Wednesday, May 07, 2008

செய்திகள் மே 7 காலை 7 மணி - சுகுஜி

பி.இ. சேருவது இனி மிக சுலபம் -குறைந்தபட்ச மார்க் 55%
பேரவையில் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு அமைச்சர் க. பொன்முடி செவ்வாய்க்கிழமை பதில் அளிக்கும்போது இது தொடர்பாக கூறியதாவது:-
""தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 272-ஆக உயர்ந்துள்ளன. 2006-07-ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து சிறுபான்மையினர் அல்லாத பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 65 சதவீதமாகவும் சிறுபான்மையினர் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 50 சதவீதமாகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கில் காலியிடங்கள்: மேலும் மாணவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக 2006-07-ம் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் அதிக அளவில் சேருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும் குறைந்தபட்ச ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் காரணமாக (60 சதவீதம்) 2006-07-ம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேராமல் 19,652 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக இருந்தன. 2007-08-ம் கல்வி ஆண்டில் 14,721 இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு புதிதாக அரசு மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமப்புற மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகளில் படிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருப்பதையும் மனத்தில் கொண்டு நடப்புக் கல்வியாண்டு (2008-09) முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேரும் வகையில், குறைந்தபட்ச மதிப்பெண் விகிதத்தைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது'' என்றார் அமைச்சர் பொன்முடி.

புதுச்சேரியா?, பாண்டிச்சேரியா? என்னவென்று அழைப்பது-- குழப்பம்! குழப்பம் !

சட்டப்பேரவையில் இது குறித்து முதல்வர் கூறியதாவது புதுச்சேரியா அல்லது பாண்டிச்சேரியா எந்தப் பெயரில் அழைப்பது என்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் அறிக்கை வந்தப் பிறகு இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் என். ரங்கசாமி கூறினார்.

அமெரிக்காவின் இன்னொரு அபாண்டம் -- தொடரும் கதை !

இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினரும் சர்வதேச அளவில் உணவு விலைவாசி உயர்வுக்குக் காரணம் என அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் அதிபர் ஜார்ஜ் புஷ் குறிப்பிட்டார் . இதற்கு இந்தியாவில் பலத்த எதிர் குரல் எழுந்துள்ளது
இந்த நிலையில் இன்னொரு அபாண்டத்தை இந்தியா மீது அமெரிக்கா சுமத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு இந்தியாவும், சீனாவும்தான் காரணம் என அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்காஸ் ஸ்டான்சல் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 120 அமெரிக்க டாலரை கடந்துள்ளது. உலகம் முழுவதும் எரிபொருள் தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவில் தேவை அதிகரித்து விட்டது. இதன் காரணமாகவே கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது.
இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய்யின் விலையிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒருவகையில் நமக்கு இது பெருமை , உலகம் இனி நம்மை சுற்றி சுழலும் , ஆனால் அமெரிக்காவின் தினசரி பேச்சி தான் இந்தியாவில் எதிர்ப்பு அலைகளை எழுபயுள்ளது

அம்பேத்கர் மணி மண்டபம் மே 14 தேதி திறக்கப்படுகிறது.

சட்டப்பேரவையில் சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி இத்தகவலை தெரிவித்தார்
புதுச்சேரி கடற்கரை சாலையில் புதுப்பிக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் மணி மண்டபம் இம்மாதம் 14-ம் தேதி திறக்கப்படுகிறது.
மத்திய சமூகநீதித்துறை அமைச்சர் மீரா குமாரி இதைத் திறந்து வைக்கிறார் என்றார் கந்தசாமி.
ரூ. 5. கோடியில் புதுச்சேரி கடற்கரை மேலும் அழகுப்படுத்தும் பணி ரூ. 5. கோடியில் தொடங்கப்பட உள்ளது

சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் மீது அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செவ்வாய்க்கிழமை அளித்த பதில்:
புதுச்சேரி கடற்கரையை ரூ.5 கோடியில் அழகுபடுத்தும் பணி வரும் ஜூன் மாதம் தொடங்கி ஜனவரி 2009-ல் நிறைவு பெறும். கடற்கரை காந்தி திடல் மற்றும் கலைப் பொருள் சந்தை ஆகியவற்றை சீர் செய்ய ரூ.2.67 கோடி அளவில் பணிகள் ஜூன் மாதம் தொடங்கி ஜனவரி 2009-ல் நிறைவு பெறும்.
புதுச்சேரி உணவு விடுதி மேலாண்மை கல்லூரிக்கான புதிய கட்டடப் பணிகளுக்கு ரூ.4.97 கோடி நிதி அளிக்கப்பட்டது. மேலும் ரூ.6.8 கோடி மத்திய அரசு நிதியுதவி கிடைத்துள்ளது.
இந்தப் பணிகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவு பெறும்.

No comments: