Thursday, May 22, 2008

செய்திகள் இன்று வாசித்தும் அதில் என்னை பாதித்தும் மே 22 காலை 7.30 மணி

இந்த செய்திகள் இன்று வாசித்தும் அதில் என்னை பாதித்தும் ஆகும் .
இவை தினமணி, தினகரன் தமிழ் பதிப்பில் இன்று வந்தவையில் சில .
இந்த தினசரி நாளிதழ்களுக்கு நன்றி .
இந்த குறிப்புகள் யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல

சாராய சாவு எதிரொலி மதுவிலக்கு ஏடிஜிபி திலகவதி மாற்றம் இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீஸ் சஸ்பெண்ட் தளி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசார் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர்.

ஓசூர், தளி பகுதியில் விஷச் சாராயச் சாவுகள் அதிகரித்ததன் எதிரொலியாக, தமிழக மதுவிலக்கு போலீஸ் கூடுதல் டிஜிபி திலகவதி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஷியாம் சுந்தர் நியமிக்கப் பட்டுள்ளார். சாராய விற்பனையை தடுக்க தவறிய தளி இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, கர்நாடகாவிலும் சாராயம் குடித்த பலரும் பலியாயினர். கண் பார்வை இழப்பு, கை, கால்கள் பாதிப்படைந்ததாக மருத்துவமனையில் பலர் சேர்க்கப்பட்டனர். தமிழகத்தில் ஓசூர் பகுதிகளில் நேற்று பிற்பகல் வரை 51 பேர் வரை இறந்தனர். கர்நாடகாவிலும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது வரை இரு மாநிலங்களிலும் பலியானவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தமிழக அரசு இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. தளி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசார் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர். சாராய விற்பனையை தடுக்க தவறிய தளி போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பு வகித்த அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், தளி எஸ்.ஐ. கபிலன், ஏட்டு ரவி, மதுவிலக்குப் பிரிவு எஸ்.ஐ. செந்தாமரை ஆகிய 4 பேர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், மதுவிலக்குப் பிரிவு கூடுதல் டிஜிபி திலகவதி நேற்று மாலை அதிரடியாக மாற்றப்பட்டார். அவர் காத்திருப்போர் பட்டிய லில் வைக்கப் பட்டுள்ளார். தீயணைப்புத்துறை கூடுதல் டிஜிபியாக உள்ள ஷியாம் சுந்தர், மதுவிலக்குப் பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையெல்லாம் இத்தனை கடுமையுடன் முன்னமே செய்திருந்தால் சாவு பட்டிய லில் பெயர் வராமல் தடுத்துஇருந்திருகலாம்

லிப்ட்டில் சிக்கி மாணவன் பலியான சம்பவம் பின் சென்னை போலீஸ் அதிரடி 10,000 லிப்ட் இயக்க தடை

சென்னை நகரில் உள்ள கட்டிடங்களில் லைசென்ஸ் இல்லாத 10,000 லிப்ட்டுகளை இயக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.சென்னை சேலையூர் ஜெயின் அபிஷேக் அபார்ட்மென்ட் லிப்ட்டில் சிக்கி, பரத்ராஜ் என்ற மாணவன் இறந்தான். இதுதொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அடுக்கு மாடி குடியிருப்பின் கட்டுமானப் பணி முடிவதற்கு முன்பே, அங்கு பிளாட் வாங்கியவர்களை குடியேற அனுமதித்ததும், லிப்ட்டை சரிவர பராமரிக்கவில்லை என்பதும்விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, பராமரிப்பு மேலாளர் சிட்டிபாபு (32), இன்ஜினியர்கள் கணேஷ் (24), மாரிமுத்து (23) ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், சென்னை முழுவதும் 10,000 லிப்ட்கள் லைசென்ஸ் இல்லாமல், பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆபரேட்டர் மூலம்தான் இவை இயக்கப்பட வேண்டும் என்ற விதியும் பின்பற்றப்படுவதில்லை. எனவே, லைசென்ஸ் இல்லாத லிப்ட்களை இயக்க போலீசார் தடை விதித்துள்ளனர். போனில் புகார்: லிப்ட் சரியாக பராமரிக்கப்படவில்லை என்று தெரிந்தால் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் புகார் செய்யலாம்:22500227 ,
இதையெல்லாம் இத்தனை கடுமையுடன் முன்னமே செய்திருந்தால் லிப்ட்டில் சிக்கி மாணவன் பலியான சம்பவம் வராமல் தடுத்துஇருந்திருகலாம்
மேலும் 27 தமிழறிஞர்கள் நூல்கள் அரசுடமை
அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ் சான்றோர்களின் கருத்துக்கள், வரும் தலைமுறைக்கு பயனளிக்கத்தக்க வகையில், இந்த ஆண்டு கவிஞர் பெரியசாமி தூரன், வெள்ளை வாரணனார், பண்டிதர் அயோத்தி தாசர், ஆபிரகாம் பண்டிதர், செய்குத் தம்பி பாவலர், ரா.பி.சேதுப்பிள்ளை ஆகியோர் நூல்கள் அரசுடமை ஆக்கப்பட்டு தலா ரூ.10 லட்சம் பரிவுத் தொகையாக வழங்கப்படும்.ராகவையங்கார், உடுமலை நாராயணகவி, அண்ணல் தங்கோ, அவ்வை தி.க. சண்முகம், விந்தன், லா.ச.ராமாமிர்தம், வல்லிக் கண்ணன், நா.வானமாமலை, புதுவை சிவம், அ.ராகவன், தொ.மு.சி.ரகுநாதன், சக்தி தாசன் சுப்பிரமணியன், ந.சஞ்சீவி, முல்லை முத்தையா, எஸ்.டி.சுந்தரம், மீரா, கார்மேக கோனார், முகமது நயினார் மரைக்காயர், சு.சமுத்திரம், கோவை இளஞ்சேரன், ந.சுப்பு ரெட்டியார் ஆகியோரின் நூல்கள் அரசுடமையாக்கப்பட்டு, மரபு உரிமை யர்களுக்கு தலா ரூ.5 லட்சம் பரிவுத் தொகை வழங்கப்படுகிறது. இதற்கான உத்தரவை முதல்வர் நேற்று பிறப்பித்துள்ளார். இந்த 27 தமிழறிஞர்களின் நூல்களுக்கும் ரூ.1.65 கோடி பரிவுத் தொகை வழங்கப்படும்.
தமிழுக்கு தமிழக அரசு செய்திருக்கும் மாபெரும் சேவை இது
8 ஆண்டுகால தொடர் போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி தில்லி தமிழ்ச் சங்கத்தில் வள்ளுவர் சிலை இடமாற்றம்
தில்லி ஆர்கே புரம் வெஸ்ட் பிளாக்கில் அமைந்திருந்த பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர் சிலை, தமிழ்ச் சங்கத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
வள்ளுவர் சிலை இடமாற்றம் செய்யப்பட்டது தங்களது 8 ஆண்டுகால தொடர் போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியென, தில்லி தமிழ்ச் சங்கச் செயலாளர் முகுந்தன் புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது:
ஆர்கே புரத்தில் வள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட போது அவ்விடம் சிறப்பாக இருந்தது. ஆனால் பின்னர் சிலையை சுற்றி அசுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். சிலைக்கு அருகில் பொதுக்கழிப்பிடம் ஒன்றையும் கட்டிவிட்டனர்.
அத்துடன் வெஸ்ட் பிளாக் பகுதியை சுற்றி சுவரும் எழுப்பப்பட்டதால் வள்ளுவர் சிலை தனிமைப்படுத்தப்பட்டது.
இது அப்பகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கு மிகவும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே, அந்த இடத்தில் இருந்து சிலையை அகற்றி தமிழ்ச் சங்கத்தில் வைக்குமாறு பொதுமக்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
இதையடுத்து நாங்கள் சிலையை தமிழ்ச் சங்கத்துக்கு இடமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டோம். இதை தமிழக முதல்வர் கருணாநிதி, தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.
பின்னர் தில்லி சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் வசந்த் விகாரை அணுகி, சிலையை தமிழ்ச் சங்க வளாகத்துக்குள் இடமாற்றம் செய்யவதற்கான அனுமதியை பெற்றோம். இதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை எவ்வித பாதிப்பும் இன்றி சிலை அகற்றப்பட்டு உடனடியாக தமிழ்ச் சங்க வளாகத்துக்குள் நிறுவப்பட்டது.
முதல்வர் கருணாநிதி திறந்து வைப்பார்: சிலையை ஒழுங்கான முறையில் பராமரிக்க தமிழ்ச் சங்கத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்ச் சங்கத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள சிலை இம்மாதம் இறுதியில் முறைப்படி திறந்து வைக்கப்படும்.
விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு சிலையை திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் ஆகியோரும் பங்கேற்பர் என, முகுந்தன் தெரிவித்தார்.
தில்லி ஆர்கே புரம் வெஸ்ட் பிளாக் பகுதி தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. இதனால் வள்ளுவர் சிலை அங்கு 1975-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
சிலையை சுற்றி அசுத்தம் . சிலைக்கு அருகில் பொதுக்கழிப்பிடம் அத்துடன் வெஸ்ட் பிளாக் பகுதியை சுற்றி சுவரும் எழுப்பப்பட்டதால் வள்ளுவர் சிலை தனிமைப்படுத்தப்பட்டது. இத்தகு அபத்த சூழலில் இருந்த வள்ளுவர் சிலை சரியான இடத்துக்கு மாற்றிய பொ. செயலாளர் முகுந்தன் மிகுந்த பாராட்டுக்கு உரியவர்
புதுவையில் ராஜீவ் காந்தி நினைவு தினம்
:
ராஜீவ் காந்தியின் நினைவு நாள் , இதையொட்டி ராஜீவ் காந்தி சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவரது சிலைக்கு முதல்வர் என்.ரங்கசாமி, மத்திய அமைச்சர் நாராயணசாமி, சட்டப்பேரவைத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் வைத்திலிங்கம், வல்சராஜ், கந்தசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், எம்.பி. ராமதாஸ், எம்எல்ஏக்கள் அங்காளன், நமச்சிவாயம், ஏழுமலை, தியாகராஜன், முன்னாள் முதல்வர் எம்.டி.ஆர். ராமசந்தரன், நகராட்சித் தலைவி ஸ்ரீதேவி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பகவத் கீதை, குர்ரான், பைபிள் வாசகங்கள் வாசிக்கப்பட்டன. பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் தேசப்பக்தி பாடல்களைப் பாடினர். தொடர்ந்து வன்முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழியை முதல்வர் ரங்கசாமி வாசித்தார். அதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
காங்கிரஸ் அலுவலகத்தில் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி படத்துக்கு காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆஹா இந்த ஒத்துமை எப்போதும் இருந்தால் எவ்ளது நல்லது

No comments: