Tuesday, April 29, 2008

செய்திகள் ஏப்ரல் 29 காலை 8.30

இநதிய உலக சாதனை : ஒரே ராக்கெட்டில் 10 செயற்ர்கைக்கோள் செலுத்தப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி.-சி9 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஆயத்தப் பணியில் ஒரு மாதத்திற்கும் மேலாக விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர்பத்து செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி9 ராக்கெட் நேற்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. 20 நிமிடங்களில் 10 செயற்கைக்கோள்களும் அதன் பாதையில் விடப்பட்டன. முதல் முறையாக பத்து செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் வெற்றிகரமாக செலுத்தி இந்தியா அபார சாதனை புரிந்துள்ளது. ராக்கெட் புறப்பட்ட 14.50வது நிமிடத்தில் 3880 கி.மீ. தூரம் பயணித்து கார்ட்டோசாட் 2ஏ செயற்கைக்கோளை பூமியில் இருந்து 635 கி.மீ. உயரத்தில் பிரித்து விட்டது. 45 விநாடிகள் கழித்து ஐஎம்எஸ்-1 பிரித்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் நேனோ செயற்கைக்கோள்கள் பிரித்து விடும் பணி தொடங்கியது.முதலில், டோக்கியோ தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கியூட் 1.7 செயற்கைக்கோளும், கனடா பல்கலைக்கழகத்தின் கேன் எக்ஸ்2-வும், நெதர்லாந்து பல்கலைக் கழகத்தின் டெல்பி சி3யும், டென்மார்க் பல்கலைக்கழகத்தின் ஏஏயூசாட்-2ம், ஜப்பானின் நிஹான் பல்கலைக் கழகத்தின் சீட்ஸ்-ம், ஜெர்மனி பல்கலைக் கழகத்தின் காம்பஸ்-1ம், கனடா பல்கலைக் கழகத்தின் கேன் எக்ஸ் 6ம், ஜெர்மனியின் ரூபின்8 செயற்கைக்கோளும் வரிசையாக அதன் வட்டப் பாதைகளில் பிரித்து விடப்பட்டன. காலை 9.24க்கு செலுத்தப்பட்ட ராக்கெட், சரியாக 9.44க்கு செயற்கைக்கோள்களை பிரித்து விட்டு பணியை முடித்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பப்பட்ட 26வது ராக்கெட் இது. பி.எஸ்.எல்.வி. பிரிவில் இது 13வது ராக்கெட். . செயற்கைக்கோள் செலுத்தும் பணி 20 நிமிடத்தில் நிறைவடைந்ததாக அந்த கட்டுப்பாட்டுதளம் மூலம் தகவல் பெறப்பட்டது. இதையடுத்து, விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் வெற்றியை கொண்டாடினர். விஞ்ஞானிகள் ஒருவரையருவர் கட்டிப்பிடித்தும், கைகுலுக்கியும் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். இந்தியா, முதன்முறையாக ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, அபார சாதனை புரிந்துள்ளது.
வல்சராஜ் மீதான ஊழல் வழக்கு ரத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு
புதுச்சேரி அமைச்சர் வல்சராஜ் மீது, மாகேயை சேர்ந்த சுதாகரன் என்பவர் ஒரு புகார் கொடுத்தார். அதில், மாகே தகவல் தொழில்நுட்ப கூட்டுறவு மைய கவுரவ தலைவராக வல்சராஜ் பணியாற்றினார். அப்போது, கூட்டுறவு சங்கத்துக்கு அதிக விலை கொடுத்து நிலம் வாங்கி ஊழல் செய்துள்ளார். இதனால் கூட்டுறவு சங்கத்துக்கு ரூ.85 லட்சத்து 46 ஆயிரம் இழப்பு ஏற்படுத்தி உள்ளார். எனவே இவர் மீது ஊழல் வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும்Õ என்று கூறியிருந்தார்.இந்த வழக்கில், புலன் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. . இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வல்சராஜ் மனு தாக்கல் செய்தார். .இந்த வழக்கை, நீதிபதி ஜெயபால் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். “கோப்புகளை ஆராய்ந்து பார்க்கும் போது வல்சராஜ் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று தெரிகிறது. . எனவே, வல்சராஜ் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிடுகிறேன்என்று நீதிபதி ஜெயபால் தீர்ப்பு கூறினார்.
வேலை வாய்ப்பு பாடப்பிரிவுகள் கிராம கல்லுரிகளிளரம்பிக்கப்படும் : புதுவை முதல்வர் ரங்க சாமி
புதுவை மதகடிப்பட்டு காமராஜர் கலைக்கல்லூரி ஆண்டு விழா நேற்று நடந்தது. கல்லூரி முதல் வர் வசந்தகுமாரி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் வாசுகி ராஜாராமன் வரவேற்றார். சிறப்பு விருந்தினரா கலந்து கொண்டு முதல்வர் ரங்கசாமி ஆண்டு விழா மலரை வெளியிட்டு பேசியதாவது: புதுச்சேரி கிராமங்களில் கல்லூரிகளை அமைக்க வேண்டும் என்ற எம்.எல்.ஏக்களின் கோரிக்கையை ஏற்று இந்த கல்லூரி தொடங்கப்பட்டது. கல்லூரியின் வளர்ச்சியை பார்க்கும் போது அதிகப்படியான கல்லூரிகளை கிராமங்களில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. உயர்ந்த தரமான கல்வியை அரசு மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. அதே போல் படிப்பதற்கு அதிக வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறோம். இதற்காக மத்திய அரசும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உயர்கல்வி ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைக்க வேண் டும் என்று விரும்புகின்ற அரசாக உள்ளது. கிராம கல்லூரிகளில் வேலை வாய்ப்பை உருவாக்க கூடிய பாடப்பிரிவுகள் ஆரம்பிக்கப்படும் என்று புதுவை முதல்வர் ரங்க சாமி தெரிவித்துள்ளார்.

No comments: