ஸ்ரீபுரம் பொற்கோயில் முதல் ஆண்டு நிறைவு விழா! கோலாகலமான ஆன்மிக ஊர்வலம் !! ஏ.சுகுமாரன்
ஸ்ரீபுரம் பொற்கோயிலின் முதலாம் ஆண்டு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக வேலூரில் நடந்த ஆன்மிக ஊர்வலத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். உலக மக்கள் அனைத்து வளங்களும் பெற்று அமைதியாக வாழ சிறப்பு யாகங்கள் காலை 8 முதல் மாலை 4 மணி வரை மண்டித் தெருவில் நடைபெற்றது. இதில் 50 வேத விற்பன்னர்கள் யாகம் நடத்தினர். மாலையில் பக்தர்கள் பேரணி: மாலை 4 மணிக்கு யாக சாலைக்கு ஸ்ரீசக்தி அம்மா வருகை தந்து அருளாசி வழங்கினார். பிறகு வேலூர் மண்டித் தெருவில் இருந்து யாக கலசங்களுடன் ஆன்மிக ஊர்வலம் புறப்பட்டது.
ஊர்வலத்தில் இடம்பெற்ற மயில் வாகனத்தில் ஸ்ரீசக்தி அம்மா அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
9 யானைகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலத்தின் முன்பு செல்ல, கலசம், முளைப்பாரி, தீச்சட்டிகள் ஏந்திய பெண்கள் பின்தொடர்ந்தனர். அலங்கரிக்கப்பட்ட 9 குதிரைகள், 9 ஒட்டகங்கள், கரகாட்டம், மயிலாட்டம், கொக்கலியாட்டம், சிலம்பம், பறையிசை ஆகியன இடம்பெற்றன. பேண்டு வாத்தியத்துக்கு ஏற்ப நடனமாடியபடி குதிரை ஒன்று ஊர்வலத்தில் பங்கேற்றது. சிங்கப்பூரில் பிரபலமான சிங்க நடனம் ஊர்வலத்தில் இடம்பெற்றது. நமது நாட்டின் கலை, கலாசாரம் பண்பாட்டை விளக்கும் வகையில் பரதநாட்டியம் (தமிழ்நாடு), குச்சுப்புடி (ஆந்திரம்), யட்சகானம் (கர்நாடகம்), கதகளி (கேரளம்), கதக் (உ.பி.), ஒடிசி (ஒரிசா), மணிப்புரி (மணிப்பூர்), பாங்கரா (பஞ்சாப்) உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் நடனமாடிச் சென்றனர். கிராமிய கலைகளை சிறப்பிக்கும் வகையில் பம்பை, உடுக்கை, சிலம்பு, சிலம்பாட்டம், கரகாட்டம், கோலாட்டம், பொய்க்கால் ஆட்டம், காவடி, நாகசுர கலைஞர்கள், திருமுறை பாராயணமும், வேதபாராயணமும் ஊர்வலத்தில் இடம்பெற்றன. தசாவதாரம், அஷ்டலட்சுமி, மும்மூர்த்திகள், அன்னை நாராயணி ஆகிய திருஉருவங்களின் அலங்காரத்தில் ஸ்ரீநாராயணி வித்யாலயா பள்ளிக் குழந்தைகள் அலங்கார வாகனத்தில் வந்தனர். சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஊர்வலம் மண்டித் தெருவில் இருந்து பழைய பஸ்நிலையம், ஆபீஸர்ஸ் லைன் வழியாக ஸ்ரீபுரத்தை அடைந்தது. நிறைவாக அன்னை ஸ்ரீலட்சுமி நாராயணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சாலையில் இருபுறமும் பக்தர்கள் திரளானோர் காத்திருந்து ஆன்மிக ஊர்வலத்தை கண்டு களித்தனர்.
"காங்கிரஸ்சா மூழ்கிய கப்பல் ? தேர்தல் முடிவில் தெரியும்: ஜி.கே. வாசன் ஆவேசம்-- ஏ.சுகுமாரன்
"காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்; அதில் திமுக பயணம் செய்கிறது' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் என். வரதராஜன் தெரிவித்தக் கருத்துக்கு ஜி.கே. வாசன் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டிஅளித்தார்.
மூழ்கும் கப்பல் என காங்கிரûஸ குறிப்பிட்டுள்ள மார்க்சிஸ்ட் மூழ்கி, கவிழ்ந்த கப்பல். நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்ததன் மூலம், மக்களின் நம்பிக்கையை இழந்த கட்சிகளாக இடதுசாரிக் கட்சிகள் செயல்படுகின்றன.
ஆட்சியில் பங்கு... திமுக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும் என தொண்டர்களின் கோஷம் தற்போது அதிகரித்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி எப்போதுமே தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. தற்போது தீவிரமாக எழுந்துள்ள இந்த கோஷங்கள் குறித்தும் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு எடுத்துக் கூறியுள்ளோம். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி என்பதே காங்கிரஸின் லட்சியம்.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளன.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 2007-2008-ம் ஆண்டில் 3.4 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளன.
ரூ.71 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பாரத் நிர்மான் திட்டத்தின் கீழ் 49,250 வீடுகளும், கடந்த 4 ஆண்டுகளில் 2.4 லட்சம் பள்ளிகளும் கட்டப்பட்டுள்ளன. மத்திய அரசு சார்பில் 8 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் தேர்தலில் இது வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார்.
மக்களவைத் தேர்தல் வரும்போது, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை ஆதரிக்கும் ஒத்தக் கருத்துள்ள கட்சிகள் எதுவாக இருந்தாலும், காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும். மதவாத சக்திகளுக்கு காங்கிரஸ் ஒருபோதும் இடம் அளிக்காது.
நாங்கள்தான் முதல் அணி; நாங்கள்தான் வெல்லும் அணி என்றார் ஜி.கே. வாசன்.
புதுவையில் இன்று பலபரிசை ! பலத்த போலீஸ் பாதுகாப்பு !! மேலிடப் பார்வையாளர்கள் ஆளுநரை சந்திகிறார்கள் --ஏ.சுகுமாரன்
காங்கிரஸ் கட்சியின் மேலிடப்பார்வையாளர்கள் வயலார் ரவி, அருண்குமார், கே.பி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் புதுச்சேரிக்கு திங்கள்கிழமை வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து 3 பேரும் ஒன்றாக கார் மூலம் புதுச்சேரி வருகின்றனர். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு நேரடியாகச் செல்கின்றனர். அங்கு துணைநிலை ஆளுநர் கோவிந்த்சிங் குர்ஜாரை சந்தித்துப் பேசுகின்றனர். அதன் பிறகு காலாப்பட்டு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடக்கும் காங்கிரஸ் எம்.எல்..ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் வி.நாராயணசாமியும், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியனும் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு: காங்கிரஸ் எம்..எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் ஹோட்டலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படையைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட போலீஸôர் பல்வேறு இடங்களிலும் கண்காணிப்புப் பணியில் இறக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி முழுவதும் 7 போலீஸ் கண்காணிப்பாளர்கள் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக முதுநிலை போலீஸ் கண்காணிப்பாளர் (சட்டம்-ஒழுங்கு) அகர்வால் தலைமையில் நடந்தக் கூட்டத்தில் இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன.
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. மீண்டும் சேரும் ! ப.சிதம்பரம் நம்பிக்கை !!--ஏ.சுகுமாரன்
மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் முதல்-அமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடம் நீடித்தது. கருணாநிதியை சந்தித்து விட்டு வெளியே வந்த மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், நிருபர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் பேசினேன். காட்டுப்பள்ளியில் எல் அண்ட் டி நிறுவனம் கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகம் அமைப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அந்த திட்டத்தில் இன்னும் சில முடிவுகள் எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதை தீர்ப்பதற்காக எல் அண்ட் டி நிறுவனத்தினரும் முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து விவாதித்தனர். நானும் அதைப்பற்றி பேசினேன்.
இது பற்றி செப்டம்பர் 15-ந் தேதிக்குள் முடிவுகள் எடுக்கப்பட்டு பணிகள் தொடங்க இருக்கிறது. இந்த திட்டம் 4 ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்த இருக்கிறது. இந்த திட்டத்தால் 12 முதல் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
பணிகள் தொடங்குவதற்கான ஒப்பந்தம் செப்டம்பர் 8-ந் தேதி முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தாக இருக்கிறது.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் கடன் பெறுவதற்கு உலக வங்கியிடம் மனு கொடுத்து இருக்கிறோம். இது சம்பந்தமாகவும் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் பேசினேன்.
சிவங்கையில் வாசனை பொருள் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 77 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கி கொடுத்துள்ளது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தேன். இந்த பணிகள் 18 மாதத்தில் முடிவடையும். அதன் பின்னர் இந்த பூங்காவை முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைப்பார்.
சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு இடம் பார்க்கப்பட்டுள்ளது. தேர்வு செய்த இடம் உயர் கல்வித்துறை வசம் இருப்பதால், அதை சுகாதாரத்துறைக்கு மாற்றுவதற்கு முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிதி மந்திரி ப.சிதம்பரத்திடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:-காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. தொடர்கிறதா?
பதில்:- இன்றைக்கும் மத்திய அரசியலில் பா.ம.க. அங்கம் வகித்துக்கொண்டு தான் இருக்கிறது. தொடர்ந்து ஆதரவும் அளித்து வருகிறது. இடையில் தமிழக அரசியலில் ஏற்பட்ட வேறுபாடுகளால் அவர்கள் விலகி இருப்பது போல ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்கள் ஆதரவு தர மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. நாளைக்கே அவர்கள் தமிழகத்தில், ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் தொடர கூடிய வாய்ப்பு உருவகலாம்.
கேள்வி:-கம்ïனிஸ்டுகள் தமிழகத்தில் 3-வது அணி அமையும் என்று கூறுகிறார்களே?
பதில்:-அவர்கள் சொல்வதை பார்த்தால் 3-வது அணியல்ல. 5-வது அணியே வரும்.
சிறு பிள்ளைதனமானது
கேள்வி:-காங்கிரஸ் மூழ்கும் கப்பல் என்று கம்ïனிஸ்டுகள் விமர்சனம் செய்து வருகிறதே?
பதில்:-கடந்த 50 ஆண்டுகளாக இதை பலரும் சொல்லி வருகிறார்கள். கம்ïனிஸ்டுகள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. நாட்டிற்கு சங்கடம் வரும்போதெல்லாம், நாடு என்ற கப்பலை செலுத்தும் மாலுமியாகத் தான் காங்கிரஸ் இருந்திருக்கிறது. இதை புரிந்துகொள்ளாமல் கம்ïனிஸ்டுகள் பேசுவது சிறுபிள்ளைதனமானது.இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
தி.மு.க. வின் 2 ஆண்டு ஆட்சியில் ௨,34 ,000 பேருக்கு அரசுப் பணி.ஸ்டாலின் பெருமிதம் --ஏ.சுகுமாரன்
சென்னை மாநகராட்சியில், பணியின்போது இறந்த 240 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியும், 15 வருடங்களாக விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய 229 டிரைவர்களுக்கு கைக்கடிகாரங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியும் சென்னையில் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பயனாளிகள் அனைவருக்கும் பணி நியமன ஆணை மற்றும் பரிசுகளை வழங்கினார்.அபோது ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழகத்தில் 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருந்தது. அப்போது சென்னை மாநகராட்சி மேயராக நான் இருந்தபோது, கருணை அடிப்படையில் வேலை என்பது உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 412 பேர் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.ஆனால், அதன் பின்னர் 2-வது முறையாக நான் மேயராக பொறுப்பேற்றபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது நடந்த பல கொடுமைகள், அவலநிலை உங்களுக்கே தெரியும். அப்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் கருணை அடிப்படை வேலைக்கு தடை, பணி நியமனத்திற்கு தடை போன்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
2006-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கை, புத்தகமாகவே மக்களிடம் வழங்கப்பட்டது. 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, விவசாயிகளின் கூட்டுறவு கடன் ரத்து, சத்துணவில் 2 முட்டை, டி.வி. இல்லாதவர்களுக்கு இலவச கலர் டி.வி., கருணை அடிப்படையிலான வேலை மீண்டும் கொண்டு வரப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உறுதிமொழியாகவே கூறப்பட்டது.
அது இன்று நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சி காலத்தில் புதிய வேலைகள் கூட வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து போராட்டம் நடத்தக்கூட முடியவில்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். போராட்டம் அறிவித்தால் இரவு நேரத்திலேயே கைது செய்து சிறையில் அடைத்தனர். சிலர் அதிர்ச்சியில் தற்கொலை கூட செய்துகொண்டனர்.முதல்-அமைச்சராக கருணாநிதி பொறுப்பேற்ற உடன் வேலை நியமன தடை சட்டம் நீக்கப்பட்டது. 18-3-2008 அன்று சென்னை தியாகராய அரங்கில் நடந்த விழாவில் 500 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று 240 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் மட்டும் இன்றி, உள்ளாட்சித்துறையிலும் 307 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, 1098 பேர் பெற்றுள்ளனர். இதன் மூலம் 1098 குடும்பங்களில் விளக்கேற்றப்பட்டுள்ளது. கால முறை ஊதியம் மூலம் 12 ஆயிரத்து 618 பேர் பயன் பெற்றுள்ளனர்.
விரைவில் நிரப்பப்படும் கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 276 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசு வேலைவாய்ப்பு எங்கே? என்று கேட்டவர்களுக்காகத்தான் இந்த பதில்.ஏனைய காலி இடங்களையும் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையை போல் எந்த ஒரு பெரிய மாநகராட்சியிலும் மேம்பாலங்கள் கட்டிய வரலாறு கிடையாது. 9 மேம்பாலங்களை மாநகராட்சியே குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடித்துள்ளது. மேலும், மேம்பாலங்கள் கட்டுவதற்கான தொகையில் ரூ.30 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சிரஞ்சீவியின் புதிய கட்சி நாளை ஆரம்பம் ! திருப்பதியில் தொண்டர்கள் 8 லட்சம் பேர் குவிகிறார்கள் !!----ஏ.சுகுமாரன்
தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் சிரஞ்சீவி, புதிய கட்சி தொடங்கி அரசியலில் இறங்குகிறார் நடிகர் சிரஞ்சீவியின் புதிய கட்சி வரும் செவ்வாய்க்கிழமை உதயமாகிறது. திருப்பதியில் நடைபெறும் பிரமாண்ட தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக விசேஷ ரெயில்கள், பஸ்களில் தொண்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். கட்சியின் தொடக்க விழாவை நடத்துவதற்காக, திருப்பதியின் புறநகர் பகுதியான அவிலாலா கிராமம் ராஜீவ்காந்தி நகரில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 122 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தில் மாநாடு போல் நடைபெறும் இந்த கூட்டத்தில் சிரஞ்சீவியின் ரசிகர்கள் 5 முதல் 8 லட்சம் பேர் வரை கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்தும் சிரஞ்சீவியின் ரசிகர்கள் விழாவில் பங்கேற்கிறார்கள்.ரசிகர்களின் வசதிக்காக இன்று முதல் 17 விசேஷ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஐதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா, குண்டூர், நெல்லூர், காக்கிநாடா, மசூலிப்பட்டினம் உள்பட ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த விசேஷ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
.இதுதவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சுமார் 3 ஆயிரத்து 500 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.விழாவில் பங்கேற்க வரும் ரசிகர்கள், திருப்பதியில் உள்ள தங்கும் விடுதிகளை முன்கூட்டியே பதிவு செய்து கொண்டுள்ளனர். . திருப்பதியில் உள்ள திருமண மண்டபங்கள் சிரஞ்சீவி ரசிகர் மன்ற நிர்வாகிகளால் முன்பதிவு செய்யப்பட்டு, அவற்றில் நேற்று முதல் ரசிகர்கள் தங்கியுள்ளனர்.தேவஸ்தான தங்கும் விடுதிகளிலும் அறைகள் அனைத்தும் நிரம்பி விட்டன.
.
நடிகர் சிரஞ்சீவியின் புதிய கட்சி தொடக்க விழாவையொட்டி, திருப்பதி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நகர் முழுவதும் பலவண்ண மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. திரும்பும் திசையெல்லாம் பலவித கோணங்களில் சிரஞ்சீவியின் பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. நகர் முழுவதும் நூற்றுக்கணக்கான வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
ரசிகர்களுக்கு இன்றும், நாளையும் லட்சக்கணக்கான இலவச உணவு பொட்டலங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.சிரஞ்சீவி புதிய கட்சி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருவதால், போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
உயர் அதிகாரிகள் தலைமையில் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று, சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
புதுவை பகுதியை சேர்த்த கேப்டன் முஸ்தபாவின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் ! ஜம்முவில் விபத்தில் பலியானர !!----ஏ.சுகுமாரன்
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து கிஸ்த்வார் நோக்கி சென்ற ராணுவ ஜீப் படோடே-தாத்திரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ரிக்கி நுல்லா என்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் இருந்த பள்ளத்தில் ஜிப் கவிழ்ந்தது இந்த விபத்தில் ராணுவ மேஜர் ஏ.கே.ஜெயின், கேப்டன்கள் முஸ்தபா, ஹன்ஸ்ராஜ், மற்றும் ராணுவ வீரர்கள் மனோஜ்குமார், மைத்தி ஆகியோர் உயிரிழந்தனர். இதில் கேப்டன் முஸ்தபா புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான வசந்தபுரத்தை சேர்ந்தவர்.அவரது உடல் நேற்று காலை வசந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. சென்னை ரெஜிமண்ட் பிரிவினை சேர்ந்த மேஜர் ஜெனரல் சுசில் சவுதாகர் தலைமையில் 26பேர் இந்த உடலை எடுத்து வந்தனர்.வீட்டிலிருந்து அவரது உடல் தேசியக்கொடி போர்த்தப்பட்டு உப்பளத்திலுள்ள முஸ்லீம்கள் கல்லறைக்கு எடுத்துவரப்பட்டது. அங்கு ராணுவ வீரர்களின் மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க முஸ்தபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பெய்ஜிங் ஒலிம்பிக் நிறைவடைதது ! கோலாகலமான நிறைவு விழா !1---ஏ.சுகுமாரன்
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் உலக விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு பெய்ஜிங் நகரில் நடந்தன.பெய்ஜிங்: கடந்த 16 நாட்களாக உலகின் கவனத்தை தன் பக்கம் இழுத்து வைத்திருந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவடைந்தன. இதையடுத்து கோலாகலமான நிறைவு விழா நிகழ்ச்சிகள் பெய்ஜிங்கில் நடந்தன.
204 நாடுகளைச் சேர்ந்த 10,500 விளையாட்டு வீர வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.
நிறைவு விழாவின்போது மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியும் இடம் பெற்றது. நிறைவு விழாவின்போது இந்திய கொடியை ஏந்தி சென்றார் குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த விஜேந்தர் குமார்.
Monday, August 25, 2008
செய்திகள் ஆக்ஸ் 25 மணி ௭.௪0 அம்
Labels:
TAMIL NEWS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment