Saturday, May 03, 2008

செய்திகள் மே 3 காலை 8.00

பணவீக்கம் பற்றி கவலை படுகிராராம் சிதம்பரம்

கர்நாடக தொழில் வர்த்தகசபை பெங்களூரில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தக் கூட்டத்தில் உரையாற்றினார் சிதம்பரம். பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பணவீக்கம் கடந்த 42 மாதங்களில் 7.57 சதவீதமாக உயர்ந்துவிட்டது. இது எங்களைக் கவலை அடையச் செய்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இதனால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் முழுமையாக கட்டுப்படுத்தப்படும்.

புதுவையில் ஒரே வாரத்தில் 2 பந்த்தா தாங்காது இனி :

புதுச்சேரியில் ஏ.எப்.டி. பஞ்சாலை தொழிலாளர்கள் அகவிலைப்படி உயர்வுக் கோரி திங்கள்கிழமை பந்த் போராட்டம் நடத்தினர். இதையொட்டி கடைகள் மூடப்பட்டன. இப்போது பாஜக சார்பில் நடந்த பந்த் போராட்டத்தையொட்டி வெள்ளிக்கிழமை கடைகள் மூடிக் கிடந்தன. ஒரு வாரத்தில் 2 பந்த் போராட்டத்தை புதுச்சேரி சந்தித்துள்ளது. மேலும் மே தினத்தையொட்டி வியாழக்கிழமை கடைகள் மூடப்பட்டிருந்தன. பாரதிய ஜனதா கட்சியின் நாடு தழுவிய பந்த் போராட்டத்தையொட்டி புதுச்சேரியில் கடைகள் அடைக்கப்பட்டன. அரசு பஸ்களைத் தவிர தனியார் வெளியூர் பஸ்கள், தனியார் நகர பஸ்கள், நகரத்துக்குள் ஓடும் 3 சக்கர டெம்போக்கள் ஓடவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இனியாவது மக்கள் படும் வேதனையை உணரவேண்டும்

நாடாளுமன்றத்தில் அரசியல் உள்நோக்கம் கொண்டு டி.ஆர்.பாலுவுக்கு எதிராக பிரச்னைசெய்கின்றனர் - மத்திய அமைச்சர் நாராயணசாமி

மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மற்றும் மத்திய திட்டத்துறை இணையமைச்சர் வி. நாராயணசாமி புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியது:
2003-ம் ஆண்டு திமுக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்து வெளியேறியப் பிறகு 2004 ஏப்ரல் 14-ம் தேதி முதல் டி.ஆர். பாலு குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு மத்திய அரசு எரிவாயு ஒதுக்கீட்டை நிறுத்தியது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றதில் வழக்குத் தொடர்ந்தனர். இதில் டி.ஆர். பாலு குடும்பத்துக்குச் சாதமாக தீர்ப்பு வந்தது. இதைத் தொடர்ந்து பாலுவின் மகன் செல்வகுமார் பாலு நீதிமன்ற உத்தரவை அமல் செய்யக் கோரி பிரதமர் அலுவலகத்துக்குக் கடிதம் அனுப்பினார்.
இதை அதிமுக மற்றும் பாஜகவினர் அரசியல் நோக்கத்துக்காக பாலு அனுப்பினார் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளனர். பிரதமர் அலுவலகம் இந்தக் கடிதத்தை பெட்ரோலிய அமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பியது. ஆனால் இது தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால் பெட்ரோலிய அமைச்சகம் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐக்கிய முற்போககுக் கூட்டணி அரசு ஒரு சதவீதம் சலுகைக்கூட பாலுவின் பிள்ளைகள் நடத்தும் நிறுவனத்துக்கு வழங்கவில்லை.
பாஜக மற்றும் அதிமுக மக்களைத் திசைத் திருப்ப தவறான வாதத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இது கண்டிக்கதக்கது. அதிமுகவினர் தமிழக அரசியலை நாடாளுமன்றத்தில் அரங்கேற்ற முயற்சி செய்து தோல்வி அடைந்தனர். இது தொடர்பாக முழு விவரம் தெரியாமல் பாஜக தலைவர் அத்வானி ஓர் அறிக்கை விட்டதும் கண்டனத்துக்கு உரியது என்றார் நாராயணசாமி.
11 கோடி:செலவில் அரசுப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வி : கல்வியமைச்சர் அறிவிப்பு

சட்டப்பேரவையில் கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு அமைச்சர் ஷாஜகான் அளித்த பதில்கள்
மத்திய அரசு உதவியுடன் ஒவ்வொரு பள்ளிக்கும் 10 கம்ப்யூட்டர் கொண்ட கம்ப்யூட்டர் லேப், 169 பள்ளிகளில் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக ரூ.11.32 கோடி மதிப்பீட்டில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இத் திட்ட மதிப்பீட்டில் 75 சதம் மத்திய அரசும், 25 சதம் மாநில அரசும் நிதி அளிக்கும்.
மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் இத் திட்டம் அமல் செய்யப்படும்.
2008-2009-ம் கல்வி ஆண்டில் புதுச்சேரி பகுதியில் 5 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 10 புதிய தொடக்கப் பள்ளிகள் கட்டுவதற்கும், ஒரு பள்ளிக்கு ரூ. 8 லட்சம் வீதம் ரூ.80 லட்சம் செலவிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர் வழிக் கல்வி இந்த ஆண்டு முதல் வழங்கப்படும். இதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் கம்ப்யூட்டர் வழிகல்வி அளிக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments: