Monday, May 12, 2008

செய்திகள் மே 12 காலை 7.30 மணி

இந்த ஆண்டு தமிழகத்தில் மின வெட்டு இருக்காது!': ஆர்க்காடு . வீராசாமி தகவல்
தமிழகத்தில் தற்போது காற்றாலைகள் மூலம் 1000 முதல் 1800 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக தமிழகத்தில் மே 15ஆம் தேதிக்குப் பிறகுதான் காற்றாலை மூலம் மின் உற்பத்தி தொடங்கும். ஆனால், இந்தாண்டு ஏப்ரல் 27ஆம் தேதி முதலே மின் உற்பத்தி தொடங்கி விட்டது.
காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி தொடங்கி விட்டதால், இனி வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் பெற தேவையில்லை. தமிழகத்தை 6 மண்டலமாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு நாள் விடுப்பு வழங்கும் திட்டம் மார்ச் மாதம் முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.
மின் உற்பத்தியில் தற்போதுள்ள இதே நிலை நீடிக்குமேயானால் தொழிற்சாலைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த சுழற்சி முறையிலான விடுப்பு திட்டம் விரைவில் ரத்து செய்யப்படும். காற்றாலை மூலம் மின் உற்பத்தி தொடங்கி விட்டதால், மே 30 - க்குப் பிறகு தமிழகத்தில் மின் தடையே இருக்காது. பல பகுதிகளில் தொடர்ந்து மின் தடை ஏற்படுவது குறித்து கண்காணிப்புப் பொறியாளருடன் ஆலோசனை நடத்தியதில், பல இடங்களில் மின் மாற்றிகள், பீடர்கள் பற்றாக்குறை இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதை நிவர்த்தி செய்வதற்கு ரூ. 2000 கோடி செலவாகும் என்றார் வீராசாமி.

மக்களின் கஷ்டம் புரியாதவர் சிதம்பரம் ஜெயலலிதா தாக்கு

ஒட்டுமொத்த குறியீட்டெண் அடிப்படையில் விலைவாசி 7.61 சதவீதம் உயர்ந்திருப்பதாக அரசின் பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். இடைத்தரகர்கள், சில்லரை வணிகர்களைக் கடந்து சாமானிய மக்களை அடையும்போது இந்த உயர்வு 30 சதவீதமாக இருக்கும். இதில் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை என்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கூறுகிறார். சாமானிய மக்களின் கஷ்டங்கள் அவருக்குப் புரியவில்லை
சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பேருந்துகளில் மறைமுகக் கட்டண உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் அப்பாவி மக்கள் மீது 40 சதவீத விலைவாசி உயர்வு சுமத்தப் பட்டுள்ளது.
அமெரிக்காவின் கொள்கைகள் காரணமாகத்தான் இந்தியாவில் விலைவாசி உயர்ந்திருப்பதாக ஏப்ரல் முதல் வாரத்தில் சொன்ன சிதம்பரம், ""பன்னாட்டு விலைவாசி உயர்வால்தான் இங்கு விலைவாசி உயர்ந்திருக்கிறது'' என்று ஏப்ரல் 16-ஆம் தேதி தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டார்.
சிதம்பரம் இவ்வாறு முரண்பட்ட தகவல்களைக் கூறிக் கொண்டிருந்த போதிலும், பிரதமராக இருக்கும் பொருளாதார வல்லுநர் மன்மோகன் சிங் அமைதி காத்து வருவது அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.
.
சிதம்பரத்தின் முரண்பட்ட அறிக்கைகள் அவருடைய பலவீனத்தைக் காட்டுவதாக இருக்கிறது. இதுபோன்ற அறிக்கைகள் மக்களின் வயிற்றை நிரப்ப உதவாது. உறுதியான நடவடிக்கைதான் இப்போதைய தேவையே தவிர, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பணவீக்கம் தொடர்பான கொள்கைகளால் எதுவும் முடியாது.
இந்தியர்கள் அதிகம் சாப்பிடுவதால்தான் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் சொன்னதற்கு எதிர்ப்பைக் காட்டும் துணிச்சல் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், நிதியமைச்சர் சிதம்பரத்துக்கும் இல்லை.
இந்திய மக்களைப் பற்றி கூறிய கருத்துகளால் தனக்கு அறிவார்ந்த தன்மை இல்லை என்பதை அமெரிக்க அதிபர் காட்டிக் கொண்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காததன் மூலம், தங்களுக்கு முதுகெலும்பு இல்லை என்பதை இந்தியத் தலைவர்கள் காட்டிவிட்டனர். என்று அறிகையில் கூறியுள்ளார் புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்துதான் சரியாய் இருக்கும் நாராயணசாமி கருத்து

செய்தியாளர்களிடம் மத்திய திட்டத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமை கூியதாவது
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பதை நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது ஏற்றுக் கொண்டார். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சவாண் இதற்கான சட்டவரையறை கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். அதற்குள் ஆட்சிக் காலம் முடிந்துவிட்டதால் அது நிறைவேறாமல் போனது.
இப்போது புதுச்சேரியின் வருவாய் நிலையைக் கருத்தில் கொண்டால் சிறப்பு மாநில அந்தஸ்து கொடுத்தால்தான் வளர்ச்சி காண முடியும்.
உள்கட்டமைப்பு வசதிகள், தொழிற்சாலைகள், சுற்றுலா வளர்ச்சி, சிறப்புப் பொருளாதார மண்டலம் போன்றவற்றில் புதுச்சேரி வளர்ச்சி அடைந்தால் மாநில அந்தஸ்து பெற முடிவு செய்யலாம். அதுவரை சிறப்பு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். அதற்காக புதுச்சேரி அரசு ஓர் அறிக்கை தயார் செய்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டப்பேரவையில் இது தொடர்பாக சட்டம் கொண்டு வந்து நுழைவுத் தேர்வை ரத்து செய்துள்ளனர். அது போன்றுதான் புதுச்சேரியிலும் செய்ய வேண்டும். நுழைவுத் தேர்வு ரத்து தொடர்பாக சட்டப்பேரவையில் மசோதா கொண்டு வந்தால் அதற்கு ஒப்புதல் கொடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் தயாராக இருக்கிறது என்றார் நாராயணசாமி.
அமைச்சர் மல்லாடியை பதவி பறிக்க பட வேண்டும் அன்பழகன் கோரிக்கை

செய்தியாளர்களிடம் அதிமுக செயலரும் எம்எல்ஏவுமான ஆ.அன்பழகன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக அரசு சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பதவியில் நீடிக்கக் கூடாது. அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக சட்டப்பேரவையில் அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எதிர்த்தார். அதனால் ஒருமனதாக இத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை. பெரும்பான்மை எம்எல்.ஏக்களின் கருத்து அடிப்படையில்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்குச் சிறப்பு மாநில அந்தஸ்தோ அல்லது மாநில அந்தஸ்தோ எதுவும் கொடுக்கக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியவர் இந்த மல்லாடி. அரசு எடுக்கும் முடிவை எதிர்க்கக் கூடியவர் எப்படி அமைச்சராக பதவியில் நீடிக்க முடியும்? அதனால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். நம் நாட்டில் இது போன்று எந்த மாநிலத்திலும் அரசின் முடிவை ஓர் அமைச்சர் எதிர்த்தது கிடையாது. என்றார் அன்பழகன்
கம்பன் விழா இனிது முடிந்தது .
முன்று நாள் கம்பன் விழா இனிது முடிந்தது .நேற்று அரங்கம் நிரம்பியது . இனி புதுவைவில் பல பேர் புதிதாக கம்பராமாயணம் படிக்காரமிப்பார்கள் என்பது நிச்சியம். சிறந்த முறையில் நடைபெற்ற ஏற்பாடுகளை மக்கள் பாராட்டினர்

No comments: