Monday, April 21, 2008

செய்திகள் APRIL 21, 2008 7.30 AM

AFT தொழிலாளர்களுக்குப் புதிய ஊதிய உயர்வு வேண்டும்

விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு பஞ்சாலைத் தொழிலாளர்களுக்குப் புதிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி பஞ்சாலை தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இச் சங்கத்தின் கூட்டம் தலைவர் டி.ரவி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஏ.எப்.டி, சுதேசி, பாரதி பஞ்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் ஒரே அகவிலைப்படி வழங்க வேண்டும்.
காலத்துக்கு ஏற்ப பஞ்சாலைகளை நவீனப்படுத்தி, புதிய இயந்திரங்களைப் பூட்ட வேண்டும். உற்பத்தி நிர்ணயம், ஊதிய நிர்ணயம் செய்யும் வகையில் முத்தரப்புக் குழு அமைக்க வேண்டும். ஆள் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களை முழுமையாக இயக்கும் வகையில் தொழிலாளர் வாரிசுகளையும், வேலையில்லாமல் உள்ள இளைஞர்களையும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இக் கோரிக்கையை வலியுறுத்தி இம் மாதம் 22-ம் தேதி சட்டப்பேரவை முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
.

சித்ரா பெüர்னமியன்று பிரத்தியங்கிரா காளிக்கு மஹா ஹோமம்
சித்ரா பெüர்னமியன்று பிரத்தியங்கிரா காளிக்கு மஹா ஹோமம் நடந்தது. மேலும் காளிக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் 108 லிட்டர் பாலாபிஷேகமும் நடந்தது.பிரத்தியங்கிரா பீடாதிபதி ஸ்ரீமத் நடாதூர் ஜனார்த்தன சுவாமிகள் தலைமையில் விழா நடந்தது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிமீண்டும் இல்லை - வாசன் அறிவுப்பு
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய புள்ளியியல் துறை இணையமைச்சர் ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டும். அதன் மூலம் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் அமைப்பதுதான் நமது லட்சியம்' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதன் மூலம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டும் என்ற கட்சியினரின் யோசனைகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் ஜி.கே.மூப்பனார், வாசன் ஆகியோரது விசுவாசிகள் மெல்ல மெல்ல ஓரங்கட்டப்பட்டு வருவதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், மூப்பனார் 12 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மூப்பனார் அனுதாபிகள் மத்தியில் எழுந்தது. குறிப்பாக கோவை பகுதியிலிருந்து இந்தக் கோரிக்கை வலுத்து வருகிறது.
. சென்னை நிகழ்ச்சியில் அவர் சுருக்கமாகக் கூறிய
கருத்து திட்டவட்டமாகவும் அமைந்தது

மே 15-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு

பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரையில் நடைபெற்றது. .
விடைத்தாள் திருத்தும் பணி சில தினங்களில் பூர்த்தியாகிவிடும். அதன் பின் அரசுத் தகவல் தொகுப்பு மையத்துக்கு அனுப்பப்படும். அங்கு கம்ப்யூட்டர் உதவியுடன் எந்தத் தாள் யாருடையது என்று பதிவு செய்து, அத்தாளுக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண் ஆகியவை பதிவு செய்யப்படும். "பிளஸ் 2' தேர்வில் சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், பாதிக்கு மேல் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
தேர்வுத் தாள் திருத்தும் பணி பூர்த்தியாகி, முடிவுகள் முறையாக அறிவிக்கப்படும். தற்போதைய நிலவரப்படி மே 15-ம் தேதி தேர்வு முடிவு வெளியாகலாம் என்கிறார்கள்.

No comments: