Friday, August 15, 2008

செய்திகள் ஆக்ஸ் 15 மணி 7.45 AM

குடியரசுத் தலைவர் பிரதிபா சுதந்திர தின உரை :: வன்முறைக்கு இடமில்லை -- ஏ.சுகுமாரன்
62-வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் பேசும்போது வன்முறையைக் கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்றும் கருத்து வேறுபாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்றும் . கேட்டுக் கொண்டார். ஜம்மு - காஷ்மீர் போராட்டத்தை அவர் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும் அதைக் கருத்தில் கொண்டுதான் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்தார். என்ன பிரச்னையானாலும், எந்த காரணமாக இருந்தாலும் நமது சமூகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்று அவர் கூறினார். எல்லாப் பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணவேண்டும். அமைதி மற்றும் சமரசத்துக்கான பாதை கரடுமுரடானதுதான். ஆனால் அதை சாதித்தாக வேண்டும் என்றார் அவர். அமைதி மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் உதவும். சில இடங்களில் நமது மக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படுத்துவதோடு பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்து வருகின்றனர் என்றார் நாட்டின் அமைதிக்கும் உலக அமைதிக்கும் தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. தீவிரவாதத்துக்குத் தொடர்ந்து ஆதரவும் அடைக்கலமும் கிடைத்து வருவது வருந்தத்தக்கது. தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு எதிராக நாம் ஓர் அணியில் நின்று போராட வேண்டும். வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்கிற நமது உயரிய லட்சியம் தீவிரவாதிகளின் அழிவுச் செயல்களால் துவண்டுவிடாது. அண்டை நாடுகளுடன் இணைந்து தீவிரவாதம் என்னும் கொடூரத்தை இந்த பிராந்தியத்திலிருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்றார் அவர். நாட்டின் வளர்ச்சிக்கு எரிசக்தி உற்பத்தியைப் பெருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் பிரதிபா பாட்டீல். இந்தியா போன்ற வளரும் நாட்டின் எரிசக்தி தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எரிசக்தி உற்பத்தியை பெருக்காவிட்டால் நமது வளர்ச்சி முடக்கப்படும் என்று அவர் எச்சரித்தார். பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு புவி வெப்பநிலை மாற்றம் ஆகியவை நம் முன்னே உள்ளே சவால்கள். எனவே வருங் காலத்தைக் கருத்தில் கொண்டு குறைந்த செலவில் சுற்றுப்புற சூழலை மாசுப்படுத்தாத அளவில் எரிசக்தியை உற்பத்தி செய்வது அவசியம் என்றார் அவர். அரசின் நலத்திட்டங்களை அமல்படுத்தும் பணியில் ஈடுபடுவோர் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். நலத் திட்டங்கள் உரியவர்களை உரிய நேரத்தில் சென்றடைய வேண்டுமானால் திட்டங்கள் வெளிப்படையான முறையிலும் பொறுப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பிரதிபா கேட்டுக்கொண்டார். வேளாண்மையை மேம்படுத்துவதிலும் கிராமப்புறங்களை முன்னேற்றுவதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். நமது உணவு கையிருப்பு வேளாண் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டுதான் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்றார் அவர். 70 சதவீதம் மக்கள் கிராமப்புறங்களில் விவசாயத்தை நம்பித்தான் உள்ளனர். எனவே இந்தியாவின் வளர்ச்சி என்பது கிராமப்புறங்களின் வளர்ச்சியில்தான் உள்ளது என்றார் அவர். வரதட்சிணை, பெண் சிசுக் கொலை, பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடுமை, புகைப் பழக்கம், குடிப் பழக்கம் போன்ற சமூக தீங்குகள் நமது வளர்ச்சிக்குப் பெரும் தடையாக உள்ளன. எனவே சமூக தீங்குகளை எதிர்த்துப் போராட வேண்டும். பெண்கள் முன்னேற்றம் இன்றி நாட்டின் முன்னேற்றம் இல்லை. சமூக மேம்பாட்டில் பெண்களின் பங்கு முக்கியமானது என்று அவர் கூறினார்.

சுதந்திர தின விழா வாழ்த்து : புதுவை துணைநிலை ஆளுநர் கோவிந்த்சிங் குர்ஜார்: -- ஏ.சுகுமாரன்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒலிம்பிக் தனி நபர் போட்டியில் நம் நாடு தங்கம் வென்றுள்ளது.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வை நாம் பாதுகாக்க வேண்டும். புதுச்சேரி மக்கள் அமைதி, வளம், மகிழ்ச்சி பெற இந்த நன்னாளில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திர தின விழா வாழ்த்து : முதல்வர் என். ரங்கசாமி:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒலிம்பிக் தனி நபர் போட்டியில் நம் நாடு தங்கம் வென்றுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வை நாம் பாதுகாக்க வேண்டும். புதுச்சேரி மக்கள் அமைதி, வளம், மகிழ்ச்சி பெற இந்த நன்னாளில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் விடுதலை வேள்வியில் பங்கேற்று தன்னுடைய உடல், பொருள், ஆவி, அனைத்தையும் ஈந்த ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நன்றியோடு போற்ற வேண்டும். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை அனைத்து துறைகளிலும் முன்னோடி பிரதேசமாக உயர்த்தப் பாடுபடுவதே என்னுடைய அரசின் தலையாய நோக்கமாக இருக்கும். அனைத்து வகையிலும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை புதுச்சேரி மக்களுக்குக் கொடுக்க அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. புதுச்சேரியின் ஒட்டு மொத்த வளர்ச்சியும், அனைத்துப் பிரிவு மக்களின் சமுதாய, பொருளாதார மேம்பாடும் இந்த அரசின் குறிக்கோள். பொதுமக்களின் ஒத்துழைப்பும், ஆதரவு மட்டுமே அரசின் செயல்திட்டங்களைச் செழுமைப்படுத்தும். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்கும் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற இந்த நன்னாளில் உறுதி ஏற்க வேண்டும்

தமிழ் நாடு முதல்- அமைச்சர் கருணாநிதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
நமது நாட்டின் சுதந்திரத் தினவிழா மிகுந்த எழுச்சி யோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படுகிறது.
ஏறத்தாழ 200 ஆண்டு காலம் இந்தியத் திருநாட்டை அடிமைப்படுத்தி ஆண்ட அந்நிய ஆதிக்கத்தைக் தகர்த்து நமது நாடு விடுதலை பெற்ற திருநாள் 1947 ஆகஸ்டு 15.
நாம் பெற்ற சுதந்திரத்தால் அடைந்துள்ள பயன்கள் பலப்பல. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்னும் பெருமையுடன் இந்தியத் திருநாடு திகழ்கிறது.
பெற்ற சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்பட நாம் அனைவரும் சாதி, மத, இன பேதங்கள் கடந்து ஒன்று பட்டுப் பாடுபட வேண்டும் என்பதை நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது இந்த சுதந்திரத் திருநாள்! இந்த உணர்வோடு, தமிழக மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
அள்ளி கொடுக்குது மத்திய அரசு ! 21% சம்பள உயர்வு ! -- ஏ.சுகுமாரன்
ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றது நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் அமைக்கப்பட்ட ஆறாவது ஊதியக் குழு தனது பரிந்துரைகளை கடந்த மார்ச் மாதம் அரசுக்கு அளித்தது. பரிந்துரைப்படி உயர்த்தப்பட்ட சம்பளம் செப்டம்பர் மாதத்திலிருந்து வழங்கப்படும். ஊதியம் சராசரியாக 21 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் ஊதிய உயர்வு கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது.
வியாழக்கிழமை தில்லியில் கூடிய மத்திய அமைச்சரவை ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று ஒப்புதல் அளித்தது.
ஆறாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைப்படி துவக்க நிலை ஊதியம் ரூ. 6660-லிருந்து ரூ.7000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி கடைநிலை ஊழியரின் மாதச் சம்பளம், படிகள் எல்லாம் சேர்த்து ரூ. 10,000-க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுபோல் ஆண்டு ஊதிய உயர்வு 2.5 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தப்படுள்ளது.
முதல் முறையாக முப்படை அதிகாரிகளுக்கு ஊதியத்துக்கு மேலாக மாதந்தோறும் ரூ. 6,000 வழங்கப்படும். அதுபோல் ஊனமுற்ற ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச உதவித் தொகை மாதம் ரூ. 3100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதால் அரசுக்கு கூடுதலாக ரூ. 15,717 கோடி இந்த ஆண்டு செலவாகும். ரயில்வே துறைக்கு ரூ. 6414 கோடி கூடுதலாக செலவாகும். மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்துக்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் தொகை ரூ. 70,000 கோடி. ஓய்வூதியத்துக்காக ஒதுக்கப்படும் தொகை ரூ. 30,000 கோடி ஆகும்.. ஜமாயுங்க ! ஆனால் வேலையும் செய்து கொண்டே !

தமிழகத்தின் புதிய சிறப்பு தலைமைச் செயலாளர :கே.எஸ்.ஸ்ரீபதி -- ஏ.சுகுமாரன்

தமிழகத்தின் புதிய சிறப்பு தலைமைச் செயலாளராக கே.எஸ்.ஸ்ரீபதி நியமிக்கப்பட்டு உள்ளார்.ஸ்ரீபதி சென்னையைச் சேர்ந்தவர். இவர் 28.4.50 அன்று கே.வி.சாம்பமூர்த்தி-வேதநாயகி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இந்தியாவில் , இங்கிலாந்து ராணுவத்தில் அதிகாரியாகவும், 2-ம் உலகப் போரிலும் பணியாற்றியவர் கே.வி.சாம்பமூர்த்தி. ஸ்ரீபதி சென்னை மற்றும் மதுரையில் முதுகலைப் பட்டம் படித்தார். லயோலா கல்லூரியின் பழைய மாணவர் இவர். சில்வேனியாவில் எம்.பி.ஏ. பட்டமும் படித்துள்ளார்.1975-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்தற்போது தலைமைச் செயலாளராக இருக்கும் எல்.கே.திரிபாதி, இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில் புதிதாக சிறப்பு தலைமைச் செயலாளரை நியமித்து, எல்.கே.திரிபாதி நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-கூடுதல் தலைமைச் செயலாளர், விழிப்புப் பணி கமிஷனர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தக் கமிஷனர் ஆகிய பதவிகளை வகிக்கும் கே.எஸ்.ஸ்ரீபதி, தமிழகத்தின் சிறப்புச் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். விழிப்புப் பணி கமிஷனர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தக் கமிஷனர் ஆகிய பதவிகளை அவர் தொடர்ந்து வகிப்பார்.சிறப்பு தலைமைச் செயலாளர் என்ற வகையில் அவர் தலைமைச் செயலாளருடன் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம் அவருடன் ஆலோசனை நடத்தலாம். தலைமைச் செயலாளரிடம் அளிக்கப்படும் அல்லது அவர் வழியாக வந்து செல்லும் அனைத்து அரசுக் கோப்புகளும், சிறப்புத் தலைமைச் செயலாளர் கவனத்துக்கும் கொண்டு செல்லப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சனிக்கிழமை சந்திர கிரகணம் ! -- ஏ.சுகுமாரன்

சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய 3 கோள்களும் ஒரே நேர் கோட்டிற்கு வரும் அதிசய நிகழ்ச்சி ஆகும்
வரும் 16-ந்தேதி சனிக்கிழமை இரவு 11.53 மணிக்கு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. மறுநாள் 17-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5.27 மணி வரை நீடிக்கிறது.இந்த கிரகணம் பசிபிக் பெருங்கடலின் மேற்குபகுதி, ஜப்பான் நாட்டின் வட துருவம், ரஷ்யாவின் வட கிழக்கு பகுதியில் தொடங்கும். பசிபிக் பெருங்கடலின் தென் மேற்கு பகுதி, கிரீன்லாந்து மற்றும் தென் அமெரிக்காவின் வட கிழக்கு பகுதியில் கிரகணம் முடிவடையும்.சந்திர கிரகணத்தை இந்தியா, ஆசிய நாடுகள், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா நாட்டுக்காரர்கள் காணலாம்.இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தில் `டெலஸ்கோப்' வழியாகவும் பொதுமக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சந்திர கிரகணத்தால் பல ஆபத்து இருப்ப தாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.பயபடுகிறவர்கள் பயபடுங்கள்

அரவிந்தர் பிறந்த நாள்--ஏராளமான சாதகர்கள் வருகை -- ஏ.சுகுமாரன்

இன்று அரவிந்தரின் 136-வது பிறந்த தினமாகும். இதையொட்டி புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தர் உபயோகித்த அறைகள் பக்தர்கள் தரிசனத்துக்காக நாளை காலை 4 மணி முதல் மாலை 6 மணிவரை திறந்து வைக்கப்படுகிறது.
காலை 6 மணி முதல் 6.30 மணி வரை சமாதியை சுற்றி தியானமும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் புதுவை மற்றும் வெளி மாநிலங் களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள் கிறார்கள். பக்தர்களின் வசதிக்காக அரவிந்தர்ஆசிரமம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன.

No comments: