Monday, April 28, 2008

செய்திகள் ஏப்ரல் காலை 8.00

காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் கோரிக்கை இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வேண்டும்
புதுச்சேரி காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் காங்கிரஸ் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அப்போது சுப்பிரமணியன் பேசியது: புதுச்சேரியில் இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப தனியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் கூறினார். காங்கிரஸ் தலைவராக சோனியாகாந்தி பதவி ஏற்ற பிறகு சிறுபான்மையினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
புதுச்சேரியில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை சதம் எவ்வளவு இருக்கிறதோ அதற்கு ஏற்ப தனியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி புதுச்சேரி அரசிடம் அளிக்கப்படும் என்றார் சுப்பிரமணியன்.
காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவின் தலைவர் டாக்டர் லூயி கண்ணையா தலைமை வகித்தார்.
கல்வியமைச்சர் எம்.ஓ.எச்.எப். ஷாஜகான், காங்கிரஸ் பொதுச்செயலர் காந்திராஜ், எம்.எல்.ஏ. தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாலாஜி, கலந்து கொண்டனர்.

புதுச்சேரியில் இன்று ஏ.எப்.டி பந்த் அழைப்பு
புதுச்சேரியில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டத்துக்கு ஏ.எப்.டி. பஞ்சாலையைச் சேர்ந்த ஒருங்கிணைந்த தொழிலாளர் கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஏ.எப்.டி. பஞ்சாலையில் பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு வழங்குவதைப் போன்று, தங்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும்.
ஊதிய உயர்வு இன்றி 11 ஆண்டுகளாக பணியாற்றும் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொழிலாளர்கள் இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் "ஏ.எப்.டி. தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ. 1000 வழங்கப்படும்.
அகவிலைப்படி பிரச்னையை ஆராய 2 நபர் குழு அமைக்கப்படும்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் என். ரங்கசாமி அறிவித்தார்.
இருப்பினும் தொழிலாளர்கள் போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளனர்.
முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
அசம்பாவித சம்பவங்கள் நேராமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.
நுழைவுத் தேர்வு ரத்து என்ன ஆனது : பெற்றோர்களிடம் குழப்பம்' கவலை
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அரசு வெளியிட்ட அறிவிப்பு தொடர்பாக பெற்றோர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக செயலர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
.
பிளஸ் 2 தேர்வு நடக்கும்போதே இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு உண்டா இல்லையா என்பதை மாணவர்களுக்குத் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். நுழைவுத் தேர்வை ரத்து செய்ய அரசு உண்மையாகவும், உறுதியாகவும் இருந்திருந்தால் நியாயமாக கடந்த மழைக்காலக் கூட்டத் தொடரின்போது சட்டப்பேரவையில் இதற்கான சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்க வேண்டும். அதை அரசு செய்யவில்லை.
சட்டப்பேரவை கூடுவதற்கு 2 நாள்களுக்கு முன்பு நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான அரசு ஆணை துணைநிலை ஆளுநர் சார்பில் வெளியிடப்பட்டது. அரசு ஆணையை வெளியிடும்போது சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர், முதல்வரின் பார்வைக்கு வந்தப் பிறகுதான் துணைநிலை ஆளுநர் வெளியிட்டு இருப்பார். அப்போதாவது முதல்வரும், கல்வியமைச்சரும் தடுத்து இருக்கலாம்.
முக்கியப் பிரச்னைகளில் புதிய முடிவுகள் வெளியிடும்போது சட்டப்பேரவையில் சட்டமாக அறிவிப்பதுதான் சிறந்தது. அதையும் அரசு செய்யவில்லை.எனவே நுழைவுத் தேர்வு ரத்து என்ன ஆனது : பெற்றோர்களிடம் குழப்பம்' கவலை என ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

No comments: