Monday, May 05, 2008

செய்திகள் மே 5 காலை 7.30

உணவு விலைவாசி உயர்வுக்குக் இந்தியாதான் காரணம் : ஜார்ஜ் புஷ் கருத்து "கொடூரமான ஜோக்': பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனி

இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினரும் சர்வதேச அளவில் உணவு விலைவாசி உயர்வுக்குக் காரணம் என அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் அதிபர் ஜார்ஜ் புஷ் குறிப்பிட்டார் . இதற்கு இந்தியாவில் பலத்த எதிர் குரல் எழுந்துள்ளது ஜார்ஜ் புஷ் கருத்து குறித்து பிரதமர் மன்மோகன் சிங் மெüனம் சாதிப்பது வெட்கக் கேடானது என பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது. முன்பு வெடிகுண்டு சோதனையாளராக (பாம் இன்ஸ்பெக்டர்) இருந்த புஷ் தற்போது உணவு சோதனையாளராக (பிரெட் இன்ஸ்பெக்டர்) மாறியுள்ளார். இந்தியர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பது பற்றிப் பேச அமெரிக்காவுக்குத் தகுதி இல்லை. இது போன்ற தலையீடுகளை இந்தியா பொறுத்துக் கொள்ளாது. புஷ்ஷுக்கு மத்திய அரசு தகுந்த பதிலளிக்க வேண்டும் என்றார்.
விலைவாசி உயர்வுக்கு இந்தியர்களும் காரணம் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியிருப்பது "கொடூரமான ஜோக்' என பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனி கூறினார். திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சர்வதேச அளவில் விவசாய நிலங்களை வர்த்தக உபயோகத்துக்காக பெரிய அளவில் மாற்றியதன் காரணமாக உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உணவுப் பற்றாக்குறைக்கு அமெரிக்காவின் கொள்கைகளும் காரணமாகும். குறைகூறுபவர்கள், விவசாய நிலங்களை மற்றவற்றுக்குப் பயன்படுத்தக் கூடாது. அமெரிக்கா உள்பட எல்லா நாடுகளும் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். அரிசி, கோதுமை ஆகியவற்றின் உற்பத்தி நமது நாட்டில் குறைந்துள்ளது என்பதும் உண்மை என்றார் அவர்.
இந்திய ஏற்றுமதி 26 சதவீதம் உயர்துளது மதிப்பு ரூ. 65,710 கோடி

இந்தியாவின் ஏற்றுமதி ரூ. 65,710 கோடியை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 26 சதவீதம் அதிகமாகும். ஏற்றுமதி அதிகரித்துள்ள அதேவேளையில் இறக்குமதி பலமடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரையான காலத்தில் இந்தியாவின் இறக்குமதி ரூ. 9,49,133 கோடியாகும்.
அப்பாடா ! மன்மோகன் சிங நிம்மதி

மத்திய ஆட்சியில் தே.மு.தி.க. பங்கு பெற வேண்டும் என்றோ, பிரதமர் பதவியைப் பிடிக்க வேண்டும் என்றோ எனக்கு ஆசை கிடையாது. விஜயகாந்த் டெல்லி பேச்சு
தமிழர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டியது முக்கியம். அந்த வகையில் தமிழ் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் செயல்படும் மத்திய அரசுக்கும், தேசியக் கட்சிக்கும் தே.மு.தி.க.வின் ஆதரவு கிடைக்கும் என்றார் . கொடுமைக ங !!
புதுவையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கியுள்ள நிதியும் அதிகாரமும் போதுமானதாக இல்லை: . ராமதாஸ் எம்.பி

புதுச்சேரி மக்களவை உறுப்பினர் பேராசிரியர் மு. ராமதாஸ் .அறிக்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரமும், நிதியும் வழங்கியுள்ளதாக புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளது திருப்தியாக இல்லை. உள்ளாட்சி உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்தியும், நகராட்சி, கொம்யூன், பஞ்சாயத்து, கிராமப் பஞ்சாயத்து ஆகியவற்றுக்குக் குறைந்த அளவு நிதி உதவியும் உயர்த்திக் கொடுத்துள்ளார் முதல்வர்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் சொல்லி இருப்பதைப் போன்று புதுச்சேரி அரசு நியமித்துள்ள 2-வது மற்றும் 3-வது நிதிக்குழு, மேலும் ராமநாதன் குழு பரிந்துரை செய்தப் பணிகளைப் பிரித்துக்கொடுக்க வேண்டும் என்பதுதான் நியாயமான நடவடிக்கை.
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணிசங்கர் அய்யருடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி பஞ்சாயத்து பணிகள், அதற்கான வரைபடம் எதையும் இந்த அரசு ஏற்பாடு செய்யவில்லை.
எல்லா அதிகாரத்தையும் தன் கையில் வைத்துக் கொண்டு யாருக்கும் அதிகாரத்தைப் பிரித்துக் கொடுக்க மாட்டேன் என்று செயல்படுவது சர்வாதிகார போக்காகும். உள்ளாட்சிகளுக்குப் பணியையும், பணியாளர்களையும், அதற்கான நிதியையும் வழங்க வேண்டியது அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி புதுச்சேரி அரசின் கடமையாகும்.
தற்போது புதியதாகப் பதவியேற்றுள்ள துணைநிலை ஆளுநர், புதுச்சேரி தலைமைச் செயலரைச் சந்தித்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரங்களை உண்மையாகப் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். என்று கூறியுள்ளார்

No comments: