Saturday, May 10, 2008

செய்திகள் மே 10 காலை 7.45 மணி

பிளஸ் 2 : அரசு அறிவித்த முதலிடங்கள்

தமிழைப் பாடமாக எடுத்தவர்களில் முதல் ரேங்க் பெற்றவர்களே பிளஸ் 2' தேர்வில் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்படுவது வழக்கம் என்பதால்"முதலிடத்தை நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வித்யா விகாஷ் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். தாரணி 1200-க்கு 1182 மதிப்பெண் அதே மதிப்பெண் பெற்று செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.ராஜேஷ் குமாரும் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இருவரும் தமிழை மொழிப் பாடமாக எடுத்து பிளஸ் 2 படித்தவர்கள்.
ஈரோடு கே.கே.என். அரசு மேல்நிலைப் பள்ளி ஏ.ரம்யா, நாமக்கல் வரகராம்பட்டி வித்யா விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தளபதி குமார் விக்ரம் ஆகியோர் 1181 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை வகிக்கின்றனர்.
1180 மதிப்பெண் பெற்ற நாமக்கல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.தீபா மூன்றாம் இடத்தில் வந்துள்ளார்.
மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவிகளில் 87.3 சதவீதம் பேரும், மாணவர்களில் 81.3 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
டாஸ்மாக் முலம் ரூ. 8,800 கோடி வருவாய் ஓராண்டு சாதனை

உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை குறித்த அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் வருவாய் அளவு ரூ. 7,473 கோடி. ஓராண்டில் மட்டும் ரூ.1,343 கோடி கூடுதல் வருவாய் அரசுக்குக் கிடைத்துள்ளது. இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுவகைகள், பீரின் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளன. 2006-ம் ஆண்டு மே நிலவரப்படி, 6,699 சில்லறை மதுபான விற்பனைக் கடைகளை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் நடத்திக் கொண்டிருந்தது. தமிழகத்தில் தற்போது 6,800 "டாஸ்மாக்' கடைகள் இயங்கி வருகின்றன. மொத்தம், 33,300 பணியாளர்கள் கடைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்படிதான் இருக்கவேணும் அரசுபள்ளிகள்-- முதல் 3 அரசு பள்ளிகள்
புதுச்சேரி சுசிலாபாய் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 94.79 சதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மிஷன் வீதி வ.உ.சி. மேல்நிலைப் பள்ளி 91.30 சதம் தேர்ச்சி அடைந்துள்ளது. லப்போர்த் வீதி திருவள்ளுவர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 90.77 சதம் தேர்ச்சி அடைந்துள்ளது.
சுல்தான்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி 20.59 சதம் மட்டும் தேர்ச்சி அடைந்துள்ளது. பிளஸ்டூ தேர்வில் குறைவான தேர்ச்சி சதம் பெற்ற பள்ளி இதுதான்.

நகரப் பகுதிக்கு பாண்டிச்சேரியா புதுச்சேரியா : என்ன பெயர் பிரச்னனை

புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்றம் பொதுச்செயலர் எல்லை. சிவக்குமார் வெளியிட்ட அறிக்கையில் நகரப் பகுதிக்கு பாண்டிச்சேரிக்குப் பதிலாக புதுச்சேரி என்று பெயர் அழைக்கும் அரசு ஆணையை வெளியிட வேண்டும் என கூறியுள்ளார்
பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டு வந்த பெயர் புதுச்சேரி என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு தமிழ் அமைப்புகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் வலியுறுத்தி வந்தனர்.
சட்டமன்றத்திலும் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு புதுச்சேரி என்ற பெயரை மாற்ற உள்துறை இலாகவின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும்போது ஒட்டுமொத்த பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என்று மாற்றப்பட்டுள்ளதாகவும், பாண்டிச்சேரி நகரப் பகுதி பாண்டிச்சேரி என்றே அழைக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுலாத்துறை பாதிக்காமல் இருக்க இப்படி செய்ததாகக் கூறினார்கள்.
பாண்டிச்சேரி நகரப் பகுதியின் பெயரை புதுச்சேரி என்று பெயர் மாற்றம் செய்ய தடையாக உள்ளது எது? என்பதை முதல்வர் ரங்கசாமி விளக்க வேண்டும். புதுச்சேரி சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நகரப் பகுதிக்கு பாண்டிச்சேரி என்று நீடிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதா?
புதுச்சேரி என்ற பெயர் மாற்றினால் சுற்றுலா வளர்ச்சி பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டு பெயர் மாற்றக் கூடாது என்ற ஆலோசனையை வழங்கியவர்கள் மத்திய உள்துறை அமைச்சகமா? அல்லது புதுச்சேரி அரசின் தலைமைச் செயலகமா அல்லது சட்டத்துறையா என்பதை அரசு சார்பில் முதல்வர் ரங்கசாமி அறிவிக்க வேண்டும்.
புதுச்சேரி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் உடனடியாக முதல்வர் ரங்கசாமி பாண்டிச்சேரி நகரப் பகுதியை புதுச்சேரி என்று அழைக்க அரசாணை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார் சிவக்குமார்.

அரசின் இலவச அரிசி வழங்கும் திட்டத்துக்குக் கூடுதல் செலவு : மத்திய தணிக்கைக் குழு புகார
புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை வாயிலாக இலவச அரிசி திட்டத்தை அமல்படுத்தியது. அதற்காக மத்திய அரசு அளித்த அரிசியை ரேஷன் கார்டுகளுக்குக் கொடுக்க பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் ரூ.11.21 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. தகுதியற்ற மாணவர்களுக்கு ரூ.28.97 லட்சம் அளவுக்கு கல்வி உதவித்தொகையை துறை வழங்கியது மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் ரூ.17.11 லட்சம் மிகையாகக் கொடுக்கப்பட்டுள்ளதுஇதனால் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கைக் குழு அறிக்கையில் கூறியுள்ளது.

No comments: