கடம்பர்கள் கடற்கொள்ளை காரர்கள் என வந்த மடலுக்கு பதில் .இது மின்தமிழில் வந்தது
சங்க இலக்கியம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள் யார்?
//"சால்பெரும் தானைச் சேரலாதன்
மால்கடல் ஒட்டிக் கடம்பறுத்து இயற்றியபண்அமை முரசின் கண்அதிர்ந்தன்ன"(அகம். 347)(பொருள் :பெரும் படையுடையவன் சேரலாதன்.அவன் பெரிய கடலில் பகைவர்களை அழித்து அவர்களின் கடம்ப மரத்தை அறுத்து முரசு செய்தான்.அம் முரசு முழங்கியது போல)இப்பாடலடிகளின் வழியாக இன்று சோமாலிய கடற்கொள்ளையர்கள் செய்யும் வேலைகளைப் பண்டைய கடம்பர்கள் செய்தனர் போலும்.இவை பற்றி விரிவாக ஆராய இடம் உள்ளது. கடம்பர்கள் இல்லை.கதம்பர்கள் எனப் பொருள்கொள்ளும் அறிஞர்களும் உள்ளனர்.இக் கதம்பர்கள் மைசூர் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் எனவும் அறியமுடிகிறது.தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்கடம்பாஊஞ்சல் ஒன்னு செய்யவேணும் //அவ்வாறு முனைவர் மு இளங்கோவன் ஒரு கட்டுரை சுவாரஸ்யமாக எழுதி இருந்தார் .ஆனால் எனக்கு அதில் சில ஐயப் பாடுகள் உண்டு . அதை உங்களுடன் பகிர்த்து கொள்ளவிரும்புகிறேன் .
தமிழ் நாட்டில் தமிழர் கடவுளான முருகருக்கு கடம்பர் என ஒரு பெயர் உண்டு .கந்தா ,கடம்பா ,கதிர்வேலா என்ற பாடல் மிகப் பிரபலம் .கடம்ப மரம் மட்டுமல்ல ,கடம்ப மீன் உண்டு , இதைதான் கண்வோய் என்பார்கள் .அதுவும் கடல் தொடர்பு சொல்தான் .கடம்ப வன் நாதர் , கடம்ப என்ற வேரில் பல ஆலயங்கள் மிக பழங்கால இறை வழிப்பாடு இடங்கள் உள்ளன .கண்வ முனிவருக்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தந்த தலம். கடம்பர் கோயில் என பல கதைகள் உண்டு .எனவே கடம்பர் என்பது ஒரு கடல் கொள்ளைக்கார இனமாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை என நினைத்தேன் .
இதற்க்கு துணை புரிவது போல் மாங்குடி கிழார் பாடிய புறம் 335,
"அடலருந்துப் பின் குரவேதளவே
தளவே குருந்தே முல்லை
இந்நான் கல்லது பூவும் இல்லை
கருங்கால் வரகே இருங்கதிர் தினையே
சிறுகொடிக் கொள்ளே அவரையொடுஇந்நான்
இந்நான் கல்லது உணவும் இல்லைதுடியன்
பாணன் பறையன் கடம்பனென்றுஇந்நான்
கல்லது குடியுமில்லைஒன்னாத் தெவ்வர் முன்னின்று
விலங்கிஒன்று
ஏந்து மருப்பின் களிறு எறிந்து விழ்ந்தெனக்கல்லே
பரவின் அல்லதுநெல் உகுத்துப் பரவும் கடவுளும் இல்லை"
என்று கூறுகிறது.
அதாவது குமரிக் கண்டம் அழிந்தபோது வடக்கு நோக்கி நகர்ந்தவர்கள் சேர, சோழ, பாண்டியர் என்ற அடையாளத்துடன் இன்றைய தமிழகத்தினுள் நுழைந்தனர். அடர்காடாக இருந்ததை இரும்புக் கோடாரி கொண்டு திருத்திக் குடியேறியதைப் பரசுராமன் கதை தொன்மவடிவில் கூறுகிறது. இவர்களுக்கு முன்பு அங்கு வாழ்ந்த நான்கு மக்கள் குழுவினரான துடியர், பாணர், பறையர், கடம்பர் என்போரின் எதிர்ப்புக் குரலாக ஒலிக்கும் பாடல் தான் மாங்குடி கிழார் பாடிய புறம் ஆகும் .
இவ்வாறு சேர, சோழ, பாண்டியர் இன்றைய தமிழகத்துக்குள் வரும்போது அவர்களைவிட வளர்ச்சி குன்றியவர்களாயிருந்த பறையர், பாணர், துடியர், கடம்பர் என்ற நான்கு குடியினர்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு, ஒருவேளை அவர்களைக் கொன்று குவித்து விட்டுக் கூட நம் சேர, சோழ, பாண்டியர் இங்கு காலூன்றியிருக்கலாம். இன்று பறையர்கள் பெருமளவில் தமிழகத்தில் வாழ்கின்றனர். மிகுந்த சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களாக வாழுகின்றனர் .
பாணர்கள் ஆங்காங்கே சிலர் உள்ளனர்.
பிற சாதிகளில் இணைந்தும் உள்ளனர்.
மேலும் பாணர்கள் இன்னும் வடக்கே சென்று இன்றைய ஒரிசாவும் அன்றைய கலிங்கத்தில் குடியேறினர் .
அந்தப் பகுதி இன்று க்ந்தமலை என்று அழைக்கப் படுகிறது .இன்றும் அந்த இனத்தின் பெயர் இன்னும் பாணர்கள் தான் .
ஒரிசாவில் கிறிஸ்துவத்திற்கு எதிரான வன்முறை நடந்ததாக கூறப் படும் பகுதி இதுதான் .அவர்கள் பண்டைய சோழர்களுடன் நெருங்கிய உறவு வைதிருத்தனர் .ராஜராஜசோழர் கங்கை படையெடுப்புக்கு வழி காட்டுபவர்களாக இவர்கள் பணியாற்றி இருப்பதாக ,கலிங்க -தமிழ் சரித்திர ஆய்வு செய்து வரும் திரு .பாலசுப்ரமணியம் கூறுகிறார் .
துடியர் எனும் உடுக்கடிப்போர் கோடாங்கி என்ற பெயரில்
வாழ்கின்றனர் என்று தெரிகிறது. கடம்பர் சேர அரசர்களால் துரத்தப்பட்டு இன்று கோவாவில் வாழ்கின்றனர்.
கடம்பர்களை, உரோமக் கடல் வாணிகர்களுக்குப் போட்டியாக உள்ளனர் என்று சேரர்கள் துரத்தி அவர்கள் கோவா மக்களின் மூதாதைகளாயினர். பாணரும் துடியரும் தடந்தெரியாத அளவுக்குச் சிறுத்துவிட்டனர். .
வேளிர், மழவர், நாகர், கடம்பர், திரையர் என ஐந்து முக்கிய குடிகளாக பிரிக்கப் பட்டிருந்த தமிழகத்தின் பூர்வ குடிகள் காலப் போக்கில் அவர்கள் மேற்கொண்ட தொழில்கள் மற்றும் அவர்கள் குடியமர்ந்த இடங்களின் பூகோள அமைப்பின் அடிப்படையில் மேலும் சிறு சிறு உட்பிரிவுகளாக தங்களை வரையறுத்துக் கொண்டார்கள்.
மேலும் பூர்விக தமிழ் மன்னர்கள் வாழ்க்கை , வாரிசுகள் பற்றி விக்கிபீடியா கிழ்கண்ட தகவல்களை தருகிறது . ""சங்க காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியாகவிருந்த துளு நாட்டில் கடம்பரின் ஆட்சி கி. மு. 300 முதல் கி. பி. 1336 வரை 1636 ஆண்டுகள் நடைபெற்று வந்தன. இவர்கள் தலைமைத் தாயகமாக வனவாசி பன்னிராயிரமாகும் மேலும் கடற்கரையோரப் பகுதியாகிய கொண்கானம் தொளாயிரமும் மூலத்தாயகமாக கொண்கானக் கடற்கரையும் விளங்கியது. கடம்பர் ஆரம்ப காலங்களில் கடலாட்சி செய்த இனத்தவர்கள் என பதிற்றுப்பத்தில் குறிப்புகள் உள்ளன. கடம்பர்கள் கொள்ளையடிப்பதற்கு மூலதனமாக விளங்கிய தீவு வெள்ளைத் தீவாகும் (இலட்சத் தீவு). கடம்பர் நாடாக மங்கலாபுரம் (மங்களூர்) விளங்கியது. துளு நாட்டில் அமைந்திருந்த மங்களூர்த் துறைமுகம் இன்று தென் கன்னடப் பகுதியைச் சார்ந்த பிரதேசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பூழி மற்றும் மங்கலாபுரம் போன்ற பகுதிகள் சில காலம் இவர்களின் ஆட்சியின் கீழ் இருந்துவந்தது. கார்வார் முனை முதல் நேத்திராவதி ஆற்று முகத்துவாரம் (மங்களூர் - மங்கலாபுரம்) வரை அமையப்பெற்றிருந்த கடற்கரைக்கு கடற் கடம்பு எனப் பெயரிடப்பட்டிருந்து இக்கடற்கரைக்குப் பக்கத்தில் உள்ள தீவுகளில் கடம்பர்கள் ஆட்சி செலுத்தினர். மேற்கு நாடுகளிலிருந்து வரும் கப்பல்களைக் கொள்ளையடித்தும் வந்த காரணத்தால் தமிழ் இலக்கியங்களில் இவர்கள் கடற் கடம்பர் என குறிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் நன்னன் கி. மு. 300 - 260
கூந்தலம் வனவாசிக் கடம்பன் கி. மு. 260 - 232
திரிலோசனக் கடம்பன் கி. மு. 190 - 165
கடம்பின் பெருவாயில் கி. பி. 46 - 80
நார்முடிச் சேரல் காலத்துக் கடம்பன் கி. பி. 80 - 110 செங்குட்டுவன் காலத்துக் கடம்பன் கி. பி. ௧௧0
- 135
இளம்சேரல் இரும்பொறைக் காலத்துக் கடம்பன் கி. பி. 135 - 155
மயூரவர்மன் கி. பி. 350 - 375
சந்திரகாந்தன் கி. பி. 375 - 400
பக்ரதவர்மன் கி. பி. 400 - 425
ரகுகாகுத்தவர்மன் கி. பி. 425 - 450
முதலாம் சாந்திவர்மன் கிருஷ்ணன் கி. பி. 450 - 475
மாந்தத்ரிவர்மன் - மிருகேச வர்மன் கி. பி. 475 - 500
தேவவர்மன் - விஷ்ணு - சிவரதன் - பானு - இரவி வர்மன் கி. பி. 500 - 535 குமாரன் - சிம்மன் - அரிவர்மன் கி. பி. 535 - 570
மாந்தாதன் - கிருஷ்ணன் 2, அரசவர்மன் கி. பி. 570 - 585
கோவா கடம்பன் ஜயகேசின் 2 கி. பி. 1090 - 1120
மகாமண்டலேசுர கடம்பன் கி. பி. 1181 - 1258
கடைசிக் கடம்பன் (பெயர் தகவல் இல்லை) கி. பி. 1300 - 1336 ("http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது )
மேலும் கலிங்கத்துப பரணியில் கூடியிருந்த அரசர்கள் என கிழ்க் கண்ட மனனர்கர் வரிசையில் கடம்ப மன்னர் பெயரும் உள்ளது .329
தென்னவர் வில்லவர் கூபகர் சாவகர் சேதிபர் யாதவரேகன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே. 18330 கங்கர் கராளர் கவிந்தர் துமிந்தர் கடம்பர் துளும்பர்களேவங்க ரிலாடர் மராடர் விராடர் மயிந்தர் சயிந்தர்களே. 19331 சிங்களர் வங்களர் சேகுணர் சேவணர் செய்யவ ரையணரேகொங்கணர் கொங்கர் குலிங்கர் சவுந்தியர் குச்சரர் கச்சியரே. 20332 வத்தவர் மத்திரர் மாளுவர் மாகதர் மச்சர்மி லேச்சர்களேகுத்தர் குணத்தர் வடக்கர் துருக்கர் குருக்கர் வியத்தர்களே. 21333 எந்நக ரங்களு நாடு மெமக்கருள் செய்தனை யெம்மையிடச்சொன்னத னங்கள்கொ ணர்ந்தன மென்றடி சூடுக ரங்களொடே. ௨௨எனவே
கடம்பர்கள் வெறும் கடல் கொள்ளைக் காரர்களாக மட்டும் இருந்திருக்க வாய்ப்பு இல்லை அவர்கள் தமிழகத்தின் பூர்வீக மன்னர் பரம்பரையில் ஒரு இனமாகும் .தமிழ்ச் சமூக வரலாற்றையும், தொல்பொருள் தடயங்களுக்கு, தொல்லியல் அறிஞர்கள் கூறும் விளக்கங்களை இணைத்து
தொல்லியல் தடயங்கள் கூறும் செய்திகளை முமுமையாகக் கணக்கிலெடுத்துக்கொண்டு விறுப்பு, வெறுப்பற்ற நிலையில் தமிழ்ச் சமூக வரலாற்றை எழுத வேண்டியது ,முனைவர் மு இளங்கோவன் போன்ற அறிஞர்கள் செய்யவேண்டியது . இப்போது பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்ச் சமூக வரலாறு பலபுதிர்களை உள்ளடக்கியதாக உள்ளது. திரு கண்ணன் கூறியது போல் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களில் ஒரு பிரிவினர் 'கடம்பர்'. அவர்கள் இந்தியப்பழங்குடிகள் போல் இருப்பது தற்செயலானது இல்லை.என்ற தகவலும் ஆராயத்தக்கதுதான் . .நான் தமிழ் முறையாக படித்த முனைவர் அல்ல .ஆனால் தமிழ் மேல் கொண்ட பேரன்பால் ,நான் கற்ற சில சில செய்திகளை பகிர்த்து கொள்ளகிறேன் .இதை மேலும் உண்மை ஆராய்ந்து முனைவர் மு. இளங்கோ போன்றவர்கள் உண்மையை கூறி அதை புத்தகமாக வெளியிட்டால் வாங்கிப் படிக்கும் முதல் ஆள் நானாக இருப்பேன் .எனவே இதில் ஆக்க பூர்வமான தகவல்கள் இன்னும் இருந்தால் தெரிவித்தால் ,மேலும் நமது தமிழர் பற்றிய உண்மை வரலாறு வெளிச்சத்துக்கு வர உதவி ஆக இருக்கும் ..
அன்புடன்,
ஏ.சுகுமாரன்
Wednesday, November 26, 2008
சங்க இலக்கியம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள் யார்?
Labels:
கடற்கொள்ளையர்கள்,
சங்க இலக்கியம்,
தமிழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment