Wednesday, August 20, 2008

செய்திகள் ஆக்ஸ் 20 மணி 7.40 AM

நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தம -----தொ.மு.ச.கலந்துகொள்ளவில்லை : அரசு பஸ்கள் ஓடும் !-----ஏ.சுகுமாரன்
விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும், 6-வது ஊதியக் குழுவில் ஊழியர்களுக்குப் பாதகமாக உள்ள பரிந்துரைகளைக் களைய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தைத் தொடர வேண்டும், பொதுவைப்பு நிதி வட்டி விகிதத்தை 12 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இடதுசாரி கட்சிகளின் துணை அமைப்புகளான சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் புதன்கிழமை நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு தமிழக அரசு தார்மிக ஆதரவு தெரிவித்துள்ளது. எனினும் இப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்துக்கு தார்மிக ஆதரவு உண்டு. ஆனால், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதில்லை. எனவே, அரசு பஸ்கள் வழக்கம் போல புதன்கிழமை ஓடும்'' என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. என். நேரு அறிவித்துள்ளார்.
போக்குவரத்துத் துறையைப் பொறுத்தவரை தொ.மு.ச. பேரவைதான் வலிமை வாய்ந்தது. அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளதால் தமிழகத்தில் பெரும்பாலான பஸ்கள் வழக்கம் போல இயங்கும் எனத் தெரிகிறது.
"சென்னை நகரில், 50 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்குகின்றன. அதில், பாதிக்கும் மேற்பட்டவை புதன்கிழமை இயங்காது என ஆட்டோ தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. ரயில் மறியல் போராட்டத்தில் இறங்குவோம்' என இடதுசாரி கட்சிகளின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
வங்கிப் பணிகள் பாதிக்கும்... அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதால் வங்கிப் பணிகள் பாதிப்படையும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிர்ச்சி செய்தி ! இந்தியாவில் லட்சம் கோடிக்கு கள்ளநோட்டு: !மத்திய அரசுன் வெள்ளை அறிக்கை கோருகிறது பா.ஜ.க. !--ஏ.சுகுமாரன்

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ போன்ற இந்திய எதிர்ப்பு சக்திகள், இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்தில் பல நூறு கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகளை இந்தியச் சந்தையில் புழக்கத்தில் விட்டிருக்கின்றன. வங்கதேசம், நேபாளம் ஆகியவற்றின் எல்லை வழியாக இந்தக் கள்ளநோட்டுகள் இந்தியச் சந்தைக்குள் புகுத்தப்பட்டுள்ளனஇந்தியாவுக்குள் ரூ.1,69,000 கோடி அளவுக்கு கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டு இருக்கலாம் என்று அரசு அதிகாரிகள் குழுவொன்று மதிப்பிட்டுள்ளது. எனவே அப் பிரச்னை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். நாட்டின் பல பகுதிகளில் இந்தக் கள்ளநோட்டுகள் பிடிபட்டுள்ளன. பாரத ஸ்டேட் வங்கியிலேயே இந்தக் கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. . . என்றார்.பெங்களூரில் நிருபர்களிடம் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்

புதுவையில் மின்வெட்டு ! தொழிற்பேட்டையில் 65 சதம் ! தொழில்முனைவோர் பாடாய்படுகின்றனர் !----ஏ.சுகுமாரன்

புதுச்சேரி மேட்டுப்பாளையம், சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் 65 சதம் மின்வெட்டு நிலவுவதாக புதுச்சேரி மாநில தொழில் முனைவோர் கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் புதுச்சேரி சேம்பர் ஆப் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் கனகசபாபதி செய்தியாளர்களிடம் பேசும்போது புதுச்சேரியில் அமைந்துள்ள மிகப்பெரிய தொழிற்பேட்டைகளான மேட்டுப்பாளையம், சேதராப்பட்டில் உள்ள சிறு மற்றும் குறுந்தொழில்கள் வரலாறு காணாத வகையில் மோசமான மின்வெட்டைச் சந்தித்து வருகின்றன. இதனால் 50 சதவீத தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மின்வெட்டு தொடங்கியவுடன் மின் பற்றாக்குறையைப் போக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி, மின்துறை அமைச்சர் வைத்திலிங்கம், மக்களவை உறுப்பினர் மு.ராமதாஸ், தொழிற்சங்கத் தலைவர் விசுவநாதன், கண்காணிப்புப் பொறியாளர் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோருக்கு மே மாதமே கோரிக்கை வைத்தோம். புதிய ஆளுநராகப் பொறுப்பேற்ற கோவிந்த்சிங் குர்ஜாரிடமும் இக் கோரிக்கையை வைத்தோம். விரைவில் தீர்வு காண்பதாக அவர் கூறியது ஆறுதலாக இருக்கிறது. பெரிய நுகர்வோருக்கு மின்வெட்டு செய்யாமல் சிறு தொழில்கள் மீது முழுமையாகத் திணிப்பது சிறு தொழில் முனைவோருக்குப் பெரிய பாதிப்பை உருவாக்கியுள்ளது.
சிறு மற்றும் குறுந்தொழில்கள் மீது விதிக்கப்பட்டுள்ள மின்வெட்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் 14 மணி நேரம் என்பது எங்கும் காண முடியாத மின்வெட்டாகும். பத்து நாள்களில் நிலைமை சீராகும் என்று மின்துறை சமாதான வார்த்தை கூறியிருந்தது. இருப்பினும் மூன்று மாதங்களுக்கு மேலாக சிறு தொழில்கள் மின் வெட்டால் தவித்துக் கொண்டிருக்கின்றன.
உற்பத்தியில்லாமலும், சப்ளை தாமதத்தாலும் சிறு தொழில்கள் ஆர்டர்கள் இழந்தன. அபராதங்கள் ஏற்றன. பணப்பட்டுவாடா தடைப்பட்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலை மேலும் தொடர்ந்தால் தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பது தவிர்க்க முடியாததாகி விடும்.
எனவே புதுச்சேரி அரசு இனியும் காலம் கடத்தாமல் மின்வெட்டை குறைக்க வேண்டும் என்றார் அவர்.
ஊனமுற்றோருக்கு பல சலுகைகள்--கருணாநிதி அறிவிப்பு ! இனி அரசு பஸ்களில் 25 சதவீத கட்டணம !---ஏ.சுகுமாரன்

தமிழக அரசு பஸ்களில் அனைத்து ஊனமுற்றவர்களும் நான்கில் ஒரு பங்கு கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்பது உள்பட பல்வேறு சலுகைகளை முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் நேற்று (19.8.2008) சந்தித்து, ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான கோரிக்கைகளை அளித்தனர். ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அரசாணைகள் வெளியிடப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார்.
கடந்த 2 ஆண்டுகளில் நிரப்பப்பட்ட சுமார் 3 லட்சம் அரசுப் பணியிடங்களில் 3 சதவீதம் அதாவது ஏறத்தாழ 9 ஆயிரம் பணியிடங்கள் ஊனமுற்றோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இப்பணியிடங்களில் ஊனமுற்றோர் பணி நியமனம் பெறுவதை உறுதி செய்யும் வகையில் சமூக நலத்துறை அமைச்சரின் தலைமையில் செயலாளர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு கண்காணிக்கும்.
* அனைத்து வகை ஊனமுற்றோருக்கும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் ரெயில் கட்டணச் சலுகை போல் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி பயணம் செய்ய சலுகை அளிக்கப்படும். பெருந்தொழிற்சாலைகளை தமிழகத்தில் நிறுவ முன்வரும் தொழில்முனைவோருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் போது ஊனமுற்றோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டுகோள் விடுக்கப்படும்.
* ஊனமுற்றோர் சுயவேலைவாய்ப்பு பெறும் வகையில், அண்மையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஊனமுற்றோர் செலுத்த வேண்டிய 5 சதவிகித பங்குத் தொகையினையும் (ஓன் காண்டிரிபூஷன்) தமிழக அரசே ஏற்று மத்திய அரசின் மானியத்துடன் வங்கிக் கடன் பெற்று சுயவேலைவாய்ப்புகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இரண்டாண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றி வரும் ஊனமுற்றோருக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிலையங்கள் மற்றும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் ஊனமுற்றோருக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழுவிலக்கு அளிக்கப்படும்.

* பார்வையற்றோருக்கு வழங்கப்படுவது போன்றே அனைத்து வகை ஊனமுற்றோருக்கும் வேலைவாய்ப்பற்றோர் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
* ஊனமுற்றோருக்கு வேலைவாய்ப்பு பெறும் தகுதியை மேம்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் தங்கும் விடுதியுடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையம் மூன்றாண்டுத் திட்டமாக அரசு நிதி உதவியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் தொடங்கப்படும். ஊனமுற்றோர் நலனுக்கான ஒரு தனி கொள்கை உருவாக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங்-சோனியா-கருணாநிதிக்கு கவுரவ டாக்டர் பட்டம்----சென்னை பல்கலைக்கழகம் வழங்குகிறது ----ஏ.சுகுமாரன்

சென்னை பல்கலைக்கழக 150-வது ஆண்டுவிழா நிறைவு விழா செப்டம்பர் மாதம் 5-ந் தேதி நடக்க உள்ளது. விழாவுக்கு கவர்னரும் சென்னை பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித் சிங் பர்னாலா தலைமை தாங்குகிறார். உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி முன்னிலை வகிக்கிறார்.விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பிரதமர் மன்மோகன்சிங், சோனியாக காந்தி, முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் 3 பேருக்கும் அவர்களின் அரசியல் மற்றும் பொதுநலச்சேவையை பாராட்டி சென்னை பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டங்களை கவர்னர் பர்னாலா வழங்குகிறார்.
விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், உயர் கல்வித்துறை செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி சென்னை பல்கலைக்கழகம் விழாக்கோலம் காணஉள்ளது. தமிழ்நாட்டில், புதுவையில்

கடுமையான டீசல் தட்டுப்பாடு ! பொதுமக்க்ள் அவதி ! காரணத்தை விளக்குகிறார் மத்திய மந்திரி !

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. விற்பனை நிலையங்களில் குறைந்த அளவே டீசல் வினியோகம் செய்யப்படுகிறது.பெரும்பாலான விற்பனை நிலையங்களில் டீசல் இருப்பு இல்லை என்ற அறிவிப்பும் காணப்படுகிறது. சில விற்பனை நிலையங்கள் மூடப்பட்டும் விட்டன.
இதனால் லாரி, கார், ஆட்டோ போன்ற வாகனங்களை வைத்திருப்போர் டீசல் கிடைக்காமல் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மேலும், மாநிலத்தின் சில பகுதிகளில் சரக்கு வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடுக்கு காரணம் என்ன? என்பது குறித்து மத்திய மந்திரி விளக்கம் அளித்தார்.
, நாட்டின் பல்வேறு பகுதியில் ஏற்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வது குறித்தும், பொது மக்களுக்கு காலதாமதம் இன்றி சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பாகவும் மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி முரளி தியோரா, எண்ணை நிறுவன அதிகாரிகளுடன் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார்.3 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.பின் மத்திய மந்திரி முரளி தியோரா கூறியதாவது:-தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாத காரணத்தால் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக எண்ணை நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு எரிபொருட்களை எடுத்துச் செல்லும் லாரிகளால் ஏற்படும் காலதாமதம்தான் தமிழகத்தின் டீசல் தட்டுப்பாட்டிற்கு காரணம். இப்பிரச்சினை தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் டீசல் தட்டுப்பாடு எதுவும் ஏற்பட வாய்ப்பே இல்லை.தொழிற்சாலைகள் தேவைக்காக டீசலை அதிக அளவில் கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு டீசல் விலையை அதிகரிப்பது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதனை மத்திய அரசு விரைவில் அமலுக்கு கொண்டு வரும்.இவாறு முரளி தியோரா கூறினார்.

குப்பை கூடை ஆகிறது டெல்லி ! தினமும் டெல்லியில் குவியும் 12,000 டன் எலக்டிரானிக் குப்பை ! சுற்றுச்சூழல் பாதிப்பு !----ஏ.சுகுமாரன்

நாடு முழுவதும் எலக்டிரானிக் கழிவுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. சுற்றுச்சூழல் சீர்கேடுக்கு காரணமாக எலக்டிரானிக் குப்பை கருதப்படுகிறது. செல்போன், டிவி, கம்ப்யூட்டர் உட்பட எலக்டிரானிக் பொருட்கள் கைவிடப்படுவதே எலக்டிரானிக் குப்பை எனப்படுகிறது. எலக்டிரானிக் கழிவுகள் குவிக்கப்படும் நகராக டெல்லி மாறி வருவதாக அசோசேம் அறிக்கை தெரிவிக்கிறது. அங்கு தினமும் 2,000 லாரிகளில் 12,000 டன் எலக்டிரானிக் குப்பைகள் குவிக்கப்படுகின்றன
மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடக மாநிலங்களில் மட்டும் தினமும் 25,000 டன் எலக்டிரானிக் கழிவுகள் ஏற்படுகின்றன. மும்பை, சென்னை, பெங்களூர் நகரங்களுக்கு அனுப்பப்படும் ஆயிரக்கணக்கான டன் கழிவுகள் கடைசியில் டெல்லியை அடைகின்றன. அங்கு துர்க்மன் கேட், சாஸ்திரி பார்க், லோனி, சீலாம்பூர் ஆகிய பகுதிகளில் கழிவுப் பொருட்கள் வர்த்தகர்கள் மூலம் அதிகளவில் வாங்கப்படுகின்றன. இதுபோல, மும்பையில் இருந்து மட்டும் தினமும் 70 டன் வரை கழிவுகள் கொண்டு சேர்க்கப்படுகின்றன. அவற்றைத் தரம் பிரிப்பது, மறுசுழற்சி செய்வது ஆகிய பணிகளில் டெல்லியில் உரிய அங்கீகாரம் இல்லாமல் சுமார் 30,000 பேர் பணியாற்றுகின்றனர். வளர்ந்த நாடுகளில் உருவாகும் மொத்த எலக்டிரானிக் கழிவுகளில் சுமார் 25 சதவீதம் மலிவான இறக்குமதிகள் மூலம் டெல்லிக்கு வந்து சேர்கிறது.

No comments: