Sunday, May 11, 2008

செய்திகள் மே 11 காலை 7.30 மணி

பரூக் அப்துல்லா எச்சரிக்கை :சீனாவிடம் இந்தியா கவனமாக இருக்க வேண்டும்
"ஜம்மு காஷ்மீரில் அமைதி' என்ற தலைப்பில் ஜம்முவில் சனிக்கிழமை நடபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசியபோது பரூக் அப்துல்லா இந்தியாவுக்கு சீனா அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, அந்நாட்டிடம் இந்தியா எப்போதும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்
இந்தியாவுக்கு மிக நெருக்கமாக தனது அணு நீர்மூழ்கி கப்பல் தளத்தை சீனா அமைத்துள்ளது. இதைச் செயற்கைக்கோள் தெளிவாக படம்பிடித்து அனுப்பியுள்ளது. சீனா அதன் பாதுகாப்பு விஷயத்தில் மிகக் கவனமாக உள்ளது. இதுபோன்ற சீனாவின் நடவடிக்கையை இந்தியா அலட்சியப்படுத்திவிடக் கூடாது. இந்தியாவும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பரூக் அப்துல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.
அருணாச்சலத்தின் மீது ஆதிக்க முயற்சி: திபெத்தை சீனா ஆக்கிரமித்த போது அதை இந்தியா கண்டு கொள்ளவில்லை. இதனால் திபெத்தின் மீதான சீனாவின் ஆளுமை வலுவடைந்துள்ளது. அதுபோல அருணாச்சல பிரதேச மாநிலத்தின் மீதும் உரிமை கொண்டாடும் முயற்சியில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த விஷயத்திலும் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றார்.
அணுசக்தித் திட்டம் நாட்டிறகு வலுசேர்க்கும் - கலாம்

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நாட்டிறகு வலுசேர்க்கும் என்று கலாம் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் கருத்தை வரவேற்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அறிவார்ந்தவர்களின் குரலை நாடே கூர்ந்து கவனிக்கும் என தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் நாட்டின் அணுசக்தித் திட்டத்துக்கு வலுசேர்க்கும் என்று கலாம் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இத்திட்டம் தேச ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் என்று கூறப்படுவதையும் கலாம் நிராகரித்தார். கலாமின் கருத்தை வரவேற்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், "நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானியான கலாம், பொக்ரான் அணுகுண்டு சோதனை உள்ளிட்டவற்றில் மிகச் சிறந்த பங்களிப்பை ஆற்றியுள்ளார்.' அவரை போன்ற அறிவார்ந்தவர்களின் குரலை மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றார் மன்மோகன் சிங்.
காரைக்காலில் கேந்திரிய வித்யாலயாக்கு 10 ஏக்கர் நிலம் புதுவை அரசு தரும்

காரைக்கால் MLA நாஜிம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கேந்திரிய வித்யாலயாக்கு புதுச்சேரி அரசு 10 ஏக்கர் நிலம் தர வேண்டும் என்று கேந்திரிய வித்யாலா இயக்குநரகம் வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுவை முதல்வர் என். ரங்கசாமியிடம் தெரிவித்தபோது, கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க காரைக்காலில் 10 ஏக்கர் நிலம் தருவதாக முதல்வர் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஒப்புதல் கடிதத்தை கேந்திரிய வித்யாலயாவின் ஆணையருக்கு அனுப்பும்படி புதுவை கல்வித் துறை இயக்குநரை முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார் என்று நாஜிம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் + ௨ தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர் அரவிந்துக்கு முதல்வர் பாராட்டு
புதுச்சேரி மாநில அரசுப் பள்ளிகள் அளவில் காரைக்கால் தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ். அரவிந்த் 1200-க்கு 1171 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார்.
இவருக்கு புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் ஆகியோர் தொலைபேசி மூலம் பேசி தமது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
புதுவை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம், மாணவரின் இல்லத்துக்கு சனிக்கிழமை சென்று அவருக்கு சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார்.
அரசின் செயல் முறை சரியாக இருந்தால் தான் புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கிடைக்கும் : எம்.பி. ராமதாஸ்
செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசினார் அப்போது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று இப்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை சிறப்பு மாநில அந்தஸ்து கோரிதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை 8 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் உண்மையில் புதுச்சேரி அரசுக்கு அக்கறை இருந்தால் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தத் தீர்மானத்தை உள்துறை அமைச்சகத்துக்கு மட்டும் அனுப்பினால் போதாது. பிரதமர் அலுவலகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தொடர்பான பிரச்னையில் ஒரு கொள்கை முடிவை எடுக்க வேண்டும். அதற்காக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் சேர்ந்து இக் கொள்கை முடிவை எடுக்க வேண்டும். அதற்கு புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மாநில அந்தஸ்து அளிக்கக் கோரும் தீர்மானத்தை மட்டும் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தால் போதாது. அத்துடன் மாநில அந்தஸ்து கொடுத்தால் புதுச்சேரிக்குக் கிடைக்கும் நிதி ஆதாரம், வளர்ச்சி போன்றவை குறித்த ஒரு சாத்தியக்கூறு அறிக்கையை இணைத்து அனுப்ப வேண்டும். இதற்காக ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் பொருளாதார நிபுணர்களையும் உள்படுத்த வேண்டும். இது தொடர்பாக தேவையான தகவல்களைக் கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.
புதுச்சேரியில் இருந்து வரும் கடிதங்களில் எதாவது தவறு இருக்கும் என்றுதான் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் அந்தக் கடிதத்தைப் படிக்கின்றனர். அது போன்ற நிலையில் மாநில அந்தஸ்து தொடர்பான சாத்தியக் கூறு அறிக்கை இல்லாமல் தீர்மானத்தை மட்டும் அனுப்பி வைத்தால் எந்தப் பயனும் இல்லை. என்றார் ராமதாஸ்
புதுச்சேரிக்கு மழை நிவாரணமாக ரூ.7.68 கோடி -மத்திய அரசு

மக்களவை உறுப்பினர் பேராசிரியர் மு.ராமதாஸ் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசும்போது புதுச்சேரிக்கு மழை நிவாரணமாக ரூ.7.68 கோடியை மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளது புதுச்சேரியில் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெய்த மழையின் காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. இது தொடர்பாக மத்திய குழு சேதங்களைப் பார்வையிட்டுச் சென்றுள்ளது. இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரிக்கு மழை நிவாரணமாக ரூ.7.68 கோடியை அனுமதித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி அரசுக்கு அடுத்த வாரம் அரசு ஆணை வரும்என்றார் ராமதாஸ்.

No comments: