Tuesday, October 28, 2008

இன்று வரும் விருந்தினர்கள்

அன்பர்களே ,
நேற்று என்னிடம் நன்கு பேர்கள் வந்தார்கள்
உங்கள் அனைவர் கை பேசி எண்ணை கேட்டார்கள்
நான் கை பேசி எண்ணைதர மறுத்தேன் ஆனால் உங்கள் அனைவர் இல்லமுகவரியையும் தந்துவிட்டேன் .இன்று அவர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள் நான் அவர்களை உங்கள் இல்லத்திலே தங்குமாறு கேட்டுகொண்டேன் உங்கள் அனுமதி பெறாமலேயே !
வந்தால் தயவு செய்து வரவேற்க மறக்காதீர்கள் ,
அவர்கள் பெயர்கள் சுகம் , சாந்தி ,செல்வம் , அறிவு .
என் அதிக பிரசிங்கி தனத்தை மன்னித்து விடுங்கள் !
அன்புடன் ,
ஏ.சுகுமாரன்

No comments: