Friday, April 18, 2008

இன்றய செய்திகள் ஏப்ரல் 18th 8.00AM

எறையூரில் மீண்டும் எறையூரில் பதற்றம் !! 15 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது
எறையூரில் நேற்று மீண்டும் 15 வீடுகள் தீப்பிடித்து எரிந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தில் தேவாலயத்தில் வழிபடுவது தொடர்பாக இருபிரிவினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரண மாக கடந்த மாதம் 9ம் தேதி மோதல் வெடித்தது. இதில் வீடுகள் அடித்து நொறுக்கப்பட் டன. போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் பலியாகினர். போலீசார் தொடர்ந் து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இறையூர் கிராமத்தில் வன்னியர் கிறிஸ்தவர்கள் வசிக்கும் கோவில் தெருவில் நேற்று மாலை 4 மணியளவில் ஆரோக்கியசாமி என்பவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் அருகில் உள்ள தொப்பிலி, புஷ்பதெரசா, லூர்துசாமி, ஆரோக்கியதாஸ், லில்லி, அந்தோணிசாமி, லாரன்ஸ் உட்பட 15க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராமலிங்கம் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் அதேபகுதியில் உள்ள கூறை வீடுகளில் தீ விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டதால் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், திருவெண்ணைநல்லூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரவன், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் லீலா, தாசில்தார் கலியபெருமாள், டி.எஸ்.பி.க்கள் முரளி, ஆறுமுகம், ஸ்டாலின், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், அண்ணாமலை, வீரப்பன் உட்பட நூற்றுக்கும் மேற் பட்ட போலீசார் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிலைமையை கட்டுப்பட்டுத்தினர். கடந்த மாதம் 9ம் தேதி இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோத லை தொடர்ந்து வன்னியர் கிறிஸ்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் அடிக்கடி இது போன்ற தீ வைப்பு சம்பவம் நடப்பதாகவும், யாரோ மர்ம ஆசாமிகள் பாஸ்பரஸ் பவுடரை தூவி விடுவதால் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக வன்னியர் கிறிஸ்தவர்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். எனவே மர்ம ஆசாமி களை பிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்து வருவாய் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
பெங்களூர் லால்பாக் போல பிரம்மாண்டமான பூங்கா சென்னையில் டிரைவ் இன் ஓட்டல் இருந்த இடத்தில் கட்ட திட்டம் , மத்திய சிறை இருந்த இடத்தில் பொது மருத்துவமனை விரிவாக்கத்துக்கு வழங்கப்படும் -- முதல்வர் கருணாநிதி அறிவித்தார். .

உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டல் இருந்த பகுதியில் உலகத்
தரம் வாய்ந்த தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். கேள்வி நேரம் முடிந்ததும், பேரவை விதி 110ன் கீழ் ஒரு அறிக்கை தாக்கல் செய்து அவர் கூறியதாவது: சென்னை மத்திய சிறையை புழலுக்கு மாற்றியதால் அங்கு 13.238 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. அதில் ஒரு ஏக்கரை மெட்ரோ ரயில் அலுவலகத்திற்கும், ஒன்றரை ஏக்கர் மெட்ரோ ரயிலுக்கான துணை மின் நிலையம் அமைக்க மின்வாரியத்திற்கு வழங்கப்படும். இதுபோக 10.73 நிலம் உள்ளது. அது சென்னை அரசு பொது மருத்துவமனை விரிவாக்கத்துக்கு வழங்கப்படும். 165 ஆண்டுகள் பழமையான அந்த மருத்துவமனை 2,722 படுக்கைகள் கொண்டது. 2,000 மாணவர்கள் படிக்கும் மருத்துவ கல்லூரியும் இணைந்துள்ளது. தினமும் 12,000 வெளிநோயாளிகள் வருகின்றனர். 30 ஏக்கரில்தான் அது அமைந்துள்ளது. எனவே, 10 ஏக்கர் அளிக்கப் படும்.ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளர்ச்சிக்காக ரூ.100 கோடி அரசு வழங்கியது. அங்கும் இட பற்றாக்குறை இருப்பதால், அருகில் உள்ள பொதுப்பணித்துறை இடம் 10 ஏக்கர் வழங்கப்படும். அண்ணா மேம்பாலம் அருகில் 320 கிரவுண்ட் இடம் உள்ளது. அந்த இடத்தின் இன்றைய மதிப்பு ரூ.1,000 கோடிக்கு மேலாகும். அந்த இடம், வேளாண் தோட்டக்கலை சங்கத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது. அதை பொது நோக்கத்திற்காக திரும்பப்பெற அரசு 1989 ஆகஸ்ட் 5ம் தேதி ஆணையிட்டது. அதை எதிர்த்து, தோட்டக்கலை சங்கம் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் அரசாணையை தள்ளுபடி செய்தது. அரசு மேல்முறையீடு செய்தது. தற்போதைய நிலை தொடர லாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு மனு 2004ல் திரும்ப பெறப்பட்டது. பிறகு, நிலம் முழுவதையும் தோட்டக்கலை சங்கத்திற்கே ஒப்படைக்க 2006 மார்ச் 3ம் தேதி அன்றைய அரசு ஆணையிட்டது. ஆனால், தேர்தலையட்டி அந்த ஆணை நிறைவேற்றப்படவில்லை. கடந்த 2006ல் திமுக அரசு மீண்டும் வழக்கு தொடர வாய்ப்பு கேட்டு மனு செய்தது. உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதை எதிர்த்து தோட்டக்கலை சங்கம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த ஆண்டு மே 16ம் தேதி தள்ளுபடியானது. இதற்கிடையே, அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த 11ம் தேதி, தற்போதைய நிலை தொடர வேண்டும் என்ற தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்தது. அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: அரசுக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதி பெறாமலே உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டலுக்கு, தோட்டக்கலை சங்கம் உள்குத்தகைக்கு விட்டது. 5 ஆண்டு நீட்டிப்பும் செய்தது. கிருஷ்ணமூர்த்தி, தோட்டக்கலை சங்கத்தை தனது சொந்த சொத்து போல் கையாண்டது நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் செலவில் மலர்கண்காட்சி நடத்தியதை தவிர, 20 ஆண்டுகளில் வேறு எந்த முன்னேற்றமும் சங்கத்தால் ஏற்படவில்லை. நிறைய நிதி வசூலித்து குறைந்த செலவு செய்து முறைகேடு நடந்துள்ளது. அரசு இடத்தை கிருஷ்ணமூர்த்தி தனது சொந்த உபயோகத்திற்காக, வாடகை கார் நிறுவனம் நடத்தவும், விளம்பர நிறுவனத்திற்கும் பயன்படுத்துகிறார். எனவே அனைத்து நிலங்களையும் அரசு திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்குத்தகை விட்டதால் கிடைத்த வாடகை முழுவதையும் வசூலிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான, 320 கிரவுண்ட் இடம் 30 ஆண்டுகளுக்கு பின் அரசு வசம் வந்துள்ளது. சென்னையின் இதயம் போன்ற பகுதியில் உள்ள இந்த பெரிய இடத்தில், சென்னை மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பெங்களூரில் உள்ள Ôலால்பாக்Õ போலவும், நீலகிரியில் உள்ள தாவரவியல் பூங்கா போலவும் உலக தரத்திலான சிறப்பு வேளாண் தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.
மதுரை காமராசர் பல்கலை.க்கு புதிய துணை வேந்தர் நியமனம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தராக ஆர்.கற்பக குமரவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பிறப்பித்துள்ளார். இவர் அந்தப் பதவியில் 3 ஆண்டுகள் இருப்பார்.
கலவர பூமியாக மாறிய . குடிமைபொருள் அலுவலகம் கம்யூ. போராட்டம் சூறையில் முடிந்தது
விலைவாசி உயர்வை கண்டித்து நடந்த மறியல் போராட்டத்தின் போது இந்திய கம்யூ., கட்சியினர் ரகளையில் ஈடுபட்டனர். குடிமை பொருள் வழங்கு துறை அலுவலகத்தை சூறையாடிய வன்முறை கும்பல், போலீசாரையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி புதுச்சேரியில் 7 மையங்களில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூ., அறிவித்திருந்தது. அதன்படி புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு மறியல் நடத்துவதற்காக வட்டார செயலாளர் சேதுசெல்வம் தலைமையில் கட்சியினர் கொக்குபார்க் சிக்னல் அருகே நேற்று காலை 10 மணி அளவில் திரண்டனர். பின்னர் 100 பெண் கள் உள்பட 400க்கும்மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை அடைந்தனர். விலைவாசி உயர்வை கண்டித்து நடந்த மறியல் போராட்டத்தின் போது இந்திய கம்யூ., கட்சியினர் ரகளையில் ஈடுபட்டனர். குடிமை பொருள் வழங்கு துறை அலுவலகத்தை சூறையாடிய வன்முறை கும்பல், போலீசாரையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டதுதொடர்ந்து விஸ்வநாதன் எம்எம்எல்ஏ அங்கு வந்து போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினார்.

No comments: