Thursday, May 01, 2008

செய்திகள் மே 1 காலை 7.30


உழைக்கும் உலகத்தமிழ் நண்பர்கள்அனைவருக்கும் "மே" தின வாழ்த்துக்கள்.


உழைக்கும் உலகத்தமிழ் நண்பர்கள்அனைவருக்கும் "மே" தின வாழ்த்துக்கள்..
"எட்டுமணி நேரம்" உழைக்கும் தோழர்களுக்கு
எட்டிய நாள் இன்று - வந்தனை செய்வோம் வ சுப்பையா
புதுவைக்கு நல்கிய உழைக்கும் மக்கள் சேவைகளை
உழைப்பாளியின் பெருமை,திறமையை
பாருக்கு எடுத்துரைக்கும் நாள் மே ஒன்று
வாழ்க தொழிலாளர் தினம் -சுகுஜி


கோட்டுச்சேரி சட்டப்பெரவை தொகுதி இனி இல்லை
காரைக்கால் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தொகுதிகள் 6-லிருந்து 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கோட்டுச்சேரி தொகுதி நீக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் 5-ஆக குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, நெடுங்காடு (தனி): நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்திலுள்ள குரும்பகரம், பொன்பேத்தி, புத்தக்குடி, நெடுங்காடு, மேலகாசாகுடி கிராமங்கள், கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்திலுள்ள வரிச்சிக்குடி (வடக்கு), பூவம், திருவேட்டக்குடி, வரிச்சிக்குடி (தெற்கு) கோட்டுச்சேரி கிராமங்கள்
திருநள்ளாறு தொகுதி: திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்திலுள்ள அம்பகரத்தூர், நல்லெழுந்தூர், தேவமாபுரம், சுரக்குடி, சுப்ராயபுரம், கீழாவூர், திருநள்ளாறு, தென்னங்குடி, சேத்தூர், செல்லூர் மற்றும் பேட்டை கிராமங்கள்.
காரைக்கால் வடக்கு: காரைக்கால் நகராட்சி பகுதியிலுள்ள வார்டு எண்கள் 1,2,3,4,5,8 மற்றும் 9.
காரைக்கால் தெற்குத் தொகுதி: காரைக்கால் நகராட்சி பகுதியிலுள்ள வார்டு எண்கள் 6,7,10,11,12,13,14,15,16 மற்றும் 17.
நிரவி திருப்பட்டினம் தொகுதி: நிரவி கொம்யூன் பஞ்சாயத்திலுள்ள விழுதியூர், கீழமனை, நிரவி கிராமங்கள், திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்திலுள்ள திருப்பட்டினம், கீழையூர் (வடக்கு), கீழையூர் (தெற்கு), போலகம், வாஞ்சூர் கிராமங்கள், மற்றும் காரைக்கால் நகராட்சிக்குள்பட்ட வார்டு எண் 18.
காரைக்கால் நகராட்சி வார்டுகள் எதுவும் பிரிக்கப்படவில்லை என்று தெரிவித்த ஆட்சியர், தேர்தலின்போது 2 கி.மீ தொலைவுக்கு போலீஸ் பூத் அமைக்கப்படும் என்றார்.
மே தினம்: முதல்வர் என். ரங்கசாமி வாழ்த்து
மே தினத்தையொட்டி புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
தொழிலாளர்களின் நலனும் உரிமையும் காப்பதில் இந்த அரசு தொடர்ந்து தனிக்கவனம் செலுத்தி வருகிறது. புதுச்சேரி மக்களுக்குக் குறிப்பாக உழைக்கும் தொழிலாளர்களுக்கு உளம் கனிந்த மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பொதுமக்கள் அரசியல் கட்சிகளின் வருமான வரிக் கணக்கு விவரத்தை பெறலாம்: மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பு
அரசியல் கட்சிகள் தாக்கல் செய்யும் வருமான வரிக் கணக்கு விவரங்களை, பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் அமைப்பு கோரியிருந்தது. வரவு செலவு விவரத்தை அரசியல் கட்சிகள் வெளியிடுவதைக் கட்டாயமாக்கும் சட்டம் ஏதும் இல்லை. அரசியல் கட்சிகள் சமர்ப்பிக்கும் வருமான வரிக் கணக்கு விவரங்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், பொதுமக்கள் கேட்டு பெறலாம் என்று மத்திய தகவல் ஆணையர் கூறியுள்ளார்.
இந்திய ஐ.டி சந்தை 2 லட்சம் கோடி ரூபாய 2012ல் அடையும்
2012ல் இந்திய ஐ.டி சந்தை 2 லட்சம் கோடி ரூபாய எட்டும்தகவல் தொழில் நுட்பம் மற்றும் அவை தொடர்பான சேவைகள் (ஐடிஈஎஸ்) சந்தை கடந்த ஆண்டு (2007) இந்த சந்தை ரூ. 90 ஆயிரத்து 14 கோடியாக இருந்தது வரும் 2,012 ஆண்டுவாக்கில் 2 லட்சம் கோடி ரூபாய ஆகும் என்று தெரிய வந்துள்ளது. நடப்பு ஆண்டில் ஐ.டி, ஐடிஈஎஸ் தொழில் 20 சதவீதம் அளவுக்கு உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஐடி மற்றும் ஐடிஈஎஸ் ஏற்றுமதி சந்தை கடந்த ஆண்டில் ரூ.1,56,594 கோடியாக இருந்ததாகவும், 2012ல் இது இரு மடங்காக அதாவது ரூ. 3,20,278 கோடியாக உயரும் என்றும அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

No comments: