Thursday, May 08, 2008

செய்திகள் மே 8 காலை7.00 மணி சுகுஜி

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் .



பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகின்றன.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் , தமிழகத்தில் மார்ச் 3-ம் தேதியிலிருந்து 24-ம் தேதி வரை நடந்த பிளஸ் 2 தேர்வை 2 லட்சத்து 78 ஆயிரத்து 673 மாணவர்களும், 3 லட்சத்து 8 ஆயிரத்து 572 மாணவிகளும் எழுதினர். தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) காலை வெளியிடப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார்
மியான்மர் ( பர்மா) புயல்: 22 ஆயிரம் பேர் சாவு. லட்சக்கணக்கானோர் வீடு இழப்பு



மியான்மரில் சனிக்கிழமை தாக்கிய புயலால் குறைந்தபட்சம் 22 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். மேலும் 41 ஆயிரம் பேரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. லட்சக்கணக்கானோர் வீடுவாசல்களை இழந்துள்ளனர்.
மியான்மரில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் சேவை அமைப்பின் இயக்குநர் ஆன்ட்ரூ கிர்க்வுட் புதன்கிழமை கூறியதாவது: மியான்மரின் தெற்கு கரையில் சனிக்கிழமை தாக்கிய புயல் காரணமாக 22 ஆயிரம் பேர் இறந்ததுடன் மேலும் 41 ஆயிரம் பேரைக் காணவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான சடலங்களை நிவாரணக் குழுவினர் கண்டுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை அழுகத் தொடங்கியுள்ளன.
பலநாடுகள் நிவாரண பொருள்கள் அனுபியுள்ளன . ஆனால் மக்களை அணுக அனுமதி பெற சிரமமாக உள்ளதாக புகார் உள்ளத
புகைப்படம் : நன்றி BBC


புதிய நியமனம் : ப.சண்முகம் பாமக மாநில துணைத் தலைவர்



பா.ம.க. தலைவர் கோ.க. மணி ஓர் அறிவிப்பை புதன்கிழமை வெளியிட்டார். அதில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவராக ப.சண்முகம் நியமிக்கப்பட்டு இருக்கிறார் என தெரிவித்துள்ளார் சண்முகம் கடலூரை அடுத்த ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். மாவட்ட ஊராட்சி உறுப்பினராகவும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினராகவும், மாவட்ட சமூகநலத்துறை பெண்கள் முன்னேற்றச் சங்க தலைவராகவும், தொழிலாளர் மற்றும் தொழிற்சாலைப் பாதுகாப்புத் துறையின் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் சண்முகம் இருந்து வருகிறார். பா.ம.க. மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகவும், 5 முறை மாவட்டச் செயலாளராகவும் இருந்தார்
அப்பாடா ! நாளை +௨ முடிவு .வருபோது நல்ல செய்தி ! புதுவையில் நுழைவுத் தேர்வு ரத்தாகிறது



புதுச்சேரியில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய துணைநிலை ஆளுநர் பொபிந்தர் சிங் (பொறுப்பு) ஒப்புதல் அளித்துள்ளார். அதற்கான கோப்பில் அவர் புதன்கிழமை கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான நுழைவுத் தேர்வை தமிழகத்தைப் போன்று ரத்து செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவையில் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கட்சிப் பாகுபாடு இன்றி வலியுறுத்தினர். அதற்கான அரசு ஆணை வெளியிடவில்லை என்று கூறி எம்.எல்.ஏக்கள் புதன்கிழமை சட்டப் பேரவையில் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். துணைநிலை ஆளுநர் மாளிகையில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் துணைநிலை ஆளுநர் பொபிந்தர் சிங்கை புதன்கிழமை மாலையில் சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, கல்வியமைச்சர் ஷாஜகான் ஆகியோர் பெற்றோர், மாணவர்களின் நலன் கருதி நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதற்கான அரசு ஆணை புதன்கிழமை இரவே வெளியாகும் என்றனர்.


புதுச்சேரி விடுதலை நாள் எப்போது ? அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படும். வரலாற்றில் ஏற்பட்டுள்ள தவ்று திருத்த படுமா ?
புதுச்சேரி விடுதலை பெற்ற நாள் குறித்து அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் என். ரங்கசாமி கூறினார். சட்டப்பேரவையில் இது குறித்து ஆர். விசுவநாதன் (இந்திய கம்யூனிஸ்ட்) கேள்வி எழுப்பினார். புதுச்சேரியின் விடுதலை நாள் எது என்பதை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக அரசு ஆராய்ந்து வருகிறது. அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுத்து இது தொடர்பாக அறிவிக்கப்படும் என்றார் முதல்வர்.
இதை வரவேற்ற விசுவநாதன், நல்ல முடிவை முதல்வர் கூறியுள்ளார். வரலாற்றில் ஏற்பட்டுள்ள தவறைத் திருத்த முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

No comments: