Sunday, April 27, 2008

செய்திகள் ஏப்ரல் 27, 7.40 காலை

இன்னும் உயர்கல்வி ஏழைகளுக்கு எட்டாத் தூரந்தில் தான் உள்ளது 11.6% மாணவர்கள் மட்டுமே உயர்கல்வியில் சேர்கின்றனர்: ப.சிதம்பரம்

உலக அளவில் பள்ளிக் கல்வியை முடித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 23.2 சதவீதமாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் இது 54 சதவீதமாக உள்ளது. நமது நாட்டில் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 11.6 சதவீதமாக உள்ளது. இதனை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 11-வது ஐந்தாண்டு திட்ட கால இறுதிக்குள் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 15 சதவீதமாகவும், 12-வது ஐந்தாண்டு திட்ட கால இறுதிக்குள் 25 சதவீதமாகவும் அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சமூகத்தில் அனைத்து தரப்பினருக்கும் கல்வி வாய்ப்புகள் கிடைக்க இடஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயர் கல்வி பெறுவதற்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசு கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டில் 11.6 சதவீத மாணவர்கள் மட்டுமே உயர் கல்வியில் பயில்வதாக மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
முஸ்லிம் கட்டிக் கொடுத்த இந்து கோயில்: சிதம்பரத்தில் இன்று கும்பாபிஷேகம்

சிதம்பரம்ராதாவிளாகம் கிராமத்தில் அருகே ரூ.13 லட்சம் செலவில் முஸ்லீம் பிரமுகர் ஒருவர் தனது சொந்த செலவில் மாரியம்மன் கோயில் கட்டிக் கொடுத்துள்ளார் . இந்த செல்வமாரியம்மன் ஆலயத்திற்கு ரூ.13 லட்சம் செலவில் புதிய கோவில் கட்டப்பட்டுள்ளது ரூ.13 லட்சம் செலவில் முஸ்லிம் பிரமுகர் ஒருவர் தனது சொந்த செலவில் மாரியம்மன் கோயில் கட்டிக் கொடுத்துள்ளார். அக்கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறுகிறது.
முஸ்லிம் பிரமுகரான சிதம்பரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.முகமது இலியாஸ் (கேம்ப் - பாங்காங்) தனது சொந்த செலவில் இந்த ஆலயத்தை கட்டிக் கொடுத்துள்ளார்.


இந்த ஆலயத்தில் மகா மாரியம்மன், விநாயகர், முருகன் மற்றும் பரிவாரங்களுக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெறுகிறது. நடராஜர் ஆலய பொதுதீட்சிதர் சி.சிவராஜ தீட்சிதர் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தி வைக்கிறார். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை முதல் யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்க வரும் முகமது இலியாஸிற்கு பொது மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது
.
முதல் முறையாக பத்து செயற்கைக்கோள்களுடன் இந்திய ராக்கெட், திங்கள்கிழமை விண்ணில் பாய்கிறது
முதல் முறையாக பத்து செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி9 ராக்கெட், திங்கள்கிழமை விண்ணில் பாய்கிறது.
இந்த ராக்கெட்டில், இந்தியாவின் கார்ட்டோசாட்-2ஏ, ஐ.எம்.எஸ்.-1 ஆகிய இரண்டு தொலை உணர்வு செயற்கைக்கோள்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த எட்டு செயற்கைக்கோள்கள் என மொத்தம் 10 செயற்கைக்கோள்கள் அடங்கியுள்ளன.
செயற்கைக்கோள்களை தாங்கிய படி, திங்கள்கிழமை காலை 9.20 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி - சி9 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.
வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் அனைத்தும் நானோ செயற்கைக்கோள்கள் ஆகும். கனடா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அந்த எட்டு செயற்கைக்கோள்களையும் கட்டமைத்துள்ளன
.

No comments: