
ஆனால் அம்மா ! நாங்கள் முவரும் ஒன்றாய் எந்த வீட்டிலும்
நுழைய இயலாது , உன் கணவனை வினவி வா
எங்களில் யார் முதலில் தேவை என என்றனர் .
அதிசியத்து உள்ளே சென்ற மங்கை ,சொன்ன கதை கேட்ட கணவனும் ,அவளின் குட்டி மகளும் துள்ளிகுதிதனர் உவகை மிகுதியால் ,அவசரமாய் கணவன் சொன்னான் உடனே அழைத்து வா !
அந்த செல்வ மனிதனை செல்வமிருந்தால் சீரும் சிறப்புடன் வாழலாம் என ,
சற்றே தயங்கிய நங்கைஅவள் மெல்லிய குரலில் கணவனை கேட்டாள், ஏன் வெற்றி வந்தால் எதிலும் வெலலாமே ,வலிமையுடன் வாழ வெற்றி போதாதா என்றாள்
துள்ளிக் குதித்த அன்பு மகள் ,அம்மா அம்மா
அன்பையே அழைத்து வா எனக் கொஞ்ச அன்பு மகளின்
செல்ல கொஞ்சல் எல்லை மீறவே இருவரும் முடிவெடுத்தனர்
அன்பையே அழைப்பது என
வெளியே வந்த மங்கை மலர்சியுடன் அழைத்தாள்அன்பு மனிதனை வீட்டிற்கு உள்ளே , மறற இருவரிடம் மன்னிப்பு கேட்டபடியே - அப்போது தான் நிகழ்ந்தது அந்த அதிசயம் !அன்பு மனிதனுடன் சேர்த்து புறப்பட்டனர்
முவரும் ஒன்றாய் -வியப்புடன் நோக்கியமங்கையிடம்
அன்பிருக்கும் இடத்தில் நாங்கள் இருவரும் சேர்த்தே இருப்போம் -
ஆனால் நீ எங்களில் ஒருவரை விரும்பிருபின் மறற
இருவருக்கும் அங்கு இருப்பிடம் இல்லை
ஆனால் அன்பு உள்ள இடத்தில் செல்வமும்
வெற்றியும் சேர்த்தே தான் இருப்போம் -
எங்களை அன்பிடம் இருந்து பிரிப்பது
இயலாத காரியம் என்றனர் .அன்பின் வலிமை அளவற்றது ஆயிற்றே ! உலகின் ஈர்ப்பு விசையின் வேறு பெயர்தான் அன்பு !
Tuesday, October 28, 2008
அன்புடையார் எல்லாம் உடையார் ----ஏ .சுகுமாரன்
Labels:
attraction,
love,
அன்பு,
ஈர்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment