Wednesday, April 30, 2008

செய்திகள் ஏப்ரல் காலை 8.15

பிரதமர் வர்த்தகர்கள்ளுக்கு வேண்டுகோள் : விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஒத்துழைக்க வேண்டும்

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் தில்லியில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசும்போது . விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசியல் கட்சிகள் மட்டுமின்றி தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்தார்.
விலை உயர்வு பிரச்னையில் அரசியல் கட்சிகள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் இதில் ஒருமித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார். இதில் தொழில்துறையினருக்கும் பங்கு உண்டு. குறிப்பாக விலையை நிர்ணயிக்கும் பெரிய தொழில் நிறுவனங்கள் இந்த விஷயத்தில் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.
குறைந்த லாபத்தை மனதில் கொண்டு விலை உயர்வுக்கு துணை போகாமல் நாட்டின் நீண்டகால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அரசுடன் வர்த்தகர்கள் ஒத்துழைக்கவேண்டும். குறுகிய கால லாபத்துக்கு ஆசைப்பட வேண்டாம் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேநேரத்தில் தொழில்துறை மற்றும் வர்த்தகர்களுக்கும் விலை உயர்வைக்கட்டுப்படுத்துவதில் பொறுப்பு உள்ளது. அது அவர்களது சமூக கடமை என்றார் பிரதமர்.
இன்னும் ஒரு மாதத்தில் அரசு மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் வசதி : அமைச்சர் இ.வல்சராஜ்
புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் இதய நோயாளிகளுக்கு ஒரு மாதத்தில் அன்சியோகிரம் வசதி அளிகபடும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் இ.வல்சராஜ் கூறினார்.
சட்டப்பேரவையில் க.லட்சுமிநாராயணன் (புமுகா), ஆ. அன்பழகன் (அதிமுக) ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் வல்சராஜ் இதைத் தெரிவித்தார்.
மாணவர்கள் விரும்பினால் சமூக சேவை செய்யலாம்'
காரைக்காலில் "நமது காரைக்கால் நமது கையில்' எனும் புதிய திட்டத்தை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து, கோடை விடுமுறையில் உள்ள 10 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களை சமூக சேவையில் ஈடுபடச் செய்தது. மாவட்ட ஆட்சியர் ந.வசந்தகுமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வாரத்தில் 5 நாள்கள் மாலை 4 முதல் 6 மணி வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதில், சேவை மனப்பான்மை உள்ளவர்கள் பங்கேற்கலாம். மாணவர்களிடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்படவுள்ளது. பல்வேறு தொழில்சாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்கப்படும். காரைக்காலை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர், இதில், யாருடைய நிர்பந்தமும் இன்றி தானாக முன்வந்து திட்டத்தில் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.என மாவட்ட ஆட்சியர் ந.வசந்தகுமார் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது

கேபிள் டிவியை இனி :புதுவையில் அரசே நடத்தும்: முதல்வர்

புதுச்சேரியில் கேபிள் டிவியை அரசே ஏற்று நடத்தும் என்று முதல்வர் என். ரங்கசாமி கூறினார்.
சட்டப்பேரவையில் இது குறித்து ஆ. அன்பழகன் (அதிமுக) கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் ரங்கசாமி அளித்த பதில்:
புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட 3 கேபிள் டிவி நிறுவனங்கள் உள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 332 ஆபரேட்டர்கள் உள்ளனர். புதுச்சேரி நகராட்சியில் 9,467 இணைப்புகளும், உழவர்கரை நகராட்சியில் 8600 இணைப்புகளும் மொத்தம் 18,067 இணைப்புகள் உள்ளன.என சட்டப்பேரவையில் இது குறித்து ஆ. அன்பழகன் (அதிமுக) எழுப்பிய கேள்விக்கு . முதல்வர் ரங்கசாமி அளித்தார் ஒரு கேபிள் டிவி ஆபரேட்டர் ஒவ்வொரு சந்தாதாரரிடமும் வசூலிக்கும் மாதா சந்தா தொகையில் 10 சதவீதம் கேளிக்கை வரியாக ஆபரேட்டர்களிடம் இருந்து வசூலிக்கிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்குக் கிடைக்கப் பெற்ற வருவாய் ரூ.11,97,840 என்றார் முதல்வர்.
அப்போது குறுக்கிட்ட அன்பழகன், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 3.2 லட்சம் ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. இதில் குறைந்தபட்சம் 2 லட்சம் குடும்பங்களில் கேபிள் இணைப்பு கண்டிப்பாக இருக்கும். அப்படி பார்த்தால் அரசுக்கு ரூ.6 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு வருவாய் கிடைக்க வேண்டும். பயனாளிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் கேபிள் டி.வி. இணைப்புக் கிடைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் (திமுக) பேசுகையில், தமிழகத்தைப் போன்று கேபிள் டிவியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றார்.
இதற்கு முதல்வர் ரங்கசாமி பதில் அளிக்கையில், எம்எல்ஏக்களின் கருத்துகளை ஏற்று கேபிள் டிவியை அரசே ஏற்று நடத்தும் என்றார்.

No comments: