Sunday, August 10, 2008

செய்திகள் ஆக்ஸ் 10 மணி 8AM

லட்சம் கோப்புகள் இல்லை லட்சிய கோப்புகள்தான் உள்ளன - ராமதாஸ் புகாருக்கு கருணாநிதி பதில் --ஏ.சுகுமாரன்
ஆவடி நகராட்சியில், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் குடிநீர்த்திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் உள்ளிட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவும், 3 ஆயிரம் பேருக்கு இலவச பட்டா வழங்கும் விழாவும் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் நேற்று நடந்தது. திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் கருணாநிதி பேசினார் உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். நகராட்சிகள் நிர்வாகத் துறை ஆணையர் நிரஞ்சன் மார்டி வரவேற்றார்.
. என்னிடம் லட்சம் கோப்புகள் தேங்கிக் கிடப்பதாக யாரோ கூட சொன்னார்கள். என்னிடம் உள்ளது ‘லட்சக் கோப்புகள்’ அல்ல, லட்சியக் கோப்புகள்தான். என்னிடம் வரும் கோப்புகளை ஒழுங்காக ஒவ்வொரு நாளும் பார்த்து பைசல் செய்கிறேன்.
1967 முதல் இன்று வரை கோப்புகளை அப்படித்தான் பார்க்கிறேன். நான் 5வது தடவை முதல்வரான போது, பழைய முதல்வரால் முடிச்சு அவிழ்க்காமலே, பிரிக்கப்படாமலேயே எத்தனை முக்கிய கோப்புகள் இருந்தன? நான் எந்த கோப்புகளையும் ஓய்வெடுக்க விடுவதில்லை. ஓட, ஓட விரட்டுகிறேன். என்று கருணாநிதி பேசினார்.

இலவசமாக 300 ஏக்கர் நிலத்தை காரைக்காலில் தந்தால், 600 கோடியில் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் அமையும் -ராமதாஸ். எம்.பி---ஏ.சுகுமாரன்

புதுச்சேரி அரசு இலவசமாக 300 ஏக்கர் நிலத்தை காரைக்காலில் ஒதுக்கி தந்தால், அங்கு ரூ. 600 கோடியில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தை அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்றார் புதுவை மக்களவை தொகுதி எம்.பி. பேராசிரியர் மு. ராமதாஸ்.
மேலும், இதில் புதுவை, அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேச மாணவர்கள் மட்டுமே படிக்க வகை செய்யப்பட்டுள்ளதாகவும், நடப்பாண்டே இந்நிறுவனத்தை தாற்காலிக இடத்தில் தொடங்கவும் மத்திய அரசு அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தார். இடம் தரப்பட்டால், ஜிப்மர் மருத்துவமனையின் கிளையை காரைக்காலில் உடனடியாக நிறுவி தினமும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் அமைக்க தேவையான மீதமுள்ள 12 கோடியில், ரூ. 5 கோடியை மாநில அரசு தந்தால், மீதமுள்ள ரூ. 7 கோடியை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தர முயற்சிக்கப்படும் என்றார் பேராசிரியர் மு. ரா

கஷ்டங்கள் தீர இலங்கை அமைச்சர் சனீஸ்வரன் கோயிலில் வழிபாடு---ஏ.சுகுமாரன்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இலங்கை அமைச்சர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் சனிக்கிழமை எள்தீபம் ஏற்றி வழிபாடு செய்தார்.
அமைச்சரை கோயில் நிர்வாக அலுவலர் மஹீபதி வரவேற்றார். சனீஸ்வரனுக்கு கருப்பு வஸ்திரம் அணிவித்து, எள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினார் அமைச்சர். அவருக்கு சிவாச்சாரியர்கள் பரிவட்டம் கட்டி, மரியாதை செய்தனர்.

தியாகிகள் தினம் ராஜீவ்காந்தி பிறந்த தினத்தை வன்முறை எதிர்ப்பு நாளாக செயல்படுத்த மகளிர் பேரணி---ஏ.வி. சுப்ரமணியன் பேச்சு --ஏ.சுகுமாரன்

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்க நாள் தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது, தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி ஏ.வி. சுப்ரமணியன் பேசினார். அப்போது அவர் பேசும்போது அணு ஆயுதத்தின் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூற விளக்க கூட்டமும் பேரணியும் நடத்துமாறு வலியுறுத்தினோம். எளிய முறையிலாவது அனைத்து பகுதிகளிலும் விளக்க கூட்டம் மற்றும் பேரணி நடத்துமாறு கேட்டு கொள்கிறேன்.இதில் கலந்து கொள்ள பேச்சாளர்கள் தயாராக உள்ளனர். ராஜீவ்காந்தி பிறந்த தினத்தை வன்முறை எதிர்ப்பு நாளாக செயல்படுத்த கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.வருகிற 20-ந்தேதி ராஜீவ்காந்தி பிறந்த தினத்தில் புதுச்சேரியில் மகளிர் அணி சார்பில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு விழிப்புணர்வு பேரணி நடைபெறும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் தான் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்.இவ்வாறு ஏ.வி. சுப்ரமணியன் பேசினார்.

என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வேலை இல்லை ! 70 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் --அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் பேச்சு --ஏ.சுகுமாரன்

என்ஜினீயரிங் படித்தவர்களில் 70 சதவீதத்திற்கு குறைவாக மார்க்கு எடுத்தவர்களில் 95 சதவீதம் பேர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க அண்ணாபல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் நடந்துவருகிறது.அண்ணாபல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் பி.இ., பி.டெக். சேர்ந்தமாணவர்களுக்கு வகுப்பு தொடங்கியது. வகுப்பு தொடங்கும் முன்பு வருடந்தோறும் துணைவேந்தர் மாணவர்கள் மத்தியில் பேசி ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்குவது உண்டு. அதன்படி மாணவர்களிடம் அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.மன்னர் ஜவகர் பேசியதாவது:-தமிழ்நாட்டில் 360 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் இடங்கள் உள்ளன. அண்ணாபல்கலைக்கழக 4 கல்லூரிகளில் மட்டும் 1500 பேர் சேர்ந்துள்ளனர். மாணவர்களின் படிப்பு கட்டம் 3 ஆக பிரிக்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. வரை ஒரு கட்டம், பிளஸ்-2 ஒரு கட்டம், அதன்பிறகு ஒரு கட்டம். 3-வது கட்டத்தில் மாணவர்கள் அடி எடுத்து வைத்திருக்கிறீர்கள். நீங்கள் கடினமாக படித்ததால் தான் அண்ணாபல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்துள்ளது. அண்ணாபல்கலைக்கழகத்தில் படிக்க நீங்கள் பெருமைப்படவேண்டும்.அண்ணாபல்கலைக்கழகத்தில் தகுதியான ஆசிரியர்கள் உள்ளனர். சிறந்த கட்டமைப்பு வசதி உள்ளது. அதை பயன்படுத்தி இன்று முதல் நன்றாக படிக்கவேண்டும். மெத்தனமாக இருக்க கூடாது. ஒவ்வொரு நாளும் அன்றாட பாடங்களை படியுங்கள் சந்தேகம் இருந்தால் ஆசிரியரிடம் கேளுங்கள். மாணவர்கள் 4 பேர் குரூப்பாக சேர்ந்து படித்தவற்றை புரிந்தவற்றை உங்களுக்குள் பறிமாறிக்கொள்ளுங்கள். அவ்வாறு படித்தால் படித்தது மனதில் நிற்கும். எதையும் புரிந்து படிக்கவேண்டும்.
இந்த 4 வருடம் நன்றாக படித்தால் 40 வருடத்திற்கு மேல் மகிழ்ச்சியுடன் வாழலாம். கிடைத்த படிப்பை சிறந்ததாக கருதி படியுங்கள். அண்ணாபல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.எந்த பாடம் எடுத்தாலும் நன்றாக படித்தால் வேலைவாய்ப்பு நிச்சயம் உண்டு. கம்ப்ïட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக் கம்ïனிகேசன் ஆகிய பாடங்களை படித்து 70 சதவீதத்திற்கு குறைவாக மார்க்கு எடுத்தவர்களில் 95 சதவீதத்தினருக்கு வேலை கிடைக்கவில்லை. சிலருக்கு மட்டும்தான் வேலை கிடைத்துள்ளது. எனவே மாணவர்கள் ஊக்கத்துடன் படிக்கவேண்டும்.
இவ்வாறு மன்னர் ஜவகர் பேசினார்.

No comments: