Wednesday, August 06, 2008

செய்திகள் ஆக்ஸ் 6 7.30AM

கடவுளால் கூட இந்தியாவைக் காப்பாற்ற முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதிகள் உணர்வு பூர்வ கருத்து - ஏ.சுகுமாரன்

அரசு வீடுகளை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது நீதிபதிகள் பி.என்.அகர்வால், ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் கடவுளால் கூட இந்த நாட்டை காப்பாற்ற முடியாது என்று கூறினர்.
அரசு வீட்டை ஆக்கிரமித்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க, இந்திய தண்டனைச் சட்டம் 441 வது பிரிவை திருத்தத் தேவையில்லை என்று அரசு முடிவு செய்திருப்பதாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமரேந்தர் சரண் கூறினார்.அபோது நாங்கள் கடும் நடவடிக்கை எடுத்தால், வரம்பு மீறி நீதித்துறை செயல்படுவதாக ஆட்சியில் இருப்பவர்கள் கூறுகிறார்கள். அவர்களே எதிர்கட்சியாக இருக்கும்போது, பிரச்னைக்கு தீர்வு கேட்டு நீதிமன்றத்தை அணுகுகிறார்கள் என்று நீதிபதிகள் கூறினர். கடவுளால் கூட இந்த நாட்டை காப்பாற்ற முடியாது என்று கூறினர்.
அணுசக்தி ஒப்பந்தம் : அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற செப். 8-ல் தாக்கல்: -- ஏ.சுகுமாரன்

நவம்பர் 4-ல் அதிபர் தேர்தல் முடிந்த பிறகு அடுத்த அதிபர் பதவி ஏற்பதற்கு முன்பாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான வாய்ப்பில்லை எனவே அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக அடுத்த மாதம் 8-ம் தேதி அணுசக்தி ஒப்பந்தம் தாக்கல் செய்யப்படும் தெரிகிறது வியன்னாவில் இம்மாதம் கூட இருக்கும் அணுஎரிபொருள் வழங்கும் நாடுகள் குழுவில், இந்தியாவுடன் அணுவர்த்தகம் செய்வதற்குத் தேவையான "விலக்கு' பெற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .

நிறுவனர் தினம் : அண்ணாமலைப் பல்கலை 2-வது நிறுவனர் முத்தையா செட்டியார் பிறந்தநாள் -- ஏ.சுகுமாரன்

அண்ணாமலைப் பல்கலை 2-வது நிறுவனர் டாக்டர் ராஜா சர் முத்தையா செட்டியார் 104-வது பிறந்தநாள் விழா மற்றும் ராஜா முத்தையா முத்தமிழ் மன்ற 22-வது ஆண்டு இசை விழா பல்கலை. சாஸ்திரிஹாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றறது இதுகுறித்து துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தது: ராஜாசர் முத்தையா செட்டியார் அண்ணாமலைப் பல்கலையில் 1953-ல் கல்வித்துறையையும், 1956-ல் விவசாயக் கல்லூரியையும், 1958-ல் முத்தையா தொழில்நுட்பக்கல்லூரியும், 1978-ல் சட்டக்கல்லூரியும், 1979-ல் தொலைதூரக்கல்வி இயக்கத்தையும், 1980-ல் பல்மருத்துவக் கல்லூரியையும் தொடங்கி பல்கலைக்கழக வளர்ச்சிக்கு பெரிதும் உதவியவர் என துணைவேந்தர் குறிப்பிட்டார்.காலை 8 மணிக்கு துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன், பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள் முத்தையா செட்டியார் சிலைக்கு மாலை அணிவிக்கின்றனர். சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆ.குலசேகரன் விழாவுக்கு தலைமை தாங்கி அறக்கட்டளையின் சார்பில் தமிழறிஞர் வா.செ.குழந்தைசாமிக்கு ஒரு லட்ச ரூபாய் மற்றும் விருதினை வழங்கினார். வா.செ.குழந்தைசாமியை அறக்கட்டளையின் தலைவர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா அறிமுகப்படுத்தினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.வி.சிட்டிபாபு சிறப்புரையாற்றினார்.

தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு பூட்டு போடுவோம்: 50 சதவீத இடஒதுக்கீடு பெற போராட்டம்---ராமதாஸ் எம்.பி. -- ஏ.சுகுமாரன்

புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50சதவீத இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்காக பா.ம.க.வினர் மிஷன் வீதியில்கூடினார்கள் பேராசிரியர் ராமதாஸ் எம்.பி. தலைமையில் சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் செஞ்சிசாலை அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கேயே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அபோது 50சதவீத இடஒதுக்கீடு வழங்காத தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு பூட்டு போடுவோம் என்று பேராசிரியர் ராமதாஸ் எம்.பி. பேசினார். மேலும் புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 900இடங்கள் உள்ளன. இதில் 50சதவீத இடஒதுக்கீடு என்றால் 450இடங்களை புதுவை மாணவர்களுக்காக பெற்றிருக்கவேண்டும். ஆனால் தனியார் மருத்துவக்கல்லூரிகள் 233இடங்களை மட்டுமே தந்துள்ளன.தமிழகத்தில் தனியார் மருத்துவக்கல்லூரிகள் 65சதவீத இடஒதுக்கீட்டை தந்துள்ளன. அப்படிபட்ட சூழ்நிலையில் புதுவையில் 50 சதவீத இட ஒதுக்கீட்டைப்பெற அவசர சட்டம் இயற்றவேண்டும்.இனியும் அரசு 50சதவீத இடஒதுக்கீட்டை பெறாவிட்டால் இதைவிட பெரிய போராட்டம் நடத்துவோம். பா.ம.க. தொண்டர்கள் வெகுண்டெழுந்து கல்லூரிகளை பூட்டுபோட்டு மூடுவார்கள்.இவ்வாறு ராமதாஸ் எம்.பி. பேசினார்.
புதுவையில் பரபரப்பான அரசியல் சுழ்நிலை: இன்று புதுவை அமைச்சரவை கூட்டம் -அமைச்சர்கள் வருவர்கள ?- ஏ.சுகுமாரன்

புதுவையில்அரசியல் கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் ஓராணியாகவும், அமைச்சர்கள் 5பேரும் தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
அமைச்சரவையின் கோஷ்டிபூசல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாள் விழாவினை அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர்.இந்த நிலையில் இன்றுமாலை அமைச்சரவை கூட்டத்தை முதல்- அமைச்சர் ரங்கசாமி கூட்டியுள்ளார். அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார்களா?என்றசந்தேகம்ஏற்பட்டுள்ளது.

No comments: