Tuesday, May 06, 2008

செய்திகள் மே 6 காலை 7.00

மகளிர் இடஒதுக்கீடு இப்போதும் இல்லை மக்களவை ஒத்திவைப்பு

மகளிர் இடஒதுக்கீடு மசோதா எடுத்துக் கொள்ளப்பட இருந்த நிலையில், மக்களவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அதன் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி நேற்று அறிவித்தார்.
தொடர்ந்து குறுக்கீடுகள் இருப்பதும், அவை ஒத்திவைக்கப்படுவதும், அவைத் தலைவரின் அதிகாரத்தை மறுப்பதும் பொதுமக்கள் நலன் என்ற நமது பொதுவான குறிக்கோளுக்கும், நிர்வாக நம்பகத்தன்மைக்கும் உதவாது என்று மக்களவையை ஒத்திவைக்கும் முன் சோம்நாத் தெரிவித்தார். நடப்பு கூட்டத் தொடரிலேயே மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதி கூறியிருந்தார். அவரது உறுதிமொழியை புரளி ஆக்கிவிட்டது ஒத்திவைப்பு அறிவிப்பு என்றார். குருதாஸ் தாஸ் குப்தா இது. ஜனநாயக நாடாளுமன்ற நடைமுறையையே கேலிக்கூத்தாக்கும் செயல் என்றார்.
கல்விக் கடனுக்கு மத்திய அரசு மானியம் வரும் கல்வியாண்டிலிருந்து திட்டம் அமல்

தொழில் கல்விகளுக்கு வங்கிகளில் மாணவர்கள் பெறும் கடன் தொகைக்கான வட்டியை மத்திய அரசு கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது. இதற்கான வழிகாட்டுதலை மத்திய அரசின் மனித வளர்ச்சி மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கி வருகிறது. இப்புதிய முறை வரும் கல்வி ஆண்டில் (2008-09) நடைமுறைக்கு வரும் என தெரிகிறது.

இந்தத் திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தும். கனரா வங்கி இத்திட்டத்துக்கான வங்கியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. . இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 4 ஆயிரம் கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எல்லாம் சரி கடன் கிடைகவேனுமே ! பாங்கில் கடன் வாங்குவது பற்றிய சிரமம் போய் பார்த்தால் தான் தெரியும்

நுழைவுத் தேர்வை ரத்து செய்ய அவசரச் சட்டம் அவசரமாய் தேவை: கலைநாதன் MLA

சட்டப்பேரவையில் கேள்விநேரம் முடிந்தவுடன் நாரா கலைநாதன் பேசியதாவது :
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதற்காக இன்னும் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் பெறவில்லை. இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு உண்டா, இல்லையா என்ற குழப்பத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழக அரசைப் போன்று நுழைவுத் தேர்வை ரத்து செய்ய சட்டத்தை நடப்புக் கூட்டத் தொடரில் அரசு நிறைவேற்ற வேண்டும்.
அதற்கு உரிய கால அவகாசம் இல்லை என்று அரசு கருதியதால், யூனியன் பிரதேச ஆட்சிப் பரப்புச் சட்டம் 1963-ன்படி துணைநிலை ஆளுநர் வாயிலாக அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இது மிக அவசரம் !!1
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர்
சட்டப்பேரவையில் ஆர். விசுவநாதன் MLA (இந்திய கம்யூனிஸ்ட்) கேள்வி எழுப்பினார்.
இதற்கு முதல்வர் ரங்கசாமி பதில் அளிக்கையில், இந்தச் சட்டப்பேரவைக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.
5.5.2007-ல் புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப் பரப்பின் அமைச்சரவைக்கு அதிக அதிகாரங்களைக் கொடுக்கக் கோரும் தீர்மானம் உரிய நடவடிக்கைக் கோரி உள்துறை அமைச்சகத்துக்கு 7.3.2008-ல் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் மாநில அந்தஸ்து பெறுவதற்குத் தேவையான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் பேசுகையில், ஏற்கெனவே தில்லிக்கு எம்.எல்ஏக்களை அழைத்துச் செல்வதாக முதல்வர் கூறியிருந்தார். ஆனால் நடக்கவில்லை என்றார்.
இதற்குப் பதில் அளித்த முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்தவுடன் விரைவில் அழைத்துச் செல்லப்படுவர் என்றார்.

No comments: