Thursday, October 30, 2008

சப்தம் இல்லாமல் ஒரு சாதனை

//தீபாவளி தங்க விற்பனை அமோகம் ! 50 சதவீதம் அதிகரிப்பு !-உலக தங்க கவுன்சில் தகவல் தீபாவளிக்கு முந்தைய தினத்தில் தங்கம் விற்பனை இந்த ஆண்டு 50 சதவீதம் அதிகரித்ததாக உலக தங்க கவுன்சில் (டபிள்யூ.ஜி.சி.) தெரிவித்துள்ளது. //என்று ஒரு செய்தி நேற்று வெளிவந்தது .//

ஆனால் இப்போது சப்தம் இல்லாமல் ஒரு சாதனையை தமிழ் நாடு நிகழ்த்தி இருப்பது தெரியவந்துள்ளது .!தீபாவளிக்கு முந்தைய தினத்தில் தமிழ் நாட்டில் உள்ள 6700 டாஸ்மாக் கடைகளிலும் மொத்தத் விற்ப்னை 100 கோடியை தாண்டி விட்டதாம் .தீபாவளி அன்றும் விற்ப்னை 100 கோடியை தாண்டி விட்டதாம்
மெய்சிலிர்க்க வைக்கும் சாதனை .
மொத்தமாக அன்று விற்ற மது வகைகள் நான்கு லக்ஷம் பெட்டிகள்.தினசரி சராசரியாக 45 -60 கோடி ரூபாய் க்கு விற்பனை ஆகிறது .தீபாவளி அன்று இரட்டிப்பு ஆகி விட்டது .

உலகின் எல்லா பகுதியிலுள்ள தான் குடிக்கிறார்கள் , ஆனால் அங்கு குடித்த பின்பு தங்கள் வேலையை உற்சசகமாக , ஆர்வத்துடன் செய்வார்கள் .மது அவர்கள் திறமையை உள்ளிருக்கும் உயர்ந்த உணர்வை வெளிக்கொண்டு வரும் . ஆனால் நம் தமிழ் நாட்டிலோ தலை கிழ் குடித்துவிட்டால் அதோடு வேலை முடிந்து விடும் வெளி வரும் வார்த்தைகளின் தரம் ,உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே .

தமிழ் நாட்டு இளைஞர்களின் வரும் காலத்தை நினைக்கும் போதேநெஞ்சம் கலங்குகிறது .வெகுசிலர் மட்டும் தப்பிவிடுகின்றனர் , பெரும் பாலோர் புதை குழியில் சிக்கி மீடியா , தீடிர் உணவு , மது என காலம் கழிக்கின்றனர் .
வர வர பரோட்டா தமிழனின் தேசிய உணவு ,
கைலி தேசிய உடை ,எனஆகிவிட்டது .
பரோட்ட கடைகளும் , டாஸ்மாக் கடைகளும்
இல்லாத கிராமமே தமிழ் நாட்டில் இல்லை
அன்புடன் ,
ஏ.சுகுமாரன்

No comments: