Saturday, August 16, 2008

செய்திகள் ஆக்ஸ் 16 மணி 8.10 AM

விரைவில் சந்திரனுக்கு செயற்கை கோள்-- சந்திராயண்-௧ விண்ணுக்கு அனுப்பப்படும் : பிரதமர் ஏ.சுகுமாரன்
62-வது சுதந்திர தின உரையில் பிரதமர் இந்த ஆண்டுக்குள் சந்திராயண்-1 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்படும் என தெரிவித்தார். சந்திராயண் விண்கலத்தை அனுப்புவது இந்திய விண்வெளித்துறையில் முக்கிய மைல்கல்லாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். இந்தியாவிலேயே தயாரான ஆளில்லாத விண்கலமான சந்திராயண்-1, வரும் அக்டோபர் மாதத்தில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவாண் விண்வெளி மையத்திலிருந்து அது ஏவப்பட இருக்கிறது.
சந்திரனுக்கு நெருக்கமாக 2 ஆண்டுகள் சுற்றிவந்து, தெளிவான படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும் பணியை சந்திராயண் மேற்கொள்ளும். சந்திரனைச் சுற்றி வரும் பாதையில் உள்ள அதிகமான வெப்பம் மற்றும் வெற்றிட சூழல் ஆகியவற்றில் சந்திராயாணின் செயல்பாட்டுத் திறன் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றது இதனிடையே, சந்திரனில் இறங்கி அங்குள்ள பாறைகளை சேகரிக்கும் சந்திராயண்-2 விண்கலத்தை உருவாக்கும் பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணியில் ரஷியாவும் இந்தியாவும் கூட்டாகச் செயல்படுகின்றன
7,172 விவசாயிகள் கடன் ரத்து ! விவசாயக் கடனுக்கான வட்டியை 4 சதவீதமாகக் போகிறது : ரங்கசாமி சுதந்திர தினவிழா உரை ஏ.சுகுமாரன்

புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீஸôரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ரங்கசாமி ஏற்றுக் கொண்டார். பின்னர் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்களை அவர் வழங்கினார். அபோது அவர் ஆற்றிய உரை புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடந்த சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் ரங்கசாமி உரைஆற்றுகையில் விவசாயக் கடன் வழங்க 2008-09-ம் ஆண்டுக்கு ரூ.20 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிராம விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக வழங்கப்படும் விவசாயக் கடனுக்கான வட்டியை 7 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்க அரசு உத்தேசித்துள்ளது. மத்திய அரசு அறிவித்த 2008-ம் ஆண்டு விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் நிவாரணத் திட்டத்தை புதுச்சேரி மாநிலக் கூட்டுறவு வங்கியும் புதுச்சேரி மத்திய நிலவள வங்கியும் நடைமுறைப்படுத்தியுள்ளன. சுமார் ரூ.16.12 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 7,172 விவசாயிகள் பயன் பெற்றனர். விவசாயிகள் ஓர் ஏக்கரில் பசுந்தாள் தீவனம் வளர்க்கவும், பத்து கறவை மாடுகள் வாங்கவும் வங்கியிலிருந்து கடன் பெறவும் விவசாயிகள் வருமான உத்தரவாதத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஆண்டு ஒன்றுக்கு ஒரு விவசாயி குறைந்தபட்சம் ரூ.60 ஆயிரம் வரை வருமானம் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் இதுவரை 500 உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருவதால் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காரைக்கால் கீழவாஞ்சூரில் தனியார் முதலீட்டின் மூலம் முதல் கட்டப் பணியாக ரூ.350 கோடி செலவில் துறைமுகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. காரைக்காலின் சுற்றுலா வளத்தையும் பொருளாதார வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு இந்திய விமான ஊர்தி ஆணையர், பசுமை நில விமான நிலையம் அமைக்க சிபாரிசு செய்துள்ளார். இதற்கான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழ்வாழும் குடும்பங்களுக்கு அடுப்புடன் கூடிய சமையல் எரிவாயு இணைப்பு இலவசமாக வழங்கும் திட்டம் அமல் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 10 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறும் வகையில் 10.2.2006-ல் இத் திட்டம் தொடங்கப்பட்டது. இத் திட்டத்தின் கீழ் இதுவரை 24,434 சிகப்பு அட்டைதாரர்களுக்கு முழு அளவில் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் 22 ஆயிரம் சிகப்பு ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு இணைப்புகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் 12 ஆயிரம் அட்டைதாரர்கள் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்கள். தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்திச் செலவைக் குறைத்து உற்பத்தியைப் பெருமளவில் அதிகரிப்பதன் வாயிலாக விவசாயிகள் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வழிவகுக்கும். இத் திட்டத்துக்காக நடப்பு ஆண்டுக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2008-09-ம் ஆண்டுக்கான மின்விசை மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ரூ.37.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2008-09-ம் ஆண்டுக்காக பெற்றுள்ள திட்ட ஒதுக்கீடு ரூ.1,750 கோடி முழுவதும் புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சிக்காகச் செலவிடப்படும் என்றார் முதல்வர் ரங்கசாமி

வீராம்பட்டினம் தேர்த் திருவிழா ! ஆளுநர் வடம் பிடித்து தேரை இழுத்தார் ! ஏ.சுகுமாரன்
: புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயிலில் தேர்த்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கோவிந்த்சிங் குர்ஜார் வடம் பிடித்து தேரை இழுத்து தொடங்கி வைத்தார். புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி, மக்களவை உறுப்பினர் பேராசிரியர் மு.ராமதாஸ், எம்.எல்.ஏ. அனந்தராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இக் கோயிலில் ஆடிப் பெருவிழா ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் நடந்து வருகிறது. . தொடர்ச்சியாக பல்வேறு விழாக்கள் நடைபெறவுள்ளன. இம் மாதம் 22-ம் தேதி முத்துப் பல்லக்குடன் இந்தத் திருவிழா நடைபெறவுள்ளது.
10 லட்சம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 21% சதவீகித சம்பள உயர்வு --கருணாநிதி அறிவிப்பு ! ஏ.சுகுமாரன்
இந்தியாவின் 61-வது சுதந்திர தினவிழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.சென்னை கோட்டையில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.முதல்-அமைச்சர் கருணாநிதி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து திறந்த `ஜீப்` மூலம் வலம் வந்து, அங்கு கூடி இருந்த பொது மக்களுக்கு கையசைத்தபடி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார்.பின்பு முதல்-அமைச்சர் கருணாநிதி, கோட்டை கொத்தளத்திற்கு சென்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். . அதைத் தொடர்ந்து அவர் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். அப்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழக அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படுவதாக முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார் அரசு நிறைவேற்றிடும் திட்டப் பணிகளிலும் வளர்ச்சிப் பணிகளிலும் அரசு அலுவலர்களின் ஒத்துழைப்பும் கணிசமான பங்காக இருப்பதால் அந்தப் பங்கின் விகிதத்தையே அவர்களுக்கு பகிர்ந்து தருகிறோம் என்ற கொள்கையுடைய இந்த அரசு, மத்திய அரசு அலுவலர்களுக்கான 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் மத்திய அரசு 14-ந் தேதி அறிவித்துள்ள ஆணைகளையொட்டி, அந்த ஊதிய உயர்வினை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழக அரசு அலுவலர்களுக்கும் மனநிறைவளிக்கும் வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆணைகளை விரைவில் வெளியிடும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்
மேட்டூர் அணை நீர்மட்டம் கிடு கிடு உயர்வு ! ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது ஏ.சுகுமாரன்
கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பிவிட்டன. இதன் காரணமாக அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் அப்படியே தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. .ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம், ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது. அணைக்கு வரும் தண்ணீர் இதே அளவில் நீடித்தால் இன்னும் 3 நாட்களில் மேட்டூர் அணை மீண்டும் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இன்று ரக்ஷா பந்தன் --சகோதர- சகோதரிகளிடையே அன்பு, பாசம் வெளிப்படுத்தும் விழா ! ஏ.சுகுமாரன்
இன்று நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜனாதிபதி பிரதீபா பட்டீல், வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், `சகோதர- சகோதரிகளிடையே அன்பு, பாசம், பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்துவது ரக்ஷா பந்தன் விழாவாகும். தனிச்சிறப்பும், முக்கியத்துவமும் வாய்ந்த இந்த திருநாளில் சமூகம் நலம் பெறும் பொருட்டு சகோதரத்துவமும், ஒற்றுமையும் நிலவிட நாம் ஒருங்கிணைந்து செயல்படுவோம்' என்று கூறியுள்ளார்.துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், `அன்பு, அமைதி ஆகிய உணர்வுகளையும், சமூக நல்லிணக்க வாழ்க்கையையும், இத்திருநாள் உறுதி செய்கிறது. நமது கலாசாரத்தின் பெருமைகளையும் நம்பிக்கையுடன் ஒருசேர வெளிப்படுத்துவதாக இந்த திருநாள் அமைந்திருக்கிறது' என்று கூறி இருக்கிறார்.

No comments: