Tuesday, May 13, 2008

செய்திகள் மே 13 காலை 7.30 மணி



சீனாவில் மிகப்பெரும் சோகம் : கடும் நிலநடுக்கத்தால் 9,000 பேர் சாவு
சீனாவில் திங்கள்கிழமை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 9,000 பேர் பலியாகினர். பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 900 மாணவர்கள் புதைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 அலகாக பதிவானது. தென்மேற்கு சீனாவின் சிஜுவான் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்க அதிர்வை பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரத்தைச் சேர்ந்த மக்கள் உணர்ந்தனர். சீனாவின் அண்டைநாடுகளான வியத்நாம், தாய்லாந்திலும் இந்த நிலநடுக்க அதிர்வை உணர முடிந்தது. நிலநடுக்கத்தால் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கட்டடங்கள் அதிர்ந்தன. இதை உணர்ந்த மக்கள் வீடுகளையும், அலுவலகங்களையும் விட்டு அலறியடித்துக் கொண்டு வீதிக்கு ஓடிவந்தனர்.
இதனிடையே, இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை உடனடியாக மீட்கவும், மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி உள்பட அனைத்து உதவிகளை செய்யவும் சீன அதிபர் ஆணை பிறப்பித்துள்ளதாக, செய்தி நிறுவனம் கூறியது.
சிறப்பாக சேவை புரிந்த 26 நர்சுகளுக்கு நைட்டிங்கேல் விருது
சிறப்பாகப் சேவை புரிந்த 26 நர்சுகளுக்கு தேசிய "ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் திங்கள்கிழமை வழங்கினார். விருது பெற்றோரில் தமிழ்நாடு, ஜம்மு-காஷ்மீர், மேகாலயம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நர்சுகள் அடங்குவர். அவர்களில் ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ் சந்திரா என்பவர் மட்டுமே ஆண். விருது வழங்கிப் பேசிய பிரதிபா பாட்டீல், நர்சுகளுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பற்றாக்குறை இருப்பதால், இன்னும் அதிக அளவில் நர்சிங் கல்லூரிகளை அமைக்க வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.
பணவீக்கம் 4 மாதங்களில் 5.5 சதவீதமாக குறையும் : பிரதமரின் பொருளாதார ஆலோசனை உறுப்பினர்
.
தில்லியில் திங்கள்கிழமை தொடங்கிய சர்வதேச வரி தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் தலைவர் சி. ரங்கராஜன் இவ்வாறு கூறினார். இந்த ஆண்டு பருவ மழை சிறப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது. எனவே உணவு தானிய விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். தவிர, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இதன் பலன் முழுமையாக தெரிய நான்கு மாதங்கள் ஆகும். பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வங்கிகளில் ரொக்கக் கையிருப்பு விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இது வெளிப்படையாகத் தெரியும் நடவடிக்கையாகும். இது தவிர, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 120 டாலரைத் தாண்டியுள்ளதால் அதன் தாக்கம் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஓரளவு இருந்தாலும் அதனால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாது. இருப்பினும் பொருளாதாரத்தில் தேக்க நிலை அல்லது மந்த நிலை ஏற்பட வாய்ப்புண்டு. என்று கூறினார்.
புதுவைவில் பிரபல குற்றவாளி பட்டப்பகலில் வெடிகுண்டு மூலம் கொலை:
புதுச்சேரியில் பட்டப்பகலில் ரிமோட் வெடிகுண்டு மூலம் ரெüடி கொலை செய்யப்பட்டார். உழவர்கரை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் தெஸ்தான் (38). இவர் பல கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் தெஸ்தான் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் திங்கள்கிழமை வந்தனர். திருமண பத்திரிகை அளிக்க வந்துள்ளதாக அவர்கள் கூறினர். அப்போது குண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறதுமோட்டார் சைக்கிள் பெட்டியில் மறைந்து வைக்கப்பட்டிருந்த ரிமோட் மூலம் பையில் உள்ள வெடி குண்டை வெடிக்கச் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸôருக்கு எழுந்துள்ளது.
குண்டு வெடிப்பில் தெஸ்தான் பலியானார். அருகில் இருந்த 2 பேர் காயம் அடைந்தனர். இந்தக் கொலை சம்பவத்தையொட்டி தெஸ்தானின் ஆதரவாளர்கள் கடைகளை மூடுமாறு வலியுறுத்தி வந்தனர்.
இதையொட்டி ரெட்டியார்பாளையம், நெல்லித்தோப்பு, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன

No comments: