Tuesday, May 20, 2008

செய்திகள் வாசித்தும் பாதித்தும் மே 21 காலை 7 மணி

சென்னைக்கு இன்னுமொரு புதிய அனல் மின்நிலையம்
சென்னை அருகே உள்ள குருவிமேடு கிராமத்தில் புதிய அனல் மின்நிலையம் அமைக்கப்படுகிறது.
இந்த புதிய அனல் மின் நிலையத்தை தமிழ்நாடு மின்சார வாரியமும் என்டிபிசி நிறுவனமும் சரி பங்கு மூலதனத்தில் கூட்டாக அமைக்க உள்ளன.
இந்த புதிய மின் நிலையத்துக்கு ஊரக மின் இணைப்பு கழகம் (ஆர்இசி) ரூ. 3,796 கோடி கடன் அனுமதித்துள்ளது.
இந்த மின் உற்பத்தி நிலையம் 11-வது திட்ட காலத்துக்குள் முழுமையாக உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் யூனிட் 2010 - 11-ம் ஆண்டு செயல்படத் தொடங்கும். இந்த நிறுவனத்துக்குத் தேவையான மின் உற்பத்தி கருவிகளை பெல் நிறுவனம் வழங்குகிறது.
கர்நாடகா தண்ணி தந்தாலும் ஆபத்து தான் போலிருக்கு . சாராய உயிர் இழப்பு 70 ஆனது கிருஷ்ணகிரி மாவட்டம் தளியையடுத்து விஷ சாராயத்துக்கு ஓசூரில் நேற்று 11 பேர் பலியாயினர். 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் தளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கர்நாடக பகுதிகளுக்கு சென்று கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள், கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வரப்படும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை கர்நாடக மாநிலம் ஆனைக்கல்லில் பாக்கெட் சாராயம் வாங்கி குடித்த 8 தொழிலாளர்கள் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் ஓசூர் பகுதியில் விஷ சாராயம் குடித்த மேலும் 11 பேர் நேற்று பலியானது கிருஷ்ணகிரி மாவட்ட மக்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், Ôஉயிரிழப்புக்கு காரணமான சாராயத்தில் போதைக்காக எத்தனால் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த சாராயத்தை அளவுக்கு அதிகமாக குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதுÕ என்றனர்.

No comments: