Friday, May 23, 2008

இந்த செய்திகள் இன்று வாசித்தும் அதில் என்னை பாதித்தும் ஆகும்மே 23 காலை 1040 மணி

இந்த செய்திகள் இன்று வாசித்தும் அதில் என்னை பாதித்தும் ஆகும் .
இவை தினமணி, தினகரன் தமிழ் பதிப்பில் இன்று வந்தவையில் சில .
இந்த தினசரி நாளிதழ்களுக்கு நன்றி .
இந்த குறிப்புகள் யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல


பெட்ரோல் விலை உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று அவசர கூட்டம் --- லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்கலாம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 135
டாலரை தாண்டி விட்டது. இதற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை
உயர்த்தாததால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒருநாளைக்கு 450
கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. இதனால் எண்ணெய்
நிறுவனங்கள் கடனில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடன்
பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா இன்று ஆலோசனை
நடத்துகிறார். இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில்
மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக முடிவு
எடுக்க, மத்திய அமைச்சரவை இன்று அவசரமாக கூடுகிறது. பெட்ரோல்,
டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்த இந்தக் கூட்டத்தில் முடிவு
எடுக்கப் படும் என்று தெரிகிறது. பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு
ரூ.16.34, டீசல் லிட்டருக்கு ரூ.23.49, சமையல் காஸ் சிலிண்டருக்கு
ரூ.305.90, மண்ணெண்ணெய்க்கு ரூ.28.72 நஷ்டம் ஏற்படுகிறது.
நிர்வாக செலவுகளை சமாளிக்க 3 எண்ணெய் நிறுவனங்களும் மாதம்
ரூ.3,500 கோடி கடன் வாங்க வேண்டியுள்ளதாக எண்ணெய் நிறுவன
வட்டாரம் தெரிவிக்கிறது.

நம புஷ் பெரியண்ணா கச்சா
எண்ணெய் விலை பேரலுக்கு 135
டாலரை தாண்டி போனதற்கு
இந்தியாதான் காரணம் என்றார் .நம்ம
ப சி அண்ணா கச்சா எண்ணெய்
விலை உயர்வைச் சமாளிக்க, அரசு
போக்குவரத்தை மக்கள் அதிகம்
பயன்படுத்த வேண்டும் என்று
மக்களுக்கு அட்வைஸ் செய்கிறார் “

முட்டை விலை கிடுகிடு உயர்வு ரூ.1.90 ஆனது

இன்று நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் விலை மேலும் 15
காசுகள் உயாந்து உள்ளது. ஒரு முட்டையின் விலை 190 காசாக
நிர்ணயம் செய்யப்பட்டது. நாமக்கல் மண்டலத்தில்
கோடைவெப்பம் கடுமையாக உள்ளதால், முட்டையின் உற்பத்தி
வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் 40 லட்சம் முட்டைகள் வரை
உற்பத்தி குறைந்து உள்ளது. இதனால் முட்டையின் விலை கிடுகிடு
வென உயர்ந்து வருகிறது. நாமக்கல்லில் நேற்று கூடிய தேசிய
முட்டை ஒருங்கிணைப்புகுழுவின் விலை நிர்ணய குழு கூட்டத்தில் ஒரு
முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 190 காசுகளாக நிர்ணயம்
செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. கடந்த வாரம்
முட்டை ஒன்றின் விலை 165 காசுகளாக இருந்தது.

ஜெர்மன் வங்கியில் இந்தியர்கள் கறுப்புப் பணம்: பதுக்கிவைத்து வரி ஏய்ப்பு : விசாரணை நடைபெறுவதாக சிதம்பரம் தகவல்

ஜெர்மனி அருகே உள்ள லீக்டென்ஸ்டைன் நாட்டில் உள்ள
ஜெர்மனிக்கு சொந்தமான எல்டிஜி வங்கியில் கறுப்புப் பணத்தை பதுக்கி
வைத்துள்ள இந்தியர்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஜெர்மன் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு
விவரங்களை கேட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 10-ம் தேதி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் ஜெர்மன்
வங்கியில் கறுப்புப் பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்கள்
தொடர்பான செய்தி வெளியானது. ஆஸ்திரியாவுக்கும்
சுவிட்சர்லாந்துக்கும் இடையே உள்ள ஒரு சிறிய நாடு லீக்டென்ஸ்டைன்.
இங்குள்ள வங்கியில் இந்தியர்கள் சிலர் பெரிய அளவில் கறுப்புப்
பணத்தை பதுக்கிவைத்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக செய்தி வெளியானது.

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, இந்த விஷயத்தில்
உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர்
மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். இந்த விவகாரம் தொடர்பாக நிதி
அமைச்சர் சிதம்பரம், தில்லியில் நிருபர்களிடம் கூறியது:

கறுப்புப் பணம் பதுக்கல் தொடர்பாக மத்திய அரசு மிகக் கடுமையாக
நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக ஜெர்மன்
அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு விவரங்கள் கேட்டறியப்பட்டு கடிதம்
எழுதப்பட்டுள்ளது. முறைப்படி கேட்டுக்கொண்டால் அந்த வங்கியில் முதலீடு செய்துள்ள ஜெர்மன் நாட்டைச் சாராத 800
பேருடைய விவரங்களை தரத் தயாராக உள்ளதாக ஜெர்மன் நிதி
அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு இந்த விவகாரத்தில்
கடுமையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றார் சிதம்பரம்.

“சிவாஜி படம் பார்த பிறகு இந்த முடிவு வந்திருக்குமோ”


கருத்துக் கணிப்பு கர்னாடகாவில் பாஜகவுக்குபெரும்பான்மை'

: பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களைக்
கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று தேர்தல் முடிவுகள் குறித்த வாக்குக்
கணிப்பு தெரிவிக்கிறது. மொத்தம் உள்ள 224 சட்டப்
பேரவைத் தொகுதிகளிலும் பாஜகவுக்கு 114 இடங்கள் வரை
கிடைக்கும் என்று அந்தக் கணிப்பு தெரிவிக்கிறது. தனிப்
பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை
என்பது குறிப்பிடத்தக்கது. சுவர்ண கன்னட தொலைக்காட்சி
நிறுவனமும், சி போர்ஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து
கருத்துக் கணிப்பு மற்றும் வாக்குக் கணிப்பை நடத்தின.

மூன்று கட்டத் தேர்தலிலும் வாக்குப் பதிவுக்கு முந்தைய கருத்துக்
கணிப்பும், வாக்குப் பதிவுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புமாக இரு
கட்டங்களாக இது நடத்தப்பட்டது.

No comments: